மத்திய சுகாதார அமைச்சகம் தடுப்பூசி குறித்த புதிய வழிகாட்டுதல்களை கொண்டு வந்துள்ளது. நான்கு குறிப்பிட்ட வகையான நபர்கள் கோவிட்-19 தடுப்பூசிகளை ஒத்திவைக்க வேண்டும் என்று கூறியுள்ளது.
கோவிட்-19 தடுப்பூசியை ஒத்திவைக்க வேண்டிய முதல் வகையினர் யார்?
பரிசோதனையில் SARS-2 COVID-19 தொற்று உறுதி செய்யப்பட்ட நபர்கள், கோவிட் தொற்றில் இருந்து மீண்ட பிறகு, COVID-19 தடுப்பூசியை 3 மாதங்களுக்கு தள்ளிவைக்க வேண்டும் என்று சுகாதார அமைச்சகத்தின் புதிய வழிகாட்டுதல்கள் பரிந்துரைக்கிறது.
கோவிட்-19 தடுப்பூசி முதல் டோஸைப் போட்டுக்கொண்ட பிறகு, பரிசோதனையில் தொற்று உறுதியானால், இரண்டாவது டோஸை ஒத்திவைக்க வேண்டுமா?
ஆமாம், மாநிலங்களுக்குத் தெரிவிக்கப்பட்ட சுகாதார அமைச்சகத்தின் புதிய பரிந்துரை, குறைந்த பட்சம் முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்ட நபர், 2வது டோஸ் தடுப்பூசி அட்டவணையை நிறைவு செய்வதற்கு முன்பு, COVID-19 நோய்த்தொற்றுக்கு ஆளானால், நோயிலிருந்து மீட்கப்பட்ட பிறகு, இரண்டாவது டோஸ் COVID-19 தடுப்பூசியை மூன்று மாதங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று கூறுகிறது.
கோவிட் 19 தொற்று அல்லாத நோயாளி மற்றொரு நோய்க்கு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்படும்போது தடுப்பூசியை ஒத்திவைக்க வேண்டுமா?
ஆமாம். மாநிலங்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட புதிய வழிகாட்டுதல்களின்படி, மருத்துவமனையில் சேர்ப்பது அல்லது ஐ.சி.யூ பராமரிப்பு தேவைப்படும் வேறு ஏதேனும் தீவிரமான பொது நோயால் பாதிக்கப்பட்டவர்களும் COVID-19 தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு 4-8 வாரங்கள் காத்திருக்க வேண்டும் என்று கூறுகின்றன. புற்றுநோய் உட்பட கடுமையான இணை நோய்களைக் கொண்டவர்கள் தடுப்பூசியை ஒத்திவைக்கக் கூடாது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் அல்லது சிக்கலான கவனிப்பில் உள்ள இணை நோய்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டவர்கள் மட்டுமே தடுப்பூசியை ஒத்திவைக்க வேண்டும்.
தடுப்பூசியை ஒத்திவைக்க வேண்டிய நான்காவது வகை நபர்கள் யார்?
புதிய பரிந்துரைகள் SARS-2 மோனோக்ளோனல் ஆன்டிபாடிகள் அல்லது பிளாஸ்மா சிகிச்சை வழங்கப்பட்ட COVID-19 நோயாளிகளுக்கு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்கு கோவிட் 19 தடுப்பூசி ஒத்திவைக்கப்பட வேண்டும் என்று கூறுகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"