Kaunain Sheriff M
New coronavirus strain in UK: இந்தியா திங்கள்கிழமை முதல் டிசம்பர் 31ம் தேதி வரை இங்கிலாந்திலிருந்து இந்தியாவிற்கு வருகிற மற்றும் இங்கிலாந்திற்கு செல்லும் அனைத்து விமானங்களையும் நிறுத்தியது. SARS-CoV-2 குறித்த கவலைகளுக்கு மத்தியில், அதன் மாறுப்பட்ட புதிய வடிவம் அங்கே வேகமாக பரவி வேகமாக வளர்ந்து வருகிறது. மேலும், பல நாடுகளும் இங்கிலாந்துக்கு செல்லும் விமானங்களை நிறுத்தி பயணம் செய்ய தடை விதித்துள்ளன.
பயணக் கட்டுப்பாடுகளுக்கு இட்டுச்செல்லும் கவலைகள் யாவை?
கடந்த வாரம், மாறுபட்ட புதிய SARS-CoV-2 வைரஸ் இங்கிலாந்தின் தெற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் கோவிட்-19 தொற்றுகள் வேகமாக அதிகரிப்பதற்கு காரணம் என்று தெரியவந்தது. அது VUI (மாறுபாட்ட விசாரணையின் கீழ்) 202012/01 அல்லது B.1.1.7 பரம்பரை என குறிப்பிடப்படுகிறது.
“நம்முடைய உலகத் தரம் வாய்ந்த மரபணு திறனுக்கு நன்றி. கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸின் புதிய மாறுபாட்டை நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம். அது இங்கிலாந்தின் தெற்கு பகுதியில் வேகமாக பரவுவதுடன் தொடர்புடையதாக இருக்கலாம்” என்று இங்கிலாந்து சுகாதார செயலாளர் மாட் ஹான்காக் டிசம்பர் 14ம் தேதி பொது அவையில் கூறினார். இங்கிலாந்து அதிகாரிகள் ஏற்கனவே உலக சுகாதார அமைப்புக்கு இந்த மாறுபாடு குறித்து அறிவித்துள்ளனர்.
இந்த மாறுபாட்டுடன் 1,108 தொற்று நோயாளிகள் டிசம்பர் 13ம் தேதி வரை அடையாளம் காணப்பட்டுள்ளதாக இங்கிலாந்து பொது சுகாதாரத்துறை (PHE) அறிவித்துள்ளது. அவை பெரும்பாலும் இங்கிலாந்தின் தெற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலும், “இங்கிலாந்து பொது சுகாதாரத்துறை கூட்டாளிகளுடன் ஆய்வு செய்ய வேலை செய்கிறது. அடுத்த 2 வாரங்களில் அதன் கண்டுபிடிப்புகளைப் பகிர்ந்துகொள்ள திட்டமிட்டுள்ளது” என்று கூறியுள்ளது.
அது என்ன மாதிரியான மாறுபாடாக இருக்கிறது?
கோவிட்-19 ஜெனோமிக்ஸ் இங்கிலாந்து (COG-UK), இங்கிலாந்தில் இருந்து செயல்படும் மரபணு வரிசைமுறை தரவை பகுப்பாய்வு செய்யும் கூட்டமைப்பின் மரபணு கண்காணிப்பில் இந்த மாறுபாடு அடையாளம் காணப்பட்டது. உலகளாவிய கோவிட்-19 தரவுத்தளமான GISAID-க்கு COG-UK மிகப்பெரிய பங்களிப்பாகும்.
நாவல் கொரோனா வைரஸ் SARS-CoV-2ன் ஸ்பைக் (முட்கள்) புரதத்தில் பல பிறழ்வுகள் மற்றும் ஆர்.என்.ஏ வைரஸின் பிற மரபணு பகுதிகளில் நிகழ்ந்துள்ள பிறழ்வுகளின் விளைவாக இந்த மாறுபாடு உள்ளது. முதற்கட்ட பகுப்பாய்வில் இது முன்னர் சுற்றுகளில் உள்ள மாறுபாடுகளைக் காட்டிலும் அதிக அளவில் பரவக்கூடியது என்று கூறுகிறது. COG-UK இந்த பிறழ்வுகளில் ஒன்றாக ‘N501Y’-ஐ அடையாளம் கண்டுள்ளது. இது ஸ்பைக் புரதத்தின் ஒரு பகுதியில், மனித உயிரணுவில் உள்ள ஒரு முக்கிய புரதமான ACE2 ஏற்பியுடன் பிணைக்கிறது. இந்த மாற்றங்கள் கோட்பாட்டளவில், வைரஸ் மேலும் அதிக தொற்று நோயாக மாறக்கூடும் என்பதற்கான அறிகுறியாகும். “இந்த பிறழ்வுகள் ஏதேனும் தொற்று பரவல் அதிகரிப்புக்கு பங்களிக்கின்றனவா இல்லையா என்பதை உறுதிப்படுத்த முயற்சிகள் நடந்து வருகின்றன” என்று கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
தொற்று பரவுதல் மற்றும் நோயின் தீவிரம் பற்றி இதுவரை நமக்கு தெரிந்தவைகள் என்ன?
இங்கிலாந்து பொது சுகாதார துறை, முழு-மரபணு வரிசைமுறை, தொற்றுநோயியல் மற்றும் மாதிரிகளை உருவாக்குதல் ஆகியவற்றிலிருந்து பெறப்பட்ட தரவுகள் புதிய மாறுபட்ட வைரஸ் மற்ற மாறுப்பட்ட வைரஸ்களைவிட எளிதில் பரவுகிறது” என்று ஞாயிற்றுக்கிழமை கூறியுள்ளது.
இந்த குறிப்பிட்ட மாறுபட்ட வைரஸ் சுற்றுகளில் இருக்கும் புவியியல் பகுதிகளில் தொற்று வீதங்கள் எதிர்பார்த்ததை விட வேகமாக அதிகரித்துள்ளதை சான்றுகள் காட்டுகின்றன. மேலும், மாதிரிகளின் சான்றுகள் இந்த மாறுபட்ட வைரஸ் தற்போது சுற்றுகளில் உள்ள மற்ற வகைகளைவிட அதிகமாக பரவும் வீதத்தைக் கொண்டுள்ளது என்பதை நிரூபித்துள்ளது.
அதிகமாக பரவுதல் எந்தளவுக்கு கவலையானது?
புதிய மற்றும் வளர்ந்து வரும் சுவாச வைரஸ் அச்சுறுத்தல் ஆலோசனைக் குழு (NERVTAG) புதிய மற்றும் வளர்ந்து வரும் சுவாச வைரஸ்களால் ஏற்படும் அச்சுறுத்தல் குறித்து டிசம்பர் 18ம் தேதி இங்கிலாந்து அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது. அது புதிய மாறுபட்ட நோய் பெருக்கத்தின் எண்ணிக்கையை 0.93 வரை அதிகரிக்கக்கூடும் என்று கூறியது. மேலும், புதிய மாறுபட்ட வைரஸ் பிற மாறுபட்ட வைரஸ்களுடன் ஒப்பிடும்போது தொற்று பரவலில் கணிசமான அதிகரிப்பு இருப்பதை காட்டுவதால் அது மிதமான நம்பிக்கையை கொண்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.
இருப்பினும், அதிகரித்த பரவுதலின் அடிப்படை வழிமுறை, தொற்று நோயாளிகளின் வயது மற்றும் நோய் தீவிரம் குறித்து எந்தவொரு முடிவையும் எடுக்க தற்போது போதுமான தரவுகளும் இல்லை என்று நிபுணர் அமைப்பு முடிவு செய்தது. சுமார் 1,000 தொற்று நோயாளிகளில் 4 இறப்புகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அது கூறியுள்ளது. ஆனால், இந்த இறப்பு விகிதத்தை ஒப்பிடக்கூடிய தரவுத் தொகுப்புகளுடன் ஒப்பிடுவதற்கு மேலும் பணிகள் தேவை.” என்று அது கூறியுள்ளது.
“ஸ்பைக் கிளைகோ புரோட்டினின் ஏற்பி-பிணைப்பு களத்தில் உள்ள பிறழ்வுகளின் இருப்பிடம். இந்த மாறுபாடு முந்தைய மாறுபாடுகளிலிருந்து ஆன்டிஜெனிகலாக வேறுபடுவதற்கான வாய்ப்பை எழுப்புகிறது. இந்த மாறுபாட்டுடன் 915 நோயாளிகளில் நான்கு சாத்தியமான மறுதொற்றுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. ஆனால், இந்த மறுதொற்றுகளின் வீதத்தை ஒப்பிடக்கூடிய தரவுத் தொகுப்புகளுடன் ஒப்பிடுவதற்கு மேலும் பணிகள் தேவைப்படுகிறது” என்று அந்த அமைப்பு கூறியது.
நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்கான ஐரோப்பிய மையத்தால் வெளியிடப்பட்ட அச்சுறுத்தல் மதிப்பீட்டு சுருக்கம், பைலோஜெனடிக் பகுப்பாய்வு "அசல் வுஹான் திரிபுகளிலிருந்து 29 நியூக்ளியோடைடு மாற்றுகளால் கொத்து வேறுபடுகிறது" என்று பைலோஜெனடிக் பகுப்பாய்வு வெளிப்படுத்துகிறது. "டென்மார்க்கிலிருந்து மூன்று காட்சிகள் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்து ஒன்று, நவம்பர் 2020 இல் சேகரிக்கப்பட்ட மாதிரிகள், இங்கிலாந்து மாறுபாட்டுடன் கூடிய கொத்து, சர்வதேச பரவல் நிகழ்ந்திருப்பதைக் குறிக்கிறது, இருப்பினும் அந்த அளவு தெரியவில்லை என்றாலும்," என்று அது கூறியது.
நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்கான ஐரோப்பிய மையத்தால் வெளியிடப்பட்ட அச்சுறுத்தல் மதிப்பீட்டு சுருக்கம், “பைலோஜெனடிக் பகுப்பாய்வு அசல் வுஹான் வைரஸ் திரிபுகளிலிருந்து 29 நியூக்ளியோடைடு மாற்றுகளால் இந்த கொத்து வேறுபடுகிறது” என்று தெரிவிக்கிறது.
“டென்மார்க்கிலிருந்து மூன்று காரணிகள் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்து ஒரு காரணி நவம்பர் 2020 இல் சேகரிக்கப்பட்ட மாதிரிகள், இங்கிலாந்து மாறுபாட்டுடன் கூடிய கொத்து என்பது சர்வதேச பரவல் நிகழ்ந்திருப்பதைக் குறிக்கிறது. இருப்பினும் அதன் அளவு தெரியவில்லை” என்று அது கூறியது.
இதற்கு முன்பு வைரஸ் பிறழ்வடையவில்லையா?
மனித மக்கள்தொகையில் ஒரு வைரஸ் பிரதிபலிக்கும் மற்றும் சுழற்சியில் இருக்கும்போதெல்லாம், உலகளாவிய பைலோஜெனியில் மாதத்திற்கு ஒன்று முதல் இரண்டு பிறழ்வுகள் என்ற விகிதத்தில் பிறழ்வுகள் இயற்கையாகவே நிகழ்கின்றன.
உண்மையில், SARS-CoV-2ஐப் பொறுத்தவரை, COG-UK ஸ்பைக் புரதத்தில் தற்போது சுமார் 4,000 பிறழ்வுகள் உள்ளன என்று கூறுகிறது. முன்னர் டி614 ஜி மாறுபாடு ஆதிக்கம் செலுத்தியது. ஏனெனில், அது மிக எளிதாக பரவியது. ஸ்பானிஷ் வேளாண் தொழிலாளர்களிடம் தோன்றிய மற்றொரு மாறுபாடு 20A, EU1, கோடையில் ஐரோப்பா முழுவதும் வேகமாக பரவியது.
“புதிய பிறழ்வுகள் தொடர்ச்சியாக வெளிப்படுவதன் பின்னணியில், எந்தவொரு பிறழ்வும் முதலில் வெளிப்படும்போது அது முக்கியமானதா என்பதைக் கணிப்பது கடினம். வைரஸ் உயிரியலில் பிறழ்வுக்கும் ஒரு நுட்பமான மாற்றத்திற்கும் இடையிலான தொடர்பைக் காட்டும் சோதனை பணிகளின் அடிப்படையில் அவற்றின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்வது சாத்தியமாகும். இருப்பினும், பல ஆயிரக்கணக்கான பிறழ்வுகளின் விளைவை சோதிக்க கணிசமான நேரமும் முயற்சியும் தேவைப்படும்” என்று COG-UK கூறியுள்ளது.
இது தடுப்பூசி முன்னேற்றத்தையும் பதில் நடவடிக்கையையும் பாதிக்குமா?
இதைப் புரிந்துகொள்வதற்கு முன்னுரிமையாக மேலும் ஆய்வகப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இங்கிலாந்து அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர். “ஃபைசர் தடுப்பூசி வைரஸின் புதிய மாறுபாட்டுக்கு எதிராக மக்களைப் பாதுகாக்காது என்பதற்கு தற்போது எந்த ஆதாரமும் இல்லை” என்று இங்கிலாந்து பொது சுகாதாரத்துறை கூறியுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.