Advertisment

வியட்நாமில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை கொரோனா: என்ன வித்தியாசம்?

Vietnam Covid-19: இந்தியாவில் பரவிய கொரோனா வகையும், பிரிட்டனில் பரவிய வகையும் கலந்து ஒரு புதிய உருமாறிய கொரோனா வைரஸ் வியட்நாமில் கண்டறியப்பட்டுள்ளதாக அந்நாட்டு அமைச்சர் நுயேன் தன் லாங் கடந்த வாரம் தெரிவித்தார்.

author-image
WebDesk
New Update
covid-19 variant

வியட்நாம் கொரோனா வைரஸ் பாதிப்பை கண்டறிதல் மற்றும் தனிமைப்படுத்தல் பணிகளை மேற்கொள்ள விமான நிலையங்களில் பயணிகளை தீவிரமாக கண்காணித்து வந்தது. சீனாவுடன் எல்லை பகிர்ந்து கொண்ட போதிலும், அண்டை நாடுகளை விட கொரோனா நெருக்கடியை வியட்நாம் சிறப்பாக சமாளித்தது.

Advertisment

கம்யூனிஸ்ட் தேசத்தில் கடந்த ஆண்டு ஜனவரியில் 7,572 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், 48 பேர் உயிரிழந்தனர். இது அண்டை நாடான மலேசியாவை விடக் குறைவானது. அங்கு ஒரே நாளில் ஏராளமானோருக்கு கொரோனா உறுதியானது.இருப்பினும் தற்போது வியட்நாமில் உருமாறிய புதிய கொரோனா வைரஸால் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

வியட்நாமின் உருமாறிய வைரஸ் என்ன?

வியட்நாமில் புதிய மோசமான உருமாறிய கொரோனா வைரஸ் உருவாகி இருப்பதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் நுயேன் தன் லாங் தெரிவித்துள்ளார். இது இந்தியாவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வகை வைரஸ் மற்றும் UK வில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வகை வைரஸின் கூட்டு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு முறை வைரஸ் மியூடேட் ஆகும்போதும் அது அதிக பலம் கொண்டதாக மாறும் அல்லது பலம் இழந்ததாக மாறும். 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதன்முதலாக கோவிட்-19 கண்டறியப்பட்டது தொடங்கி இன்று வரை ஆயிரக்கணக்கான முறையில் மியூடேஷன் நடைபெற்றுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

இந்தியாவில் பரவிய கொரோனா வகையும், பிரிட்டனில் பரவிய வகையும் கலந்து ஒரு புதிய உருமாறிய கொரோனா வைரஸ் வியட்நாமில் கண்டறியப்பட்டுள்ளதாக நுயேன் தன் லாங் கடந்த வாரம் தெரிவித்தார்.

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் 7 வகை கொரோனா வேரியண்டுகள் கண்டறியப்பட்டுள்ளது. B.1.222, B.1.619, D614G, B.1.1.7 போன்றவை UK விலும், B.1.351, A.23.1 and B.1.617.2 போன்றவை இந்தியாலும் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த புதிய வகை கொரோனா காற்றில் வேகமாக பரவும் திறன் கொண்டது என வியட்நாம் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ஆய்வக சோதனையில் இது அதிக ஆபத்து கொண்டதாக இருக்கலாம் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பிற கொரோனா வைரஸின் வகைகளைக் காட்டிலும் இதனுடைய பரவும் வேகம் மிக அதிகமாக இருப்பதாக அமைச்சர் நுயேன் தெரிவித்துள்ளார்.

வியட்நாமில் சிலருக்கு நோய் தொற்றிய நிலையில், அவர்களை குணப்படுத்துவது கடினமாக இருந்ததாகவும், அதை வைத்து ஆய்வு செய்த போது அது புதிய வகை வைரஸ் என்பதும் தெரியவந்துள்ளது. எனினும் இது புதிய வைரஸ்தானா என்பதை உறுதி செய்ய வியட்நாம் அரசு உலக சுகாதார அமைப்புக்கு தகவல் அனுப்பியுள்ளது.

வைரஸின் மரபணு குறியீடு குறித்து வியட்நாம் அரசு இதுவரை தெரியப்படுத்தவில்லை.

இந்த புதிய வைரஸால் யாருக்கு ஆபத்து?

கடந்த வருடம் அக்டோபர் மாதம் இந்தியாவில் B.1.617 என்ற புதிய வகை வைரஸ் முதன்முதலில் கண்டறியப்பட்டது. இது பிரிட்டன் வகை என்று சொல்லக்கூடிய B.1.1.7-ஐ காட்டிலும் வேகமாக பரவக்கூடியது என நிபுணர்கள் கண்டறிந்தனர்.

