அஸ்ஸாம் தேயிலை ஏல மையத்தில் நேற்று முன்தினம் அஸ்ஸாமின் சிறப்பு தேயிலையான ‘கோல்டன் பட்டர்ஃபிளை தேயிலை’ஒரு கிலோ ரூ.75,000 -க்கு விற்பனையாகி புதிய சாதனை படைத்துள்ளது.
கோல்டன் பட்டர்ஃபிளை டிகோம் தேயிலை தோட்டத்தால் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த தேயிலை குவஹாத்தியின் மிகவும் பழமையான தேநீர் கடைகளில் ஒன்றான அஸ்ஸாம் தேயிலை வர்த்தகர்களால் வாங்கப்படுகிறது. இந்த தேயிலையை வளர்ப்பவர்கள் கூறுகையில், மெண்மையான தங்க தேயிலைகள் வழக்கத்திற்கு மாறாக மிகவும் அறிதாக சிறப்பு தேநீர் தயாரிப்பதற்காக போகிறது அதனால்தான் இதற்கு அந்த மாதிரி பெயர் வைக்கப்பட்டுள்ளது” என்று கூறுகின்றனர்.
உச்ச விலை சாதனைகள்
அஸ்ஸாம் தேயிலை வர்த்தக உரிமையாளர் லலித் குமார் ஜலன் கூறுகையில், “கோல்டன் பட்டர்ஃபிளை தேயிலை மிகவும் மெண்மையான, பொன்னிறமான, இனிமையான சுவையுடையது” என்று கூறுகிறார்.
அஸ்ஸாம் தேயிலை மீண்டும் மீண்டும் ஏலங்களில் புதிய உச்ச விலையை பதிவு செய்துவருகிறது. குவாஹாத்தி தேயிலையை ஏலம் எடுப்பவர்கள் சங்கத்தின் செயலாளர் தினேஷ் பிஹானி கூறுகையில், “குவஹாத்தி தேயிலை ஏல மையத்தில் இப்போது இருக்கிற உச்ச விலை சாதனைகள் உடைக்கப்பட வேண்டும். புதிய விலைகள் மூலம் வரலாறு மீண்டும் திரும்ப எழுதப்பட வேண்டும்.” என்று கூறினார்.
ஜூலை 31 ஆம் தேதி ‘மைஜன் கோல்டன் தேயிலை’ என்று அழைக்கப்படும் ஒரு அஸ்ஸாம் தேயிலை வகை, குவஹாத்தி தேயிலை ஏல மையத்தில் ஒரு கிலோ ரூ.70,501 -க்கு ஏலம் போனது.
அதே போல, ஒருநாள் மனோகரி கோல்ட் சிறப்பு தேநீர், இந்த மையத்தில் ஒரு கிலோ தேயிலையை ரூ.50,000-க்கு ஏலம் எடுத்தது.
2018 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் அதே மனோகரி கோல்ட் சிறப்பு தேநீர் ஒரு கிலோ தேயிலையை ரூ.39,001 -க்கு ஏலம் எடுத்தது. அப்போது இந்த விலை உலக சாதனையாக இருந்தது என்று குவஹாத்தி தேயிலை ஏல மையம் கூறுகிறது.
இருப்பினும், அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள ஒரு தேயிலை தோட்டத்திலிருந்து கொண்டுவரப்பட்ட ஒரு வகையான தேயிலை, குவஹாத்தி தேயிலை ஏல மையத்தில் ஒரு கிலோ ரூ.40,000 -க்கு ஏலம் விடப்பட்டது.
இந்தியாவில் தேயிலை ஏல மையங்கள்
இந்தியாவின் தேயிலை உற்பத்தியில் அஸ்ஸாம் கிட்டத்தட்ட 55% பங்களிக்கிறது. குவஹாத்தி தேயிலை ஏல மையத்தில் 665 தேயிலை விற்பனையாளர்கல், 247 தேயிலை வாங்குபவர்கள் மற்றும் 9 தரகர்கள் தவிர 34 தேயிலை கிடங்குகள் உள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளன.
பொதுவாக இங்கே செவ்வாய் மற்று புதன்கிழமைகளில் ஏலம் நடைபெறும். குவஹாத்தி தேயிலை ஏல மையத்தில் ஒரு ஏல மண்டபம் உள்ளது. ஆனால், கடந்த 8-9 ஆண்டுகளாக மொத்த நடைமுறைகளும் ஆன்லைனில்தான் நடைபெறுகிறது.
இந்தியாவில் ஆறு தேயிலை ஏல மையங்கள் உள்ளன. இதில் கொல்கத்தா ஏல மையம்தான் பழமையானது. இது 1861-ல் அமைக்கப்பட்டது. குவஹாத்தி தேயிலை ஏல மையம் 1970 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. இதற்கு அடுத்து சிலிகுரி, கொச்சி, கோயம்புத்தூர், குன்னூர் ஆகிய இடங்களில் தேயிலை ஏல மையங்கள் உள்ளன.
எந்தவொரு ஏல மையத்திலும் பதிவுசெய்யப்பட்ட எந்த உறுப்பினரும் எந்த மையத்திலும் எந்த ஏலத்திலும் ஈடுபட முடியும்.
தேயிலை வாங்கி விற்பனை செய்யும் நடைமுறை
அஸ்ஸாமில் தேயிலைத் தொழிலுடன் தொடர்புடைய வாங்குபவர்களும் விற்பனையாளர்களும் ஒரு தேயிலையின் மதிப்பை அறிய ஏலம் சிறந்த வழி என்று கூறுகிறார்கள். தேயிலை வாங்குவோர் குறிப்புகளில், தேயிலையின் தோற்றம், தரம், திடம், நறுமணம், தரத்தை கடைபிடித்தல் ஆகியவற்றை பார்க்கிறார்கள். உதாரணத்துக்கு, அதாவது, ஒரு கடையில் அல்லது கொடவுனில் தேயிலையை நீண்ட நாள் சேமித்து வைத்தால் தேநீர் எப்படி இருக்கும் என்பதாகும்.
தேநீரை சுவைத்து தேயிலையின் தரம் குறித்து கருத்து கூறும் தேநீர் சுவைஞர்கள், தேயிலை ஏல நடைமுறையில் ஈடுபடுகிறார்கள். தேயிலை தோட்டத்திலிருந்து கிடங்கிற்கு எடுத்துச் செல்லப்படுகிறது, அங்கே தரகர்கள் தேயிலையை சுவை மற்றும் மாதிரிகளை எடுக்கிறார்கள். அவற்றின் மதிப்பீட்டுத் தரவு இந்திய தேயிலை வாரியத்தின் ஏல இணையதளத்தில் உள்ளீடு செய்யப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.