குளிர்காலத்தில் வட இந்தியாவில் வழக்கத்திற்கு மாறாக மூடுபனி ஏன்?

North India weather forecast fog குளிர்காலத்தில் வட இந்தியாவின் சமவெளிகளில் மூடுபனி நிலவுகின்றன. மேலும், அவை சில நாட்கள் பல நேரங்களில் வாரங்கள் வரை நீடிக்கும்.

By: Updated: February 21, 2021, 01:55:10 PM

North India weather forecast fog Tamil News : கடந்த இரண்டு மாதங்களில் பல நாட்களாக, பூஜ்ஜியத் தெரிவுநிலை மற்றும் அடர்த்தியான மூடுபனி டெல்லியின் சில பகுதிகளையும், மிகவும் குளிர்ந்த காலநிலை பஞ்சாப் மற்றும் ஹரியானா முழுவதையும்  ஆக்கிரமித்திருந்தன. கடந்த வாரம் மட்டும், அதிகப்படியான பனிமூட்டம் காரணமாகப் பல சாலை விபத்துக்கள் நூற்றுக்கும் மேற்பட்டவர்களைக் கொன்றன. இந்த சீசனில் பல நாட்களாகத் தொடரும் இந்தத் தீவிர மூடுபனிக்குப் பின்னால் என்ன இருக்கிறது?

மூடுபனி என்றால் என்ன?

மூடுபனி என்பது காற்றில் இடைநிறுத்தப்பட்ட சிறிய நீர்த்துளிகளின் நிகழ்வு. மூடுபனி பொதுவாக மாலை, இரவு அல்லது அதிகாலை நேரங்களில் உருவாகிறது. இது பார்வைத்திறனை கடுமையாக பாதிக்கும். மோசமான தெரிவுநிலை, ஒரு கிலோமீட்டருக்கும் குறைவான அளவிற்கு வீழ்வது வாகன மற்றும் விமான போக்குவரத்தின் சீரான ஓட்டத்தை சீர்குலைக்கிறது. சாலை விபத்துக்கள், விமானம் புறப்படுவதில் தாமதம் மற்றும் தரையிறக்கம் ஆகியவை மூடுபனியால் ஏற்படும் மோசமான பார்வைக்கு இணைக்கப்பட்டுள்ளன. குளிர்காலத்தில் வட இந்தியாவின் சமவெளிகளில் மூடுபனி நிலவுகின்றன. மேலும், அவை நாட்கள் சில நேரங்களில் வாரங்கள் வரை நீடிக்கும்.

இந்த குளிர்காலத்தில் வட இந்தியாவில் அடர்த்தியான மூடுபனிக்கு என்ன காரணிகள் வழிவகுத்தன?

பிப்ரவரி 2-6 தேதிகளில் டெல்லி-ஹரியானா-பஞ்சாப் பெல்ட்டில் மூடுபனி அதிகமானது. ஓர் தீவிரமான மேற்கத்திய இடையூறு காரணமாக, இது லேசான மழையை ஏற்படுத்தியது மற்றும் இந்த பிராந்தியங்களில் புதிய ஈரப்பதத்தைக் கொண்டு வந்தது. பிப்ரவரி 8-19 காலப்பகுதியில் ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய இடங்களில் வானிலையை பாதிக்கும் தீவிர வடக்கு மலைப்பாங்கான நிலப்பரப்புகளில் பனிமூட்டம் தொடர்ந்தாலும், சமவெளிகள் பெரும்பாலும் பாதிக்கப்படாமல் இருந்தன.

“மேற்கத்திய இடையூறு இல்லாத நிலையில், ஓர் anticyclone உருவாகி, சமவெளிகளின் தீவிர வடக்கே நிலைநிறுத்தப்பட்டது. இது பிராந்தியத்தில் ஈரப்பதத்தில் ஆதிக்கம் செலுத்தும் கிழக்கு அலைகளுடன் ஒத்துப்போனது. இதுவே மூடுபனி உருவாவதற்கு சாதகமானது” என்று புது தில்லியின் தேசிய வானிலை முன்னறிவிப்பு மையத்தின் மூத்த விஞ்ஞானி ஆர்.கே.ஜெனமணி கூறினார்.

பகலில் அமைதியான காற்றுடன் கூடிய தெளிவான வானிலை, மூடுபனியை சாதாரண காலத்தை விட நீண்ட காலம் நீடிக்க அனுமதித்தது.

பஞ்சாப்-ஹரியானா-டெல்லி பெல்ட், காற்று மாசுபாட்டை ஏற்படுத்தும் ஆதாரங்களை அதிக அளவில் வைத்திருப்பதில் மோசமானது. ஆனால், இந்த பருவத்தில், மூடுபனி தொடர்பாக மாசுபடுத்த அதற்கு அதிக பங்கு இல்லை என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

பிப்ரவரி 8-ம் தேதிக்கு பிறகு மத்திய இந்தியா முழுவதும் கிழக்கே வீசும் காற்று அதிகமாகப் பரவி வருவதால், அங்குக் காற்று தொடர்ந்து 9 முதல் 10 நாட்கள் வரை தொடர்ந்து வீசியது. இதன் விளைவாக தொடர்ச்சியான ஈரப்பதம் சேர்க்கப்பட்டு, நீர்த்துளிகள் மூடுபனி வளர்ச்சிக்கும், இந்த நாட்களில் அதன் நிலைத்தன்மைக்கும் பங்களித்தன.

இந்த ஆண்டு மூடுபனி ஏன் அசாதாரணமானது?

டிசம்பர் முதல் பிப்ரவரி மாதங்கள் வரை வட இந்தியாவின் சமவெளிகளில் மூடுபனி பொதுவானது என்றாலும், இந்த பருவத்தில் இந்தோ-கங்கை சமவெளிகளில் மூடுபனி ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் தனித்துவமானது.

இது முக்கியமாக இந்த மூன்று காரணங்களால் ஏற்படுகிறது:

1. பஞ்சாபின் அமிர்தசரஸ் விமான நிலையத்தில், இரவு 7 மணி முதல் காலை 10.30 மணி வரை தொடர்ச்சியாக பதிவு செய்யப்பட்ட பனிமூட்ட நிலைகளின் நீடித்த நிலை.

2. பஞ்சாப்-ஹரியானா-டெல்லி பெல்ட்டைச் சுற்றியுள்ள மிகவும் அடர்த்தியான மூடுபனி நிலைமைகளுடன் பூஜ்ஜியத் தெரிவுநிலையின் வளர்ந்து வரும் புவியியல் விரிவாக்கம்.

3. மிகவும் அடர்த்தியான மூடுபனியின் காலநேரம் 9 முதல் 10 நாட்கள் வரை நீடிக்கும். இதுபோன்ற நிலைமைகள் பிப்ரவரி முதல் வாரத்திற்குள் 2 அல்லது 3 நாட்களுக்கு மட்டுப்படுத்தப்படுகின்றன.

பிப்ரவரியில் எத்தனை நாட்களுக்கு இதுவரை மூடுபனி பதிவாகியுள்ளது?

அமிர்தசரஸ் விமான நிலையத்தில் 12 இரவுகளும் பகலும் மிகவும் அடர்த்தியான மூடுபனி பதிவாகியுள்ளதாக மூடுபனி குறித்த விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது பிப்ரவரி மாதத்தில் (பிப்ரவரி 19 வரை) மொத்தம் 156 மணி நேரம் இருந்தது. இது சராசரியாக, அமிர்தசரஸ் விமான நிலையம் நான்கு இரவுகள் மற்றும் 15 மணி நேரத்திற்கு சமமான நாட்கள் மூடுபனியை கொடுக்கிறது. அதுவும் முழு மாதத்திலும். இதேபோன்ற நிலை. ஜனவரி மாதம் அமிர்தசரஸில் 16 இரவுகள் / நாட்கள் 110 மணிநேரத்திற்கு சமமாகவும், டிசம்பரில் மூடுபனி 17 இரவுகள் / நாட்களை மொத்தமாக 161 மணிநேரமாகவும் பாதித்தது.

அதேசமயம், புதுதில்லியில், பிப்ரவரி மாதத்தின் மூடுபனி நாட்களின் எண்ணிக்கை சராசரியை விட அதிகமாக உள்ளது என்று வானிலை நிபுணர்கள் குறிப்பிட்டனர். பிப்ரவரி முழுவதும் சராசரியாக மூன்று இரவுகள் / நாட்கள் 12 மணி நேரத்திற்கு சமமாகவும், பிப்ரவரி 19 வரை இந்திரா காந்தி சர்வதேச (ஐஜிஐ) விமான நிலையம் நான்கு இரவுகள் / நாட்கள் 13 மணி நேரம் வரை மூடுபனியை கொண்டிருந்தது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Explained News by following us on Twitter and Facebook

Web Title:North india weather forecast fog winter delhi punjab haryana tamil news

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X