புதிய கல்விக் கொள்கை, பெரும்பாலும், இந்தியக் கல்வியை மாற்றுவதற்கான ஒரு முன்னோக்கு கட்டமைப்பை வழங்குகிறது என்று தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழின் பங்களிப்பு ஆசிரியர் பிரதாப் பானு மேத்தா எழுதினார்.
"பள்ளிக்கல்வி குறித்த பெரும்பாலான பரிந்துரைகளைச் செயல்படுத்தி, பள்ளி குழந்தைகளுக்கு அதிகாரம் அளித்து அறிவொளியூட்டினால், வரும் நூற்றாண்டு இந்தியாவுக்கு சொந்தமானது" என்று அவர் கூறுகிறார்.
கல்விக் கொள்கையில் குறிப்பிடப்பட்ட அம்சங்கள் பாராட்டக்குறியது என்றாலும், நமது அச்சங்கள் " கல்விக் கொள்கை ஆவணத்தில் உள்ள விசயங்களை விட, அதை சார்ந்த நடைமுறை சூழலில் இருந்து வந்தவை" என்று மேத்தா கூறுகிறார்.
"காலங்காலமாக பள்ளிக்கல்வியில் செய்து வந்த துரோகங்களின் ரணங்களையும், வலியையும் நாம் சுமந்துக் கொண்டிருப்பதால், இந்த புதிய கல்விக் கொள்கையும் நடைமுறைப்படுத்தப்படாத மற்றொரு அறிவிப்பு என எண்ணிவிடக் கூடாது" என்று மேத்தா கூறுகிறார்
இந்தியாவின் அரசியல் பொருளாதாரம் (பொலிடிகல் எகானமி) தரமான கல்வியை, முக்கிய முன்னுரிமையாக மாற்றவில்லை. பள்ளிக்கல்வி மீது நம்பிக்கைகளும், அபிலாஷைகளும், தேவைகளும் கடந்த இரண்டு தசாப்தங்களாக அதிகரித்தன . ஆனால், இவை அனைத்தும் அடிப்படை மாற்றங்களுக்கான ஒரு கோரிக்கையாக இன்னும் மொழி பெயர்க்கப்படவில்லை.
கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்
"துரோகத்தின் பெரும்பகுதி அரசியல்வாதிகளிடமிருந்து அல்ல, கல்வியாளர்களிடமிருந்து வந்தது.பள்ளிக் கல்வியில் மேற்கொள்ள வேண்டிய நியாயமான மாற்றத்திற்கான எதிர்ப்பு அளவற்றது,”என்று அவர் தெரிவித்தார் .
கல்விக் கொள்கையில் சந்தேகத்தை ஏற்படுத்தும் மற்றொரு அரசியல் சூழலும் உள்ளது. விமர்சன சிந்தனை, கருத்தியல் தெளிவு, எதையும் கேள்வி கேட்கும் திறன் போன்றவைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று கல்விக் கொள்கை ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டது.
"ஆனால், இந்த வார்த்தைகளை, அதன் சூழலோடு இணைத்து பார்ப்பது கடினம். உதாரணமாக, நமது பல்கலைக்கழகங்கள் இன்று அரசியல் மற்றும் கலாச்சார இணக்கத்திற்கு அச்சுறுத்தப்படுகின்றன. நாட்டின் பள்ளிக்கல்வி முறை செழிப்பதற்கு, மக்கள் சமூகம் சுதந்திரமாக இருக்க வேண்டும்; அடையாள அரசியலில் விமர்சன சிந்தனை ஒரு இறையாண்மையாக இருக்க முடியாது, ”என்று அவர் கூறுகிறார்.
ஆகவே, அதிகாரத்தின் யதார்த்தங்களால் கட்டுப்படுத்தப்பட்ட சுதந்திரத்தையும், விமர்சன சிந்தனையையும் உறுதிப்படுத்துவது மிகவும் கடினம் என்று ஆசிரியர் எடுத்துரைத்தார்.
"அரசு முகமைகளில் உட்பொதிக்கப்படும் விதிமுறைகளைப் பொறுத்து தான் மாற்றம் நிகழும். ஒழுங்குமுறை குறித்த இந்த அரசாங்கத்தின் பதிவு ஊக்கமளிப்பதாக இல்லை. எனவே, ஒருவர் புதியக் கல்விக் கொள்கை ஆவணத்துடன் உடன்படுகிறாரா? என்ற கேள்வியைத் தவிர்த்து, "ஆவணத்தில் குறிப்பிட்டுள்ள சில நம்பிக்கைக்குரிய அம்சங்களை செயல்படுத்த வைக்கும் சாத்தியக் கூறுகள் என்னென்ன?” என்று மேத்தா கேட்கிறார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil