இந்தியாவின் மூன்றாவது நிலவு பயணமான சந்திரயான்-3, ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து வெள்ளிக்கிழமை புறப்பட்டது. 2019 இல் சந்திரனின் மேற்பரப்பில் விபத்துக்குள்ளான சந்திரயான்-2 இன் தோல்வியை இந்த மிஷன் வெற்றிகரமாக முடிக்கும் என்று நம்பப்படுகிறது. நிலவில் தரையிறங்கும்போது மீண்டும் விபத்து ஏற்படாமல் தவிர்க்கப்படுவதை உறுதிசெய்ய வடிவமைப்பில் முக்கியமான மேம்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
செப்டம்பர் 7, 2019 அன்று சாஃப்ட்-லேண்டிங் செய்ய முயற்சிக்கும் போது, சந்திரயான்-2 அதன் வேகத்தை விரும்பிய நிலைக்குக் குறைக்கத் தவறிவிட்டது. விஞ்ஞானிகள் பின்னர் மென்பொருள் மற்றும் வன்பொருள் இரண்டிலும் சிக்கல்களைக் கண்டறிந்தனர். இதன் விளைவாக, சந்திரயான்-3 இல் உள்ள மென்பொருள் மற்றும் வன்பொருள் பல கூடுதல் திறன்களுடன் பொருத்தப்பட்டுள்ளன.
இதையும் படியுங்கள்: சந்திரயான்-3 வெள்ளிக் கிழமை ஏவப்படும்: இரண்டு நிலவு பயணங்களின் ஒப்பீடு இங்கே
வலுவடைந்த கால்கள்
லேண்டருக்கு சக்கரங்கள் இல்லை; லேண்டர் நிலவின் மேற்பரப்பில் கீழே தொட்டு, பின்னர் நிலைப்படுத்த வேண்டும் என்று ஊன்றுகோல் (stilts), அல்லது கால்கள் இணைக்கப்பட்டுள்ளது. சந்திரயான்-2 நிலவின் மேற்பரப்பில் இருந்து 7.2 கிலோமீட்டர் தொலைவில் தனது கட்டுப்பாட்டை இழந்தது. அதன் தகவல் தொடர்பு அமைப்பு மேற்பரப்பில் இருந்து சுமார் 400 மீ வரை கட்டுப்பாட்டை இழந்தது பற்றிய தரவுகளை வெளியிட்டது. விபத்துக்குள்ளானபோது லேண்டர் மணிக்கு 580 கிமீ அளவில் வேகம் குறைந்தது.
சந்திரயான்-3-ன் கால்கள் 3 மீ/வி அல்லது மணிக்கு 10.8 கிமீ வேகத்தில் கூட தரையிறங்கவும் மற்றும் நிலைப்படுத்தவும் முடியும் என்பதை உறுதிப்படுத்த பலப்படுத்தப்பட்டுள்ளன. நிச்சயமாக, சந்திரயான் -2 செயலிழந்ததைப் போன்ற ஒரு சிக்கலால் சந்திரயான் -3 தாக்கப்பட்டால், இது குறைந்தளவே பயனளிக்கும், ஆனால் இது கடினமான தரையிறங்கும் போது பல வகையான சிக்கல்களைத் தவிர்க்கலாம்.
பெரிய எரிபொருள் தொட்டி
சந்திரயான்-3 லேண்டர் சந்திரயான்-2 விண்கலத்தை விட அதிக எரிபொருளை சுமந்து செல்கிறது. லேண்டர் அதன் தரையிறங்கும் தளத்தில் கடைசி நிமிடத்தில் மாற்றம் செய்ய தேவைப்பட்டால், அதைச் செய்ய முடியும் என்பதை உறுதிப்படுத்த அதிக எரிபொருள் நிரப்பப்பட்டது.
சந்திரயான்-2 லேண்டரும், தரையிறங்குவதை நிலையற்றதாக மாற்றும் ஒரு கற்பாறை, பள்ளம் அல்லது வேறு ஏதேனும் சந்திர மேற்பரப்பு அம்சத்தை உள் கேமராக்கள் கண்டறிந்தால் அதன் போக்கை மாற்றும் திறனைக் கொண்டிருந்தது. ஆனால், கூடுதல் எரிபொருள் இந்த திறனை அதிகரிக்க வேண்டும்.
சந்திரயானின் அனைத்து முகங்களிலும் சூரியன்
சந்திரயான்-3 லேண்டரில் நான்கு பக்கங்களிலும் சோலார் பேனல்கள் உள்ளன, அதற்கு பதிலாக சந்திரயான்-2 இல் இரண்டு மட்டுமே இருந்தது. லேண்டர் தவறான திசையில் தரையிறங்கினாலும், அல்லது கீழே விழுந்தாலும், சூரிய சக்தியைத் தொடர்ந்து எடுத்துக் கொள்வதை இது உறுதிசெய்யும். அதன் பக்கங்களில் குறைந்தது ஒன்று அல்லது இரண்டு எப்போதும் சூரியனை எதிர்கொண்டு செயல்பாட்டில் இருக்கும்.
கூடுதல் கருவிகள்
லேண்டரின் வேகத்தைத் தொடர்ந்து கண்காணிக்கவும், தேவையான திருத்தங்களைச் செய்யவும் சந்திரயான்-3 இல் கூடுதல் வழிசெலுத்தல் மற்றும் வழிகாட்டுதல் கருவிகள் உள்ளன. இதில் லேசர் டாப்ளர் வெலோசிமீட்டர் என்ற கருவியும் அடங்கும், இது லேண்டரின் வேகத்தைக் கணக்கிட லேசர் கதிர்களை சந்திர மேற்பரப்பில் செலுத்தும். புதிய சென்சார்கள் மற்றும் கேமராக்களும் சேர்க்கப்பட்டுள்ளன.
மேம்படுத்தப்பட்ட மென்பொருள்
அபாயத்தைக் கண்டறிதல் மற்றும் தவிர்ப்பு கேமரா மற்றும் செயலாக்க வழிமுறை மேம்படுத்தப்பட்டுள்ளன. வழிசெலுத்தல் மற்றும் வழிகாட்டுதல் மென்பொருளும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. எந்தவொரு காரணத்திற்காகவும் ஒரு அமைப்பு செயல்படவில்லை என்றால், வேறு ஏதாவது வேலை செய்யும் என்பதை உறுதிப்படுத்த, குறைதவிர்ப்புகளின் பல அடுக்குகள் சேர்க்கப்பட்டுள்ளன.
பல அழுத்த சோதனைகள்
லேண்டர் பல அழுத்த சோதனைகள் மற்றும் தேர்வுகளுக்கு உட்படுத்தப்பட்டது,
ஹெலிகாப்டர்களில் இருந்து இறக்குவது உட்பட. சந்திரனில் தரையிறங்கும் நிலைமைகளை உருவகப்படுத்த இஸ்ரோ அதன் வசதிகளில் பல வகையான சோதனை படுக்கைகளை உருவாக்கியது.
"கடந்த இரண்டு ஆண்டுகளில் நிகழ்தகவுகளின் அடிப்படையில் நாங்கள் நினைத்ததை நாங்கள் செய்துள்ளோம், இந்த நம்பிக்கையுடன் தான் சந்திரயான் -3 ஐ ஏவுவதற்கு நாங்கள் நகர்கிறோம்" என்று இஸ்ரோ தலைவர் எஸ் சோமநாத் சில நாட்களுக்கு முன்பு கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.