scorecardresearch

இடம்பெயரும் வெளவால்கள், 2000 கிமீ பயணம் – காரணம் என்ன?

லண்டனில் இருந்து ரஷ்யாவின் வடமேற்கில் உள்ள பிஸ்கோவ் பகுதி வரை சுமார் 2000கிமீ பறந்து சென்ற வௌவால் குறித்து விஞ்ஞானிகள ஆராய்ந்து வருகின்றனர்.

இடம்பெயரும் வெளவால்கள், 2000 கிமீ பயணம் – காரணம் என்ன?

விஞ்ஞானிகளால் “ஒலிம்பியன் பேட்” என்று அழைக்கப்படும் வௌவால், லண்டனில் இருந்து வடமேற்கு ரஷ்யாவில் உள்ள பிஸ்கோவ் பகுதிக்கு 2,000 கிமீ தூரத்திற்கு பறந்து சாதனை படைத்துள்ளது. பருவநிலை மாற்றத்தால் உயிரினங்களை எவ்வாறு பாதிக்கிறது என்பதை இந்த நிகழ்வு காட்டுகிறது.

ரஷ்யாவின் பிஸ்கோவ் பகுதியில் அமைந்துள்ள மோல்ஜினோ என்ற சிறிய கிராமத்தில் Nathusius’ pipistrelle வகையை சேர்ந்த பெண் வௌவால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியை சேர்ந்த ஸ்வெட்லானா லாபினா என்பவர் அதன் சிறகில் “London Zoo”, அதாவது லண்டன் விலங்கியல் பூங்கா என எழுதப்பட்டிருந்ததை பார்த்துள்ளார்.

2016 ஆம் ஆண்டில், லண்டனில் உள்ள ஹீத்ரோவுக்கு அருகில் வௌவால் ஒலியை பேட் ரெக்கார்டர் பிரையன் பிரிக்ஸ் கண்டுபிடித்தார். அப்போது அந்த வௌவால் ஒரு மனித கட்டைவிரலின் அளவு இருந்தது. சுமார் 8 கிராம் அல்லது எட்டு பேப்பர் கிளிப்களின் எடை இருந்தது. எனினும், அந்த வௌவால் ரஷ்யாவிற்கு வந்தபோது அது பூனைக்கு இரையாகியது. பூனையால் தாக்கப்பட்டு காயமடைந்து தரையில் விழுந்தபிறகு ரஷ்ய வௌவால் மறுவாழ்வுக் குழுவால் மீட்கப்பட்டது. ஆனால் பின்னர் இறந்தது.

நீண்ட தூரம் பயணம் செய்த மற்ற வௌவால்கள்
.
2019ஆம் ஆண்டில், இதே இனத்தை சேர்ந்த வௌவால் ஒன்று லாட்வியாவிலிருந்து (Latvia) ஸ்பெயினுக்கு சுமார் 2,224 கிலோமீட்டர் தூரம் பறந்து சென்றது.

நவம்பர் 2020ஆம் ஆண்டு Nature இதழில் “டூத் பிரஷைவிட குறைவான எடை கொண்ட வௌவாலின் சாதனை விமானம்” என்ற தலைப்பில் கட்டுரை வெளியானது. அதில் Nathusius’ pipistrelle இனத்தைச் சேர்ந்த வெளவால்கள் பொதுவாக 10 கிராமுக்கும் குறைவான எடையைக் கொண்டிருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. கோடைகால இனப்பெருக்கம் செய்வதற்காக வடகிழக்கு ஐரோப்பாவிலிருந்து கண்டத்தின் வெப்பமான பகுதிகளுக்கு இடம்பெயர்கிறது. அங்கு கட்டிடங்களில் மரங்களில் உறங்குகிறது.

தொலைதூர பயணத்திற்கான தற்போதைய சாதனையை வைத்திருக்கும் வௌவால் மிகவும் சிறியது எனவும் அதன் இறக்கைகள் மடிந்தால் தீப்பெட்டியில் பொருத்த முடியும் என கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும் 2,224 கிமீ தூரம் ஒரு மதிப்பீடாக இருக்கலாம், ஏனெனில் இது லாட்வியாவிற்கும் ஸ்பெயினுக்கும் இடையிலான மிகக் குறைந்த தூரத்திற்கு மதிப்பிடப்பட்டுள்ளது.

பயணம் ஏன் முக்கியமானது?

பிரிட்டனில் இருந்து ஐரோப்பா முழுவதும் வௌவாலால் மேற்கொள்ளப்பட்ட மிக நீண்ட பயணம் என்பதால் இந்த பயணம் குறிப்பிடத்தக்கதாகும். காலநிலை விஞ்ஞானிகளுக்கு, வௌவால் இடம்பெயர்வு மற்றும் காலநிலை மாற்றத்துடனான அதன் தொடர்பைப் பற்றி ஆய்வு செய்வதற்கு இது ஒரு வாய்ப்பாகும்.

UK பேட் கன்சர்வேஷன் டிரஸ்ட் Nathusius’ pipistrelle இனத்தின் விரிவாக்கம் காலநிலை மாற்றத்துடன் தொடர்புடையது மற்றும் எதிர்காலத்தில் காலநிலை மாற்றங்கள் இந்த இனத்தை மேலும் பாதிக்கும் என்று கூறுகிறது. மேலும் தகவல்களுடன் விஞ்ஞானிகள் இந்த விளைவுகளை முழுமையாக புரிந்துகொள்ள சிறந்த முறையில் ஆராய்ந்து வருகிறார்கள்.

இந்த திட்டத்தின் குறிக்கோள்களில் ஒன்று, இந்த வகை வெளவால்களின் இடம்பெயர்வு தோற்றத்தை தீர்மானிப்பதே ஆகும், ஏனெனில் அவை காலநிலை மாற்றத்திற்கான அதன் தொடர்புகளைப் புரிந்துகொள்ள உதவக்கூடும். வெப்பமடையும் கிரகம் காரணமாக பறவைகள் ஆரம்பத்தில் இடம்பெயர்ந்ததற்கான சில சான்றுகள் ஏற்கனவே உள்ளன.

பேட் கன்சர்வேஷன் டிரஸ்ட் 2014 ல் National Nathusius’ pipistrelle என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது. கிரேட் பிரிட்டனில் Nathusius’ pipistrelle இனத்தின் சுற்றுச்சூழல், தற்போதைய நிலை மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் பற்றிய புரிதலை மேம்படுத்த இந்த திட்டம் உருவாக்கப்பட்டது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Explained news download Indian Express Tamil App.

Web Title: Olympian bats 2000 km flight has intrigued scientists