மறைந்த இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதி சடங்கு, செப்டம்பர் 19 ஆம் தேதி லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் நடைபெறுகிறது.
இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் பல உலகத் தலைவர்கள், ஐரோப்பிய அரச குடும்ப உறுப்பினர்கள் மற்றும் இங்கிலாந்து முன்னாள் பிரதமர்கள் எனப் பலர் கலந்துகொள்கிறார்கள்.
என்ன ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன?
உலகின் மிகப் பெரிய தலைவர்கள் ஒரே இடத்தில், ஒரே நாளில் ஒன்றுகூடுவது, இறுதிச் சடங்கிற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்வதும்வரும் பாதுகாவலர்களுக்கு பெரும் சவாலாக இருக்கக் கூடும்.
இந்த நிலையில், இறுதிச் சடங்கில் கலந்துகொள்பவர்களுக்காக இங்கிலாந்து அரசாங்கம் முன்வைத்த சில கோரிக்கைகள் மற்றும் வேண்டுகோள்கள் வழக்கத்திற்கு மாறானவை.
இது குறித்து செய்தி நிறுவனமான பொலிட்டிகோ (Politico), உலகத் தலைவர்கள் ஹீத்ரோ சர்வதேச விமான நிலையத்திற்கு அவர்களின் சொந்த விமானத்தில் பயணிக்க அனுமதி அளிக்கப்படவில்லை.
மாறாக வணிக விமானங்களில் பயணிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், அவர்கள் ஹெலிகாப்டர்களையோ அல்லது அரசு கார்களையோ பயன்படுத்தி இறுதி ஊர்வலத்திற்கு செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும் உலக தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் இங்கிலாந்து வெஸ்ட்மின்ஸ்டர் அபேக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்.
தொடர்ந்து, உலகத் தலைவர்கள் தங்கள் மனைவி அல்லது கூட்டாளிகளை மட்டுமே அரசு இறுதிச் சடங்கிற்கு அழைத்து வருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
2,000 பேர் மட்டுமே அமரக்கூடிய வரலாற்றுச் சிறப்புமிக்க அபேயில் அவர்களது குடும்பத்தைச் சேர்ந்த வேறு எவரும் அல்லது ஊழியர்களும் தங்க அனுமதி கிடையாது.
அறிக்கையின்படி, அரசு இறுதி ஊர்வலத்துடன் இணைக்கப்பட்ட அனைத்து தளங்களிலும் "பல அடுக்கு பாதுகாப்பை" உறுதி செய்வதாக இங்கிலாந்து வெளியுறவு அலுவலகம் உறுதியளித்துள்ளது.
அரசு இறுதிச் சடங்கில் பங்கேற்கும் உலகத் தலைவர்களுக்கு செப்டம்பர் 18 மாலை பக்கிங்ஹாம் அரண்மனையில் மன்னர் மூன்றாம் சார்லஸ் வரவேற்பு அளிக்கிறார்.
யாரெல்லாம் கலந்து கொள்வார்கள்?
அமெரிக்க அதிபர் ஜோ பிடன், முதல் பெண்மணி ஜில் பிடனுடன் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்கான அழைப்பை முறையாக ஏற்றுக்கொண்டுள்ளார்.
இந்நிலையில், பராக் ஒபாமா, ஜார்ஜ் டபிள்யூ புஷ், ஜிம்மி கார்டர் உட்பட முன்னாள் அமெரிக்க அதிபர்கள் எவருக்கும் இதுவரை அழைப்பு விடுக்கப்படவில்லை. இதனை வெள்ளை மாளிகை கூறியுள்ளது.
அமெரிக்க அதிபர் ஜோ பிடன் முன்னதாக, ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் பங்கேற்க செப்டம்பர் 18 முதல் 20 வரை நியூயார்க் செல்ல திட்டமிட்டிருந்தார்.
தற்போது, அவர் அந்தத் தினங்களில் இங்கிலாந்து செல்லவுள்ளார். இதற்கான பயண விவரங்கள் வெளியாக வாய்ப்புகள் உள்ளன. ஜோ பிடன் தவிர, இரண்டாம் எலிசபெத் ராணி இறுதி நிகழ்ச்சியில்,
துருக்கி அதிபர் ரெசெப் தையிப் எர்டோகன், ஜப்பானின் பேரரசர் நருஹிட்டோ, நியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் மற்றும் ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர்.
மேலும், நெதர்லாந்து, ஸ்பெயின், பெல்ஜியம், டென்மார்க் மற்றும் ஸ்வீடன் உள்ளிட்ட நாடுகளின் அரச குடும்ப உறுப்பினர்களும் இறுதிச் சடங்கில் அஞ்சலி செலுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உலகத் தலைவர்கள் மீதான கட்டுப்பாடுகள் பிடனுக்கும் பொருந்துமா?
இங்கிலாந்து விதித்துள்ள பயணக் கட்டுப்பாடுகள் அமெரிக்க அதிபருக்கு பொருந்துமா என்பது குறித்து இதுவரை எந்தத் தகவல்களும் வெளியாகவில்லை.
ஏனெனில் அமெரிக்க அதிபர்கள் பாரம்பரிய ஏர்ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் பயணம் செய்வார்கள். மேலும் அவர்களின் தனிப்பட்ட பாதுகாப்பிற்காக போயிங் 747 கொண்டு செல்லப்படும்.
மேலும், தி பீஸ்ட் கார் இல்லாமல் அவர் வேறொரு நாட்டுக்கு செல்லமாட்டார்.
விளாடிமிர் புதின் வருவாரா?
இந்த இறுதிச் சடங்கு நிகழ்வில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கலந்துகொள்ள மாட்டார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் ரஷ்ய பிரதிநிதி ஒருவர் ராணியின் இறுதிச் சடங்கில் பங்கேற்கிறார்.
முன்னதாக இரண்டாம் எலிசபெத் மறைவுக்கு புதின் இரங்கல் தெரிவித்திருந்தார்.
அதில், புதிதாக மன்னர் பொறுப்பேற்கும் மூன்றாம் சார்லஸ் பற்றியும் குறிப்பிட்டிருந்தார். இங்கிலாந்து, ரஷ்ய உறவுகள் மிகவும் மோசமாக உள்ளன.
உக்ரைன்- ரஷ்ய போரில் இங்கிலாந்து உக்ரைனுக்கு ஆதரவாக படைகளை அனுப்பியது. நினைவு கூரத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil