ஜூன் 8 அன்று, உலக அழகி அமைப்பு இந்தியாவை தனது அடுத்த போட்டிக்கான இடமாக அறிவித்தது.
இந்த ஆண்டின் பிற்பகுதியில் உலக அழகி போட்டி நடத்தப்பட வாய்ப்புகள் உள்ளன. இந்தப் போட்டி முதன்முதலில் பெங்களூருவில் 1996-ல் நடைபெற்றது.
உலக அழகி போட்டி என்றால் என்ன, அதை நடத்துபவர் யார்?
உலக அழகி போட்டி உலகின் பழமையான போட்டிகளில் ஒன்றாகும். இது 1951-ல் இங்கிலாந்தில் தொடங்கியது என்று அமெரிக்க பப்ளிக் பிராட்காஸ்டிங் தெரிவிக்கிறது.
பிரிட்டன் அரசாங்கத்தால் பிரிட்டனின் திருவிழாவில் இந்த நிகழ்வு நடைபெற்றது. இது நாட்டின் சமீபத்திய தொழில்துறை தயாரிப்புகள், தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் மற்றும் கலைகள் ஆகியவற்றைக் கொண்டிருந்தது.
விழாக் கூட்டத்தை அதிகரிக்க ஏற்பாட்டாளர்கள் லண்டன் பொழுதுபோக்கு நிறுவனமான மெக்கா லிமிடெட் நிறுவனத்தை நாடினர். நிறுவனத்தின் விளம்பர இயக்குநரான எரிக் மோர்லி இருந்தார்.
டற்கரை உடையான பிகினியை அணிந்துகொண்டு போட்டியாளர்கள் தீர்மானிக்கப்பட வேண்டும் என்று மோர்லி முடிவு செய்தார். இதற்கு அயர்லாந்து மற்றும் ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன.
அதற்கு பதிலாக துண்டுடன் குளிக்கும் உடை ஏற்றுக் கொள்ளப்பட்டது. பின்னர் இது பிரிட்டிஷ் பத்திரிகைகளால் "மிஸ் வேர்ல்ட்" என்று அழைக்கப்பட்டது.
இதன் வெற்றி ஆண்டுதோறும் நடத்தப்படுவதற்கு வழிவகுத்தது. தொலைக்காட்சியின் எழுச்சி அதன் பிரபலத்தை அதிக உயரத்திற்கு கொண்டு சென்றது.
இந்த நிலையில், இந்த ஆண்டு 130 க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து போட்டியாளர்கள் இந்தியாவில் தங்களின் தனித்துவமான திறமைகள், புத்திசாலித்தனம் மற்றும் இரக்கத்தை வெளிப்படுத்துவார்கள்.
திறமைகளை வெளிப்படுத்துதல், விளையாட்டு சவால்கள் மற்றும் தொண்டு முயற்சிகள் உள்ளிட்ட கடுமையான போட்டிகளின் தொடரில் அவர்கள் பங்கேற்பார்கள்.
நவம்பர்/டிசம்பர் 2023 இல் திட்டமிடப்பட்ட கிராண்ட் பைனலுக்கு ஒரு மாத காலத்திற்கு முன்னதாக பங்கேற்பாளர்களை ஷார்ட்லிஸ்ட் செய்ய பல சுற்றுகள் இருக்கும்.
கடைசியாக இந்தியா போட்டியை நடத்தியபோது என்ன நடந்தது?
1991 இல் இந்தியப் பொருளாதாரம் தாராளமயமாக்கப்பட்டதன் மூலம், வெளிநாட்டு மற்றும் தனியார் வணிகங்கள் அதிக எண்ணிக்கையில் இங்கு நுழைய அனுமதித்தது, மேலும் பல சர்வதேச பிராண்டுகள் தங்கள் விரிவாக்கத்திற்கான கணிசமான புதிய சந்தையாக இதைப் பார்த்தன.
1994 ஆம் ஆண்டில், உலக அழகி மற்றும் பிரபஞ்ச அழகி பட்டங்களை முறையே ஐஸ்வர்யா ராய் மற்றும் சுஷ்மிதா சென் ஆகிய இரு இந்தியப் பெண்கள் வென்றனர். இது இந்தப் பகுதியில் போட்டியின் பிரபலத்தை அதிகரிக்க உதவியது.
அசோசியேட் டீன் மற்றும் ஹெர்மன் பி வெல்ஸ் ஆன்டவுட் பேராசிரியரும், இந்தியானா பல்கலைக்கழகத்தின் கல்வியாளருமான ராதிகா பரமேஸ்வரன், இந்த நிகழ்வில் கணிசமான வணிக வளர்ச்சியைக் கண்டதாக ஒரு கட்டுரையில் எழுதியுள்ளார். அதாவது, சோப்பு உற்பத்தியாளர்கள் முதல் கிரெடிட் கார்டு நிறுவனங்கள் வரை ஸ்பான்ஷன்ஷிப் வழங்கின எனத் தெரிவித்திருந்தார்.
ஆனால் இந்தியா அதை நடத்தும் எண்ணம் பின்னடைவுடன் சேர்ந்தது. இந்த நிகழ்ச்சியை நடிகர் அமிதாப் பச்சனின் அமிதாப் பச்சன் கார்ப்பரேஷன் லிமிடெட் (ஏபிசிஎல்) நடத்தியது, மேலும் போட்டிக்குப் பிறகு நிறுவனம் நிதி இழப்பைச் சந்தித்ததாகக் கூறப்படுகிறது.
1996 ஆம் ஆண்டில், பெங்களூரில் உலக அழகி போட்டி நடைபெற்றபோது, “தீக்குளிப்பு உள்ளிட்ட பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன.
நீசசல் உடை கலாசார சீரழிவு என இந்துத்துவவாதிகளால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. உலகமயமாக்கல் மற்றும் சந்தை சக்திகளை கட்டவிழ்த்து விடுவது இந்திய பெண்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என இடதுசாரி தலைவர்களும் தெரிவித்தனர்.
அகில இந்திய மகளிர் ஜனநாயக மன்றம் ஒரு போலிப் போட்டியை நடத்தியது, மிஸ் வேர்ல்ட் பற்றிய நையாண்டி செய்தது. இது செய்திகளாக வெளிவந்தது.
எனினும், அதற்கு எதிரான போராட்டங்களில் ஒருவர் தீக்குளித்து இறந்த நிலையில், இந்தியாவில் போட்டி நடத்தப்பட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.