ஒரு புதிய ஆய்வு SARS-CoV-2 வைரஸின் கருப்பு வெள்ளை படங்கள் வைரஸை மிகவும் தீவிர தொற்றுநோயாகக் காட்டுகின்றன என்று வாதிடுகிறது. அதே நேரத்தில் ஊடகங்களில் காட்டப்படும் முப்பரிமாண வண்ணப் படங்கள் வைரஸை ஒரு அழகாக கருதுவதற்கு சாதகமாக உள்ளன. ஆனால், அது மிகவும் யதார்த்தமானது அல்ல அல்லது தொற்று அல்ல என்பதற்கு ஆதரவாக உள்ளது என்று வாதிடுகிறது.
Advertisment
பொதுமுடக்கத்தின்போது நடத்தப்பட்ட ஸ்பானிஷ் வானொலி தொலைக்காட்சி நிறுவனம் (the Instituto de Radio Televisión Española) மற்றும் பார்சிலோனா தன்னாட்சி பல்கலைக்கழகம் (Universitat Autonoma de Barcelona) (யுஏபி)-வின் ஆய்வு PLoS ONE-ல் வெளியிடப்பட்டுள்ளது.
ஆராய்ச்சியாளர்கள் SARS-CoV-2 வைரஸின் பல்வேறு படங்களை பங்கேற்பாளர்கள் முன் வழங்கினர். அவர்களிடம் அழகு, அறிவியல் இயல்பு, யதார்த்தம், தொற்றுநோய் பற்றிய கருத்து, பயம் மற்றும் படங்களின் செயல்பாட்டு தன்மை போன்ற அளவுகள் பற்றி கேட்கப்பட்டது.
இந்த ஆய்வு வண்ணப் படம் Vs கருப்பு வெள்ளை, 2D vs 3D, புகைப்படம் vs விளக்கம் போன்ற அம்சங்களையும் உள்ளடக்கியது. மேலும் இவை எவ்வாறு அவர்களுடைய கருத்தை பாதிக்கின்றன என்று UAB செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் படங்களின் அழகு, வண்ணப் படம் மற்றும் முப்பரிமாணப் படங்களில் (3D images) அதிகம் காணப்படுவதாக இந்த ஆய்வு முடிவு செய்தது. SARS-CoV-2 பற்றி பொதுமக்களுக்குத் தெரிவிக்கும்போது அதிகம் பயன்படுத்தப்படும் படங்கள் இவை. இந்த அர்த்தத்தில், வைரஸை அழகுபடுத்தும் படங்களை விநியோகிப்பதில் ஊடகங்களின் பங்கு பற்றி இந்த ஆய்வு விவாதிக்கிறது.
ஆராய்ச்சியாளர்கள் இந்த படங்களில் கண்டறியப்பட்ட அழகுக்கும் அவற்றின் செயல்பாட்டு மதிப்புக்கும் எதிர்மறையான தொடர்பைக் கண்டறிந்தனர். படங்கள் எவ்வளவு அழகாக இருந்தனவோ அந்த அளவுக்கு பார்வையாளர்களுக்கு வைரஸ் பற்றி குறைவான கல்வியைத் தருவதாகத் தோன்றியது.
ஆதாரம்: பார்சிலோனா தன்னாட்சி பல்கலைக்கழகம்
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"