Advertisment

கோரமண்டல் விபத்துக்கு வழிவகுத்த மாற்றம்: ரயில்வேயில் உள்ள ‘இன்டர்லாக்கிங்’ அமைப்பு என்ன?

ஒடிசாவில் ரயில் விபத்துக்கான காரணங்களை சி.ஆர்.எஸ் மற்றும் சி.பி.ஐ விசாரிக்கும் நிலையில், 'சிஸ்டத்தின் கட்டமைப்பில்' ஏற்பட்ட மாற்றமே மோதலுக்கு வழிவகுத்ததாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார். இந்த அமைப்பின் மூன்று கூறுகள் என்ன, அவை எவ்வாறு செயல்படுகின்றன என்பது இங்கே..

author-image
WebDesk
New Update
Odisha train accident

What is the ‘interlocking’ system in Railways, a change in which led to the Coromandel crash?

பாதையின் கட்டமைப்பில் ஏற்பட்ட மாற்றத்தால் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் நின்று கொண்டிருந்த சரக்கு ரயிலின் மீது பின்னால் மோதியது, இதுவே ஒடிசாவில் 275 பேர் உயிரிழந்த மூன்று ரயில் விபத்துக்கு வழிவகுத்தது என்று ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கூறினார்.

Advertisment

அஷ்வினி வைஷ்ணவ் ஞாயிற்றுக்கிழமை தூர்தர்ஷனுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், யார் இதை செய்தார்களோ, அவர்கள்தான் இந்த மாற்றத்துக்கு காரணம்.

 பாயின்ட் மெஷினில், டிராக்கின் கன்ஃபிகரேஷன்- அடிப்படையில் தான் எல்லாம் இயங்குகிறது... அந்த அமைப்பில் மாற்றம் ஏற்பட்டு, அதன் காரணமாகவே இந்த வேதனையான விபத்து நடந்துள்ளது. ஆனால் சுயாதீன அமைப்பின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பின்னரே அது குறித்து நான் கருத்து தெரிவிப்பேன் என்றார்.

எலெக்ட்ரிக் பாயிண்ட் மெஷின் என்பது ரயில்வே சிக்னலை விரைவாகச் செயல்படுத்துவதற்கும், பாயிண்ட் சுவிட்சுகளை "லாக்கிங்" செய்வதற்கும் ஒரு முக்கிய சாதனமாகும். இது ரயில்களை பாதுகாப்பாக இயக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

இந்த இயந்திரங்களின் செயலிழப்பு ரயில் இயக்கத்தை கடுமையாக பாதிக்கும், மேலும் சிஸ்டம் நிறுவும் போது உருவாகும் அல்லது நிவர்த்தி செய்யப்படாத ஏதேனும் குறைபாடுகள் பாதுகாப்பற்ற நிலைமைகளுக்கு வழிவகுக்கும். சிஸ்டம் எவ்வாறு செயல்படுகிறது என்பதற்கான அடிப்படைகள் இங்கே உள்ளன.

ரயில்வேயிஸ் 'இன்டர்லாக்' என்றால் என்ன?

ரயில்வே சிக்னலிங் அமைப்புகளில் இன்டர்லாக் என்பது ரயில் பாதைகளில் ரயில் இயக்கங்களின் செயல்பாட்டில் பயன்படுத்தப்படும் ஒரு முக்கியமான பாதுகாப்பு மெக்கனிசம் ஆகும். இது ரயில் இயக்கங்கள் ஒன்றுக்கொன்று முரண்பாடு இல்லாமல் தொடர்வதை உறுதிசெய்து, விபத்துகளைத் தடுக்கிறது.

பாயிண்ட், டிராக் ஆக்யுபென்ஸி சென்சிங் டிவைசஸ் மற்றும் சிக்னல். இந்த மூன்றும் தான் இன்டர்லாக் சிஸ்டத்தை உள்ளடக்கிய முக்கிய கூறுகள். இண்டர்லாக்கிங் சிஸ்டம், இந்த மூன்று கூறுகளின் செயல்பாடுகளை ஒருங்கிணைத்து ரயில் இயக்கங்களைக் கட்டுப்படுத்துகிறது.

இந்த மூன்று முக்கிய கூறுகள் ஒவ்வொன்றின் செயல்பாடு என்ன?

*முன்னால் செல்லும் பாதையின் நிலையைக் குறிக்க, பாதைகளில் சிக்னல்கள் (பச்சை, சிவப்பு மற்றும் மஞ்சள் நிற விளக்குகள்) நிறுவப்பட்டுள்ளன.

* ட்ராக் சர்க்யூட்கள், ரயில்களின் இருப்பைக் கண்டறியும் எலெக்ட்ரிகல் சர்கியூட்ஸ், இது ட்ராக்-ஆக்யூபென்சி சென்சிங் டிவைஸ் என்றும் அழைக்கப்படுகிறது.

*பாயிண்ட்ஸ், ரயில்கள் அதன் தடங்களை மாற்ற அனுமதிக்கின்றன.

பாயிண்ட்ஸ் எவ்வாறு செயல்படுகின்றன?

பாயிண்ட்ஸ்( also called switch rails), நேராக அல்லது திசைதிருப்பும் பாதையை நோக்கி ரயிலின் சக்கரங்களை வழிநடத்தும் நகரக்கூடிய தண்டவாளங்கள் (movable rails) ஆகும். அவை பொதுவாக வெவ்வேறு திசைகளுக்குச் செல்லும் இரண்டு தடங்கள் வேறுபடும் இடத்தில் வைக்கப்படுகின்றன.

ஒரு ரயிலின் திசை தீர்மானிக்கப்பட்டவுடன், பாயிண்ட் ஒரு குறிப்பிட்ட நிலையில் பூட்டப்படும். அதாவது, ஒரு திசையை அமைத்தவுடன், ரயில் கடந்து செல்லும் வரை பாயிண்ட் அசைய முடியாது.

இந்த சிஸ்டமின், டிஜிட்டல் இண்டர்ஃபேஸ் ஒரு கணினித் திரையில் (அல்லது பல திரைகள்) ஸ்டேஷன் லேஅவுட்டின் முழுக் காட்சியையும், ரயில்களின் நேரடி (நிகழ்நேர) இயக்கம், சிக்னல்கள் மற்றும் பாயிண்டின் நிலை ஆகியவற்றைக் காட்டுகிறது.

எல்லா இடங்களிலும் எல்லா ரயில்களையும் இயக்கும் கட்டமைப்பு இதுதான். இந்த கம்ப்யூட்டர் இண்டர்ஃபேஸ், டேட்டா லாகர் என்று அழைக்கப்படுகிறது.

ஒரு பாதை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதா என்பதை சிஸ்டம் எவ்வாறு உணருகிறது?

பல்வேறு வகையான டிராக்-ஆக்யூபென்சி சென்சிங் சாதனங்கள் உள்ளன. பொதுவாக, தண்டவாளங்களில் சக்கரங்கள் செல்வதைக் கண்டறியும் சென்சார்கள் தண்டவாளங்களில் நிறுவப்பட்டுள்ளன.

இவை axle counters என்றும் அழைக்கப்படுகின்றன. முழு ரயிலும் கடந்து சென்றதா என்பதைத் தீர்மானிக்க, அவற்றின் மீது எத்தனை செட் சக்கரங்கள் கடந்து சென்றன என்பதை அவை கணக்கிடும்.

இந்த முழு அமைப்பும் எவ்வாறு கட்டமைக்கப்பட்டுள்ளது?

பாதுகாப்பான ரயில் இயக்கம் என்ன என்பதற்கான ‘சவுண்ட் லாஜிக்’ இன்டர்லாக் அமைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது, அது நிலையத்திலிருந்து ரிமோட் மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது.

முந்தைய நாட்களில், தொழில்நுட்பம் மிகவும் அடிப்படையாக இருந்தபோது, ​​​​இந்த வேலை, மனிதனால் செய்யப்பட்டது, இதில் ஒரு பாயிண்ட்ஸ் மேன் உள்ளே வரும் ரயிலின் திசையை மாற்றவும், அதைப் பூட்டவும் பாயிண்ட்ஸை கைகளால் இயக்குவார்.

தண்டவாளத்தில் ஏதேனும் தடை இருக்கிறதா என்று சோதித்த பிறகு ஒருவர் ரயிலுக்கான பச்சை சிக்னல் கொடியை கைகளால் அசைப்பார். ஓட்டுநர் கொடியைப் பார்த்துவிட்டுச் செல்வார்.

இன்று, இந்திய ரயில்வே நெட்வொர்க்கில் உள்ள 7,000 நிலையங்களில், சுமார் 100 சிறிய நிலையங்கள் மட்டுமே இந்த பாயிண்ட்ஸை கட்டுப்படுத்த மனித உதவியை கொண்டுள்ளன. மீதமுள்ளவை மின்னணு முறையில் செயல்படுகின்றன.

கோரமண்டல் எக்ஸ்பிரஸைப் பொறுத்தவரை, கணினியில் உள்ள லாஜிக் என்னவென்றால், அப் லைன் (கொரோமண்டல் இருந்த இடத்தில்) காலியாக இருந்தால், அந்த பாயிண்ட் , அப் லைனுக்குச் சென்று, கோரமண்டலுக்காக பூட்டப்பட்டால், ரயிலுக்கான சிக்னல் பச்சை நிறத்தில் இருக்க வேண்டும்.

இந்த அமைப்பு எவ்வளவு பாதுகாப்பானது?

மூன்று கூறுகளில் ஏதேனும் (சிக்னல், பாயிண்ட் மற்றும் டிராக் ஆக்யூபென்சி சென்சார்கள்) கணினியில் செலுத்தப்பட்ட ஒட்டுமொத்த ‘பாதுகாப்பு’ லாஜிக்குடன் ஒத்துப்போகவில்லை என்றால், வரவிருக்கும் ரயிலை நிறுத்த சிஸ்டம் வேலை செய்யும்.

இதன் பொருள், பாயிண்ட் பூட்டப்படாமல் இருந்தாலோ அல்லது விரும்பிய திசையில் அமைக்கப்படாவிட்டாலோ அல்லது டிராக் சரியில்லை என்பதை சென்சிங் டிவைஸ் கண்டறிந்தாலோ, சிக்னல் தானாகவே சிவப்பு நிறமாக மாறும். இது எதிரே வரும் ரயிலுக்கு ஏதோ தவறு இருப்பதாகவும் அது நிறுத்தப்பட வேண்டும் என்பதை தெரிவிக்கும்.

இது "ஃபெயில் சேஃப்" சிஸ்டம் என்று அழைக்கப்படுகிறது.

இன்டர்லாக் சிக்னலிங் சிஸ்டத்தை இயக்குவது மற்றும் கண்காணிப்பது யார்?

இன்டர்லாக் சிஸ்டம் பொதுவாக ரயில்வேயில் உள்ள சிக்னலிங் மற்றும் தொலைத்தொடர்புத் துறையைச் சேர்ந்த பயிற்சி பெற்ற பணியாளர்களால் இயக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது, இவர்கள் பெரும்பாலும் 'சிக்னலர்ஸ்' அல்லது சிக்னல் ஆபரேட்டர்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.

சிக்னல்களை அமைப்பதற்கும், டிராக் சர்க்யூட்களைக் கண்காணிப்பதற்கும், ரயில்களின் பாதுகாப்பான இயக்கத்தை உறுதி செய்வதற்கும் அவர்களே பொறுப்பு.

இன்டர்லாக் சிக்னலிங் அமைப்புகள் உலகம் முழுவதும் பயன்படுத்தப்படுகின்றனவா?

ஆம், உலகெங்கிலும் உள்ள ரயில்வே நெட்வொர்க்குகளில் இன்டர்லாக் அமைப்புகள் பயன்படுத்தப்படுகின்றன. சிக்னலிங் நடைமுறைகள் மற்றும் தொழில்நுட்பங்களில் சில மாறுபாடுகள் இருக்கலாம், ஆனால் முரண்பட்ட ரயில் இயக்கங்களைத் தடுப்பதற்கான அடிப்படைக் கொள்கை அப்படியே உள்ளது.

இந்த அமைப்பு தோல்வி அடையுமா?

ரயில்வே வாரிய உறுப்பினர் (செயல்பாடுகள் மற்றும் வணிக மேம்பாடு) ஜெய வர்மா சின்ஹா ​​ஞாயிற்றுக்கிழமை கூறியது போல், எந்த இயந்திரமும் 99.9% நேரம் சீராக இயங்கினாலும் தோல்வியடையும்.

தோண்டும் வேலைகள் கேபிள்களை உடைக்கலாம், தேய்மானம் மற்றும் ஷார்ட் சர்க்யூட் போன்றவை தோல்விகளை ஏற்படுத்தும். பொதுவாக இவைகள் நடக்காது. ஆனால் எந்தவொரு காரணத்திற்காகவும் 1% தோல்விக்கான சாத்தியக்கூறுகள் எந்த வகையான அமைப்பிலும் எப்போதும் இருக்கும் என்று சின்ஹா கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Odisha
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment