Advertisment

பி.எம் 2.5, சல்பர் டை ஆக்சைடு மற்றும் பல: நமது காற்றில் உள்ள மாசுபாடுகள் என்ன, அவை நமது உடலை எவ்வாறு பாதிக்கிறது?

High levels of air pollution in north India: ஏ.கியூ.ஐ பல்வேறு மாசுபடுத்திகளின் சிக்கலான காற்றின் தரவை ஒற்றை எண்ணாக மாற்றுகிறது. மாசுபடுத்திகளின் ஆதாரங்கள் மற்றும் அவை ஏன் கவலைக்குரியவை என்பது குறித்து இங்கு பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
 New Delhi.jpg

வட இந்தியாவில் அதிகரித்து வரும் மாசு அளவுகள் காற்று மாசுபாட்டின் அளவீடான காற்று தரக் குறியீட்டு (AQI) மதிப்பெண்ணில் கவனம் செலுத்த வழிவகுத்தது. உதாரணமாக, டெல்லி திங்கள்கிழமை (நவம்பர் 6) AQI மதிப்பெண்ணை 400க்கு மேல் பதிவு செய்தது. இது கடுமையான காற்று மாசுபாட்டை குறிக்கிறது. 100க்கு அதிகமான அனைத்து குறியீடும் காற்று மாசுபாட்டை வெவ்வேறு நிலைகளில் குறிப்பிடுகின்றன. 

Advertisment

AQI ஆனது பல்வேறு மாசுபடுத்திகளின் சிக்கலான காற்றின் தரத் தரவை எளிதில் புரிந்து கொள்வதற்காக ஒற்றை எண்ணாக மாற்றுகிறது. மாசுபடுத்தும் பொருட்களில் PM 10, PM 2.5, நைட்ரஜன் டை ஆக்சைடு, ஓசோன், கார்பன் போன்றவை அடங்கும். இவை ஒவ்வொன்றும் என்ன, அவை எங்கிருந்து வருகின்றன, அவை உடலுக்கு எவ்வாறு பாதிப்பு ஏற்படுத்துகிறது என்பது குறித்து பார்ப்போம். 

பி.எம்  10 மற்றும் பி.எம் 2.5 என்றால் என்ன?

இவை மிக நுண்ணிய துகள்கள் particulate matter (PM) ஆகும். அவற்றுடன் வரும் எண்கள் அவற்றின் விட்டத்தைக் குறிக்கின்றன. எனவே, PM 10 மற்றும் PM 2.5 ஆகியவை அவற்றின் விட்டத்தில் முறையே 10 மற்றும் 2.5 மைக்ரான்களைக் காட்டிலும் சிறியவை. ஒரு மைக்ரான் என்பது ஒரு மில்லிமீட்டரில் ஆயிரத்தில் ஒரு பங்கு மற்றும் இந்த சிறிய அளவு மனித ஆரோக்கியத்தை எவ்வாறு பாதிக்கிறது என்பதில் பங்கு வகிக்கிறது. நுண்ணிய துகள்கள், அவற்றிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்வது மிகவும் கடினம்.

அவற்றின் அளவு காரணமாக, PM 2.5 துகள்கள் மூக்கு மற்றும் தொண்டையை எளிதில் கடந்து, இரத்த ஓட்ட அமைப்புக்குள் நுழைய முடியும். துகள்கள் ஆஸ்துமா, மாரடைப்பு, மூச்சுக்குழாய் அழற்சி மற்றும் பிற சுவாச பிரச்சனைகள் போன்ற நாள்பட்ட நோய்களுக்கும் வழிவகுக்கும். தொழிற்சாலைகள், வாகன மாசுபாடு, கட்டுமான நடவடிக்கைகள் மற்றும் சாலை தூசி போன்றவற்றில் இருந்து வெளியேறும் உமிழ்வுகளின் துணை தயாரிப்புகள், அத்தகைய துகள்கள் சிதறாது மற்றும் நாம் சுவாசிக்கும் காற்றில் நிறுத்தி வைக்கப்படுகின்றன.

நைட்ரஜன் டை ஆக்சைடு (NO2)

நைட்ரஜன் டை ஆக்சைடு (NO2) எரிபொருளை எரிப்பதன் மூலம் காற்றில் கலக்கிறது. வாகனங்கள் மற்றும் மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து வெளியேற்றப்படும் உமிழ்வுகள் காற்றில் கலக்கிறது.

யுனைடெட் ஸ்டேட்ஸ் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனம் (EPA) NO2-ன் குறுகிய காலத்திற்கு சுவாசிப்பது கூட பாதிப்பை ஏற்படுத்தும் எனக் கூறியுள்ளது. ஆஸ்துமா போன்ற சுவாச நோய்களை மோசமாக்கும், மேலும் இருமல் அல்லது சுவாசிப்பதில் சிரமம் போன்ற பிற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் என்று கூறுகிறது.  

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் கடந்த வாரம் வெளியிட்ட செய்தியில், NO2-ன் வெளிப்பாடு, குறுகிய காலத்திற்கு (பூஜ்ஜியத்திற்கும் ஏழு நாட்களுக்கும் இடையில்) கூட, அவசர அறைக்கு வருகை தரும் எண்ணிக்கையில் 53 சதவிகிதம் அதிகரிப்பதற்கு வழிவகுக்கிறது என்று டெல்லி ஏய்ம்ஸ் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. 

ஓசோன் (O3)

ஓசோன் என்பது வளிமண்டலத்தின் மேல் அடுக்குகளில் இருக்கும் ஒரு வாயு ஆகும், இது சூரியனின் புற ஊதா கதிர்களின் தாக்கத்திலிருந்து மனித உடலை பாதுகாக்கிறது. இருப்பினும், மேற்பரப்பு-நிலை ஓசோன் மிகவும் குறிப்பிடத்தக்க காற்று மாசுபாடுகளில் ஒன்றாகும். சூரிய ஒளியின் முன்னிலையில் வளிமண்டல மாசுபடுத்திகளின் எதிர்வினையால் இது உருவாகிறது.

சர்வதேச மருத்துவ பொது சுகாதார இதழில் வெளியிடப்பட்ட 2017 ஆய்வின்படி, "மேற்பரப்பில்  அதிக ஓசோன் அதிகரிப்பு நுரையீரல் நோய் (சிஓபிடி), இதயம் மற்றும் சுவாச கோளாறுகளுக்கு வழிவகுக்கும் எனக் கூறியுள்ளது. 

சல்பர் டை ஆக்சைடு (SO2)

அமெரிக்க அரசாங்கத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் கூற்றுப்படி, வளிமண்டலத்தில் SO2 இன் மிகப்பெரிய ஆதாரம் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் பிற தொழில்துறை வசதிகளால் புதைபடிவ எரிபொருட்களை எரிப்பதாகும். 

ஆங்கிலத்தில் படிக்க: https://indianexpress.com/article/explained/everyday-explainers/air-pollution-aqi-source-health-impact-explained-9016879/

மற்ற வாயுக்களைப் போலவே, SO2 வெளிப்பாடு இதய அமைப்புக்கு தீங்கு விளைவிக்கும் மற்றும் சுவாச நோய்களின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும். SO2 மற்ற சேர்மங்களுடனும் வினைபுரிந்து துகள்களை உருவாக்க முடியும். "அதிக செறிவுகளில், வாயு SOx இலைகளை சேதப்படுத்துவதன் மூலமும், வளர்ச்சியைக் குறைப்பதன் மூலமும் மரங்கள் மற்றும் தாவரங்களுக்கு தீங்கு விளைவிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. 

கார்பன் மோனாக்சைடு (CO)

இது ஒரு நச்சு, நிறமற்ற மற்றும் மணமற்ற வாயு.  மரம், நிலக்கரி மற்றும் பெட்ரோல் போன்ற கார்பன் கொண்ட எரிபொருளை எரிக்கும்போது அது வெளியேறுகிறது. காற்றில் CO அளவு அதிகமாக இருந்தால், ஒரு நபர் மயக்கமடைந்து இறக்க கூட நேரிடும். நீண்ட கால வெளிப்பாடு இதய நோய் அபாயத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Air Pollution Delhi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment