scorecardresearch

தாய்ப்பாலில் எம்.ஆர்.என்.ஏ தடுப்பூசியின் ஆபத்து இல்லை; ஆய்வில் கண்டுபிடிப்பு

No trace of mRNA vaccine in breast milk: small study: தடுப்பூசியின் நானோ துகள்கள் அல்லது எம்ஆர்என்ஏ, மார்பக திசுக்களில் நுழைவது அல்லது பாலுக்கு மாற்றப்படுவது போன்ற ஆபத்து அதிகம் இல்லை

தாய்ப்பாலில் எம்.ஆர்.என்.ஏ தடுப்பூசியின் ஆபத்து இல்லை; ஆய்வில் கண்டுபிடிப்பு

சான் பிரான்சிஸ்கோவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் ஒரு சிறிய ஆய்வு, கொரோனாவுக்கு எதிரான மெசஞ்சர் ஆர்.என்.ஏ தடுப்பூசிகள் தாய்ப்பாலில் கண்டறியப்படவில்லை என்று தெரிவிக்கிறது. இந்த ஆய்வறிக்கை JAMA குழந்தைகள் மருத்துவ இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் வழங்கப்படும் ஃபைசர் அல்லது மாடர்னாவின் எம்.ஆர்.என்.ஏ தடுப்பூசிகளைப் பெற்ற ஏழு பெண்களின் தாய்ப்பாலை இந்த ஆய்வு ஆராய்ச்சி செய்தது. ஆய்வில், தாய்ப்பாலில் தடுப்பூசியின் எந்த தடயத்தையும் கண்டுபிடிக்கவில்லை. மாறாக, தாய்ப்பால் கொடுக்கும் போது தடுப்பூசியின் பாதுகாப்பு குறித்த முதல் நேரடி தரவை வழங்குகிறது. தடுப்பூசியின் எம்.ஆர்.என்.ஏ குழந்தைக்கு மாற்றப்படவில்லை என்பதற்கான இந்த ஆரம்ப சான்றுகள் தடுப்பூசி மறுத்துவிட்டவர்கள் அல்லது தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்தியவர்கள் மத்தியில் தடுப்பூசி தாய்ப்பாலை மாற்றக்கூடும் என்ற கவலையை தீர்க்கக்கூடும் என்று சான் பிரான்சிஸ்கோவின் கலிஃபோர்னியா பல்கலைக்கழகம் ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு தடுப்பூசி போட வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைக்கிறது. மேலும் கோட்பாட்டளவில் குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை பாதிக்கும் தடுப்பூசியின் நானோ துகள்கள் அல்லது எம்ஆர்என்ஏ, மார்பக திசுக்களில் நுழைவது அல்லது பாலுக்கு மாற்றப்படுவது போன்ற ஆபத்து அதிகம் இல்லை என்று தாய்ப்பால் கொடுக்கும் மருத்துவ அகாடமி தெரிவித்துள்ளது.

சிறிய மாதிரி அளவால் இந்த ஆய்வு மட்டுப்படுத்தப்பட்டிருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர், மேலும் பாலூட்டுதல் விளைவுகளில் தடுப்பூசிகளின் தாக்கத்தை சிறப்பாக மதிப்பிடுவதற்கு பெரிய அளவிலான மக்களிடமிருந்து மேலும் மருத்துவ தரவு தேவை என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Explained news download Indian Express Tamil App.

Web Title: No trace of mrna vaccine in breast milk small study

Best of Express