ஒருவரின் உடல் பருமன், கோவிட் -19 பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டத்தை மிகவும் கடினமாக்கும் என்று எண்டோகிரைனாலஜி நாளிதழில் வெளியான ஆய்வுக்கட்டுரையில் தெரிவிக்கப்பட்டது. கொரோனா நோய்க் கிருமியால் பாதிக்கப்பட்டவுடன், உடல் பருமன் உடையவரின் மனித நோயெதிர்ப்பு மண்டலம் உருவாக்கும் ஆன்டிபாடிகள் அதிவேகத் தன்மையில் உருவாக்குகிறது. இது, மிகவும் ஆபத்தான சூழலை உருவாக்கி விடும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
பொதுவாக இதய நோய், நீரிழிவு போன்ற தொற்றாத தன்மையுடைய தீவிர நோய்கள் (என்.சி.டி) ஏற்படுவதற்கான ஆபத்தை உடல் பருமன் அதிகமாக்கும். நோயெதிர்ப்பு மண்டலத்தை பல வழிகளிலும் உடல் பருமன் பாதிக்கும்.
எடுத்துக்காட்டாக, உடல் பருமன் பிரச்சனை, நோயெதிர்ப்பு மண்டலத்தின் சில பகுதிகளை நீண்டகாலமாக ஆக்டிவேட் செய்து வைத்துக்கொள்கிறது. இத்தகைய நிலையில் ஒருவர் நோய்த் தொற்றை எதிர்கொள்ளும்போது, நோயெதிர்ப்பு செல்களின் செயல்பாடுகளை அதிவேகமாக மாற வழிவகுக்கும். இறுதியில், நோய்த் தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் இதுவே ஆபத்திற்கு வழிவகுக்கும்.
உடல் பருமன் பிரச்சனைக்கும், தொற்று நோய்களுக்கும் உள்ள சிக்கலான தொடர்பையும், உடல் பருமன் போன்ற தொற்றாத நாள்பட்ட நோய்கள் (என்.சி.டி) ஒரு கடுமையான நோய்த்தொற்றுக்கான நோயெதிர்ப்பு மண்டலத்தை எவ்வாறு பாதிக்கின்றன என்பதைப் புரிந்துகொள்வதில் உள்ள இடைவெளியையும், கோவிட் -19 நமக்கு விளக்கியுள்ளது”என்று கட்டுரை ஆசிரியர்களில் ஒருவரான துர்கா சிங்கர் தெரிவித்தார்.
“கடுமையான கோவிட் -19 பாதிப்பு நோயாளிகளின் நோயெதிர்ப்பு மண்டலத்தின் ஒரு பகுதியான மேக்ரோபேஜ் நோயாளிகளிக்கு ஆபத்தாக முடியலாம் என்பதை சமீபத்திய சான்றுகள் எடுத்துக்காட்டுகின்றன. இந்த கண்டுபிடிப்புகள் கோவிட் -19 க்கு உருவாக்கப்பட்ட புதிய தடுப்பு மருந்துகள் உடல் பருமன் பிரச்சனையை எவ்வாறு தொடர்பு கொள்ளக்கூடும் என்ற புரிதலை அளிக்கின்றன,”என்று சிங்கர் கூறினார்.
ஆதாயம் : Endocrine Society
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Explained News by following us on Twitter and Facebook
Web Title:Obesity makes immune system becoming hyperactive in covid 19 fight
தமிழக தேர்தல் தேதி அறிவிப்பு : தி.மு.க மாநில மாநாடு, பொதுக்குழு கூட்டம் ஒத்திவைப்பு
தமிழகத்தில் உருவாகியது 3-வது அணி : அதிமுகவில் இருந்து வெளியேறிய சரத்குமார் ஐஜேகே-வுடன் கூட்டணி
வன்னியர்கள் இடஒதுக்கீடு மசோதா : அப்பாவிடம் கண்ணீர் மல்க தகவலை பகிர்ந்த அன்புமணி
இப்போ சித்ரா இல்லையே… கால்ஸ் படத்தை பார்த்து கண்ணீர் விட்ட சீரியல் பிரபலங்கள்
ஆளே அடையாளம் தெரியல… சினிமாவில் என்ட்ரி ஆன விஜய் டிவி நடிகை தோற்றத்தைப் பாருங்க!