Pfizer மற்றும் Oxford AstraZeneca தடுப்பு மருந்துகள் B.1.617.2(DELTA) வகை வைரஸிற்கு எதிராக சிறப்பாக செயல்படுகிறது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆனால் இரு டோஸ் செலுத்திக்கொண்ட பிறகுதான் அவை பலனளிக்கின்றன. ஒரு டோஸ் தடுப்பு மருந்தில் பாதுகாப்பு குறைவாகவே உள்ளது.

இருப்பினும், கொரோனா வைரஸின் எந்தவொரு மியூடேஷனும் பெரும்பான்மையான மக்களுக்கு மிகவும் கடுமையான நோயை ஏற்படுத்துகிறது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

இந்த வகை வைரஸால் வயதானவர்கள் மற்றும் இணைநோய் உள்ளவர்களுக்கு அதிக ஆபத்து உள்ளது. ஆனால் தடுப்பூசி போட்டுக்கொள்ளாத மக்களிடையே தான் அதிக இறப்புகளை ஏற்படுத்துகிறது.

உருமாறிய கொரோனா வைரஸ்தானா?

வியட்நாமில் கண்டறியப்பட்ட உருமாறிய வைரஸ் உண்மையில் இந்தியாவில் கண்டறியப்பட்ட B.1.617.2 என்ற டெல்டா வைரஸ்தான். ஆனால் கூடுதல் மியூடேஷன்ஸ்களுடன் மாற்றமடைந்துள்ளது என உலக சுகாதார அமைப்பின் தொழில்நுட்ப பிரிவு தலைவர் மருத்துவர் மரியா வான் கெர்கோவ் தெரிவித்துள்ளார். இதனை கூடுதலாக கண்காணிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

உருமாறிய கொரோனா வைரஸ்களுக்கு உலக சுகாதார நிறுவனம் பெயரிட்டு வகைப்படுத்தியுள்ளது.

ஆல்பா: இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ்களுக்கு ஆல்பா என பெயரிடப்பட்டுள்ளது. UK/Kent(B.1.1.7) வைரஸால் பிரிட்டனில் 200,000 மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். 50க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி மியூடேட் ஆனது.

பீட்டா: தென்னாப்பிரிக்காவின் (B.1.351) வைரஸ் UK உட்பட 20க்கும் மேற்பட்ட நாடுகளில் கண்டறியப்பட்டது.

காமா : பிரேசில் வைரஸ்(P.1) 10க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியது.

டெல்டா: இந்த வகை வைரஸ் (B.1.617.2) முதலில் இந்தியாவில் கண்டறியப்பட்டது.

வியட்நாம் வேரியண்ட் மற்ற வைரஸ்களை விட ஆபத்தானதா?

பெரும்பாலானோருக்கு வைரஸ் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. வயது முதிர்ந்தோர் மற்றும் இணைநோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு சற்று பாதிப்பு அதிகமாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

இந்தியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் பிரேசில் வைரஸ் வகைகள் அனைத்தும் மனித உயிரணுக்களுடன் இணையும்போது மாற்றங்களைச் செய்துள்ளன.

இந்தியாவில் காணப்படும் மாறுபட்ட வைரஸ்களில் சில முக்கியமானவை (L452R) மிகவும் எளிதாக பரவக்கூடியது. இருப்பினும், இது மிகவும் கடுமையான நோயை ஏற்படுத்துவதற்கான அல்லது தற்போதைய தடுப்பூசிகளை குறைந்த செயல்திறன் மிக்கதாக மாற்றுவதற்கான எந்த ஆதாரமும் இல்லை என கூறப்பட்டுள்ளது.

அரசு நோய் பரவலை தடுக்க என்ன செய்கிறது?

வியட்நாமில் குறைந்தது 30 நகராட்சிகள் மற்றும் மாகாணங்களில் வைரஸ் பரவியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தடுப்பூசிகளை கொள்முதல் செய்வதில் அரசு மிகவும் மந்தமாக செயல்படுகிறது. 97 மில்லியன் மக்கள் தொகை கொண்ட நாட்டில் ஒரு மில்லியன் டோஸ்களே போடப்பட்டுள்ளது. இது நாட்டிலேயே குறைந்தபட்ச ஒன்று.

கடந்த சில வாரங்களாக தடுப்பூசி கொள்முதலை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. அதற்காக நிதி வழங்கலாம் எனவும் தெரிவித்துள்ளது. இதுவரை 2.9 மில்லியன் டோஸ் தடுப்பூசிகளை வாங்கியுள்ளது. இந்த வருடத்திற்குள் 150 மில்லியன் தடுப்பூசிகளை இருப்பு வைத்துக்கொள்ள திட்டமிட்டுள்ளது.

நோய் பரவல் அதிகரித்ததை தொடர்ந்து அங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. பொதுநிகழ்ச்சிகளுக்கு தடை செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Coronavirus Covid 19
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment