தேசியக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (என்.சி.இ.ஆர்.டி) ஒன்றாம் வகுப்பு சேர்வதற்கு முன்பான மழலையருக்கான பாடத்திட்ட அறிக்கையை திங்கள்கிழமை வெளியிட்டது. இந்த அறிவிப்பில் உள்ள பல முக்கிய பரிந்துரைகளில், மழலைகள் தங்கள் தாய்மொழயில் கல்வி கற்க வேண்டும் என்பது மிக முக்கியமாக கருதப்படுகின்றன. அங்கன்வாடிப் பள்ளிகள், நர்சரி பள்ளிகள், மழலையர் பள்ளிகள் இந்தியாவில் ஆரம்ப முதன்மை கல்வி என்று கருதப்படுகின்றன
அனைத்து மழலையர்களும் நிதான வளர்ச்சி, அதற்கேற்ற அணுகுமுறைகளைப் பெரும் வண்ணம் இந்த பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. மழலையர்களின் வாழ்வில் பெற்றோர்கள்,ஆசிரியர்கள், திட்டம் வகுப்பாளர்கள், நிர்வாகத்தில் இருப்பவர்கள் ஆகியோர்களின் பங்கு என்ன என்பதும் இந்த என்சிஇஆர்டி பாடத்திட்டம் வரையறுக்கிறது.
வாழ்நாள் முழுவதும் கற்றல் திறன், அனைத்து வகையிலும் வளர்ச்சி போன்ற இரண்டையையும் இந்த பாடத்திட்டம் மையப்படுத்திகிறது. மேலும், ஆரம்ப முதன்மை கல்வி வணிகமாய் மாறுவது, மழலையர்களுக்கு கல்விக் கற்கும் உத்வேகத்தை குறைக்கும் என அறிவுறித்தியுள்ளது.
இந்த முயற்சி எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவை?
மழலையர்களுக்கான கல்வி முழுமையானதாகவும், உள்ளார்ந்த தேவைகளுக்கு ஏற்றதாகவும், விளையாட்டு மற்றும் செயல்பாடு அடிப்படையில் இருப்பதற்காகவும் இதுபோன்ற பாடத்திட்ட வடிவம் தேவைப்படுவதாக என்சிஇஆர்டி தெரிவிக்கிறது. ஒவ்வொரு குழந்தையின் வெவ்வேறு கற்றல் திறன், விளையாட்டின் முக்கியத்துவம் போன்ற தற்காலிக நரம்பியல் ஆய்வுகளின் கூற்று இந்த என்சிஇஆர்டியின் பாடத்திட்டக் ஆய்வை வழிநடத்துகிறது.
கற்பிக்கும் மொழியைப் பற்றி பாடத்திட்ட ஆய்வு என்ன கூறுகிறது?
இந்த அறிக்கையில் 'மழலையர் குழந்தைகளின் பண்புகள்' என்ற தலைப்பில், வீட்டு மொழி அல்லது தாய் மொழியில் மழலைகள் கற்பிக்கப் படவேண்டும் என்ற வாசகம் உள்ளது (வீட்டு மொழி குடும்பத்திற்க்குள் அதிகமாகப் பேசப்படும் மொழி). இந்தியா போன்ற பலமொழி பேசும் நாட்டில் மொழி சம்பந்தப்பட்ட யோசனைகள் மிகவும் சிக்கலான விஷயம். ஏனெனில், வீட்டில் வேறு மொழியைப் பழகியிருக்கும் மழலைக் குழந்தை ஆரம்ப முதன்மை கல்விப் பள்ளிகளில் வேறொரு தாய்மொழி பேசும் குழந்தையை சந்திக்க நேரிடும். தாய்மொழியில் (அல்லது வீட்டு மொழியில்) ஆரம்பக் கல்வி பெரும் மழலைகள், பெரும்பாலும் புரிந்து விளங்கும் திறனில் சற்று சிறப்பாக செயல்படுவதாக சொன்ன ஒரு ஆராய்ச்சியையும் இந்த அறிக்கை மேற்கோள் காட்டுகிறது.
சைகை மொழிக்கு குழந்தைகளை வெளிப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் இந்த அறிக்கை வலியுறுத்துகிறது.
பாடத்திட்ட ஆய்வு:
நல்ல ஆரோக்கியத்தை பெறுதல்- பெற்ற ஆரோக்கியத்தை பராமரித்தல்; பிறரோடு தொடர்புபடுத்தும் திறன்களை வளர்த்தல், தான் இருக்கும் சூழலோடு தன்னை இணைத்தல், போன்ற மூன்று குறிக்கோள்களை செயலாக்கப்படுவதாய் இந்த என்சிஇஆர்டி அறிக்கை அமைந்துள்ளது.
இது ஆசிரியர்களால் பின்பற்றப்பட வேண்டிய ஒரு கல்வியியல் செயல்முறையையும் குறிப்பிடுகிறது . விசாரிக்கும் திறன், விமர்சிக்கும் பார்வை, ஆய்வு செய்யக்கூடிய மனநிலை போன்றவைகளை மழலைக்கு ஊக்குவிக்க ஆசிரியர்களுக்கு தேவையான நுட்பங்களையும் இந்த என்சிஇஆர்டி தெளிவாக விவரிக்கின்றது.