Advertisment

மலேரியா தடுப்பூசிக்கான புதிய நம்பிக்கை: அறிவியல், சவால்கள், வாய்ப்புகள்

மலேரியாவுக்கு எதிரான தடுப்பூசி உருவாக்குவதில், பல ஆண்டு கால மெதுவான முன்னேற்றத்திற்குப் பிறகு, நீண்ட போராட்டத்தின் முடிவில் நம்பிக்கை வெளிச்சம் தெரிகிறது.

author-image
WebDesk
New Update
Anti - Malaria drugs, Express Explained, Express Health, malaria cases

மலேரியா போன்ற ஒட்டுண்ணி நோய்க்கு எதிராக தடுப்பூசியை உருவாக்குவதில் அறிவியல் மற்றும் தளவாட சவால்களை சுட்டிக் காட்டும் இந்த முன்னேற்றத்திற்கு 30 ஆண்டுகளுக்கும் மேலாக சுமார் 700 மில்லியன் டாலர் செலவாகியுள்ளது.

Advertisment

மலேரியா ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 6 லட்சம் மக்களைக் கொல்கிறது, அவர்களில் பெரும்பாலானோர் துணை-சஹாரா ஆப்பிரிக்காவில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் என்பது துயரமானது. இந்த நோய்க்கு எதிராக பயனுள்ள தடுப்பூசியை உருவாக்க வேண்டிய அவசியம் நீண்ட காலமாக முதன்மையாதாக இருந்து வருகிறது. ஆனால், மலேரியா ஒட்டுண்ணியின் மிகவும் சிக்கலான வாழ்க்கைச் சுழற்சியைக் கருத்தில் கொண்டு, பாதுகாப்பு நோய் எதிர்ப்பு சக்தியுடன் தொடர்புபடுத்தும் முக்கிய கூறுகளின் தன்மை மிகவும் கடினமாக உள்ளது.

நம்பிக்கையான முன்னேற்றம்

பல பதிற்றாண்டு காலமாக மெதுவான முன்னேற்றத்திற்குப் பிறகு, நீண்ட போராட்டத்தின் முடிவில் நம்பிக்கை வெளிச்சத்தைக் கண்டடைந்துள்ளனர். குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதற்காக கிளாக்சோ ஸ்மித் க்லைன் (ஜி.எஸ்.கே) உருவாக்கிய ஆர்.டி.எஸ், எஸ்/ஏ.எஸ்01 மஸ்குரிக்ஸ் (RTS,S/AS01 (Mosquirix) தடுப்பூசிக்கு அக்டோபர் 2021 இல் உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் அளித்தது ஒரு முக்கிய மைல்கல். RTS,S/AS01 மிதமான செயல்திறனைக் கொண்டிருந்தாலும், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு நான்கு டோஸ்களுக்குப் பிறகு கடுமையான மலேரியா நோயாளிகளுக்கு 30 சதவிகிதம் ஆபத்தை மட்டுமே குறைக்கிறது. இது இன்னும் குறிப்பிடத்தக்க பொது சுகாதார நலன்களை அளிக்கிறது. இதனால், ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கானவர்களின் உயிர்களைக் காப்பாற்ற முடியும்.

மலேரியா போன்ற ஒட்டுண்ணி நோய்க்கு எதிராக தடுப்பூசியை உருவாக்குவதில் அறிவியல் மற்றும் தளவாட சவால்களை சுட்டிக்காட்டும் இந்த முன்னேற்றத்திற்கு 30 ஆண்டுகளுக்கும் மேலாக சுமார் 700 மில்லியன் டாலர் செலவாகியுள்ளது.

ஜி.எஸ்.கே மஸ்குரிக்ஸ்-ஐ தயாரிக்க பாரத் பயோடெக் அனுமதி வழங்கியுள்ளது. மேலும், 2029 ஆம் ஆண்டில் ஐதராபாத்தை தளமாகக் கொண்ட நிறுவனம் இந்த தடுப்பூசியின் ஒரே உலகளாவிய உற்பத்தியாளராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும், RTS,S/AS01 தடுப்பூசியானது, 2015 இல் நிர்ணயிக்கப்பட்ட 75 சதவீத மலேரியா தடுப்பூசி செயல்திறனுக்கான உலக சுகாதார அமைப்பின் அளவுகோலைச் சந்திக்கத் தவறிவிட்டது. செப்டம்பர் 2021 இல், மற்றொரு மலேரியா தடுப்பூசி, R21/Matrix M, இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்டது. புர்கினா பாசோவில் உள்ள 450 குழந்தைகளிடையே 1 மற்றும் 2 ஆம் கட்ட சோதனைகளில் 77 சதவிகித செயல்திறன் நிரூபிக்கப்பட்டது. செப்டம்பர் 2022 தொடக்கத்தில், லான்செட் தொற்று நோய்கள் இதழில் R21/Matrix-M இன் பூஸ்டர் டோஸின் முடிவுகளை வெளியிட்ட பிறகு, இந்தத் தடுப்பூசி மீண்டும் தலைப்புச் செய்தி ஆனது.

தடுப்பூசிகள் செயல்படும் வழிகள்

RTS,S மற்றும் R21 ஆகிய தடுப்பூசிகள் ஒரே மாதிரியானவை. இவை இரண்டும் கல்லீரல் நிலை ஒட்டுண்ணியின் மேற்பரப்பில் காணப்படும் ஸ்போரோசோயிட் எனப்படும் முக்கிய புரதத்தின் அதே பகுதியைக் கொண்டிருக்கின்றன. இரண்டிலும் ஹெபடைடிஸ் பி வைரஸ் மேற்பரப்பில் ஆன்டிஜென் (HBsAg) உள்ளது. இது சுயமாக உருவாகும் திறன் கொண்ட ஒரு புரதம். ஒட்டுண்ணியுடன் இணைந்து CSP ஆன்டிஜெனின் வைரஸ் போன்ற துகள்களை உருவாக்க உதவுகிறது.

இரண்டு தடுப்பூசிகளுக்கும் இடையிலான முக்கியமான வேறுபாடு ஹெபடைட்டிஸ் பி வைரஸ் மற்றும் ஆண்டிஜென் அளவுதான். RTS,S-இல் கூட்டு புரதம் சுமார் 20 சதவீதம் உள்ளது. மீதமுள்ள 80 சதவீதம் HBsAg ஆன்டிஜெனால் ஆனது. இது தனித்தனியாக உற்பத்தி செய்யப்படுகிறது. மறுபுறம், R21,முற்றிலும் CSP இணைவு புரதத் தொகுதிகளால் ஆனது. இதன் விளைவாக CSP ஆன்டிஜெனின் அதிக அளவு வைரஸ் போன்ற துகள் மேற்பரப்பில் காட்டப்படுகிறது. இது ஹோஸ்டின் நோயெதிர்ப்பு அமைப்புக்கு அதன் வெளிப்பாட்டை கணிசமாக அதிகரிக்கிறது.

நோயெதிர்ப்பு நடவடிக்கையை அதிகரிக்க, அனைத்து புரத அடிப்படையிலான மறுசீரமைப்பு தடுப்பூசிகளும் வலுவான துணை மருந்தை பெரிதும் நம்பியுள்ளன. RTS,S ஆனது GSK இல் உருவாக்கப்பட்ட AS01 எனப்படும் துணை கொண்டு உருவாக்கப்படுகிறது; நோவாவாக்ஸ் (ஸ்வீடன்) உருவாக்கிய மேட்ரிக்ஸ்-எம் எனப்படும் துணைப்பொருளை R21 பயன்படுத்துகிறது. மேட்ரிக்ஸ் எம் சபோனின்-தாவர அடிப்படையிலான பொருளைக் கொண்டுள்ளது. இந்த தடுப்பூசிகளுக்கு ஆன்டிபாடி மற்றும் செல்லுலார் நோயெதிர்ப்பு நடவடிக்கைகளைத் தூண்டுகிறது. இரண்டு தடுப்பூசிகளும் அதிக அளவிலான செயல்திறன் மற்றும் பாதுகாப்பைக் காட்டியுள்ளன. மேட்ரிக்ஸ்-எம் இன்ஃப்ளூயன்ஸாவிற்கு எதிரான பல்வேறு தடுப்பூசி சூத்திரங்களில் பயன்படுத்தப்பட்டது. மேலும், சமீபத்தில் நோவாவாக்ஸ் கோவிட்-19 தடுப்பூசியில் பயன்படுத்தப்பட்டது.

3ம் கட்ட முடிவுகளுக்காக காத்திருப்பு

R21 இன் பூஸ்டர் டோஸின் சமீபத்திய முடிவுகள் தகுதியான உற்சாகத்தை உருவாக்கியிருந்தாலும், தடுப்பூசியின் பெரிய கட்டமான 3ம் கட்ட சோதனையின் முடிவுகள் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. R21 இன் 3 ஆம் கட்ட சோதனைகள் ஏற்கனவே நான்கு ஆப்பிரிக்க நாடுகளில் 5-36 மாத வயதுடைய குழந்தைகளிடம் நடந்து வருகின்றன. இதில் இரண்டு நாடுகளில் மலேரியா ஆண்டு முழுவதும் அச்சுறுத்தலாக உள்ளது. இந்த சோதனைகளில், புர்கினா பாசோ, கென்யா, மாலி மற்றும் தான்சானியாவில் உள்ள ஐந்து இடங்களில் 4,800 குழந்தைகளிடம் R21-இன் செயல்திறன் மற்றும் பாதுகாப்பு திறன் சோதிக்கப்படும். முதல் கட்ட முடிவுகள் 2023 இறுதிக்குள் எதிர்பார்க்கப்படுகிறது.

ஆபத்து பயன் மதிப்பீட்டை உருவாக்க பெரிய அளவிலான, நன்கு சேகரிக்கப்பட்ட பாதுகாப்பு தரவு தேவைப்படும். SARS-CoV-2 தொற்றுநோய் அனுபவம், லட்சக் கணக்கான நோய்த்தடுப்பு மருந்துகள் பதிவு செய்யப்படும் வரை குறிப்பிடத்தக்க பாதகமான நிகழ்வுகள் கண்டறியப்படாமல் போகலாம் என்பதை நினைவூட்டுகிறது.

தடுப்பூசி உருவாக்கத்தில் முன்னோக்கி செல்லும் பாதை நீண்டது. ஆனால், R21 தடுப்பூசி தனியாகவோ அல்லது இரத்தத்தின் நிலை அல்லது பரிமாற்ற நிலை தடுப்பூசி உருவாக்குபர்களுடன் இணைந்து, மலேரியா ஒழிப்புக்கான இறுதி இலக்கை அடைய தொடர்ந்து முயற்சி செய்யப்படும். மலிவு விலையில் திறமையான மலேரியா தடுப்பூசிகளை உருவாக்குவதில் அல்லது தயாரிப்பதில் இந்திய நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிக்கும் என்பது தெளிவாகிறது.

இந்தியா: பலமும் பலவீனமும்

மலேரியா உள்ளிட்ட நோய்களுக்கு எதிரான தடுப்பூசிகளை உருவாக்குவதில் இந்தியா ஏன் வெற்றிபெறவில்லை - குறிப்பாக இந்தியாவில் அடிப்படை மலேரியா ஆராய்ச்சி வலுவாக இருந்தபோதும், ஏன் வெற்றி பெறவில்லை. நாடு முழுவதும் நன்கு நிறுவப்பட்ட மலேரியா ஆராய்ச்சி மற்றும் கட்டுப்பாட்டு மையங்கள் இருந்தபோதும் ஏன் வெற்றி பெறவில்லை.

மலேரியா அல்லது காய்ச்சல் போன்ற நோய்களுக்கு இந்தியாவில் பாதுகாப்பான மற்றும் அறிவியல் பூர்வமாக வலுவான கட்டுப்பாட்டு மனித தொற்று மாதிரிகளை நிறுவுவதில் ஒரு பெரிய இடைவெளி உள்ளது. முதல் கட்டம் பாதுகாப்பு ஆய்வுகளை முடித்த பிறகு, வளர்ச்சியில் உள்ள அனைத்து மலேரியா தடுப்பூசிகளும் பாதுகாப்பான மற்றும் அறிவியல் பூர்வமாக கட்டுப்படுத்தப்பட்ட மனித மலேரியா தொற்று (CHMI) மாதிரியில் சோதிக்கப்பட வேண்டும். இது ஐரோப்பா, இங்கிலாந்து, கொலம்பியா மற்றும் தாய்லாந்தின் பல நாடுகளில் நிறுவப்பட்டுள்ளது. RTS, S மற்றும் R21 ஆகிய இரண்டும் CHMI-இல் மேலும் பாதுகாப்பு மற்றும் செயல்திறன் தொடர்பான சோதனைகளுக்கு முன் சோதிக்கப்பட்டது.

மரபணு பொறியியல் மற்றும் பயோடெக்னாலஜிக்கான சர்வதேச மையத்தின் (ICGEB) டெல்லி விஞ்ஞானிகள், நாட்டில் உருவாக்கப்பட்ட மற்றும் தயாரிக்கப்பட்ட இரண்டு சோதனை இரத்த நிலை மலேரியா தடுப்பூசிகளின் முதல் கட்ட பாதுகாப்பு சோதனைகளை மேற்கொண்டனர். ஆனால், இந்தியாவில் CHMI மாதிரி இல்லாத நிலையில் இந்த தடுப்பூசிகளை மேலும் மேம்படுத்துவது சவாலாக உள்ளது. தொற்று நோய்களுக்கு எதிரான புதிய தடுப்பூசிகளை உருவாக்குவதில் விஞ்ஞானிகளுக்கு உதவ, அறிவியல், நீண்ட கால தொடர்ச்சியான நிதி, ஒழுங்குமுறை மற்றும் தளவாட செயல்முறைகள் சிறப்பாக ஒருங்கிணைக்கப்பட வேண்டும். மிகவும் வெற்றிகரமான மற்றும் ஆழ்ந்த ஈடுபாடு கொண்ட தடுப்பூசி உற்பத்தி செய்யும் பயோஃபார்மா தொழில் மற்றும் வலுவான அறிவியல் அடிப்படையுடன், இந்தியா தடுப்பூசிகளை உருவாக்கி தயாரிப்பதில் உலகை வழிநடத்த முடியும்.

இந்த கட்டுரையை எழுதியவர்: டாக்டர் சௌஹான், ICGEB-யில் எமரிட்டஸ் மூத்த விஞ்ஞானி, இவர் மலேரியாவுக்கான மறுசீரமைப்பு தடுப்பூசியை உருவாக்குவதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்துள்ளார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Who Healthy Life
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment