Advertisment

NCERT குழு 'இந்தியா'-வை 'பாரத்' என மாற்ற பரிந்துரை; நாட்டின் பெயர்களின் சுருக்கமான வரலாறு

"பாரத்", "பாரதம்" அல்லது "பாரதவர்ஷம்" ஆகியவற்றின் வேர்கள் புராண இலக்கியம் மற்றும் மகாபாரத இதிகாசத்தில் உள்ளன. புராணங்கள் பாரதத்தை “தெற்கே கடலுக்கும் வடக்கே பனி உறைந்த பகுதிக்கும் இடைப்பட்ட நிலம்” என்று விவரிக்கின்றன.

author-image
WebDesk
New Update
India Bharat exp

NCERT குழு 'இந்தியா'-வை 'பாரத்' என மாற்ற பரிந்துரை; நாட்டின் பெயர்களின் சுருக்கமான வரலாறு

“என்.சி.இ.ஆர்.டி 2022 சமூக அறிவியல் குழுவால் இந்த பரிந்துரை செய்யப்பட்டது. அடுத்த கல்வியாண்டு முதல் இது செயல்படுத்தப்படும் என்று நாங்கள் நம்புகிறோம், ஆனால் இது அனைத்தும் என்.சி.இ.ஆர்.டி-யைப் பொறுத்தது” என்று அந்த குழுவின் தலைவர் கூறினார்.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க: NCERT panel suggests replacing ‘India’ with ‘Bharat’: A brief history of the nation’s names

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலின் (NCERT) 2022 சமூக அறிவியல் குழு, 12-ம் வகுப்பு வரையிலான அனைத்து சமூக அறிவியல் பாடப் புத்தகங்களிலும் ‘இந்தியா’ என்பதை ‘பாரத்’ என்று அழைக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது.

“அடுத்த கல்வி ஆண்டு முதல் இது செயல்படுத்தப்படும் என்று நாங்கள் நம்புகிறோம், ஆனால் இது அனைத்தும் என்.சி.இ.ஆர்.டி-யைப் பொறுத்தது” என்று இந்த குழுவின் தலைவர் பேராசிரியர் சி.ஐ இசாக் தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறினார்.

புதுடெல்லியில் நடைபெற்ற ஜி20 உச்சிமாநாட்டின் போது, குடியரசுத் தலைவர் வழங்கிய விருந்துக்கான அழைப்பிதழில் வழக்கமாக “இந்தியாவின் குடியரசுத் தலைவர்” என்பதற்குப் பதிலாக, “பாரதத்தின் குடியரசுத் தலைவர்” என்று குறிப்பிடப்பட்டபோது, நாட்டின் பெயரைப் பற்றிய விவாதம் நடந்துகொண்டிருக்கும் சூழலில் இந்த குழுவின் பரிந்துரை வந்துள்ளது.

அப்போதிருந்து, 'இந்தியா' என்பதிலிருந்து 'பாரத்' என்று "பெயர் மாற்றம்" பற்றிய ஊகங்கள் அதிகரித்துள்ளன.

ஆனால் முதலில் ‘பாரத்’ என்ற பெயர் எங்கிருந்து வந்தது?

"பாரத்", "பாரதம்" அல்லது "பாரதவர்ஷம்" ஆகியவற்றின் வேர்கள் புராண இலக்கியம் மற்றும் மகாபாரத இதிகாசத்தில் உள்ளன. புராணங்கள் பாரதத்தை “தெற்கே கடலுக்கும் வடக்கே பனி உறைந்த பகுதிக்கும் இடைப்பட்ட நிலம்” என்று விவரிக்கின்றன.

பரதர் ரிக் வேத பழங்குடியினரின் மூதாதையராக இருந்த புராணத்தின் பண்டைய மன்னரின் பெயரும் பரதன் ஆகும். மேலும், இந்த துணைக்கண்டத்தின் அனைத்து மக்களின் முன்னோடியாகவும் இருந்தார்.

ஜவஹர்லால் நேரு ஜனவரி 1927-ல் எழுதுகையில்,  “தொலைதூர கடந்த காலத்திலிருந்து நீடித்து வரும் இந்தியாவின் அடிப்படை ஒற்றுமை பற்றி குறிப்பிட்டார்:  “ஒரு பொதுவான நம்பிக்கை மற்றும் கலாச்சாரத்தின் ஒற்றுமை. இந்தியா பாரதம், இந்துக்களின் புனித பூமி.” (தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள் தொகுதி. 2) 

'இந்தியா' மற்றும் 'இந்துஸ்தான்' பற்றி என்ன?

ஹிந்துஸ்தான் என்ற பெயர், சமஸ்கிருத ‘சிந்து’ என்பதன் பாரசீக இணை வடிவமான ‘இந்து’ என்பதிலிருந்து பெறப்பட்டதாக கருதப்படுகிறது. இது கி.மு 6 ஆம் நூற்றாண்டில் தொடங்கிய சிந்து சமவெளியை அக்கீமெனிட் பாரசீக வெற்றியுடன் புழக்கத்திற்கு வந்தது. அக்கீமெனிட்கள் ஆட்சியின் கீழ் சிந்துப் படுகையை அடையாளம் காண இந்த வார்த்தையைப் பயன்படுத்தினர். மேலும், கிபி முதல் நூற்றாண்டில் இருந்து, ஸ்தான் என்ற பின்னொட்டு உடன் இந்துஸ்தான் உருவாக்கப் பெயருடன் பயன்படுத்தப்பட்டது.

