ஒமிக்ரான் தொற்று அச்சுறுத்தல்கள் மத்தியில் தடைகளை நீக்கிய தென் ஆப்பிரிக்கா… காரணம் என்ன?

வெள்ளிக்கிழமை அன்று 18,847 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. சமீபத்திய நாட்களில் 20 ஆயிரத்திற்கும் குறைவாக பதிவான வழக்கு எண்ணிக்கை இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

covid 19, omicron, south africa,

ஒமிக்ரான் தொற்று அதன் உச்சத்தை தாண்டிவிட்டது என்று தென்னாப்பிரிக்காவில் கூறப்பட்டு வருகின்ற நிலையில் பெரிய அளவில் தளர்வுகளை அந்நாடு அறிவித்துள்ளது. தொற்றுநோயால் உறுதிப்படுத்தப்பட்ட நபர்களும் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்படுவதையும் நீக்கி உத்தரவு பிறப்பித்துள்ளது தென்னாப்பிரிக்கா.

வியாழக்கிழமை அன்று புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகளை அறிமுகம் செய்தது தென்னாப்பிரிக்கா. அரசாங்கம் தடுப்பூசி போடப்பட்ட மற்றும் தடுப்பூசி போடப்படாத தொடர்புகளுக்கு தனிமைப்படுத்தலுக்கான தேவை நீக்கப்படுவதாகக் கூறியது. அறிகுறிகளைக் காட்டினால் தவிர, தொடர்புகள் கண்டறியும் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டிய அவசியமில்லை. கூட்ட அமைப்புகள் மற்றும் கிளஸ்டர் வெடிப்பு சூழ்நிலைகளைத் தவிர, நாடு தொடர்புத் தடமறிதலையும் நிறுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது.

ஆனால் வெள்ளிக்கிழமை முதல் தங்கள் குடிமக்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி டோஸ்களை வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஒமிக்ரான் தொற்று காரணமாக தென்னாப்பிரிக்க நாடுகளில் உள்ள பயணிகளின் வருகைக்கு அறிவிக்கப்பட்ட தடையை நீக்கி அறிவித்துள்ளது அமெரிக்கா.

இதற்கு முன், தென்னாப்பிரிக்காவின் தேசிய தொற்று நோய் நிறுவனத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள், கௌடங்கில் தொற்றுநோயின் அச்சுறுத்தல் விகிதத்தை தாண்டிவிட்டோம் என்று கூறியதாக சி.என்.என். அறிக்கை வெளியிட்டுள்ளது. கௌடங்கில் தான் முதன்முறையாக ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டது. அனைத்து மாகாணங்களிலும் வழக்குகள் குறைந்துவிட்டதாகவும் அறிவித்துள்ளது அந்நாட்டு அரசு. வெள்ளிக்கிழமை அன்று 18,847 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. சமீபத்திய நாட்களில் 20 ஆயிரத்திற்கும் குறைவாக பதிவான வழக்கு எண்ணிக்கை இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Explained news here. You can also read all the Explained news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Omicron tracker south africa eases restrictions

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com