மீண்டும் மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் நாசா: ஏன், எதற்கு, எப்படி?

இதுவரை அப்பல்லோ விண்வெளி வீரர்கள் 382 கிலோவிற்கும் மேற்பட்ட சந்திர பாறைகள் மற்றும் மண் துகள்களைத் திரும்பிக்கொண்டு வந்துள்ளனர்.

NASA plans to launch next mission by artemis
NASA plans to launch next mission by artemis

Nasa Artemis Tamil News: 2024-ம் ஆண்டிற்குள் சந்திர மேற்பரப்பிற்கு ஓர் ஆண் மற்றும் முதல் பெண்ணையும் அனுப்பத் திட்டமிட்டுள்ள தன்னுடைய ஆர்ட்டெமிஸ் (Artemis) திட்டத்திற்கான அவுட்லைனை கடந்த வியாழக்கிழமை நாசா வெளியிட்டது. நாசா கடைசியாக 1972-ம் ஆண்டு அப்பல்லோ சந்திர மிஷனிற்காக மனிதர்களைச் சந்திரனுக்கு அனுப்பியது.

ஆர்ட்டெமிஸ் திட்டம் என்றால் என்ன?

செவ்வாய்க் கிரகத்தின் எதிர்கால ஆய்வுக்குத் தேவைப்படும் புதிய தொழில்நுட்பங்கள், திறன்கள் மற்றும் வணிக அணுகுமுறைகளை ஆர்ட்டெமிஸ் திட்டத்தின் மூலம் செயல் விளக்கமளிக்க நாசா திட்டமிட்டுள்ளது.

இந்தத் திட்டம் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதலாவதாக, எஸ்.எல்.எஸ் மற்றும் ஓரியன் விண்கலத்தை (SLS and Orion spacecraft) சோதிக்க ஆளில்லா விமானம் உள்ளடக்கிய ஆர்ட்டெமிஸ் I. இது அடுத்த ஆண்டு விண்ணில் ஏவப்படுவதற்கு வாய்ப்புள்ளது. இரண்டாவதாக முதல் குழு விமான சோதனை முயற்சியாக ஆர்ட்டெமிஸ் II. இது, 2023-ன் இலக்காக உள்ளது. ஆர்ட்டெமிஸ் III, விண்வெளி வீரர்களை 2024-ம் ஆண்டு சந்திரனின் தென் துருவத்தில் தரையிறக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

சந்திரனுக்கு ஏன் செல்ல வேண்டும்?

நாசாவைப் பொறுத்தவரை, இந்த மிஷன் ஆய்வு நில அமைப்புகள் (ஏவுதலுக்குத் தேவையான நில கட்டமைப்புகள்), விண்வெளி வெளியீட்டு அமைப்பு (Space Launch System – SLS), ஓரியன் (சந்திர பயணங்களுக்கான விண்கலம்), கேட்வே-Gateway (சந்திரனைச் சுற்றியுள்ள சந்திர புறக்காவல் நிலையம்), சந்திர லேண்டர்கள் (நவீன மனித தரையிறங்கும் அமைப்புகள்) மற்றும் ஆர்ட்டெமிஸ் தலைமுறை விண்வெளிகள் உள்ளிட்ட அனைத்தும் தயாராக உள்ளதா போன்ற கூறுகள் உள்ளடக்கியது.

நாசாவின் புதிய எஸ்எல்எஸ் (SLS ) ராக்கெட், ஓரியன் விண்கலம் மூலம் விண்வெளி வீரர்களை பூமியிலிருந்து கால் மில்லியன் மைல் தொலைவில் உள்ள சந்திர சுற்றுப்பாதைக்கு அனுப்பும். விண்வெளி வீரர்கள் சந்திரனைச் சுற்றியுள்ள சிறிய விண்கலமான ஓரியன் நுழைவாயிலை அடைந்தவுடன், அவர்கள் சந்திரனைச் சுற்றி வாழவும் வேலை செய்யவும் முடியும். மேலும் விண்கலத்திலிருந்து, சந்திரனின் மேற்பரப்புக்குப் பயணங்களையும் மேற்கொள்ள முடியும்.

கடந்த ஜூன் மாதத்தில், வடிவமைப்பு மற்றும் லாஜிஸ்டிக்ஸ் போன்றவற்றுக்காக 187 மில்லியன் டாலர் மதிப்புள்ள ஒப்பந்தத்தை வர்ஜீனியாவின் Orbital Science Corporation of Dulles-உடன் நாசா உறுதி செய்தது.

ஆர்ட்டெமிஸ் திட்டத்திற்காகச் செல்லும் விண்வெளி வீரர்கள், Exploration Extravehicular Mobility Unit அல்லது xEMU என அழைக்கப்படும் புதிதாக வடிவமைக்கப்பட்ட ஸ்பேஸ் சூட்களை அணிவார்கள்.

நாசா மற்றும் சந்திரன்:

1961-ம் ஆண்டிலேயே மக்களை விண்வெளியில் குடியேற்றும் முயற்சியை அமெரிக்கா தொடங்கியது. அதனைத் தொடர்ந்து எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, 1969-ம் ஆண்டு ஜூலை 20-ம் தேதி நீல் ஆம்ஸ்ட்ராங், அப்பல்லோ 11 மிஷனின் ஒரு பகுதியாகச் சந்திரனில் காலடி வைத்த முதல் மனிதர் என்றானார். சந்திரனின் மேற்பரப்பை நோக்கி ஏணியிலிருந்து இறங்கும்போது போது அவர் சொன்ன, “மனிதனின் இந்த ஒரு சிறிய அடி, மனிதக்குலத்திற்கான ஓர் மிகப்பெரிய பாய்ச்சல்” எனும் வாக்கியம் மிகவும் பிரபலமானது.

தன்னோடு பயணித்த எட்வின் “பஸ்” ஆல்ட்ரினோடு (Edwin “Buzz” Aldrin) ஆம்ஸ்ட்ராங் சேர்ந்து, மூன்று மணி நேரத்திற்கும் மேலாகச் சந்திரனைச் சுற்றி நடந்தார். பல சோதனைகள் செய்து சந்திரனிலிருந்த துகள்கள் மற்றும் பாறைகளின் துண்டுகளை எடுத்தார். “1969-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் பூமியிலிருந்து வந்த ஆண்கள் முதல் முதலாக நிலவில் காலடி வைத்தனர். மனித இனத்தின் அமைதிக்காக வந்தோம்” என்ற அடையாளக் குறியீட்டோடு ஓர் அமெரிக்கக் கொடியையும் சந்திரனில் விட்டுச் சென்றனர்.

விண்வெளி ஆராய்ச்சி நோக்கத்தைத் தவிர, அமெரிக்க மக்களை மீண்டும் சந்திரனுக்கு அனுப்புவதற்கான நாசாவின் முயற்சி, விண்வெளியில் அமெரிக்கத் தலைமையை நிரூபிப்பது, அமெரிக்காவின் உலகளாவிய பொருளாதார தாக்கத்தை விரிவுபடுத்துவது உள்ளிட்ட செயல்களும் அடங்கும்.

“அவர்கள் தரையிறங்கும் போது, ​​இதற்கு முன்னர் எந்த மனிதனும் செல்லாத சந்திரனின் தென் துருவத்தில் எங்களின் அமெரிக்க விண்வெளி வீரர்கள் காலடி எடுத்து வைப்பார்கள்” என்று நாசா நம்புகிறது.

சந்திர ஆய்வு:

1959-ம் ஆண்டில், சோவியத் யூனியனின் குழுவில்லா லூனா 1 மற்றும் 2 சந்திரனைப் பார்வையிட்ட முதல் ரோவர் என்றானது. அப்போதிலிருந்து, இதனை ஏழு நாடுகள் பின்பற்றின. அப்பல்லோ 11 மிஷனை அமெரிக்கா சந்திரனுக்கு அனுப்புவதற்கு முன்பு, 1961 மற்றும் 1968-ம் ஆண்டுகளுக்கு இடையில் மூன்று வகை ரோபோட்டிக் மிஷன்களை மேற்கொண்டது. ஜூலை 1969-ம் ஆண்டுக்குப் பிறகு 1972-ம் ஆண்டு வரை, 12 அமெரிக்க விண்வெளி வீரர்கள் சந்திரனின் மேற்பரப்பில் காலடி வைத்துள்ளனர். இதுவரை அப்பல்லோ விண்வெளி வீரர்கள் 382 கிலோவிற்கும் மேற்பட்ட சந்திர பாறைகள் மற்றும் மண் துகள்களைத் திரும்பிக்கொண்டு வந்துள்ளனர்.

1990-களில் அமெரிக்கா, Clementine மற்றும் Lunar Prospector என்ற ரோபோடிக் சிறப்புகளுடன் மீண்டும் சந்திர ஆய்வைத் தொடங்கியது. மேலும் 2009-ம் ஆண்டில், Lunar Reconnaissance Orbiter (LRO) மற்றும் Lunar Crater Observation and Sensing Satellite (LCROSS) ஆகியவற்றை அறிமுகப்படுத்தியதன் மூலம் புதிய ரோபோட்டிக் சந்திர பயண சீரிஸை தொடங்கியது.

2011-ம் ஆண்டு, மறுசுழற்சி செய்யப்பட்ட விண்கலத்தைப் பயன்படுத்தி ஆர்டெமிஸ் (ARTEMIS – Acceleration, Reconnection, Turbulence, and Electrodynamics of the Moon’s Interaction with the Sun) மிஷனைத் தொடங்கியது. மேலும், 2012-ம் ஆண்டு, the Gravity Recovery and Interior Laboratory (GRAIL) விண்கலம் சந்திரனின் ஈர்ப்பு குறித்து ஆய்வு செய்தது.

அமெரிக்காவைத் தவிர, ஐரோப்பிய விண்வெளி நிறுவனம், ஜப்பான், சீனா மற்றும் இந்தியா உள்ளிட்ட நாடுகளும் சந்திரனை ஆராயும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். சீனா இரண்டு ரோவர்களை சந்திரனின் மேற்பரப்பில் தரையிறக்கியிருக்கிறது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (இஸ்ரோ) ஒரு லேண்டர் மற்றும் ரோவர் ஆகியவற்றைக் கொண்டிருக்கும் இந்தியாவின் மூன்றாவது சந்திர மிஷனான சந்திரயான் -3-ஐ சமீபத்தில் அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get the latest Tamil news and Explained news here. You can also read all the Explained news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Nasa plans to launch next mission by artemis

Next Story
தற்போதைய சூழலில் வைப்பு நிதியில் முதலீடு செய்வது நல்லதா?Explained: Should you invest in fixed deposits with banks
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com