Advertisment

2024 அரசியலைத் தீர்மானிக்கும் 9 மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்

2024-ன் அரசியல் திரைக்கதையை தீர்மானிக்கக்கூடிய 9 மாநிலங்களின் தேர்தல்களால் 2023-ம் ஆண்டு நிறைந்துள்ளது. மோடி மற்றும் பா.ஜ.க-வின் புகழ் அவரது இரண்டாவது பதவிக்காலம் முடிவடையும் போது பரிசோதிக்கப்படும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
assembly elections in 2023, road to 2024, elections in 2023, state elections, 2023 elections, 2024 அரசியலைத் தீர்மானிக்கும் 9 மாநிலத் தேர்தல், 2024 நாடாளுமன்றத் தேர்தல், பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி, ராகுல் காந்தி, மோடி, கெஜ்ரிவால், AAP, BJP, Congress, Narendra modi, Rahul Gandhi, Bharat jodo Yatra, Arvind kejriwal, Tamil Indian express explained, explained politics

2024-ன் அரசியல் திரைக்கதையை தீர்மானிக்கக்கூடிய 9 மாநிலங்களின் தேர்தல்களால் 2023-ம் ஆண்டு நிறைந்துள்ளது. மோடி மற்றும் பா.ஜ.க-வின் புகழ் அவரது இரண்டாவது பதவிக்காலம் முடிவடையும் போது பரிசோதிக்கப்படும். காங்கிரஸ் கட்சியின் மறுமலர்ச்சிக்கான பாதையில் மேலும் முன்னோக்கி செல்வார் என ராகுல் காந்தி நம்புகிறார். கெஜ்ரிவால் ஒரு வெற்றிகரமான தாக்கத்தை ஏற்படுத்துபவராக இருந்து பெரிய வெற்றிகளைப் பெறுபவர் என்ற நிலைக்கு செல்ல முயற்சி செய்வார்.

Advertisment

அச்சம் மற்றும் நம்பிக்கை என கலந்த உணர்வுடன் இந்தியா 2022-ல் கோவிட் தொற்றுநோயின் பிடியில் இருந்து வாழ்க்கையும் அரசியலும் வெளியே வந்தது. சமீபத்திய வரலாற்றில் எந்த நேரத்திலும் இல்லாத அளவுக்கு மிகவும் கொந்தளிப்பானதாகவும் பிளவு நிறைந்ததாகவும் வாழ்க்கை இருந்தது. இயல்பு நிலைக்குத் திரும்பத் தொடங்கியது. 2022-இல் சித்தாந்தப் பிளவுகள் மோசமடைந்தது. சமூக மற்றும் வகுப்புவாத பிளவுகள் ஆழமடைந்தது. பா.ஜ.க-வுக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையிலான அரசியல் மோதல் விரிவடைந்தது.

பா.ஜ.க தனது தேர்தல் வெற்றி மேலாதிக்கத்தைத் தக்க வைத்துக் கொண்டது. உத்தரப் பிரதேசம் உட்பட 7 மாநிலத் தேர்தல்களில் 5 மாநிலத்தில் வெற்றி பெற்றது. ஆனால், இந்த ஆண்டின் இறுதியில் இமாச்சலப் பிரதேசத்தில் ஏற்பட்ட தோல்வி யதார்த்தத்தை சரிபார்ப்பாக வந்தது. பிரதமர் நரேந்திர மோடி அரசியல் மையமாக இருந்து வருகிறார். அவரது புகழ், குறைந்தபட்சம் தேர்தலில், அதிகமாகவோ அல்லது குறைவாகவோ அப்படியேதான் இருந்தது.

ஆம் ஆத்மி கட்சி (ஏஏபி) மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் (டிஎம்சி) போன்ற வேகமாக செயல்படுகிற கட்சிகள் புதிய மாநிலங்களில் காங்கிரஸ் கட்சிக்கு சவாலாக உள்ளன. ஆம் ஆத்மி கட்சி தனது வருகையை 2022-ல் அறிவித்து, பஞ்சாபில் காங்கிரஸை வீழ்த்தியது. கோவா மற்றும் குஜராத்தில் தனது இருப்பை பதிவு செய்துள்ளது.

நாடாளுமன்றத்திலும் சரி, நாடாளுமன்றத்திற்கு வெளியிலும் சரி, அரசியலில் ஏற்பட்ட கசப்பு மேலும் மோசமடைந்தது. சமூக ஊடகங்கள் மற்றும் பிற இடங்களில் நடந்த உரையாடல்கள் தெளிவாக வகுப்புவாதத்தை அதிகரித்தது. ஞானவாபி மசூதி-காசி விஸ்வநாதர் கோயில் தகராறு தொடர்பான வழக்குகளிலும், உதய்பூரில் நடந்த கொடூரமான தலை துண்டிக்கப்பட்ட சம்பவத்திலும், ஷ்ரத்தா வாக்கரின் கொடூரமான கொலையிலும், ஷாருக்கான்-தீபிகா படுகோன் பாடலுக்கான அர்த்தமில்லாத சர்ச்சையிலும், வகுப்புவாத சர்ச்சை கொழுந்துவிட்டு எரிந்தது.

ரஷ்யா-உக்ரைன் போர் உணவுப் பொருள் மற்றும் எரிசக்தி விலைகளை உயர்த்தியதால், பொருளாதார மீட்சி தற்காலிகமாக இருந்தபோதும், இந்தியாவின் ஜி20 தலைவர் பதவியை கடுமையாக விளம்பரப்படுத்த அரசாங்கம் முயற்சி செய்கிறது. வேலைவாய்ப்பு நெருக்கடிக்கு தீர்வு காண, பெர்ய வீதிப் போராட்டங்களுக்கு மத்தியிலும் அக்னிபாத் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது, உச்ச நீதிமன்றத்துடன் மோதியது. எல்லையில் சீன ஆக்கிரமிப்பை பா.ஜ.க அரசு எதிர்க்கட்சிகள் மீதான அரசியல் தாக்குதலாக மாற்ற முயற்சி செய்தது.

2023 ஆம் ஆண்டுக்கான அரசியல் நிகழ்ச்சி பட்டியலில், மாநிலத் தேர்தல்கள் அதிகம் உள்ளன. 2023-ம் ஆண்டின் அரசியல் நிகழ்வுகள் முக்கியமானவையாக இருக்கும். ஏனெனில், அவை 2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் போராட்டத்துகான விவாதத்தையும் கதையையும் வடிவமைக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது.

பா.ஜ.க.வும், காங்கிரஸும் இந்த ஆண்டு முழுவதும் தேர்தல் மனநிலையில்தான் இருக்கும். பிப்ரவரி-மார்ச் மாதங்களில் திரிபுரா, மேகாலயா மற்றும் நாகாலாந்து மாநிஅல் தேர்தலும், மே மாதத்தில் கர்நாடகா மாநிலத் தேர்தலும் நவம்பர்-டிசம்பர் மாதங்களில் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் இருந்து நாடு முழுவதும் உள்ள மாநிலத் தேர்தல்களில் மோதுவார்கள் - இதன் முடிவுகள் அரசியல் காற்று யார் பக்கம் வீசுகிறது என்பதைப் பொறுத்து அமையும்.

குஜராத், உ.பி., உத்தரகாண்ட், கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் ஆளுங்கட்சி 2022-ல் நடந்த தேர்தலில் வெற்றி பெற்றாலும், பா.ஜ.க இந்த வெற்றியோடு நின்றுவிடாது. அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறவுள்ள ஒன்பது மாநிலங்களில் 116 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. அவைகளில் சில தொகுதிகள் முந்தைய லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தல்களில் வித்தியாசமாக வாக்களித்துள்ளன. 2018-ல், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கரில் பா.ஜ.க தோல்வியடைந்தது. ஆனால், ஒரு வருடம் கழித்து மக்களவைத் தேர்தலில் காங்கிரஸை வீழ்த்தியது.

கர்நாடகாவில் ஆளும் கட்சி பெரிய அளவில் இல்லை; ராஜஸ்தானிலும் காங்கிரஸின் நிலைமை அதேதான். மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கரில் ஆச்சரியங்களை ஏற்படுத்தலாம். தெலுங்கானாவில், பா.ஜ.க தனது முழு வலிமையையும், அமைப்புரீதியிலான பலத்தையும் பயன்படுத்தி கே. சந்திரசேகர் ராவ்-வின் தெலுங்கானா ராஷ்ட்ர சமிதியை (டிஆர்எஸ்) பெயர் பாரத ராஷ்டிர சமிதி-யிடம் இருந்து இரண்டாவது தென்னிந்திய மாநிலத்தை கைப்பற்ற முயற்சி செய்யும்.

மேற்கு வங்கத்திற்கு வெளியே தனது அரசியல் இருப்பை நீட்டிக்க ஆர்வமாக இருக்கும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கு இது ஒரு முக்கியமான ஆண்டாக இருக்கும். பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சியின் மகத்தான வெற்றி மற்றும் கோவாவில் 2 இடங்களில் வெற்றி பெற்றது, குஜராத்தில் 5 இடங்களில் வெற்றி பெற்றது சிறிய வெற்றியாக இருந்தாலும், குறிப்பிடத்தக்க வாய்ப்புகள் திரிணாமூல காங்கிரஸ் கட்சியை கவலையும் நம்பிக்கையும் அடையச் செய்திருக்கும். திரிபுரா மற்றும் மேகாலயாவில் கால் பதிக்க மம்தா பானர்ஜியின் கட்சி கடுமையாக உழைத்து வருகிறது.

பா.ஜ.க-வுக்கும் மத்திய அரசுக்கும் அடுத்து என்ன?

மோடியின் தனிப்பட்ட புகழும் வாக்காளர்களுடனான தொடர்பும் பெரிய அளவில் அப்படியே இருப்பதாக பா.ஜ.க நம்புகிறது. மாநிலத் தேர்தல்களில் ஜாதி, சமூகம் மற்றும் பிராந்தியக் கணக்குகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. பிரச்சாரங்கள் பெரும்பாலும் உள்ளூர் பிரச்சினைகளை மையமாகக் கொண்டிருந்தாலும், ஆளும் கட்சி எப்போதும் மோடியின் புகழ் மற்றும் கவர்ச்சியின் மீது கவனம் செலுத்துகிறது. இந்த உத்தி 2023-ல் மீண்டும் பரி சோதிக்கப்படும்.

அடுத்த ஆண்டு மோடி அரசின் ஒவ்வொரு முடிவும், கொள்கை அறிவிப்புகளும் மக்களவைத் தேர்தலின் கண்ணோட்டத்தில் பார்க்கப்பட்டு பகுப்பாய்வு செய்யப்படும். அரசாங்கத்தின் அரசியல் வியூகத்தின் முதல் பார்வை 2024 தேர்தலுக்கு முந்தைய கடைசி முழு பட்ஜெட், யூனியன் பட்ஜெட்டில் வரலாம். பொருளாதார மீட்சி மெதுவாக உள்ளது. பணவீக்கம் உயர்ந்துள்ளது, உலகப் பொருளாதார நிலை நிச்சயமற்றதாக இருக்கிறது.

செப்டம்பரில் நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டில் அரசாங்கத்தின் கவனம் அதிகமாக இருக்கும். இது இந்தியாவின் தலைமைப் பதவியைப் பற்றி ஒரு பரபரப்பை உருவாக்கும். மேலும், ஜி20 உச்சிமாநாட்டை நடத்துவது, இந்த நிகழ்வை தேசிய மகிழ்ச்சிக்கான ஒரு சந்தர்ப்பமாக நிலைநிறுத்துவதற்கான அதன் திட்டத்திற்கு முக்கியமானது. மேலும், மோடியின் கீழ் இந்தியாவின் வளர்ந்து வரும் அந்தஸ்தை அறிவிக்க அதைப் பயன்படுத்தும்.

ஜம்மு காஷ்மீரில் கோடையில் சட்டசபை தேர்தல் நடக்குமா? உலகத்திற்கு தெரிவிக்கும் செய்தியாக உச்சிமாநாட்டிற்கு முன்னதாக ஜம்மு காஷ்மீரில் வெளிப்படையான தேர்தலை நடத்த அரசாங்கம் ஆர்வமாக உள்ளது.

இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழா நடைபெறும். லோக்சபா தேர்தலின் போது, டிசம்பரில், ராமர் கோயில் திறப்பு விழா கொண்டாடப்படும் என, கட்டுமானத்தை மேற்பார்வையிடும் அறக்கட்டளை சூசகமாக தெரிவித்துள்ளது.

காங்கிரஸ்: வாழ்வா? சாவா?

