Advertisment

கோவிட் காலத்தில் நிபா.. எப்படி எதிர்கொள்கிறது கேரளா?

Nipah virus spread covid pandemic Kerala Tamil News உடனடி சிகிச்சை மேலும் பரவுவதைக் கட்டுப்படுத்தியது. பாதிக்கப்பட்ட நபர் உயிர் தப்பினார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Nipah virus spread covid pandemic Kerala Tamil News

Nipah virus spread covid pandemic Kerala Tamil News

Nipah virus spread covid pandemic Kerala Tamil News : நிபா வைரஸால் பாதிக்கப்பட்ட 12 வயது சிறுவன் கோழிக்கோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை இறந்தார். அந்தச் சிறுவன் மூளையழற்சி மற்றும் மாரடைப்பு அறிகுறிகளைக் கொண்டிருந்தான் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது மூளை மற்றும் இதய தசைகளின் வீக்கம்.

Advertisment

கேரளாவில் நிபா வைரஸ் மீண்டும் தோன்றுவது, கோவிட் -19 தொற்றுநோயுடன் ஏற்கெனவே போராடும் மாநிலத்தில் ஒரு புதிய ஆபத்தை ஏற்படுத்துகிறது. இந்த நாட்களில் நாட்டில் உள்ள பாதிப்படைந்தவர்களில் சுமார் 60% பங்களிப்பு செய்கிறது. இருப்பினும், கேரளாவிலோ அல்லது இந்தியாவின் பிற இடங்களிலோ நிபா வைரஸ் கண்டறியப்படுவது இது முதல் முறை அல்ல. முந்தைய பரவுதல் பெரும்பாலும் உள்ளூர் மயமாக்கப்பட்டு ஒப்பீட்டளவில் விரைவாகக் கட்டுப்படுத்தப்பட்டன.

நிபா வைரஸ் என்றால் என்ன?

மலேசியா (1998) மற்றும் சிங்கப்பூர் (1999) ஆகிய நாடுகளிலிருந்து மனிதர்களிடையே முதல் நிபா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. மலேசியாவில் உள்ள கிராமத்திலிருந்து முதலில் தாக்கிய நபரின் பெயரை இந்த வைரஸ் பெற்றது.

இது, 1998-99-ல் முதன்முதலில் அடையாளம் காணப்பட்டதிலிருந்து, தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் நிபா வைரஸ் பரவியது. பங்களாதேஷில், 2001 முதல் குறைந்தது 10 முறை இதன் பரவல் ஏற்பட்டுள்ளன. இந்தியாவில், மேற்கு வங்கத்தில் 2001 மற்றும் 2007-ம் ஆண்டுகளில் பரவியது. அதே நேரத்தில் 2018-ல் கேரளாவில் பல பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையைப் பதிவு செய்தது.

இது எப்படி பரவுகிறது?

இது ஒரு ஜூனோடிக் வைரஸ். அதாவது இது விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவுகிறது. அசுத்தமான உணவை உட்கொள்வதன் மூலம் இந்தப் பரவுதல் முக்கியமாக நிகழ்கிறது. ஆனால் மனிதனிடமிருந்து மனிதனுக்குப் பரவுவதும் சாத்தியமாகக் கருதப்படுகிறது. இந்த வைரஸை கொண்டிருக்கும் விலங்கு, பறக்கும் நரி என்று அழைக்கப்படும் பழந்திண்ணி வவ்வால் என அறியப்படுகிறது. பழ வவ்வால்கள் இந்த வைரஸை பன்றிகள் போன்ற மற்ற விலங்குகளுக்கும், நாய்கள், பூனைகள், ஆடுகள், குதிரைகள் மற்றும் ஆடுகளுக்கும் பரப்புகின்றன.

இந்த விலங்குகளுடன் நேரடியாகத் தொடர்பு கொள்வதன் மூலமோ அல்லது இந்த பாதிக்கப்பட்ட விலங்குகளின் உமிழ்நீர் அல்லது சிறுநீரால் மாசுபட்ட உணவை உட்கொள்வதன் மூலமோ மனிதர்கள் பாதிக்கப்படுகின்றனர். நபருக்கு நபர் பரிமாற்றம் முழுமையாக நிறுவப்படவில்லை. ஆனால், இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இரண்டு பங்களாதேஷ் ஆராய்ச்சியாளர்களால் வெளியிடப்பட்ட சமீபத்திய ஆய்வு, பங்களாதேஷ், பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தியாவில் முந்தைய பரவதல்கள், "பாதிக்கப்பட்ட நபரின் சுவாச துளிகள் வைரஸை பரப்பலாம்" என்று பரிந்துரைத்தது. முந்தைய வெடிப்புகளின் போது, ​​பாதிக்கப்பட்ட நபருடன் நெருக்கமாகத் தொடர்பு கொண்டவர்கள், முக்கியமாக மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் பராமரிப்பாளர்கள், இந்த நோயால் பாதிக்கப்பட்டனர்.

