Advertisment

செவ்வாய்க் கிரகப் பயணம்: நுண்ணுயிர் மாசுபாடுகள் பேராபத்தை ஏற்படுத்துமா?

செவ்வாயின் உயிர்க்கோளத்தை தொந்தரவு செய்யாமல் பார்த்துக் கொள்வது மனிதகுலத்தின் நெறிமுறை கடமை.

author-image
WebDesk
New Update
NASA Perseverance mission,MARS

NASA Perseverance mission,MARS

கடந்த வாரம், செவ்வாய் கிரகத்திற்கு பூமியில் இருந்து  இரண்டு பயணங்கள் தொடங்கப்பட்டது.  சீனாவின் Tianwen-1 அல்லது “Questions to Heaven” , செவ்வாய் மேற்பரப்பில் தரையிறங்குவதை நோக்கமாகக் கொண்டது. ஐக்கிய அரபு எமிரேட்டின் செவ்வாய்க் கிரகத்திற்கான விண்கலம், ஜப்பானில் உள்ள விண்வெளி மையத்திலிருந்து வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.

Advertisment

X2A என்ற ராக்கெட் HOPE PROBE என்ற விண்கலத்தை வெற்றிகரமாக ஏந்திச் சென்றது. அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் இந்த விண்கலம், செவ்வாய் கிரகத்தின் சுற்றுப்பாதையில்  இணைக்கப்படும் வகையில் ஏவப்பட்டுள்ளது.

ஜூலை 30 ஆம் தேதி, அமெரிக்கா Perseverance mission-ஐ விண்ணில் ஏவுகிறது . அனைத்தும் சரியாக நடந்தால், 1975 முதல் செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறங்கும்  நாசாவின் 10 வது வெற்றிகரமான விண்கலம் இதுவாகும்.

விண்வெளி பயணங்களை தற்போது உலக  நாடுகள் ஆக்ரோஷமாக முன்னெடுப்பதால், 'விண்வெளி மாசுபாடு' குறித்து கவலைகளை வானியல் உயிரியலாளர்கள்  வெளிப்படுத்தியுள்ளனர். இத்தகைய மாசுபாடு இரண்டு வகையாக கருதப்படுகிறது:

பூமியை அடிப்படையாகக் கொண்ட மாசுபாடு ( forward contamination) - பூமியைச் சார்ந்த நுண்ணுயிரிகள் மற்ற வானியல் பொருள்களுக்கு  கொண்டு செல்தல் ;

பூமியை நோக்கிய மாசுபடு (back contamination) - வேற்று கிரக உயிரினங்களை  (அப்படியொன்று இருந்தால்) பூமியின் உயிர்க்கோளத்திற்கு மாற்றுதல்.

பூமியை அடிப்படையாகக் கொண்ட மாசுபாடு: 

கடந்த காலங்களில், நமது விண்வெளி பயணங்கள் வால்மீன்கள் (காம்ட்ஸ்), விண்கற்கள் போன்ற வானியல் பொருள்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தியுள்ளன.  விண்வெளி பயணத்தின் ஒரு பகுதியாக மனிதன் சந்திரனிலும் தரை இறங்கியுள்ளான். இருப்பினும், நாம் இதுநாள் வரை தொடர்பை ஏற்படுத்திய வானியல் பொருள்களில் உயிர் வாழ்க்கைக்கான சாத்தியக் கூறுகள் இல்லாதிருப்பதால், பூமியை அடிப்படையாகக் கொண்ட மாசுபாடு முக்கிய பிரச்சினையாக கருதப்படவில்லை.

எவ்வாறாயினும், முந்தைய காலங்களில் செவ்வாய் கிரக மேற்பரப்பிற்குள் திரவ நீர் இருப்பதற்கான சாத்தியக் கூறுகளை  விண்வெளிப் பயணங்கள்  ஏற்கனவே கண்டறிந்தன. அங்கு, உயிர்வாழ்க்கைக்கான அறிகுறிகளையும் ஆய்வாளர்கள்  தீவிரமாக தேடி வருகின்றன.

செவ்வாய் கிரகத்தில் உயிர் வாழ்க்கைக்கான சாத்தியக் கூறுகள் எத்தகையதாக    இருந்தாலும், பூமியை அடிப்படையாகக் கொண்ட நுண்ணுயிரிகள் அதன் உயிர்க்கோளத்தை தொந்தரவு செய்யாமல் பார்த்துக் கொள்வது மனிதகுலத்தின் நெறிமுறை கடமை. செவ்வாய்க் கிரகத்தின் உயிர் வாழ்க்கை அதன் சொந்த வழியில் உருவாக அனுமதிக்க வேண்டும் என்று வானியலாளர்கள் கூறுகின்றனர்.

