NASA’s Perseverance rover landing on Mars, and what makes landing on the Red Planet difficult : வியாழக்கிழமை அன்று செவ்வாய் கிரகத்தில் நாசாவின் பேர்சேவேரன்ஸ் ரோவர் ஜெஸரோ பள்ளத்தில் தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பின்னர் செவ்வாய் கிரகத்தின் கடந்த கால வாழ்க்கை குறித்த தேடும் பணியை துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தரையிறக்கம் என்பது மிகவும் குறுகிய செயல்பாடு ஆனால் மிகவும் முக்கியமான அதே நேரத்தில் சற்று கடினமான கட்டங்களில் ஒன்றாகும். இது மிகவும் கடினமான கட்டம். உலகெங்கிலும் உள்ள விண்வெளி ஆராய்ச்சி மையங்கள் செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பிய செயற்கை கோள்களில் 40 சதவீதம் மட்டுமே வெற்றி அடைந்துள்ளது. ஏனென்றால் நூற்றுக்கணக்கான விஷயங்கள் சரியான நேரத்தில் நிகழ்ந்தால் மட்டுமே இது சாத்தியமாகும் என்று நாசா கூறியுள்ளது.
இது போன்ற பணிகளில் இருக்கும் சிக்கல்கள் குறித்து அறிந்து கொள்ள ஒரு சிறந்த உதாரணத்தை கணிதவியலாளர் கேத்ரின் ஜான்சன் கூறியுள்ளார். 2016ம் ஆண்டு வெளியான ஹிட்டன் ஃபிகர்ஸ் என்ற படத்தில் தரஜி பி. ஹென்சன் ஜான்சனாக நடித்திருந்தார். , அவர் 1962 ஆம் ஆண்டில் ஜான் க்ளெனை விண்வெளியில் செலுத்தும் காப்ஸ்யூலின் பாதையை நிர்ணயிக்கும் துல்லியமான கணக்கீடுகளை கண்டுபிடிக்க பணிபுரிந்தார்.
செவ்வாய் கிரகத்தை நோக்கிய மற்ற பயணங்கள்
மற்றொரு செவ்வாய் கிரகத்திற்கு செல்லும் பணிகளாக அமீரகத்தின் அல் அமல் (நம்பிக்கை), அமீரகத்தின் முதல் செவ்வாய் கிரக பணியாகும். இது காடந்த வாரம் செவ்வாயின் சுற்றுவட்டப்பாதைக்குள் நுழைந்தது. ஆனால் இது சுற்றுவட்டப்பாதையில் இருந்து செவ்வாயை ஆராய்ச்சி செய்யுமே தவிர தரையிறங்குவதில்லை. சீனாவும் ஜூலை-ஆகஸ்ட் காலத்தில் செவ்வாய் செல்லும் செயற்கை கோளை அனுப்பியது.
இத்தகைய விண்வெளி பயணங்களால் ஏற்படும் கிரக மாசுபாடு குறித்து கிரக மாசுபாடு வானிலை ஆராய்ச்சியாளர்கள் கவலைகளை வெளிப்படுத்தியுள்ளனர். இதன் பொருள் பூமியை அடிப்படையாகக் கொண்ட நுண்ணுயிரிகளை மற்ற கிரகங்களுக்கு கொண்டு செல்வதும், வேற்று கிரக நுண்ணுயிரிகளை மீண்டும் பூமிக்கு கொண்டு வருவதும் ஆகும். விண்வெளி ஆராய்ச்சிக்கான குழு கோஸ்பார்(Committee on Space Research) ஒரு ‘கிரக பாதுகாப்புக் கொள்கையை’ வகுக்கிறது, இது மற்ற கிரகங்களுக்கு அனுப்பப்படும் நுண்ணுயிரிகளின் எண்ணிக்கையை மட்டுப்படுத்துவதையும், அந்நிய உயிர்கள் பூமியில் அழிவை ஏற்படுத்தாமல் பார்த்துக் கொள்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
பெர்செவெரன்ஸ் திட்டத்திற்கான செலவு என்ன?
நாசா 2.7 பில்லியன் அமெரிக்க டாலர்கள் இந்த திட்டத்திற்காக செலவிட்டுள்ளது என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் விண்கல மேம்பாடு, ஏவுதல் நடவடிக்கைகள் மற்றும் செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியவுடன் அதன் செயல்பாடுகளை பராமரிப்பதற்கான செலவுகளும் அடங்கும். தி ப்ளாண்ட்டரி சொசைட்டியின் கருத்துப்படி, புளூட்டோனியம் -238 ஐ எரிபொருளாகப் பயன்படுத்துவது அணுசக்தி பொருட்கள் உயர்ந்த சுற்றுச்சூழல் மற்றும் பாதுகாப்பு விதிமுறைகளுடன் இணைக்கப்பட்டுள்ளதால் பணிக்கான செலவை அதிகரித்துள்ளது. இது கூகுள் 6 நாட்களுக்கு சம்பாதிக்கும் பணமாகும். அல்லது அமெரிக்கர்கள் 10 நாட்கள் தங்களின் செல்லப் பிராணிகளுக்கு செய்யும் செலவாகும். அல்லது அமெரிக்க பாதுகாப்புத்துறையை 33 மணி நேரத்திற்கு நடத்த தேவையான மதிப்பாகும்.
செவ்வாயில் தரையிறங்குவது ஏன் கடினம்?
Entry, descent and landing (EDL) – இது தான் செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கும் போது ஏற்படும் கடினமான பகுதியாகும். ப்ரெசெவெரன்ஸ் ரோவர் செவ்வாயில் தரையிறங்க வேண்டும் என்றால் நிறைய விசயங்களை கருத்தில் கொள்ள வேண்டும். செவ்வாய் கிரகத்தின் வளிமண்டலத்தை அடையும் போது தான் இந்த EDL கட்டம் ஆரம்பமாகிறது. அப்போது ஒரு மணிநேரத்திற்கு 20 ஆயிரம் கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தில் பயணிக்கும் ரோவர். இதில் சவால் என்னவென்றால் அப்படி பயணிக்கும் ரோவர் தன்னுடைய வேகத்தை அப்படியே ஜீரோவிற்கு கொண்டு வந்து ஒரு பள்ளத்தின் குறுகிய மேற்பரப்பில் இறங்க வேண்டும்.
இந்த EDL கட்டம் ரோவர் செவ்வாய்கிரகத்தின் மேற்பரப்பில் நிலையாக இருக்கும் போது முடிவு பெறும். இதற்கு வெறும் 7 நிமிடங்கள் தான் தேவைப்படும். அதன் பின்னர் கவனமாக பிரேக்குகளை பயன்படுத்த வேண்டும். செவ்வாய் கிரகத்தின் வளிமண்டலத்திற்குள் நுழைவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்பு தன்னுடைய அனைத்து இதர பொருட்களையும் ரோவர் நீக்கிவிடும். சோலார் பேனல்கள், ரேடியோக்கள் மற்றும் விண்வெளி பயணத்தின் போது பயன்படுத்தப்பட்ட எரிபொருள் டேங்குகள் ஆகியவை இதில் அடங்கும். ரோவர் மற்றும் டிசெண்ட்டைக் கொண்டிருக்கும் பாதுகாப்பு ஏரோஷெல் மட்டுமே கிரகத்தின் மேற்பரப்புக்கான பயணத்தை உருவாக்கும். இப்போது, விண்கலம் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் நுழையும் போது, அது இழுப்பதன் மூலம் மந்தமாகிவிடும், அதாவது ஒரு கிரகத்தின் வளிமண்டலத்தின் உராய்வு ஒரு விண்கலத்தின் மேற்பரப்புக்கு எதிராக செயல்படும், இதன் மூலம் அதை மெதுவாக்கி அதன் சுற்றுப்பாதை உயரத்தை குறைக்கிறது.
விண்கலம் வேகத்தை குறைக்கும் அதே நேரத்தில் அதிகமாக வெப்பமாகும். ரோவர் வளிமண்டலத்திற்குள் நுழைந்த 80வது நொடியில் இது நிகழும். ஆனால் அறை வெப்பநிலையில் இருக்கும் ஏரோஷெல்லுக்குள் இருக்கும் ரோவரை இது பாதிக்காது. வளிமண்டலத்தின் வழியே கீழே வரும் போது சில த்ரஸ்டர்களை நீக்க வேண்டும். ஏனென்றால் மாறுபட்ட அடர்த்திகளைக் கொண்ட சிறிய பாக்கெட்டுகள் இருப்பதால் அதை நிச்சயமாகத் தள்ளிவிடலாம். அதைத் தொடர்ந்து, வெப்பக் கவசம் விண்கலத்தை மணிக்கு 1,600 கி.மீ வேகத்தில் குறைக்கும், அந்த நேரத்தில் (வளிமண்டலத்திற்குள் நுழைந்த சுமார் 240 விநாடிகள் கழித்து) சூப்பர்சோனிக் பாராசூட் பயன்படுத்தப்படும்.
பாராசூட் பயன்படுத்தப்பட்ட இருபது விநாடிகளுக்குப் பிறகு, வெப்பக் கவசம் பிரிக்கப்பட்டு ரோவர் முதல்முறையாக கிரகத்தின் வளிமண்டலத்திற்கு வெளிப்படும். இந்த கட்டத்தில், வாகனத்தை மேலும் மெதுவாக்குவதற்கு பாராசூட் செயல்படுகிறது. ஆனால் செவ்வாய் கிரகத்தின் வளிமண்டலம் மெல்லியதாக இருப்பதால், வாகனம் இன்னும் ஒரு மணி நேரத்திற்கு 320 கி.மீ வேகத்தில் மேற்பரப்பை நோக்கி பயணிக்கிறது. எனவே, பாதுகாப்பான தரையிறக்கத்திற்கு, ரோவர் பாராசூட்டைக் கைவிட்டு, மீதமுள்ள பயணத்தை ராக்கெட்டுகளைப் பயன்படுத்தி தரையிறங்க வேண்டும்., ரோவர் மேற்பரப்பில் இருந்து சுமார் 2,100 மீட்டர் உயரத்தில் இருக்கும்போது அதன் டெஸண்ட்டின் எஞ்சின்கள் வேலை செய்ய துவங்கும்.
இறுதியில் ரோவரின் வேகம் மணிக்கு 2.7 கி.மீ என்று மாறும். அது மனிதன் மணிக்கு நடந்து கடக்கும் 5 கி.மீ என்ற வேகத்திற்கும் குறைவானது இந்த நேரத்தில் தான் ரோவர் கேபிள்களின் தொகுப்பில் குறைக்கப்படுகிறது. தரையிறங்க வெறும் 12 நொடிகள் இருக்கின்ற நிலையில் இது நடைபெறும். தன்னுடைய சக்கரங்கள் மேற்பரப்பை தொட்டுவிட்டதா என்று உணர்ந்த பிறகு அது கேபிள்களை வெட்டி விடுகிறது. பின்னர் சுதந்திரமாக மேற்பரப்பில் லேண்டாகிறது.
செவ்வாய் கிரகத்தில் இந்த ரோவர் என்ன செய்யும்?
பெர்செவெரன்ஸ் ஒரு செவ்வாய் ஆண்டு (புவி ஆண்டில் இரண்டு வருடங்கள்) அங்கே செலவிடும். தரையிறங்கும் நிலம் தொடர்பாக ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும். ஜெஸெரோ ஒரு காலத்தில் நதிப்படுகையாக, டெல்டா பூமியாக இருந்தது. இதற்கு முன்பு மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியின் முடிவில் ஆராஅய்ச்சியாளார்கள் இந்த பகுதியில் பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஈரமான நிலைமைகள் இருந்ததை சுட்டிக்காட்டுகின்றன. நதி நீர் பாயும் அளவிற்கு செவ்வாய் கிரகம் ஒரு காலத்தில் வெப்பமான வளிமண்டலத்தைக் கொண்டிருந்தால், அங்கு நுண்ணுயிர் உயிர்கள் இருந்திருந்தால், அந்த சிறப்பு பகுதிகள் இன்றும் கூட இருக்க வாய்ப்புகள் உள்ளது.
ரோவர் அதனுடன் 7 கருவிகளை கொண்டு செல்கிறது. ஸூம் வசதியுடன் கூடிய சூப்பர் கேமரா சிஸ்டமும் அதில் அடங்கும். ரோவரில் உள்ள மிகவும் சுவாரஸ்யமான கருவிகளில் ஒன்று MOXIE. இது செவ்வாய் வளிமண்டலத்தில் உள்ள கார்பன் டை ஆக்சைடில் இருந்து ஆக்ஸிஜனை உருவாக்கும். இந்த கருவி வெற்றிகரமாக செயல்பட்டால், எதிர்காலத்தில் விண்வெளி வீரர்கள் பூமிக்கு திரும்புவதற்கு ராக்கெட் எரிபொருளை எரிக்க இதை பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் இது நாள் வரையில் ஒரு மனிதனும் கூட செவ்வாயில் கால் வைத்ததில்லை.
செவ்வாய் கிரகத்தில் பறக்கும் முதல் ஹெலிகாப்டரான இன்ஜெனுயிட்டியையும் இந்த ரோவர் செல்கிறது. ரோவர் அடைய முடியாத இடங்களின் மேற்பரப்பில் இருந்து மாதிரிகளை சேகரிக்க இது உதவும். ஒட்டுமொத்தமாக, ரோவர் பண்டைய வாழ்க்கையின் அறிகுறிகளைப் படிப்பதற்கும், எதிர்கால பயணங்களின் போது பூமிக்கு திருப்பி அனுப்பப்படக்கூடிய மாதிரிகளை சேகரிப்பதற்கும், கிரகத்திற்கு எதிர்கால ரோபோ மற்றும் மனித பயணங்களுக்கு பயனளிக்கும் புதிய தொழில்நுட்பத்தை சோதிப்பதற்காகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“