இது கோவிட் -19 போல வேகமாகப் பரவுகிறதா?

SARS-CoV-2-ஐ விட நிபா வைரஸ் மிகவும் மெதுவாகப் பரவுகிறது. இருப்பினும், அதைக் கொல்லும் திறன் தான் மிகப்பெரிய கவலையாக உள்ளது. சிலிகுரியில் முதன்முதலில் பரவியபோது, ​​பாதிக்கப்பட்டவர்களில் 66 பேர்களில் 45 பேர் இறந்தனர். இது, 68% இறப்பு விகிதம். 2007-ல் அடுத்த பரவுதலில், மேற்கு வங்கத்தின் நாடியா மாவட்டத்தில், பாதிக்கப்பட்ட ஐந்து பேரும் இறந்தனர்.

2018-ல் கேரளாவில் மிக சமீபத்திய பரவுதலின் போது, ​​பாதிக்கப்பட்ட 18 நோயாளிகளில் 17 பேர் இறந்தனர். 2019-ம் ஆண்டில், எர்ணாகுளத்தில் ஒரு நிபா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. ஆனால், உடனடி சிகிச்சை மேலும் பரவுவதைக் கட்டுப்படுத்தியது. பாதிக்கப்பட்ட நபர் உயிர் தப்பினார்.

1999-ல் மலேசிய பரவுதலில், மொத்தம் 265 பேர் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. அவர்களில் 105 பேர் இறந்துள்ளனர் என்று 'நிபா வைரஸ்: கடந்தகால வெடிப்புகள் மற்றும் எதிர்காலக் கட்டுப்பாடு' எனும் ஆராய்ச்சியின் முடிவு கொச்சின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களால் வெளியிடப்பட்டது.

ஒப்பிடுகையில், கோவிட் -19 தொற்றுநோயின் இறப்பு விகிதம் ஒரு சதவீதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முந்தைய நிபா பரவுதல்களை கேரளா எவ்வளவு நன்றாகக் கையாண்டது?

2018-ம் ஆண்டில், கேரளாவுக்கு இதுபோன்ற அதிக இறப்பு விகிதத்துடன் ஒரு நோயைக் கையாண்ட கடந்த அனுபவம் இல்லை. எபோலா வைரஸ் நோய்க்கான நெறிமுறையை அரசு பின்பற்றுகிறது. இது முக்கியமாகத் துணை-சஹாரா ஆப்பிரிக்காவில் பதிவாகியுள்ளது.

ஜூன் 2018-ல் ஒரு கட்டத்தில், கோழிக்கோடு மற்றும் அருகிலுள்ள மலப்புரம் மாவட்டங்களில் சுமார் 3,000 பேர் தனிமைப்படுத்தலில் இருந்தனர். சந்தேகத்திற்கிடமான நிபா நோயாளிகளுடன் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொடர்பு கொண்ட அனைத்து நபர்களும் இவ்வாறு கண்காணிக்கப்பட்டனர்.

2019-ல் மீண்டும் நிபாவை அரசு அறிவித்தபோது, ​​நிலைமையைக் கையாள சுகாதாரத் துறை ஏற்கனவே ஒரு நெறிமுறையை வைத்திருந்தது. 2019-ம் ஆண்டில், எர்ணாகுளம் மாவட்டத்தில் ஒரு பாதிக்கப்பட்டவர் மட்டுமே பதிவாகியிருந்தார்.

2020-ம் ஆண்டில், அரசு எந்த நிபா பாதிக்கப்பட்டவரையும் தெரிவிக்கவில்லை. ஆனால், நெறிமுறை புதுப்பிக்கப்பட்டு மாநிலம் முழுவதும் அனுப்பப்பட்டது.

கோவிட் -19 உடன் புதிய நிபா கவலைகளைக் கேரளா எவ்வாறு கையாள்கிறது?

நிபா வைரஸ் பாதிக்கப்பட்டவர், சாங்கரோத்திலிருந்து 50 கிமீ தொலைவில் உள்ள சாத்தமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர். கோழிக்கோடு சாத்தமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட மூன்று வார்டுகள், மற்றும் பாதிக்கப்பட்டவர் வாழ்ந்த இடம் ஆகியவை ஞாயிற்றுக்கிழமை காலை முற்றிலும் மூடப்பட்டது. மைக்ரோ-லெவல் கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வந்துள்ளன.

இந்த மூன்று வார்டுகளுக்கும் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட கிராமத்திற்குச் செல்லும் அனைத்து இடங்களிலும் போலீசார் தடுப்புகள் மற்றும் சோதனை சாவடிகளை அமைத்துள்ளனர்.

கோவிட் -19 நெறிமுறைகள் ஏற்கனவே நடைமுறையில் இருப்பதால், வைரஸ் நோய்கள் பரவுவது குறித்து அதிக விழிப்புணர்வு உள்ளது. PPE கருவிகள், கையுறைகள் மற்றும் முகமூடிகளின் தொடர்ச்சியான பயன்பாடு, குறிப்பாக சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்களால், நிபா வைரஸ் பரவுவதற்கான வாய்ப்பைக் குறைக்கும்.

நிபா பரவுவது பற்றி மற்ற மாநிலங்கள் கவலைப்பட வேண்டுமா?

குறைந்தபட்சம் தற்போதைய கோவிட் -19 தொற்றுநோயுடன் ஒப்பிடுகையில், இதுவரை நிபா வைரஸின் அனைத்து பரவுதல்களும் உள்ளூர்மயமாக்கப்பட்டு விரைவாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. மலேசியாவில் முதல் பரவுதல் செப்டம்பர் 1998-ல் தொடங்கியது. இருப்பினும், அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் தான் விஞ்ஞானிகள் தாங்கள் கையாள்வது ஒரு புதிய வைரஸ் என்பதை உறுதிப்படுத்த முடிந்தது. இந்தப் பரவுதல் மே மாதத்திற்குள் கட்டுப்படுத்தப்பட்டது. பங்களாதேஷில், நிபா பரவுதல் அடிக்கடி நிகழ்கின்றன. சில மாதங்களுக்குப் பிறகு பரவுதல் குறைந்தது.

உதாரணமாக, SARS-CoV-2-ஐ விட நிபா வைரஸ் மிகக் குறைவான தொற்றுநோயாக உள்ளது என்பது ஒரு விரைவான முடிவுக்கு ஒரு முக்கிய காரணி. SARS-CoV-2 விஷயத்தில் காணப்படுவது போல் மனிதனிடமிருந்து மனிதனுக்குப் பரவுவது அவ்வளவு எளிதானது அல்ல அல்லது வேகமானது இல்லை.

வங்காளதேச ஆராய்ச்சியாளர்களான நோகாலி, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் பி தேவ்நாத் மற்றும் சிட்டகாங் பல்கலைக்கழகத்தின் எச் எம் ஏ மசூத் ஆகியோர் இந்த ஆண்டு வெளியிட்ட ஆய்வில், நிபா வைரஸின் முந்தைய பரவுதல்களில் இனப்பெருக்க எண் (ஆர் 0) சுமார் 0.48 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. R- மதிப்பு என்பது மக்கள்தொகையில் வைரஸ் எவ்வளவு விரைவாகப் பரவுகிறது என்பதற்கான அளவீடு. ஒன்றுக்குக் குறைவான மதிப்பு என்பது ஏற்கனவே பாதிக்கப்பட்ட நபரால் ஒரு நபரை விட குறைவாக இருப்பதைக் குறிக்கிறது. இத்தகைய சூழ்நிலையில், பரவுதல் ஒப்பீட்டளவில் விரைவாகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நிபா பரவுதல்கள் முக்கியமாக மக்கள்தொகை குறைவாக உள்ள கிராமங்களில் நிகழ்ந்ததால், இந்த வைரஸ் பல நபர்களுக்கு பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் குறைவாக இருந்தன என்றும் ஆய்வு குறிப்பிடுகிறது. மேலும், மிக அதிக இறப்பு விகிதங்களும் குறைந்த பரவலுக்கு பங்களிக்கின்றன.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Covid 19 Nipah Virus
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment