மேற்கு வங்க மாநில சாந்திநிகேதனில் அமைந்துள்ள மத்திய பல்கலைக்கழகமான விஸ்வ-பாரதி பல்கலைக்கழக வளாகத்தில் சட்டவிரோதமாக குடியிருப்பவர்கள் பட்டியலில் பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென் பெயர் இடம் பெற்றுள்ளது.
இதனைத் தொடர்ந்து, அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அமர்த்திய செனுக்கு கடிதம் ஒன்றை எழுதினார். அதில்,"பல்கலைக்கழகத்துக்குள் நேற்று புதிதாய் முளைத்த படையெடுப்பாளர்கள் அமர்தியா சென்னின் குடும்பத்தைப் பற்றி கேள்வி எழுப்புவது முறையற்றது"என்று தெரிவித்தார்.
சாந்திநிகேதன் இந்தியாவின், மேற்கு வங்க மாநிலத்தின் பிர்பூம் மாவட்டத்தில், போல்பூர் எனுமிடத்தில் அமைந்துள்ளது. இவ்விடத்தில் இரவீந்திரநாத் தாகூர் 1862ஆம் ஆண்டில் புகழ்பெற்ற விஸ்வபாரதி பல்கலைக் கழக நகரை நிறுவினார்.
சாந்திநிகேதன்- அமர்த்தியா சென்: 1908 ஆம் ஆண்டில் ரவீந்திரநாத் தாகூர், அமர்த்தியா சென்னின் தாய்வழி தாத்தாவும்,புகழ்பெற்ற சமஸ்கிருத அறிஞருமான க்ஷிதிமோகன் சென் அவர்களை சாந்திநிகேதனுக்கு அழைத்திருந்தார். மேலும், விஸ்வ-பாரதி பல்கலைக்கழகத்தை நிறுவியதில் க்ஷிதிமோகன் செனுக்கு முக்கிய பங்கு வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நவம்பர் 3, 1933 ஆம் ஆண்டு, பிரிட்டிஷ் இந்தியாவிலுள்ள வங்காள மாகாணத்திலிருக்கும் சாந்திநிகேதனில் பிறந்த அமர்த்திய சென்னுக்கு பெயரிட்டது தாகூர் என்பது அனைவரும் அறிந்ததே.
தாகூரின் காலத்திலிருந்து, வளாகத்தில் உள்ள சில இடங்கள், பலருக்கும் 99 வருட குத்தகைக்கு விடப்பட்டது. அமர்த்தியா சென் சாந்திநிகேதனில் தனது தந்தையால் கட்டப்பட்ட பிரதிச்சியில் வளர்ந்தார். மே 1951 இல், விஸ்வ பாரதி ஒரு மத்திய பல்கலைக்கழகமாகவும், பாராளுமன்றச் சட்டத்தின் மூலம் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த உயர்க்கல்வி நிறுவனமாகவும் அறிவிக்கப்பட்டது.
சர்ச்சை எவ்வாறு தொடங்கியது?
கடந்த டிசம்பர் 9 அன்று பல்கலைக்கழக ஆசிரியர் உறுப்பினர் உடனான சந்திப்பின் போது, பலகலைக்கழக துணைவேந்தர் பித்யுத் சக்ரவர்த்தி, அமர்த்தியா சென் உடனான தொலைபேசி உரையாடைலை பகிர்ந்து கொண்டார். உரையாடலில் ,"பாரத் ரத்னா என்று தன்னை அறிமுகப்படுத்திய அமர்த்தியா சென், சாந்திநிகேதனில்தனது வீட்டைச் சுற்றியுள்ள நடைபாதை வியாபாரிகளை வெளியேற்ற வேண்டாம்" என்று கேட்டுக் கொண்டாதாக துணைவேந்தர் தெரிவித்தார். மேலும், தனது வீட்டிற்கு அவ்வப்போது வருகைத் தரும் தனது மகளின் சவுகரியத்திற்காக பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள தனது இடத்திற்குள் நடைபாதை வியாபாரிகளை அனுமதிக்க வேண்டும் என்று அமர்த்தியா சென் பரிந்துரைத்ததாக துணைவேந்தர் கூறினார்
மெய்நிகர் கூட்டத்தில் துணைவேந்தர் கூறிய கருத்தின் உண்மை தன்மைகளைக் கண்டறிய பல்கலைக்கழக ஆசிரிய சங்கத் தலைவர் சுதிப்தா பட்டாச்சார்யா, அமர்த்தியா செனுக்கு உடனடியாக மின்னஞ்சல் ஒன்றை எழுதினார்.
மின்னஞ்சலுக்குப் பதிலளித்த சென், துணைவேந்தரை தொலைபேசியில் அழைத்தை முற்றிலும் மறுத்தார். மேலும், “விஸ்வ-பாரதியின் துணைவேந்தர் ஆன்லைன் ஆசிரியர் கூட்டத்தில் வெளிப்படையாக இவ்வாறு கூறுவதை அறிந்து மிகவும் ஆச்சரியப்படுகிறேன். அவருடன் இதுபோன்ற உரையாடலை செய்ததாக நான் நினைக்கவில்லை. நான் ஒருபோதும் என்னை ‘பாரத் ரத்னா’ என்று குறிப்பிட்டதில்லை. காய்கறி வியாபாரிகளை தடையின்றி அனுமதிக்க, எனது மகள் சவுரிகரியம் மட்டும் முக்கிய காரணம் என்றும் நான் நினைக்கவில்லை. என் குடும்பத்தினர் காய்கறிகளை எங்கே வாங்குகிறார்கள் என்று கூட எனக்குத் தெரியாது. இறுதியாக, சாந்திநிகேதனில் உள்ள தனது வீட்டிற்கு வெளியே காய்கறி வியாபாரிகள் இல்லை என்பதையும் இன்கு நான் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்தார்.
தொடரும் சர்ச்சை :
ஆசிரியர் சங்கத் தலைவர் சுதீப்தா பட்டாச்சார்யா உள்நோக்கத்துடன் ஊடகங்களை அணுகியதாகவும், பல்கலைக்கழக நடத்தை விதிகளை மீறியதாகவும் துணை வேந்தர் குற்றம் சாட்டினார். பல்கலைக்கழக அதிகாரிகள், டிசம்பர் 19 ம் தேதி வெளியிட்ட நோட்டீஸில் , பல்கலைக்கழக அதிகாரிகளின் ஒப்புதல் பெறமால் சுதீப்தா ஊடகங்களுக்கு தகவல்களை பகிர்ந்து கொண்டார் என்று குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
"বিশ্বসাথে যোগে যেথায় বিহারো, সেইখানে যোগ তোমার সাথে আমারো"
Visva Bharati University turns 100. This temple of learning was Rabindranath Tagore’s greatest experiment on creating the ideal human being. We must preserve the vision and philosophy of this great visionary
— Mamata Banerjee (@MamataOfficial) December 24, 2020
கடந்த வியாழக்கிழமை, மேற்கு வங்க அரசுக்கு பல்கலைக்கழக அதிகாரிகள் எழுதிய கடிதத்தில், வளாகத்துக்கு சொந்தமான பல இடங்கள் தவறான முறையின் பதிவு செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தனர். மேலும், வளாகத்துக்குள் அங்கீகாரம் பெறாமால குடியிருப்பவர்களின் பட்டியலையும் கடிதத்தில் சுட்டிக் காட்டினர். அப்பட்டியலில்,பிரபல பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென் பெயரும் இடம் பெற்றிருந்தது.
குத்தகைக்கு விடப்பட்ட 125 தசம நிலங்களைத் தாண்டி, கூடுதலாக 13 தசம நிலங்களை அமர்த்தியா சென் ஆக்கிரமித்து இருப்பதாக விஸ்வ-பாரதி வளாக எஸ்டேட் அலுவலகம் தெரிவித்தது.
வெள்ளிக்கிழமை, முதல்வர் மம்தா பானர்ஜி அமர்த்திய சென்னுக்கு எழுதிய கடிதத்தில்,"ஒரு சகோதிரியாக தான் என்றுமே உங்கள் பின் நிற்பேன் " என்று ஆறுதல் கூறினார். "பாஜகவின் சித்தாந்தத்திற்கு செவி சாய்க்கவில்லை என்பதால் இதுபோன்ற குற்றச்சாட்டுகள் அவர் எதிர்கொண்டு வருவதாகவும் மம்தா பானர்ஜி தனது கடிதத்தில் குறிப்பிட்டார்.
ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தாமஸ் டபிள்யூ. லாமண்ட் பல்கலைக்கழக பேராசிரியராக பணியாற்றி வரும் அமர்த்தியா சென், 1998 இல் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசையும், 1999 இல் இந்திய அரசின் மிகப்பெரிய பாரத ரத்னா விருதையும் பெற்றார். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் சில கொள்கைகளை மிகக்கடுமையாக விமர்சித்தவர்.
தி டெலிகிராப் என்ற ஆங்கில நாளிதழிடம் பேசிய அமர்த்தியா சென், "சாந்திநிகேதன் கலாச்சாரத்திற்கும் விஸ்வ பாரதி பல்கலைக்கழக துணைவேந்தருக்கும் இடையே ஒரு பெரிய இடைவெளி இருப்பதாக கூறினார்.
"சாந்திநிகேதனில் பிறந்து வளர்ந்ததால், சாந்திநிகேதன் கலாச்சாரத்திற்கும், துணைவேந்தருக்கும் இடையிலான பெரிய கலாச்சார இடைவெளியைப் பற்றி நான் கருத்து தெரிவிக்க முடியும். மேற்கு வங்க மாநிலத்தின் மீது அதன் கட்டுப்பாட்டை அதிகரிக்கும் பொருத்து டெல்லி மத்திய அரசாங்கத்தால் அதிகாரம் பெற்றவர் ”என்றும் தெரிவித்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.