NCRB Automated facial recognition : ஜூன் 28ம் தேதி தேசிய குற்றப்பதிவு ஆணையம், ஆட்டோமேட்டட் ஃபேசியல் ரெகாக்னிசேசன் சிஸ்டம் தேவை என்று ஒரு முக்கிய வேண்டுகோளை விடுத்துள்ளது.
Automated Facial Recognition (AFRS) என்றால் என்ன?
AFRS இந்த டேட்டா பேஸில் மக்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சேகரித்து வைக்கப்படும். ஒரு குற்றம் நடைபெறும் இடத்தில் இருந்து பெறப்படும் சி.சி.டி.வி காட்சிகளில் அடையாளம் தெரியாதவர் ஒருவரின் புகைப்படம் கிடைத்தால் அந்த டேட்டா பேஸூடன் ஒப்பிட்டு, அவர் யார் என்று அடையாளம் கண்டு கொள்ள இயலும் என்பதால் இந்த ப்ரொபோசலை முன்வைத்திருக்கிறது. பதிவாகும் முகத்தின் பேட்டர்னை கண்டறிந்து அதனை டேட்டா பேஸூடன் ஒப்பிடும் முறையை நாம் நியூட்ரல் நெட்வொர்க்ஸ் என்று அழைக்கின்றோம்.
மேலும் படிக்க : டி.என்.ஏ தொழில்நுட்பம் மசோதா 2019 முக்கியத்துவம் பெறுவதற்கான காரணங்கள் என்ன?
தற்போது ஃபேசியல் ரெகக்னிசேசன் என்பது மேனுவலாகவே செய்யப்படுகிறது. ரேகைகள் மற்றும் ஐரிஸ் ஆகியவற்றை கொண்டு துல்லியமான ஒப்பீட்டினை நம்மால் பெற்றிட இயலுகிறது. ஆட்மேட்டட் ஃபேசியல் ரெகாக்னிசேசன் என்பது வந்தால் இந்த அனைத்து ஒப்பீடுகளும் மிக எளிதாகவும் விரைவாகவும் நடைபெறும்.
வேறு எங்காவது AFRS இந்தியாவில் பயன்படுத்தப்படுகிறதா?
இது இந்தியாவில் கொண்டு வரப்பட்டிருக்கும் புது ஐடியாவாகும். ஜூலை 1ம் தேதி, விமான போக்குவரத்து துறை, ஃபேசியல் ரெகக்னேசன் மூலமாக விமான நிலைய அனுமதியை பெறும் ”டிஜி யாத்ரா” (DigiYatra) திட்டத்தை ஐதராபாத்தில் ட்ரெயல் பார்த்தது. 2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தெலுங்கானா போலீஸ் தங்களுக்கான ஆட்டோமேட்டட் ஃபேசியல் ரெகக்னிசேசனை அறிமுகம் செய்தது.
எதற்காக இது தேவைப்படுகிறது?
தொலைந்து போனவர்களை கண்டறிய, குற்றவாளிகளை அடையாளம் காண, அடையாளம் தெரியாமல் இறந்து போனவர்களின் பிரேதம் யாருடையது என்பதை கண்டறிய இது தேவைப்படுகிறது. சி.சி.டி.வி., செய்திதாள்கள், ரெய்ட்கள், மற்றும் ஸ்கெட்ச்கள் ஆகியவையும் உள்ளடக்கிய தளமாக இது செயல்படும். இந்த மையத்தில் ஐரிஸ் மற்றும் ஃபிங்கர் பிரிண்ட் தரவுகளும் சேமிக்கப்படும். இதனால் குற்றவாளிகளை மிக விரைவாக கண்டுபிடிக்க இயலும்.
இது எப்படி செயல்படும்?
தற்போது இயங்கி வரும் பல்வேறு பயோமெட்ரிக் தரவுகளை அடிப்படையாக கொண்டு செயல்படும் அமைப்புகள் அனைத்தும் இதன் மூலம் ஒருங்கிணைக்கப்பட்டு, க்ரைம் மற்றும் கிரிமினல் ட்ராக்கிங் ஆகியவற்றை அறிய இந்த முறை செயல்படுத்தப்படும்.
ஃபிங்கர் பிரிண்ட், ஃபேஸ் ரெகாக்னிசேசன், மற்றும் ஐரிஸ் ஆகியவை ஒன்றாக இணைக்கப்பட்டு, விசாரணைகள் துரித்தப்படுத்தப்படும். போலியான அடையாளங்கள் கொண்டு யாரும் தப்பித்துவிட இயலாது.
மும்பை தற்கொலைப்படை தாக்குதலைத் தொடர்ந்து CCTNS (Crime and Criminal Tracking Network & Systems (CCTNS)) உருவாக்கப்பட்டது. அதன் மூலம் சந்தேகிக்கப்படும் குற்றவாளிகள் குறித்த முழுமையான தரவுகள் சேமிக்க ஆரம்பிக்கப்பட்டது. இதுவரையில் 15,500 காவல் நிலையங்கள் மற்றும் 6000 முக்கிய அதிகாரிகளின் அலுவலகங்கள், முதல் தகவல் அறிக்கைகள் மற்றும் குற்றப்பத்திரிக்கைகள் ஆகியவை இங்கு சேமித்து வைக்கப்பட்டுள்ளன.
புதிதாக உருவாக்கப்படும் அமைப்பில் ICJS, விசா மற்றும் வெளிநாட்டவர்களின் பதிவு மற்றும் மேற்பார்வை, காணாமல் போன குழந்தைகளை கண்டறிய பயன்படுத்தப்படும் கோயா பாயா போர்டல் ஆகியவற்றையும் ஒன்றிணைக்கப்படும்.
இதன் முழுமையான கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க