தொழிலாளர்களின் குறைந்த பட்ச ஊதிய திட்டத்தில் மாற்றம் செய்யும் ஊதிய மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்க உள்ளது. தினக் கூலிகள் மற்றும் தொழிலாளர்களின் குறைந்த பட்ச ஊதியம் பெறுவதற்கான முறையில் ஊதிய மசோதா மூலம் மாற்றம் செய்யப்படவுள்ளது. இந்த புதிய மாற்றம் அரசு பணியாளர்கள் மற்றும் தேசிய ஊரக வளர்ச்சி திட்டத்தில் பணிப்புரிபவர்களுக்கு பொருந்தாது.
ஊதிய மசோதாவில் கவனிக்க வேண்டியவை:
ஊதியங்கள் சட்ட மசோதாவின் முக்கிய நோக்கமானது, நாட்டிலுள்ள எல்லா ஊதியத் தொழிலாளர்களுக்கும் ஒரு சட்ட ரீதியான தேசிய குறைந்தபட்ச ஊதியத்தை உறுதி செய்வதாகுமென அரசாங்கம் கூறுகிறது. தேசிய குறைந்தபட்ச ஊதியத்தைக் காட்டிலும் குறைவாக மாநில அளவிலான குறைந்தபட்ச ஊதியத்தை எந்த மாநில அரசாங்கமும் நிர்ணயிக்க முடியாது. மத்திய அரசாங்கம் நிர்ணயிக்கும் குறைந்தபட்ச ஊதியம் நாடெங்கிலும் உள்ள முறைசார்ந்த மற்றும் முறை சாராத எல்லா தொழில்களுக்கும் பொருந்துமென மசோதா கூறுகிறது. ஏப்ரல் 2017 வரை குஜராத், ஆந்திரப் பிரதேசம் மற்றும் தமிழ்நாடு உட்பட 11 மாநிலங்கள் குறைந்தபட்ச ஊதியத்தை மத்திய அரசு குறிப்பிட்டுள்ள தேசிய அளவிலான ஊதியத்தைக் காட்டிலும் குறைவாக வைத்திருந்தார்கள்.
ஊதிய விதிகள் மசோதா கடந்த 2017 ஆம் ஆண்டு மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டது. பின்னர் அதே மசோதா ஆகஸ்ட் மாதம் நாடாளுமன்ற நிலை குழுவுக்கு பரிந்துரைக்கப்பட்டது. ஊழிய வழங்கல் சட்டம் 1936, குறைந்தபட்ச ஊதியம் வழங்கும் சட்டம் 1948,ஊக்க ஊதிய சட்டம் 1965, சம ஊதிய சட்டம் 1976 ஆகியவற்றுக்கு மாற்றமாக இந்த ஊதிய விதிகள் மசோதா சட்டம் நிறைவேற்றப்படவுள்ளது.
ஏற்படும் மாற்றங்கள்:
இந்த புதிய மசோதா மூலம் சுரங்கம் உள்ளிட்ட சில துறைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கான குறைந்த பட்ச ஓய்வுதியத்தை மத்திய அரசு நிர்ணியிக்கும். இதர பிரிவுகளில் வரும் தொழிலாளர்களின் ஊதியத்தை மாநில அரசு முடிவு செய்யும். இதன் மூலம் மத்திய அரசே தொழிலாளர்களின் குறைந்த பட்ச ஊதியத்தை நிர்ணியக்கும் அதிகாரம் பெறுகிறது.
ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் குறைந்தபட்ச ஊதியம் திருத்தப்படும், அதே நேரத்தில் மாநில அரசு தங்கள் பிராந்தியங்களுக்கான குறைந்தபட்ச ஊதியத்தை தீர்மானிக்கலாம். இது மத்திய அரசின் ஊதிய அளவை விட குறைவாக இருக்க முடியாது. 2017 ஆம் ஆண்டில் நிர்ணயிக்கப்பட்ட குறைந்த பட்ச ஊதியம் ஒரு நாளைக்கு ரூ .176 ஆக உள்ளது, ஆனால் சில மாநிலங்களில் ஆந்திரா (ரூ .69) மற்றும் தெலுங்கானா (ரூ .69) போன்ற மாநிலங்கள் குறைந்தபட்ச ஊதியங்கள் மிக குறைவாக உள்ளன.
தேசிய ஜனநாயக கூட்டணி அரசு முதன்முறையாக தொழிலாளர் சட்டங்களை நான்கு மசோதாவாக குறிப்பிட முன்மொழிந்தது. தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் நான்கு தொழிலாளர் குறியீடுகளை உருவாக்கியது. தொழிலாளர் ஊதியங்கள்,தொழில் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணி நிலைமைகள் ஆகியவை. தற்போதுள்ள மத்திய தொழிலாளர் சட்டங்களின் பொருத்தமான விதிகளை மாற்றுதல் சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை தற்போது ஒப்புதல் வழங்கியுள்ளது.