 

பூமியை நோக்கிய மாசுபடு: 

செவ்வாய் கிரகத்தில் இருந்து பெறப்படும் மாதிரிகளை பூமிக்கு கொண்டு வரும் பணிகளை நாசா திட்டமிட்டுள்ளது. இந்த முயற்சி 2031 க்குள் செயல்படுத்தப்படும் என்று நம்பப்படுகிறது.

கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

எவ்வாறாயினும், விஞ்ஞானிகள் இத்தகைய மாசுபாட்டை குறைத்து மதிப்பிடுகின்றன்ர்.  தற்போதைய பெருந்தொற்று போன்று செவ்வாய் கிரக  நுண்ணுயிரிகள் (அவை இருந்தால்) பூமியில் பேரழிவை ஏற்படுத்தும் என்ற கூற்றையும் அவர்கள் ஏற்க மறுக்கின்றனர். சேவையின் உயிர் வேதியியல் பூமியிலிருந்து வேறுபட்டதாக இருந்தாலும், பேரிழப்பு சாத்தியமில்லை என்பது அவர்களின் கருத்து.

கிரக பாதுகாப்பு: 

விண்வெளியை ராணுவ மயமாக்கல் போக்கை தடுக்கும் ஒரு அரணாக 1967 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட வெளிப்புற விண்வெளி ஒப்பந்தம்  உள்ளது. அமெரிக்கா, ரஷ்யா, சீனா,  இந்தியா முதலிய 110 நாடுகள் இதில் கையெழுத்திட்டுள்ளன . ராணுவ மயமாக்கலைத் தாண்டி , மாசுபடுத்தும் அபாயங்கள் குறைக்கும் நடவடிக்கைளில் ஈடுபட  உலக நாடுகளை இந்த ஒப்பந்தம் நிர்பந்திக்கிறது.

ஒப்பந்த உடன்படிக்கைக்கு இணங்குவதை உறுதி செய்யும் பொருட்டு, விண்வெளி ஆராய்ச்சிகானக் குழு  (COSPAR) ‘கிரக பாதுகாப்பு கொள்கையை’ வகுத்தது. விண்வெளி அங்கங்கள் உள்பட வெளிப்புற விண்வெளியில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளும் போது பூமியை அடிப்படையாகக் கொண்ட நுண்ணுயிரிகளின் எண்ணிக்கையை மட்டுப்படுத்துவும், மற்ற வானியல் பொருள்களில் உள்ள உயிர்கள் பூமியில் பேரழிவை ஏற்படுத்தாது என்பதை உறுதி செய்வதையும் வலியுறுத்துகிறது .

மனிதர்கள் செல்லும் விண்கலங்களின் வடிவமைப்பு, செயல்பாட்டு நடைமுறைகள்  வெளிப்புற விண்வெளி பயண கட்டமைப்பு முதலியவற்றில் பாதுகாப்பு கொள்கை அதிகப்படியான தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளன என்று நாசா தெரிவித்தது. வேற்றுகிரகவாசிகளிடமிருந்து பூமியை காக்க நாசா,  ஈஎஸ்ஏ ஆகிய இரண்டும் கிரக பாதுகாப்பு அதிகாரியை நியமித்துள்ளன.

பூமியை அடிப்படையாக கொண்ட மாசுபாட்டைத் தவிர்க்க, பயணத்திற்கு முன்பு  விண்கலங்கள் கிருமிநீக்கம் செய்யப்படுகின்றன. 1970 -களில் நாசாவின் வைக்கிங் லேண்டர் முதல் அனைத்து செவ்வாய் பயண விண்கலங்களும்  முழுமையாக கிருமிநீக்கம் செய்யப்பட்டன. கிருமி நீக்கம் தொடர்பான சிக்கலைத் தீர்க்க, Perseverance mission விண்ணில் ஏவும் நிகழ்வை இரண்டாவது முறையாக  கடந்த வாரம் நாசா  ஒத்திவைத்தது.

பூமியை நோக்கிய மாசுபாட்டில் கிருமிநீக்கம் ம்சுளுமையான தீர்வாக அமையாது . ஏனெனில், அது  வேற்று கிரகத்தில் இருந்து பெறப்படும் மாதிரிகளை அழித்துவிடும்.  பூமியில் உள்ள உயிர்களில் பரவாமல் இருக்க பாதுகாப்பு மண்டலங்கள் அமைப்பது சிறந்த முடிவாக இருக்கும்.

 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Nasa
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment