Explained: 2 பேர் பேசும்போது கொரோனா வைரஸ் பரவும் அபாயம்.. புதிய ஆய்வு சொல்வது என்ன?

நோய்த்தொற்றின் அபாயத்தை நிர்ணயிப்பதில் கண்கள் மற்றும் வாய் வழியாக வைரஸ் நுழைவதற்கான சாத்தியத்தை பகுப்பாய்வு உள்ளடக்கியதாக, வெளியீடு கூறியது.

Covid 19
New study reveals the risk of Covid transmission when two people are talking

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவர், பாதிக்கப்படாத ஒருவருடன் பேசும்போது, ​​முதல் நபருக்கு வைரஸ் பரவும் அபாயம் எவ்வளவு உள்ளது?

ஸ்பீச் ஏரோசோல்களின் இயக்கத்தை பகுப்பாய்வு செய்ய கணினி உருவகப்படுத்துதல்களை (computer simulations) மேற்கொள்வதன் மூலம் ஆராய்ச்சியாளர்கள் இந்தக் கேள்வியை ஆய்வு செய்தனர், ஃப்ளோ என்ற இதழில் தங்கள் கண்டுபிடிப்புகளை வெளியிட்டனர்.

இந்திய அறிவியல் கழகத்தின் (IISc) விண்வெளிப் பொறியியல் துறையின் ஆராய்ச்சியாளர்கள், ஸ்டாக்ஹோமில் உள்ள நோர்டிக் இன்ஸ்டிடியூட் ஃபார் தியரிட்டிகல் இயற்பியல் மற்றும் பெங்களூருவில் உள்ள தியரிட்டிகல் அறிவியலுக்கான சர்வதேச மையம் ஆகியவற்றின் ஒத்துழைப்பாளர்கள் குழுவில் இருந்தனர்.

உருவகப்படுத்துதலுக்காக, மாஸ்க் அணியாத இரண்டு நபர்கள் 2 அடி, 4 அடி அல்லது 6 அடி இடைவெளியில் நின்று, ஒருவரோடொருவர் ஒரு நிமிடம் பேசிக்கொண்டிருக்கும் காட்சிகளைக் குழு ஆய்வு செய்தது, பின்னர் ஸ்பீச் ஏரோசோல்களின் (speech aerosols) பரவலின் வீதம் மற்றும் அளவை மதிப்பீடு செய்தது.

ஒரு நபர் வெறுமனே அடுத்தவர் பேசுவதை மட்டும் கவனிக்கும் போது, இருவழி உரையாடலில் ஈடுபடாதபோதும்(Passive listener) நோய்த்தொற்று ஏற்படுவதற்கான ஆபத்து அதிகமாக இருப்பதாக உருவகப்படுத்துதல்கள் காட்டுகின்றன.

இரண்டு நபர்களுக்கு இடையேயான உயர வித்தியாசம் மற்றும் அவர்களின் வாயில் இருந்து வெளியாகும் ஏரோசோல்களின் அளவு போன்ற காரணிகளும் வைரஸ் பரவுவதில் முக்கிய பங்கு வகிப்பதாக இந்திய அறிவியல் கழகம் தெரிவித்துள்ளது.

பகுப்பாய்விற்காக, குழுவானது’ குமுலஸ் க்ளெளட்ஸ் இயக்கம் (cumulus clouds) மற்றும் நடத்தையை ஆய்வு செய்வதற்காக முதலில் உருவாக்கிய கணினி குறியீட்டை (Megha-5) மாற்றியது.

நோய்த்தொற்றின் அபாயத்தை நிர்ணயிப்பதில் கண்கள் மற்றும் வாய் வழியாக வைரஸ் நுழைவதற்கான சாத்தியத்தை பகுப்பாய்வு உள்ளடக்கியதாக, வெளியீடு கூறியது, முந்தைய ஆய்வுகள் மூக்கை மட்டுமே நுழைவு புள்ளியாகக் கருதியது.

ஸ்பீக்கர்கள் ஒரே உயரத்தில் இருந்ததை விட, வேறுபட்ட உயரத்தில் (ஒருவர் உயரமாகவும், மற்றொருவர் குட்டையாகவும்) இருந்தால், தொற்றுநோய்க்கான ஆபத்து மிகக் குறைவாக இருப்பது கண்டறியப்பட்டது.

முடிவுகளின் அடிப்படையில், கண் தொடர்பைப் பேணும்போது, ​​அவர்களின் தலையை ஒருவருக்கொருவர் சுமார் 9° தூரம் திருப்பிக் கொள்வது ஆபத்தைக் கணிசமாகக் குறைக்கும் என்று குழு பரிந்துரைக்கிறது.

வைரஸ் பரவலில் என்ன விளைவை ஏற்படுத்தும் என்பதைப் பார்க்க, பேச்சாளர்களின் குரல்களின் சத்தம் மற்றும் அவர்களின் அருகில் காற்றோட்டம் மூலங்கள் இருப்பது போன்ற வேறுபாடுகளை உருவகப்படுத்துவதில் குழு கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளதாக வெளியீடு கூறியது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Explained news download Indian Express Tamil App.

Web Title: New study reveals the risk of covid transmission when two people are talking