நாடாளுமன்றத்தில் குடியுரிமை திருத்த மசோதா (சிஏபி) மீதான விவாதத்தில் 1950 இல் டெல்லியில் கையெழுத்திடப்பட்ட நேரு-லியாகத் ஒப்பந்தம் பற்றிய பல குறிப்புகள் இருந்தன. இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதைத் தொடர்ந்து, இந்தியா தனது சிறுபான்மையினரைப் பாதுகாத்தாலும், பாகிஸ்தான் அவ்வாறு செய்யத் தவறிவிட்டது. அந்த தவறை இப்போது குடியுரிமை திருத்த மசோதா சரி செய்யும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
பிரபலங்கள், ரசிகர்களின் வாழ்த்து மழையில் நனைந்த ரஜினிகாந்த்!
இந்தியாவின் பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேரு, பாகிஸ்தானின் பிரதமராக இருந்த லியாகத் அலி கான் இடையே 1950 ஏப்ரல் 8 ஆம் தேதி இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்தியா – பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே அதிகாரப்பூர்வமாக செய்யப்பட்ட இந்த ஒப்பந்தம் சிறுபான்மையினரின் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் தொடர்பானது ஆகும்.
டெல்லி ஒப்பந்தம் என்றும் அழைக்கப்படுகிற நேரு – லியாகத் ஒப்பந்தம், இரு நாடுகளிலும் உள்ள சிறுபான்மையினருக்கு நிவாரணம் அளிப்பதற்கான ஒரு கட்டமைப்பை வழங்குவதற்காக இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் கையெழுத்திடப்பட்ட இருதரப்பு ஒப்பந்தமாகும்.
பிரிவினையைத் தொடர்ந்து, இத்தகைய உடன்படிக்கையின் அவசியத்தை இரு நாடுகளிலும் உள்ள சிறுபான்மையினர் உணர்ந்தனர். இது மிகப்பெரிய வகுப்புவாத கலவரத்துடன் தொடர்புடையது. வகுப்புவாத பதற்றம், 1950 கிழக்கு பாகிஸ்தான் கலவரம், நவகாளி கலவரம் போன்ற கலவரங்களுக்கு மத்தியில், 1950 ஆம் ஆண்டில் சில மதிப்பீடுகளின்படி, ஒரு மில்லியன் இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் கிழக்கு பாகிஸ்தானில் இருந்து (இன்றைய பங்களாதேஷில்) குடியேறினர்.
இந்தியாவும் பாகிஸ்தானும் ஒப்புக்கொண்டது என்ன?
இந்திய மற்றும் பாகிஸ்தான் அரசுகள் ஒவ்வொன்றும் அதன் எல்லை முழுவதும் உள்ள சிறுபான்மையினருக்கு, குடியுரிமையின் முழுமையான சமத்துவத்தை, மதத்தைப் பொருட்படுத்தாமல், வாழ்க்கை, கலாச்சாரம், சொத்து மற்றும் தனிப்பட்ட மரியாதை, இயக்க சுதந்திரம் ஆகியவற்றில் முழு பாதுகாப்பு உணர்வையும் உறுதி செய்யும் என்பதை ஒப்புக்கொள்கின்றன. ஒவ்வொரு நாட்டிற்குள்ளும் சட்டம் மற்றும் நெறிகளுக்கு உட்பட்டு தொழில் செய்யும் உரிமை, பேச்சு சுதந்திரம், வழிபாட்டு உரிமை உள்ளது”என்று இந்த ஒப்பந்தத்தின் உரை தொடங்குகிறது.
“சிறுபான்மையினரின் உறுப்பினர்கள் பெரும்பான்மை சமூகத்தின் உறுப்பினர்களுடன் தங்கள் நாட்டின் பொது வாழ்க்கையில் பங்கேற்கவும், அரசியல் அல்லது பிற பதவிகளை வகிக்கவும், தங்கள் நாட்டின் சிவில் மற்றும் ஆயுதப்படைகளில் பணியாற்றவும் சமமான வாய்ப்பைப் பெறுவார்கள். இரு அரசாங்கங்களும் இந்த உரிமைகளை அடிப்படையானவை என்று அறிவித்து அவற்றை திறம்பட செயல்படுத்துகின்றன.
அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது: “இந்த உரிமைகள் இந்தியாவில் உள்ள அனைத்து சிறுபான்மையினருக்கும் அதன் அரசியலமைப்பால் உத்தரவாதம் அளிக்கப்படுகிறது” என்பதில் இந்தியப் பிரதமர் கவனத்தை ஈர்த்துள்ளார். மேலும், அது, பாக்கிஸ்தானின் அரசியலமைப்பு சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட குறிக்கோள் தீர்மானத்திலும் இதேபோன்ற ஏற்பாடு இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், “தாங்கள் குடிமக்களாக இருக்கும் அரசுகளுக்கு சிறுபான்மையினரின் நம்பிக்கையையும் விசுவாசத்தையும் இரு அரசுகளும் வலியுறுத்த விரும்புகின்றன. அவர்களின் குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டியது அவர்களுடைய சொந்த அரசு தான்” என்றும் குறிப்பிட்டுள்ளது.