2 டோஸ் தடுப்பூசிக்கு பிறகு கோவிட்டுக்கு எளிதில் இலக்காகும் உறுப்பு மாற்று சிகிச்சை பெற்றவர்கள்

ஜமாவில் வெளியான ஆய்வில், பங்கேற்ற உறுப்பு மாற்று சிகிச்சை பெற்றவர்களில் 17% பேர் மட்டுமே 2 டோஸ் கோவிட் -19 தடுப்பூசிகளில் ஒரு டோஸ் போட்டுக்கொண்ட பிறகு போதுமான ஆன்டிபாடிகளை உற்பத்தி செய்ததாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க மருத்துவ சங்கத்தின் ஆய்விதழான ஜாமாவில் (JAMA) வெளியான ஒரு ஆய்வில், ஜான்ஸ் ஹாப்கின்ஸ் மருத்துவ ஆய்வாளர்கள், 2 டோஸ் கொரோனா வைரஸ் தடுப்பூசி, முக்கிய உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை பெற்றவர்களுக்கு சில பாதுகாப்பை அளித்தாலும், அது முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளியைக் கடைபிடித்தல் மற்றும் பிற பாதுகாப்பு நடவடிக்கைகளை வழங்க அவர்களுக்கு இன்னும் போதுமானதாக இல்லை என்று முடிவு செய்துள்ளனர்.

இந்த ஆய்வு மார்ச் மாதத்தில் ஜாமாவில் வெளியிடப்பட்ட முந்தைய ஆய்வு ஒன்றைப் பின்தொடந்து வெளியான ஆய்வாகும். இதில் பங்கேற்ற உறுப்பு மாற்று சிகிச்சை பெற்றவர்களில் 17% பேர் மட்டுமே 2 டோஸ் கோவிட் -19 தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்ற விதிமுறைகளில் ஒரு டோஸ் போட்டுக்கொண்ட பிறகு போதுமான ஆன்டிபாடிகளை உற்பத்தி செய்ததாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

“இதில் கண்டறியக்கூடிய ஆன்டிபாடிகள் உள்ளவர்களில் அதிகரிப்பு இருந்தது – ஒட்டுமொத்தமாக 54% ஆக இருந்தது. எங்கள் இரண்டாவது ஆய்வில் இரண்டாவது டோஸ்க்குப் பிறகு, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை பெற்றவர்களின் எண்ணிக்கையில் அவர்களுடைய ஆன்டிபாடி அளவுகள் SARS-CoV-2 நோய்த்தொற்றைத் தடுக்க போதுமான அளவு உயர்வை எட்டியுள்ளன. அது ஆரோக்கியமான நோய் எதிர்ப்பு அமைப்பு உள்ளவர்களில் பொதுவாகக் காணப்படுவதற்கு கீழே இருந்தது.

எங்கள் கண்டுபிடிப்புகளின் அடிப்படையில், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை பெற்றவர்கள் மற்றும் பிற நோய் எதிர்ப்பு குறைபாடுள்ள நோயாளிகள் தடுப்பூசி போட்ட பிறகும் கடுமையான COVID-19 பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடர்ந்து கடைப்பிடிக்க பரிந்துரைக்கிறோம் என்று முன்னணி எழுத்தாளர் பிரையன் பாயார்ஸ்கி ஜான்ஸ் ஹாப்கின்ஸ் இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளைப் பெற்றவர்கள் (இதயம், நுரையீரல் மற்றும் சிறுநீரகங்கள் போன்றவை) பெரும்பாலும் நோய் எதிர்ப்பு மண்டலங்களை அடக்குவதற்கும் நோய் எதிர்ப்பைத் தடுப்பதற்கும் மருந்துகளை உட்கொள்ள வேண்டும். இத்தகைய விதிமுறைகள் உறுப்பு மாற்று சிகிச்சை பெற்றவர்கள் தடுப்பூசிகளுக்கு பதிலளிக்கும் வகையில் உற்பத்தி செய்யப்படும். அது பாதுகாப்பு உள்பட வெளிப் பொருட்களுக்கு ஆன்டிபாடிகளை உருவாக்கும் திறனில் தலையிடக்கூடும்.

புதிய ஆய்வு 658 உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை பெற்றவர்களுக்கான மாடர்னா அல்லது ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் போடப்பட்டதைத் தொடர்ந்து நோய் எதிர்ப்பு எதிர்வினையை மதிப்பீடு செய்தது. அவர்களில் எவருக்கும் கோவிட்-19 தொற்றை முன்கூட்டியே கண்டறிய முடியவில்லை. பங்கேற்பாளர்கள் டிசம்பர் 16, 2020 மற்றும் மார்ச் 13, 2021-க்கு இடையில் தங்களுடைய இரண்டு டோஸ் தடுப்பூசியை எடுத்துக்கொண்டனர்.

மிக சமீபத்திய ஆய்வில் பங்கேற்ற 658 பேர்களில் 98 பேர் மட்டுமே அதாவது 15% பேர்களில் மட்டுமே முதல் தடுப்பூசி டோஸ்க்கு பின்னர் 21 நாட்களில் SARS-CoV-2க்கு கண்டறியக்கூடிய ஆன்டிபாடிகள் இருந்ததை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். இது மார்ச் ஆய்வில் தெரிவிக்கப்பட்ட 17% உடன் ஒப்பிடத்தக்கது.

இரண்டாவது டோஸைத் தொடர்ந்து 29 நாட்களில், கண்டறியக்கூடிய ஆன்டிபாடிகளைக் கொண்ட பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை 658 பேர்களில் 357 பேர்களாக அதாவது 54% ஆக உயர்ந்தது. இரண்டு டோஸ் தடுப்பூசிகளும் போடப்பட்ட பின்னர், பங்கேற்பாளர்களில் 658 பேர்களில் 301 பேர் அதாவது 46% பேர்களில் கண்டறியக்கூடிய ஆன்டிபாடிகள் இல்லை. அதே நேரத்தில் 259 பேர்களில் அதாவது 39% பேர்கள் இரண்டாவது டோஸ்க்குப் பிறகு மட்டுமே ஆன்டிபாடிகளை உற்பத்தி செய்தனர்.

பங்கேற்பாளர்களில், ஆன்டிபாடி பலனை உருவாக்க அதிக வாய்ப்புள்ளவர்கள் இளையவர்கள் இருந்தனர் என்றும் வளர்சிதை மாற்ற எதிர்ப்பு மருந்துகள் உள்ளிட்ட நோய்திர்ப்பு குறைப்பு முறைகளை எடுக்கவில்லை என்றும் அவர்கள் மாடர்னா தடுப்பூசி பெற்றதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். இவை ஒரு டோஸ் தடுப்பூசி ஆய்வில் காணப்பட்ட குழுவைப் போலவே இருந்தன.

ஆதாரம்: ஜான்ஸ் ஹாப்கின்ஸ் மருத்துவம்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Explained news here. You can also read all the Explained news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: New research finding organ transplant recipients remain vulnerable to covid 19 after two vaccine doses

Next Story
வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டவர்களுக்கும் ஏன் சி.ஆர்.பி. சோதனை செய்ய வேண்டும்?Why are doctors recommending CRP tests even for the patients in home isolation?
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com