இந்த ஆண்டு காங்கிரஸ் அதன் சமீபத்திய வரலாற்றில் பெரும் மாற்றமாக இரண்டு பரிசோதனைகளை வெளிப்படுத்தியது. ஒன்று நேரு குடும்பத்திற்கு வெளியே ஒருவர் காங்கிரஸ் கட்சித் தலைவராக வருவதற்கு காந்திகள் (ராகுல், பிரியங்கா, சோனியா) வழிவகை செய்தனர். மேலும், ராகுல் காந்தி தனது கட்சியின் அதிர்ஷ்டம் மற்றும் தனது சொந்த இமேஜ் இரண்டையும் மாற்றும் நம்பிக்கையுடன் தனது கடினமான யாத்திரையைத் தொடங்கியுள்ளார்.

நான்கு ஆண்டுகளாக தேர்தலில் சந்தித்து வந்த தோல்விக்குப் பிறகு, காங்கிரஸ் இமாச்சலப் பிரதேசத் தேர்தலில் வெற்றியை ருசித்தத. ஆனால், பஞ்சாப் மற்றும் குஜராத்தில் அது மோசமாக தோல்வியடைந்தது. ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையின் தாக்கமும், அதிகாரப் பிரிவினையின் விளைவும் அடுத்த ஆண்டு தெரியும். ராகுலின் நடைப்பயணம், அவர் தீவிரமான தலைவர் என்ற கருத்தை நீர்த்துப்போகச் செய்தது.

பா.ஜ.க.வை எதிர்த்துப் போராடக்கூடிய ஒரு சக்திவாய்ந்த பேச்சாளராக உருவெடுப்பதற்கான அடையாளங்களை மல்லிகார்ஜுன கார்கே காட்டியுள்ளார். அவரால் குறைந்தபட்சம் சில எதிர்க்கட்சிகளையாவது நம்பிக்கையுடன் கூட்டணிக்குள் கொண்டு வர முடியுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் இரண்டு மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. 2024-ல் மோடிக்கு நம்பத்தகுந்த சவாலாக அமைய வேண்டுமானால் கட்சி சில வெற்றிகளைப் பெறுவதோடு, சிலவற்றை தக்க வைத்துக் கொள்ள வேண்டும். கர்நாடகா மற்றும் மத்தியப் பிரதேசத்தில் வெற்றி வாய்ப்புகளை விரும்புகிறது. மேலும், சத்தீஸ்கரில் அது வலுவான வெற்றியை நம்புகிறது. இருப்பினும், சமீபத்தில் வெற்றிப் பாதையில் இருந்து தோல்வி அடைந்த வரலாறும் உள்ளது.

காங்கிரஸ் கட்சிக்குள் அழுத்தக் குழுவாக செயல்பட்ட ஜி23 தலைவர்கள் அதனுடனான தொடர்பை இழந்துவிட்ட நிலையில், பிப்ரவரியில் ராய்ப்பூரில் நடைபெறும் ஏ.ஐ.சி.சி காரியக் கமிட்டிக்கான தேர்தலை நடத்துவதற்கு கார்கேவும் தலைமையும் ஒப்புக்கொள்வார்களா என்பது பெரிய கேள்வியாக உள்ளது. காங்கிரஸுக்கும் - ஒட்டுமொத்த எதிர்க்கட்சிக்கும் மிகப் பெரிய சவாலாக இருக்கும் - எதிர்நிலையாக்க அரசியலை இந்த ஆண்டு தேர்தல் மோசமாக்கும்.

ஆம் ஆத்மி, மாநில சக்திகள், எதிர்க் கட்சிகள் ஒற்றுமை

2022-ம் ஆண்டு ஆம் ஆத்மிக்கு சாதகமான ஆண்டாக இருந்தது. ஆம் ஆத்மி ஒன்றுக்கும் மேற்பட்ட மாநிலங்களில் ஆட்சியில் இருக்கும் மூன்றாவது கட்சியாக மாறியது. மேலும், அக்கட்சி ஒன்பதாவது தேசியக் கட்சியாக மாறியது. அரவிந்த் கெஜ்ரிவால் அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்களில் தனது சித்தாந்த-கடவுள் மறுப்பு ஏற்பு அற்ற அரசியலை முயற்சி செய்வாரா என்பது பெரிய கேள்வியாக இருக்கும்.

2024-ல் பா.ஜ.க-வுக்கு சவாலாக உருவெடுக்க வேண்டுமானால் கெஜ்ரிவால் இந்த உற்சாகத்தைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும். மேலும், அவருக்குப் போட்டி இருக்கிறது. திரிணாமூல் காங்கிரஸ் மற்றும் பி.ஆர்.எஸ் கட்சிகளும் தேசிய அரசியலில் குறி வைத்து செயல்படுகின்றன. மேலும், 2025-ம் ஆண்டில் பீகார் தேர்தல்கள் தேஜஸ்வி யாதவின் தலைமையில் நடைபெறும் என்று நிதிஷ் குமார் அறிவித்துள்ளார். மேலும், தேசிய அரசியலில் தனக்கான வாய்ப்பை அவர் உணர வேண்டும் என்று பரிந்துரைத்தார். கிட்டத்தட்ட அனைத்து காங்கிரஸ் அல்லாத, பா.ஜ.க அல்லாத பிரதமர்களும் ஜனதா கட்சியில் இருந்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கெஜ்ரிவாலின் அடுத்த பெரிய யோசனை என்ன?

அவரது அரசியல் அடையாளம் பா.ஜ.க-வை அதிகமாகவோ அல்லது குறைவாகவோ பிரதிபலிக்கிறது என்று எதிர்க்கட்சியில் உள்ள பலர் நம்புகிறார்கள். அது அவரை பல கட்சிகளுக்கு தனிப்பட்ட நபராக ஆக்குகிறது. ஆம் ஆத்மி, டி.எம்.சி மற்றும் பி.ஆர்.எஸ் ஆகிய கட்சிகள் தேசிய அரசியலில் கவனம் செலுத்துவதால், எதிர்கட்சி ஒற்றுமை பலியாகும்.

பா.ஜ.க-வுக்கு எதிரான தேர்தல் கூட்டணி சாத்தியமா?

பல கட்சிகள் மாநில அளவிலான கூட்டணியை விரும்புகின்றன. இருப்பினும், சிலர் பாஜக அல்லாத, காங்கிரஸ் அல்லாத கூட்டணிக்கு அழுத்தம் கொடுக்கிறார்கள் - ஒரு வகையான மூன்றாவது முன்னணி ஆகும். அந்த திசையில் தோரணைகள் மற்றும் விவாதங்கள் எதிர்க்கட்சிகள் இடையே தொடரும்.

அரசு - நீதித்துறை மோதல்

இந்த ஆண்டின் கடைசி மாதங்களில் அரசுக்கும் உச்ச நீதிமன்றத்துக்கும் இடையே மீண்டும் மோதல் போக்கு ஏற்பட்டது. 7 ஆண்டுகளாக மௌனம் காத்த அரசு, 2015-ல் உச்ச நீதிமன்றத்தால் தேசிய நீதிபதிகள் நியமன ஆணையச் சட்டத்தை முடக்கியது குறித்து அதிருப்தியை வெளிப்படுத்தத் தொடங்கியுள்ளது.

கொலிஜியம் அமைப்பின் மீதான அரசின் விமர்சனத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. நீதிபதிகளாக நியமனம் செய்ய உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைத்த பெயர்கள் தொடர்பாக சலசலப்பு நிலவி வருகிறது.

நீதித்துறையை சீரமைக்க தேசிய நீதிபதிகள் நியமன ஆணைய மசோதாவை நடைமுறைக்கு கொண்டுவரும் அச்சுறுத்தலை அரசாங்கம் வைத்திருப்பதாக எதிர்க்கட்சிகள் கருதுகின்றன. முக்கிய அரசியல் தாக்கங்கள் உள்ள விஷயங்களில் நீதிமன்றம் மனுக்களை விசாரித்து தீர்ப்புகளை வழங்குவதால், அடுத்த ஆண்டு மோதல் மோசமடையக்கூடும். அவற்றில்: தேர்தல் ஆணையத்தின் உறுப்பினர்களை நியமித்தல், பணமதிப்பிழப்பு மற்றும் ஜம்மு காஷ்மீரில் அரசியலமைப்பு மாற்றங்கள், தேர்தல் பத்திரங்கள், குடியுரிமை திருத்தச் சட்டம் ஆகியவற்றுக்கு எதிரான வழக்குகள் இருக்கும்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Bjp Rahul Gandhi Congress Aam Aadmi Party
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment