Advertisment

கர்நாடகா விவகாரம் - ஓ.பன்னீர்செல்வம் வழக்கு: ஒரு ஒப்பீடு

O Panneerselvam disqualification case: தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் இதே போன்ற வழக்குச் சுழலில்தான் இருக்கிறார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Nadu AIADMK MLAs disqualification case, karnataka crisis, supreme court of india, ஓ.பன்னீர்செல்வம் வழக்கு

Tamil Nadu AIADMK MLAs disqualification case, karnataka crisis, supreme court of india, ஓ.பன்னீர்செல்வம் வழக்கு

O Panneerselvam disqualification case and karnataka political crisis: கர்நாடகாவுக்கும் தமிழகத்துக்கும் காவிரி நதிநீர் பங்கீட்டில்தான் பிரச்னையே தவிர அரசியல் சூழலில் இரண்டு மாநிலமும் கிட்டத்தட்ட ஒரே நிலையில்தான் உள்ளன. என்ன புதிராக இருக்கிறதா?

Advertisment

கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம் காங்கிரஸ் கூட்டணியைச் சேர்ந்த 15 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்து சபாநாயகரிடம் மனு அளித்துள்ளனர். அவர்களின் ராஜினாமா கடிதத்தை கர்நாடகா சபாநாயகர் ஏற்கவில்லை. இதனை எதிர்த்து 10 அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில் நீதிபதிகள் தீபக் குப்தா, அனிருத்தா போஸ் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, கர்நாடகா சபாநாயகர் ரமேஷ் குமார் தரப்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வியும் முதலமைச்சர் குமாரசாமி தரப்பில் வழக்கறிஞர் ராஜீவ் தவணும், அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கியும் ஆஜராகி வாதிட்டனர்.

வழக்கு விசாரணையின்போது, வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி வாதிடுகையில், “சட்டமன்ற நடவடிக்கை தொடர்பான விவகாரங்களில் குறிப்பிட்ட கால வரையறைக்குள் முடிவெடுக்க சபாநாயகரை யாரும் நிர்பந்திக்க முடியாது. ஒரு வழக்கில் உத்தரவிடுமாறு கீழமை நீதிமன்றத்துக்குகூட உத்தரவிட முடியாது. மேலும், ராஜினாமா செய்வதாகக் கூறிய எம்.எல்.ஏ-க்கள் ஜூலை 11 ஆம் தேதி தான் முறைப்படி சபாநாயகரிடம் கடிதம் அளித்துள்ளனர். அதனால், எம்.எல்.ஏ-க்களின் ராஜினாமா கடிதங்கள், தகுதி நீக்கம் ஆகிய இரு விவகாரங்களிலும் புதன் கிழமையே முடிவெடுக்க பேரவைத் தலைவர் தயாராக உள்ளார். எனவே நீதிமன்றம் ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவில் மாற்றம் செய்ய வேண்டும்” என்று வாதிட்டார்.

இதையடுத்து வழக்கறிஞர் ராஜீவ் தவண் வாதிடுகையில், “அதிருப்தி எம்.எல்.ஏ-க்களின் ராஜினாமா கடிதங்கள் மீது குறிப்பிட்ட காலத்துக்குள் முடிவெடுக்க வேண்டுமென்றோ, தற்போதைய நிலையே தொடர வேண்டுமென்றோ சபாநாயகருக்கு இடைக்கால உத்தரவுகளைப் பிறப்பிக்க உச்ச நீதிமன்றத்துக்கு அதிகாரம் கிடையாது. இதில் சபாநாயகரின் அதிகார வரம்புக்குள் நீதிமன்றம் தலையிட முடியாது. மேலும், அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் கர்நாடகா அரசை கவிழ்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்கள். அதனால், அவர்களுடைய மனுக்கள் விசாரணைக்கு உகந்தவை அல்ல” என்று வாதிட்டார்.

அதிருப்தி எம்.எல்.ஏ-க்களின் சார்பில் வாதிட்ட வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, “சட்டமன்ற நடவடிக்கைகளில்தான் நீதிமன்றம் தலையிட முடியாதே தவிர, ராஜினாமா விவகாரங்களில் நீதிமன்றம் தலையிடலாம். இதற்கு எந்தத் தடையுமில்லை. பதவியை ராஜினாமா செய்வதற்கு எம்.எல்.ஏ-க்களுக்கு உரிமை உள்ளது. எம்.எல்.ஏ-க்களின் ராஜினாமாவுக்கும் பாஜகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இவர்களை தகுதி நீக்கம் செய்துவிட்டு ஆட்சியைக் காப்பாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது” என்று வாதிட்டார்.

வழக்கறிஞர்களின் காரசாரமான வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், “ஒரு குறிப்பிட்ட காலவரையறைக்குள் முடிவெடுக்க சபாநாயகரை நிர்பந்திக்க முடியாது. ஆனால், ஜூலை 6 ஆம் தேதியே அவர்கள் ராஜினாமா கடிதத்தை அ|ளித்துவிட்ட நிலையில் இத்தனை நாட்களாக ஏன் எந்த முடிவும் எடுக்கவில்லை என்று கேள்வி எழுப்பினர். இதையடுத்து, இந்த விவகாரத்தில், அதிருப்தி எம்.எல்.ஏ-க்களின் ராஜினாமா குறித்தும் தகுதி நீக்கம் குறித்தும் நாளைக்குள் முடிவெடுப்பதாக சாநாயகர் ரமேஷ் குமார் தரப்பில் தெரிவிதிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, கர்நாடகா சட்டமன்றத்தில் ஜூலை 18 ஆம் தேதி நடைபெற உள்ள நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்துகொள்வதிலிருந்து விலக்கு அளிக்குமாறு ராஜினாமா செய்துள்ள எம்.எல்.ஏ-க்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இது குறித்து நாளை காலை 10.30 மணிக்கு தீர்ப்பளிப்பதாக உச்ச நீதிமன்றம் வழகை ஒத்திவைத்துள்ளது.

தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் இதே போன்ற வழக்குச் சுழலில்தான் இருக்கிறார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு அவரது தோழி சசிகலா முதலமைச்சராக ஓ.பன்னீர் செல்வம் எதிர்ப்பு தெரிவித்தார். ஊழல் வழக்கில் சசிகலா சிறை சென்றதால் முதலமைச்சராக பதவியேற்ற எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிரான நம்பிக்கை வாக்கெடுப்பில் பிப்ரவரி 18, 2017-இல் ஓ.பன்னீர் செல்வம் உட்பட 11 எம்.எல்.ஏ-க்கள் எதிராக வாக்களித்தனர்.

இந்த விவகாரத்தில், தமிழக சட்டமன்ற சபாநாயகர் தனபால் நடவடிக்கையில் தலையிட முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதனை எதிர்த்து இந்த 11 எம்.எல்.ஏ-க்களையும் தகுதி நீக்கம் செய்யக் கோரி திமுக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு விசாரணையில் உள்ளது.

இந்த சூழலில்தான் கர்நாடகா அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா விவகாரத்தில் உச்ச நீதிமன்றம், சபாநாயகரை நிர்பந்திக்க முடியாது என்றும் அதற்காக நடப்பவைகளை நீதிமன்றம் பார்த்துக்கொண்டிருக்காது என்றும் கூறியுள்ளது. அதனால், கர்நாடகா மாநில அதிருப்தி எம்.எல்.ஏ-க்களின் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் நாளை வழங்கப்போகிற தீர்ப்பு கர்நாடகா மாநில அரசியலில் மட்டுமல்லாமல் தமிழக அரசியலிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அரசியல் நொக்கர்களால் கருதப்படுகிறது.

இந்த விவகாரத்தில் சபாநாயகரின் நடவடிக்கையில் நீதிமன்றம் தலையிடாது என்று கூறினால் கர்நாடகாவில் குமாரசாமி அரசு தப்பித்துக்கொள்ளும். அல்லது சபாநாயகர் நடவடிக்கையை எதிர்த்து தீர்ப்பளித்தால் கர்நாடகாவில் குமாரசாமி அரசுக்கு ஆபத்து என்றால், தமிழகத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்துக்கும் ஆபத்து. அதனால், நாளை உச்ச நீதிமன்றம் வழங்கப்போகிற தீர்ப்பு ஒரு வகையில் தமிழக அரசியலுக்குமானதுதான். என்ன நடக்கிறது என்று பொருத்திருந்து பார்ப்போம்.

 

Aiadmk Karnataka O Panneerselvam Supreme Court
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment