குவாரன்டைன்: கர்நாடகாவில் பன்னாட்டு விமானப் பயணிகளுக்கு புதிய விதிகள் என்ன?

72 மணி நேரத்துக்கு முன் கொவிட் பரிசோதனையை செய்து கொள்வது அனைத்து உள்நாட்டு பயணிகளுக்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

72 மணி நேரத்துக்கு முன் கொவிட் பரிசோதனையை செய்து கொள்வது அனைத்து உள்நாட்டு பயணிகளுக்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
குவாரன்டைன்: கர்நாடகாவில் பன்னாட்டு விமானப் பயணிகளுக்கு புதிய விதிகள் என்ன?

அக்டோபர் மாத நடுப்பகுதியில் இருந்து, கர்நாடகாவில்  கொரோனா பரவல் எண்ணிக்கை குறைந்து வருவதாலும், படிப்படியாக பொது முடக்கநிலை நீக்க தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருவதாலும், விமானங்கள் மூலம் மாநிலத்திற்கு திரும்புபவர்களுக்கு கட்டாயம் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளில் கர்நாடாகா அரசு சில தளர்வுகளை அறிவித்துள்ளது.

Advertisment

இப்போது, ​​பெங்களூரு விமான நிலையம் உட்பட  பிற நாடுகளிலிருந்து  கர்நாடகா வரும் பயனாளிகள், கொரோனா வைரஸ் இல்லை சான்றிதழ் மற்றும்  தனிமைப்படுத்துதல் முகாமில் தங்கவைக்கப்படுதல் போன்ர்க்கவைகளில் இருந்து விலக்கு பெறலாம்.

கர்நாடகாவிற்கு வரும் சர்வதேச பயணிகளுக்கான கட்டாய வழிமுறைகள்/  தனிமைப்படுத்துதல் கடந்த  மார்ச் மாதம்  நடுப்பகுதியில்  இருந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த, காலகட்டத்தில் வெளிநாடுகளில் இருந்து விமானங்கள் மூலம்    வரும் பயணிகளிடயே அதிகமான கொரோனா பாதிப்புகள்  கண்டறியப்பட்டன. இருப்பினும், நிலைமைக்கு ஏற்றவாறு சர்வதேச பயணிகளுக்கான வழிமுறைகளில் அவ்வப்போது சில தளர்வுகளை அம்மாநில அரசு வெளியிட்டு வந்தது.

சுகாதார ஆணையர் வெளியிட்டுள்ள தனிமைப்படுத்தல் தொடர்பான சமீபத்திய நெறிமுறையின்படி,  வெளிநாட்டிலிருந்து  கர்நாடகா வரும் பயணிகள் 14 நாட்களுக்கு வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். இருப்பினும், பயணிகளுக்கு அறிகுறிகள் இல்லாமலும், விமானம் புறப்படுவதற்கு 72 மணி நேரத்துக்கு முன், கொரோனா தொற்று இல்லை என்ற  ஆர்டி பி.சி.ஆர் அடிப்படையிலான பரிசோதனை அறிக்கையை சமர்ப்பிப்பதன் மூலம் வீட்டுத் தனிமைப்படுத்தில்   இருந்து விலக்கு பெறலாம். அறிக்கையை https://www.newdelhiairport.in/airsuvidha/apho-registration இல் உள்ள ‘ஏர் சுவிதா’ போர்ட்டலில் பதிவேற்ற வேண்டும்.

Advertisment
Advertisements

ஆர்டி பி.சி.ஆர் பரிசோதனை அறிக்கைகள் இல்லாத பயணிகள் விலக்கு பெற முடியுமா?

வீட்டு தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கு பெற விரும்புவோர், விமான நிலையங்களில் ஆர்டி-பி.சி.ஆர் அடிப்படையிலான பரிசோதனைகளை மேற்கொண்டு, கோவிட் -19 இல்லை எனும் சான்றிதழை  பெற வேண்டும். இருப்பினும், இந்த கோவிட்-19 பரிசோதனை விமான நிலையங்களில் மட்டுமே மேற்கொள்ள வேண்டும். இந்த வசதி இல்லாத விமான நிலையங்களில் வரும் பயணிகள் , 14 நாட்கள் வீடுகளுக்குத் திரும்பி கட்டாயம்  14   நாட்களுக்கு  தனிமையில் இருக்க வேண்டும்

அறிகுறிகள் காட்டும் பயணிகள் நிலை?

சர்வதேச பயணிகளுக்கு  காய்ச்சல்/இருமல்/மூச்சு விட சிரமம்/ உடல் வலி,வாசனை அறியும் தன்மை குறைவு     போன்ற கோவிட் - 19  தொடர்பான அறிகுறிகள்  அதிகமாக தென்பட்டால், அத்தகைய பயணிகள் உடனடியாக, கோவிட்- 19 பிரத்தியோக      மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுவார்கள். ஒவ்வொரு நபரிடமிருந்தும் மூன்று மாதிரிகள் சேகரிக்கப்படும். ரேபிட் ஆன்டிஜென் டெஸ்டில் கொரோனா இல்லை என்று தெரிய வாந்தால், ஆர்டி-பி.சி.ஆர் பரிசோதனைகள் முடிவுகள் ஆராயப்படும்.    அனைத்து சோதனைகளிலும் கோவிட் இல்லை என்று உறுதியானால், வீட்டில் இருந்து கொண்டு மருத்துவ ஆலோசனைகளைப் பெற அறிவுறுத்தப்படுவார்கள்.

கர்நாடகாவுக்கு வரும் பிற மாநிலங்களின் பயணிகளுக்கு என்ன விதி?

கர்நாடகா விமான நிலையங்களுக்கு வரும் பிற மாநிலங்களின் சர்வதேச பயணிகளுக்கு, கொவிட்-19 அறிகுறிகள் இல்லையென்றால், அவர்கள் சொந்த மாவட்டங்களுக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள். இருப்பினும், அவர்கள் தாங்களாகவே தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர்.

மறுபுறம், அவர்களுக்கு அறிகுறிகள் தென்பட்டால், கட்டாய சோதனைகள் உள்ளிட்ட நடைமுறைகள் பின்பற்றப்படும்.

உள்நாட்டு பயணிகளுக்கும் கோவிட் -19 சான்றிதழ் கட்டாயமா?

வெளிநாட்டிலிருந்து இந்தியா வரும் பயணிகள் , விதிமுறைகளைப் போலவே, 72 மணி நேரத்துக்கு முன் கொவிட் பரிசோதனையை செய்து கொள்வது அனைத்து உள்நாட்டு பயணிகளுக்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது

 

Coronavirus Corona

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: