Advertisment

ஜி.பி.எஸ்-க்கு பதிலாக 'நேவிக்'! இந்தியாவின் புதிய சேவை

author-image
WebDesk
Jul 18, 2019 20:27 IST
ககன்யான் மட்டும் இஸ்ரோவின் திட்டமில்லை... பாராளுமன்றத்தில் பட்டியலிடப்பட்ட திட்டங்கள் ஒரு பார்வை!

இந்தியாவிலும் அதன் பிராந்தியங்களிலும் உள்ள பயனாளர்களுக்கு மண்டல இருப்பிடத்தை அறியும் செயற்கைக்கோள் அமைப்பு துல்லியமான இருப்பிடத் தகவல் சேவையை வழங்க முடியும். இது அதனுடைய எல்லையிலிருந்து 1500 கி.மீ வரைக்கும் நீள்கிறது. மேலும், இது முதன்மை சேவை பகுதியாக உள்ளது.

Advertisment

இதன் மூலம், இந்திய பயனாளர்கள் தங்களுடைய மொபைல் போன் மற்றும் கார்களில் பயன்படுத்தும் இருப்பிடத்தை அறியும் அமைப்பை மாற்றி அமைத்துக்கொள்ளலாம்.

பெங்களூருவில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ தற்போது உள்ள ஜிபிஎஸ் அமைப்புக்கு மாற்றாக இருப்பிடத்தை அறியும் செயற்கைக்கோளின் இந்திய வெர்ஷனை கொண்டுவர குவால்காம் போன்ற சிப் உற்பத்தியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய இருப்பிடத்தை அறியும் அமைப்பு நேவிக் என்று அழைக்கப்படுகிறது.

இந்தியா மட்டும்தான் சொந்தமாக இருப்பிடத்தை அறியும் அமைப்பு முறையை வைத்துள்ளதா?

இல்லை. ஜி .பி.எஸ் என்பது வானொலி வழி இருப்பிடத்தை அறியும் அமைப்பு முறையை அடிப்படையாகக் கொண்டது. அமெரிக்க அரசுக்கு சொந்தமான இதை அந்நாட்டு விமானப்படையால் இயக்கப்படுகிறது. அமெரிக்காவின் ஜி.பி.எஸ் தவிர ரஷ்யாவின் க்ளோனாஸ், ஐரோப்பிய ஒன்றியத்தின் கலிலியோ, சீனாவின் பெய்டோ ஆகிய இருப்பிடத்தை அறியும் செயற்கைக்கோள் அமைப்புகள் உள்ளன.

இந்தியா இருப்பிடத்தை அறியும் அமைப்பை எப்போது அடைந்தது?

2017 ஆம் ஆண்டு இந்தியா ஐ.ஆர்.என்.எஸ்.எஸ் 1- ஜி செயற்கைக்கோளை வின்னில் செலுத்தியபோதே அதனுடைய இருப்பிடத்தை அறியும் அமைப்பு முறையை பெற்றுவிட்டது. இது இந்திய மண்டல இருப்பிடத்தை அறியும் செயற்கைக்கொள் அமைப்பில் (ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்) ஏழாவது செயற்கைக்கோள் ஆகும். இந்த செயற்கைக்கோள்கள் புவிசார் ஒத்திசைவு மற்றும் புவி சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. இது வெளிநாட்டு அரசையோ அல்லது வெளிநாட்டு சப்ளையர்களையோ சார்ந்து இல்லாமல் இந்திய மக்களுக்கும் ராணுவ பயணர்களுக்கும் அதன் கூட்டு அமைப்புகளுக்கும் பிரத்யேக செயற்கைக்கொள் இருப்பிடத்தை அறியும் அமைப்பு சேவையை வழங்கியுள்ளது. இந்த திட்டத்துக்கான செலவு ரூ.1.420 கோடி ஆகும்.

இந்திய செயற்கைக்கோள் பற்றிய விவரங்கள் என்ன?

ஏழாவது இந்திய மண்டல இருப்பிடத்தை அறியும் செயற்கைக்கொள் அமைப்பு ஐ.ஆர்.என்.எஸ்.எஸ் இதற்கு முந்தைய ஆறாவது செயற்கைக்கோளைப் போன்றது. ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். – 1ஜி செயற்கைக்கோள் மொத்தம் 1,425 கிலோ எடையைக் கொண்டது. 7 செயற்கைக்கோள்களும் ஒரே மாதிரியாக கட்டமைக்கப்பட்டுள்ளன. அனைத்து ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். செயற்கைக்கோள்களும் விண்ணில் செலுத்துவதற்கு மிகவும் சக்திவாய்ந்த எக்ஸ்.எல் வெர்ஷன் இயந்திரம் பயன்படுத்தப்பட்டது. ஒவ்வொன்றும் 6 பட்டைகளையும் 12 டன் எடை உந்துசக்தியைக் கொண்டது. இந்த 7 செயற்கைக்கோள்களில் 3 செயற்கைக்கோள்கள் புவிவட்ட சுற்றுப்பாதையில் பொருத்தமான இடங்களில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. மீதமுள்ள 4 செயற்கைக்கோள்களும் இருவேறு ராக்கெட்டுகளில் செலுத்தப்பட்டு தேவையான சாய்வு மற்றும் பூமத்திய ரேகைகளைக் கொண்ட புவி வட்டப்பாதையில் உள்ளன.

ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். அப்ளிகேஷன் என்றால் என்ன?

ஐஆர்.என்.எஸ்.எஸ் என்பது இந்திய மண்டல இருப்பிடத்தை அறியும் செயற்கைக்கோள் அமைப்பு. இது நிலையான இருப்பிடத்தை அறியும் சேவையை அனைத்து பயனாளர்களுக்கும் வழங்குகிறது. மேலும், இது அங்கீகரிக்கப்பட்ட பயனாளர்களுக்கு ரகசிய குறியீட்டு எண்ணுடன் கட்டுப்படுத்தப்பட்ட சேவையை வழங்குகிறது. இந்த ஐ.ஆர்.என்.எஸ்.எஸ் முந்தைய 20 மீட்டர் சேவையை விட இருப்பிடம் அறிதல் துல்லியமாக இருக்கும். இது சாலை போக்குவரத்து, விமானப்போக்குவரத்து, கடல்போக்குவரத்து, பேரிடர் மீட்பு மேலாண்மை, வாகன கண்காணிப்பு, கடற்படை மேலாண்மை, செல்போன்களின் ஒருங்கிணைப்பு, துல்லியமாக நேரத்தை அளவிடுதல், வரைபடம் தயாரித்தல், நில அளவை செய்யும் விவரங்களை பெறுதல் ஆகியவற்றில் உதவும்.

மண்டல இருப்பிடத்தை அறியும் செயற்கைக்கோள் அமைப்பு இந்தியாவிலும் அதன் பிராந்தியங்களிலும் உள்ள பயனாளர்களுக்கு துல்லியமாக இருப்பிடம் அறியும் தகவல் சேவையை வழங்க முடியும். இது அதனுடைய எல்லையிலிருந்து 1500 கி.மீ வரைக்கும் விரிவாக்கப்பட்டு நீள்கிறது. மேலும், இது முதன்மை சேவை பகுதியாகவும் உள்ளது. இதன் விரிவாக்கப்பட்ட சேவை பகுதி அதன் எல்லையை தாண்டியும் உள்ளது. அதை 30 டிகிரி தெற்கு மற்றும் 50 டிகிரி வடக்கு அட்சரேகைகள் என கற்பனையான செவ்வக வடிவில் அதன் விளிம்புகள் வரை நீட்டிக்க முடியும்.

#Isro
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment