விண்வெளியில் இருந்து பூமியின் காற்று மாசுபாட்டை கண்காணிக்கும் கருவியை நாசா ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் மூலம் நேற்று அனுப்பி வைத்துள்ளது. இந்த கருவி வட அமெரிக்காவின் காற்று மாசுபாட்டை துல்லியமாக கண்காணித்து தரவுகளை அனுப்பும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ஆராய்ச்சிகாக மட்டுமல்ல, அனைவருக்காகவும், பூமியின் வாழ்க்கை நிலையை மேம்படுத்துவதற்காகவும் அனுப்பபட்டுள்ளது என நாசா தெரிவித்துள்ளது.
எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் ஃபால்கன் 9 ராக்கெட் மூலம் டெம்போ (TEMPO) கருவி நேற்று (வெள்ளிக்கிழமை) புளோரிடாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து விண்வெளிக்கு வெற்றிகரமாக ஏவப்பட்டது. ட்ரோபோஸ்பெரிக் எமிஷன்ஸ் மானிட்டரிங் ஆஃப் பொல்யூசன் (TEMPO) கருவியானது, விண்வெளியில் இருந்து வட அமெரிக்காவின் காற்று மாசுபாட்டை இதுவரை இல்லாத வகையில் துல்லியமாக கண்காணித்து தரவுகளை கொடுக்கவல்லது ஆகும்.
நாசாவின் டெம்போ திட்ட மேலாளரான கெவின் டாகெர்டியின் கூற்றுப்படி, "புவேர்ட்டோ ரிக்கோவிலிருந்து கனடாவின் தார் மணல் வரை" பகலில் ஒரு மணிநேரத்திற்கு ஒருமுறை இந்த கருவியானது வட அமெரிக்கா முழுவதும் அதன் மாசு மற்றும் காற்றின் தரத்தை அளவிட்டுக் காட்டும்.
அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனம் (EPA), தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) மற்றும் வளிமண்டல மாசுபாட்டைக் கண்காணிக்கும் பிற நிறுவனங்கள் இந்த தரவுகளைப் பயன்படுத்துவர்.
டெம்போ ஏன் மிகவும் சிறப்பு வாய்ந்தது?
டெம்போவின் பணி என்பது மாசுபாட்டைப் காண்காணிப்பதை விட அதிகம். இது பூமியில் அனைவரும் வாழ்வதற்கான நிலையை மேம்படுத்துவதாகும் என்று நாசா நிர்வாகி பில் நெல்சன் கூறினார்.
காற்று மாசுபாடு, காட்டுத் தீ மற்றும் எரிமலைகளால் ஏற்படும் மாசுபாடு வரை அனைத்தின் விளைவுகளையும் இந்த கருவி கண்காணிப்பதன் மூலம், வட அமெரிக்கா முழுவதும் காற்றின் தரத்தை மேம்படுத்தவும் நமது கிரகத்தைப் பாதுகாக்கவும் உதவும் என்று அவர் மேலும் கூறினார்.
டெம்போ கருவி, சலவை இயந்திரம் (Washing Machine) அளவு கொண்டது. விண்வெளியில் ஒரு வேதியியல் ஆய்வகம் என்று விவரிக்கப்பட்டுள்ளது, இது புவிநிலை சுற்றுப்பாதையில் உள்ள இன்டெல்சாட் தகவல் தொடர்பு செயற்கைக்கோளில் ஹோஸ்ட் செய்யப்படும்.
தற்போதுள்ள மாசு-கண்காணிப்பு செயற்கைக்கோள்கள் குறைந்த புவி சுற்றுப்பாதையில் ( low Earth orbit) உள்ளன, அதாவது அவை ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டுமே அதுவும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே தரவுகளை வழங்கும்.
டெம்போ வளிமண்டல மாசுபாட்டை 4 சதுர மைல்கள் (10 சதுர கிலோமீட்டர்கள்) அல்லது பரந்த நிரப்பரப்பிலும் அளவிட்டு தரவுகளை வழங்க முடியும்.
ஏன் இது முக்கியம்?
அமெரிக்க நுரையீரல் சங்கம் (American Lung Association) கூற்றுப்படி, அமெரிக்க மக்கள்தொகையில் 40 சதவீதத்திற்கும் அதிகமானோர், 137 மில்லியன் மக்கள், ஆரோக்கியமற்ற சூழல் நிறைந்த மாசுபாடு அல்லது ஓசோன் பாதிப்பு உள்ள உள்ள இடங்களில் வாழ்கின்றனர். காற்று மாசுபாடு காரணமாக ஆண்டுக்கு சுமார் 60,000 பேர் உயிரிழப்பதாக தகவல் கூறுகின்றன.
டெம்போவால் கண்காணிக்கப்படும் மாசுபாடுகளில் நைட்ரஜன் டை ஆக்சைடு இருக்கும், இது புதைபடிவ எரிபொருள்கள், ஃபார்மால்டிஹைட் மற்றும் ஓசோன் ஆகியவற்றின் எரிப்பிலிருந்து தயாரிக்கப்படுகிறது.
டெம்போ மே மாத இறுதியில் அல்லது ஜூன் தொடக்கத்தில் இருந்து இயக்கும் என்றும் அக்டோபரில் தரவைத் தயாரிக்கத் தொடங்கும் என்றும் டாகெர்டி கூறினார்.
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெற https://t.me/ietamil”