அக்கீமெனிட்களிடம் இருந்து ‘ஹிந்த்’ பற்றிய அறிவைப் பெற்ற கிரேக்கர்கள், அந்தப் பெயரை ‘சிந்து’ என்று மொழிபெயர்த்தனர். கிமு 3-ம் நூற்றாண்டில் மாசிடோனிய மன்னர் அலெக்சாண்டர் இந்தியா மீது படையெடுத்த நேரத்தில், ‘இந்தியா’ சிந்துவுக்கு அப்பால் உள்ள பகுதி என்று அடையாளம் காணப்பட்டது.

ஆரம்பகால முகலாயர்களின் காலத்தில் (16 ஆம் நூற்றாண்டு), இந்தோ-கங்கை சமவெளி முழுவதையும் விவரிக்க 'ஹிந்துஸ்தான்' என்ற பெயர் பயன்படுத்தப்பட்டது - இந்துஸ்தான் தெற்காசியா முழுவதும் முகலாய பேரரசரின் பிரதேசங்களைக் குறிக்கிறது.

18-ம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து, பிரிட்டிஷ் வரைபடங்கள் 'இந்தியா' என்ற பெயரை அதிக அளவில் பயன்படுத்தத் தொடங்கின. மேலும், 'இந்துஸ்தான்' தெற்காசியா முழுவதிலும் அதன் தொடர்பை இழக்கத் தொடங்கியது.  “இந்தியா என்ற பெயரை ஏற்றுக்கொண்டது காலனித்துவ பெயரிடல் முன்னோக்குகளில் மாற்றங்களைக் குறிக்கிறது, இந்த துணைக் கண்டத்தை ஒரு ஒற்றை, எல்லை மற்றும் பிரிட்டிஷ் அரசியல் பிரதேசமாக புரிந்து கொள்ள உதவியது” என்று வரலாற்றாசிரியர் ஐயன் ஜே பாரோ, 'ஹிந்துஸ்தானிலிருந்து இந்தியா வரை: பெயர்களின் மாற்றத்தில் மாறிய பெயரிடுதல் (2003). (‘From Hindustan to India: Naming Change in Changing Names’ (2003) என தனது கட்டுரையில் எழுதினார்.

அரசியலமைப்பு சபை முடிவு செய்தது என்ன?

 “இந்தியா, அதாவது பாரதம், மாநிலங்களின் ஒன்றியமாக இருக்கும்.” இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 1 இன் முதல் வரி இவ்வாறு செல்கிறது. ஆனால், இது விவாதம் இல்லாமல் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

நாட்டின் முதன்மைப் பெயராக ‘பாரத்’ என்பதை அடிக்கோடிட்டுக் காட்ட சிலர் வலியுறுத்தினர். ஐரிஷ் அரசியலமைப்பின் உதாரணத்தை மேற்கோள் காட்டி, ஹரி விஷ்ணு காமத், ‘இந்தியா’ என்பது ‘பாரத்’ என்பதன் ஆங்கில மொழிபெயர்ப்பு மட்டுமே என்று வாதிட்டார்.

"ஐரிஷ் சுதந்திர மாநிலத்தின் அரசியலமைப்பு பின்வருமாறு கூறுகிறது: "மாநிலத்தின் பெயர் ஐர், அல்லது ஆங்கிலத்தில் அயர்லாந்து," என்று காமத் கூறினார்.

ஹர்கோவிந்த் பண்ட் போன்ற மற்றவர்கள் "பாரதவர்ஷம் என்பதே தேவை, வேறு எதுவும் தேவையில்லை என்று கூறினர். “இந்த மண்ணின் செல்வத்தைப் பற்றிக் கேள்விப்பட்டு, அதை நோக்கி ஆசைப்பட்டு, நம் நாட்டின் செல்வத்தைப் பெறுவதற்காக நமது சுதந்திரத்தைப் பறித்த வெளிநாட்டவர்களால் இந்த பெயர் நம் நாட்டிற்கு வழங்கப்பட்டது என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். அப்படியிருந்தும் நாம் ‘இந்தியா’ என்ற வார்த்தையைப் பற்றிக் கொண்டால், அன்னிய ஆட்சியாளர்களால் நம்மீது திணிக்கப்பட்ட இந்த இழிவான வார்த்தையைக் கொண்டிருப்பதில் நாம் வெட்கப்படவில்லை என்பதையே இது காட்டுகிறது” என்று பண்ட் வாதிட்டார்.

'பாரதம்' கொண்டு செல்லும் நாகரீக அர்த்தங்கள் குறித்தும் சொற்பொழிவு வாதங்கள் செய்யப்பட்டன.

“நமது நாட்டிற்கு பாரதம் என்று பெயரிடுவதன் மூலம் நாம் முன்னேறிச் செல்வதைத் தடுக்கும் எதையும் செய்யவில்லை. நமது வரலாறு மற்றும் நமது கலாச்சாரத்திற்கு ஏற்றவாறு நம் நாட்டிற்கு அத்தகைய பெயரை நாம் உண்மையில் வைக்க வேண்டும்” என்று ‘பாரத்’ பெயரை விரும்பிய மற்றொரு ஆதரவாளர் சேத் கோவிந்த் தாஸ் வாதிட்டார்.

ஆனால் இறுதியில், 'இந்தியா, அதாவது பாரதம்,' குழுவால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அரசியல் நிர்ணய சபையின் வரைவுக் குழுவின் தலைவரான டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் போன்றவர்கள், இந்தியாவின் கடந்த கால பெருமை பற்றிய நாகரீக விவாதங்களையும், அழைப்புகளையும் நிராகரித்தனர்.

"நிறைய வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது" என்று டாக்டர் அம்பேத்கர் இந்த பிரேரணை ஏற்கப்படுவதற்கு முன் கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Bharath
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment