James Webb Space Telescope : ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் டெலெஸ்கோப்பை நாசா டிசம்பர் 24ம் தேதி அன்று இ.எஸ்.டி. நேரப்படி காலை 7.20 மணிக்கு (இந்திய நேரப்படி மாலை 05.50 மணிக்கு) ஏவ திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது. உலகின் முதன்மையான விண்வெளி அறிவியல் ஆய்வகமான வெப், நாசாவின் முதன்மை தொலைநோக்கியான ஹப்பிள் விண்வெளித் தொலைநோக்கிக்கு பிறகு அனுப்பப்படும் தொலை நோக்கியாகும்.
ஹப்பிளுக்கு மாற்று வெப் இல்லை. ஆனால் ஹப்பிளை தொடர்ந்து அறிவியல் ஆராய்ச்சி இலக்குகளை நோக்காக கொண்டு அமைக்கப்பட்ட தொலைநோக்கியாகும் என்று நாசா அறிவித்துள்ளது. வெப் தொலை நோக்கி அகச்சிவப்பு நிறக்கதிர்கள் மூலம் பிரபஞ்சத்தை ஆய்வு செய்யும். ஆனால் ஹப்பிளோ ஆப்டிக்கள் மற்றும் புறஊதா அலைநீளங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டது. வெப்பில் இணைக்கப்பட்டுள்ள கண்ணாடி ஹப்பிளைக் காட்டிலும் பெரியது. ஹப்பிள் புவியின் சுற்றுப்பாதையில் மிகவும் நெருங்கி இருந்த நிலையில் வெப் தொலைவான சுற்றுப்பாதையில் இயங்கும்.
அலை நீளம் : வானியல் பொருள்களின் படங்கள் மற்றும் நிறமாலையைப் படம்பிடிப்பதற்கான வெப்பின் நான்கு கருவிகள் 0.6 முதல் 28 மைக்ரான்கள் வரை அலைநீளக் கவரேஜை வழங்கும் (மின்காந்த நிறமாலையின் அகச்சிவப்பு பகுதி சுமார் 0.75 மைக்ரான் முதல் சில நூறு மைக்ரான்கள் வரை இருக்கும்) ஹப்பிளில் உள்ள கருவிகள் முக்கியமாக புற ஊதா மற்றும் நிறமாலையின் புலப்படும் பகுதிகளை 0.1 முதல் 0.8 மைக்ரான் வரை கண்காணிக்க முடியும். அகச்சிவப்பு அவதானிப்புகள் முக்கியமானவை, ஏனெனில் இந்த அலைநீளத்தில் உள்ள ஒளியானது புதிதாக உருவான நட்சத்திரங்கள் மற்றும் கிரகங்களை மறைக்கும் தூசியை ஊடுருவி, அவற்றைப் பார்க்க வைக்க உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.
அளவு : வெப்பின் முதன்மை கண்ணாடி 6.5 மீட்டர் விட்டம் கொண்டது. இது தற்போதைய தலைமுறை விண்வெளித் தொலைநோக்கிகளின் கண்ணாடிகளைக் காட்டிலும் கணிசமான அளவு பெரிய கண்ணாடியை வெப் கொண்டுள்ளது. ஹப்பிளின் கண்ணாடி 2.4 மீட்டர் விட்டம் கொண்டவை. அதாவது ஹப்பிளைக் காட்டிலும் வெப்பின் சேகரிப்பு பகுதி 6.25 மடங்கு அதிகம். ஹப்பிளின் NICMOS கேமராவால் மூடப்பட்டிருக்கும் காட்சிப் புலத்தை விட ~15 மடங்கு அதிகமாக Webb உள்ளடக்கும். வெப்பின் சூரியக் கவசமானது (sunshield) சுமார் 22 மீ x 12 மீ, டென்னிஸ் மைதானத்தின் அளவை விட சற்று குறைவாக உள்ளது.
சுற்றுவட்டப்பாதை : ஹப்பிள் பூமியை ~570 கிமீ உயரத்தில் சுற்றி வருகிறது. Webb பூமியைச் சுற்றி வராது, அதற்குப் பதிலாக 1.5 மில்லியன் கிமீ தொலைவில் உள்ள பூமி-சூரியன் L2 Lagrange புள்ளியில் அமர்ந்திருக்கும். இதன் பொருள் வெப் பூமியுடன் சேர்ந்து சூரியனைச் சுற்றும், ஆனால் பூமி மற்றும் சூரியனுடன் தொடர்புடைய அதே இடத்தில் நிலைத்திருக்கும். L2 புள்ளியில், வெப்பின் சூரியக் கவசம் சூரியன், பூமி மற்றும் சந்திரனில் இருந்து வரும் ஒளியைத் தடுக்கும், இது குளிர்ச்சியாக இருக்க உதவும். அகச்சிவப்பு தொலைநோக்கிக்கு இது மிகவும் முக்கியமான ஒரு அம்சமாகும்.
ஏன் அவ்வளவு தூரம்? ஒளி பயணிக்க அதிக நேரம் எடுக்கும். ஒரு பொருள் எவ்வளவு தொலைவில் இருக்கிறதோ, அவ்வளவு தூரம் நாம் பார்க்கிறோம். ஹப்பிள் மூலம் டோட்லர் கேலக்ஸிகளை காண முடியும் அதே சமயத்தில் வெப்பின் மூலம் நாம் பேபி கேலக்ஸிகளையே காண இயலும். வெப் அகச்சிகப்புக்கதிர் தொலை நோக்கி என்பதால் ஒளியின் புலப்படும் அலைநீளங்களில் மிகவும் மங்கலாக இருக்கும் தொலைதூரப் பொருட்களையும் நம்மால் காண இயலும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil