கொரோனா பெருந்தொற்றில் பெண்களை விட ஆண்கள் அதிகம் பாதிக்கப்படக்கூடியவர்கள் என்றும், இளைஞர்களை விட வயதானவர்கள் மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்கள் என்றும் ஆய்வுத் தகவல்கள் நமக்கு முன்னர் சுட்டிக்காட்டின.
கொரோனா பெருந்தொற்று குறித்த கவலை, வயதுடைய பெண்கள் மற்றும் இளம் வயதினரை விட வயதான ஆண்களுக்கு குறைவாக உள்ளதாக தற்போது வெளிவந்த ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. இதன் காரணமாகத் தான்,வயது நிரம்பிய ஆண்கள் மத்தியில் அதிகமான கொரோனா பரவல் ஏற்பட்டிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
வயதானோர், அதுவும் குறிப்பாக 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று ஆபத்தனது என்று கருதப்படும் சூழலில், ஜார்ஜியா ஸ்டேட் யுனிவர்சிட்டியின் ஆராய்ச்சியாளர்களின் ஆய்வின் முடிவு வருத்தமளிக்கும் வகையில் தான் உள்ளது.
“பொதுவாக, வயது அதிகரிக்கும் போது கவலைகளை புரிந்து கொள்வதற்கான பக்குவத்தை ஒருவர் பெறுகின்றார் வயதான பெண்களை விட வயதான ஆண்கள் குறைவாக கவலைப்படுவதாக உளவியல் ரீதியான ஆய்வுகள் எடுத்துரைக்கின்றன. மேலும் தங்கள் அன்றாட வாழ்க்கையில் வயதானவர்கள் குறைவான எதிர்மறை உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதோடு, இயற்கை பேரழிவுகள், பயங்கரவாத தாக்குதல் போன்ற செய்திகளுக்கு வயதானவர்கள் குறைவான அதிர்ச்சிக்குப் பிறகான மன அழுத்தப் பாதிப்பு (PTSD) அறிகுறிகளை வெளிப்படுத்துகிறார்கள்” என்று ஜெரண்டாலஜி மற்றும் உளவியல் ஆராய்ச்சியாளர் சாரா பார்பர் முன்னர் தனது அறிக்கையில் தெரிவித்தார்.
உலகளாவிய பெருந்தொற்று காலத்தில் தனது கூற்று எவ்வாறு பிரதிபலிக்கிறது என்பதை கண்டறிய இவர் ஆன்லைன் மூலம் ஆய்வைத் தொடங்கினார். கொரோனா பரவல் மீதான மக்களின் பார்வை, நடத்தை மாற்றங்களை ஆகியவற்றை மதிப்பிடு செய்யும் ஆன்லைன் கேள்விப் பதில்களை இவரின் ஆராய்ச்சிக் குழு உருவாக்கியது.
ஆய்வின் முடிவு: மற்ற பங்கேற்பாளர்களுடன் ஒப்பிடுகையில், வயதான ஆண்கள் கொரோனா பெருந்தொற்றை பற்றி குறைவாகவே கவலைப்பட்டனர், மேலும், பொது முடக்க காலத்தில் தங்கள் நடத்தையில் குறைந்த எண்ணிக்கையிலான மாற்றங்களை மட்டுமே இவர்கள் ஏற்றுக்கொண்டனர். உதாரணமாக, முகக் கவசம் அணிவது, முகத்தைத் தொடுவதை நிறுத்தியது, (அ) கூடுதல் உணவை வாங்கிவைப்பது போன்ற நடைமுறை மாற்றங்கள் ஒப்பீட்டளவில் வயதான ஆண்களிடம் குறைவாகவே இருந்தது.
வயதான ஆண்களிடம் கவலையைத் தூண்டுவதற்கான ஒரு முயற்சியாக மட்டுமில்லாமல், அவர்கள் எதிர்கொள்ளும் ஆபத்தை துல்லியமாக புரிந்து கொள்ள உதவுவது சிறந்த பதிலாக அமையும் என்று ஆய்வாளர் தெரிவித்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Explained News by following us on Twitter and Facebook
Web Title:Older men were less worried about covid 19 than others
தமிழக தேர்தல் தேதி அறிவிப்பு : தி.மு.க மாநில மாநாடு, பொதுக்குழு கூட்டம் ஒத்திவைப்பு
தமிழகத்தில் உருவாகியது 3-வது அணி : அதிமுகவில் இருந்து வெளியேறிய சரத்குமார் ஐஜேகே-வுடன் கூட்டணி
வன்னியர்கள் இடஒதுக்கீடு மசோதா : அப்பாவிடம் கண்ணீர் மல்க தகவலை பகிர்ந்த அன்புமணி
இப்போ சித்ரா இல்லையே… கால்ஸ் படத்தை பார்த்து கண்ணீர் விட்ட சீரியல் பிரபலங்கள்
ஆளே அடையாளம் தெரியல… சினிமாவில் என்ட்ரி ஆன விஜய் டிவி நடிகை தோற்றத்தைப் பாருங்க!