Ravish Tiwari
கொரோனா வைரஸ் பரவல் உச்சத்தில் இருக்கிறது. இந்திய பொருளாதாரமோ மேலும் வீழ்ச்சியை சந்திக்கிறது. இந்நிலையில் அயோத்தி ராமர் கோவிலில் நடைபெற இருக்கும் பூமி பூஜை நிகழ்வும், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அங்கீகாரம் ரத்து செய்யப்பட்ட முதலாம் ஆண்டு நிறைவுற்றதும் இந்த வாரம் பேசும் பொருளாக இருக்கப் போகிறது. இவை இரண்டும் ஒரே நாளில் நடைபெற உள்ளது தான் ஹைலைட்.
ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்த்து ரத்து செய்யப்படுவது என்பது பாஜகவின் கொள்கைகளில் ஒன்றாகவே இருந்தது. இன்று நேற்றல்ல, 1950களில் இருந்தே இது குறித்து பாஜக பேசி வருகிறது. ஆனால் ராமர் கோவில் விவகாரம் என்பது 1980களில் தான் பேசும் பொருளாய் ஆனது. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அங்கீகாரத்தை வழங்கிய இந்திய அரசியல் சாசன பிரிவு 370-ஐ ரத்து செய்தது தொடர்பாக எழ இருக்கும் விமர்சனங்களை தவிர்க்கவே ராமர் கோவில் கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க
முக்கிய அரசியல் தலைவர்கள், காஷ்மீர் பள்ளத்தாக்கின் முக்கிய குரல்களாக இருக்கும் ஒமர் அப்துல்லா, மெகபூபா முஃப்தி, மற்றும் அவருடைய மகள் இல்திஜா ஆகியோருடன் இந்த விவகாரத்தில் இணைந்து குரல் கொடுப்பதை தவிர்த்துள்ளனர். முக்கியமாக 370 பிரிவை நீர்த்து போக செய்து ஒரு வருடமானதை நினைவுகூறும் வகையில் பேசுவதை அவர்கள் தவிர்த்து வருகின்றனர்.
அயோத்தியில் ஏற்கனவே திட்டமிடப்பட்ட பணிகள் தொய்வில்லாமல் நடைபெறுவதை காட்டுவதற்காகவும், தற்போதைக்கு காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருக்கும் சூழலை மேலும் மோசமாக்காமல் இருப்பதையும் இந்த நடவடிக்கைகள் தெளிவு செய்கிறது. இவ்விரண்டு நிகழ்வுகளும் நீதிமன்றங்களில் காரசாரமான விவாதங்களை ஏற்படுத்தியதே தவிர அதை தாண்டி வேறெங்கும் செல்லவில்லை.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
ஆனால் மறுபக்கம், கோவில் வேலைகள் மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. மத்தியப்பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் கமல் நாத், கோவில் கட்டும் நிகழ்வை வரவேற்று பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். சட்டீஸ்கர் மாநில முதல்வர், ராமருடன் தொடர்புடைய அம்மாநிலத்தில் இருக்கும் அனைத்து புனித இடங்களையும் பட்டியலிட்டு அன்று சிறப்பு பணிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளார். 5ம் தேதி அன்று பிரதமர் மோடி அங்கு பங்கேற்கும் நிகழ்வுகளை தேசிய ஊடகங்கள் நேரலையில் ஒளிபரப்பும் என்பது மிக முக்கியமான ஒன்றாகும்.
1951ம் ஆண்டு சோமநாதர் ஆலயம் மீண்டும் கட்டபட்ட போது, பிரதமர் ஜவஹர்லால் நேரு நேரடியாகவே, அந்த கோவில் பணிகளில் ஈடுபட்டிருந்த அன்றைய குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத்தை விமர்சனம் செய்தார். ஆனால் வருகின்ற 5ம் தேதி, நேருவின் இந்திய அரசியலில் உருவாக்கப்பட்ட இந்த தயக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க உள்ளார் மோடி. உச்ச நீதிமன்றம் கோவில்கட்ட அனுமதி வழங்க, ஆளும் கட்சி, இந்த நிகழ்வை நினைவில் கொள்ளும் வகையில் தபால்த்தலை வெளியிட திட்டமிட்டுள்ளது.
ராமர் கோவில் பற்றிய எந்தவொரு தெளிவற்ற தன்மையும் தங்களுக்கு எதிராக, இது போன்ற இக்கட்டான சூழலில், மாற்றப்படும் என்பதை நன்கு உணர்ந்திருப்பவர்கள் கமல் நாத் மற்றும் பூபேஷ் பாகெல். அதனால் தான் பாஜக மட்டுமே இந்த கோவில் தொடர்பாக முழுமையான உரிமை எடுத்துக் கொள்ள இவர்கள் அனுமதி அளிக்கவில்லை. இதற்கு முன்பு இது போன்ற நிகழ்வுகளை வைத்து பாஜக எப்படியெல்லாம் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டது என்பதை அவர்கள் நன்கு அறிந்திருந்தனர்.
பாரதத்தின் மீது படேல், முன்ஷி, மற்றும் நேருவிற்கு மாறுபட்ட கருத்துகள் இருந்தது. நேரு பாரதம் என்ற எண்ணத்திற்கு எதிரானவர் அல்ல. ஆனால் ஐரோப்பிய சிந்தனைகளால் வேரூன்றியது. மற்றொரு பக்கம் மண் மற்றும் பாரம்பரியம் தொடர்பானது. ஆர்.எஸ்.எஸ். இணை பொதுச் செயலாளர் மன்மோகன் வைத்யா இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழுக்கு 2018ம் ஆண்டு எழுதிய கட்டுரையில், சோம்நாத் ஆலயத்தை கட்டி எழுப்பியதில் நேருவின் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த சர்தார் வல்லபாய் படேல் மற்றும் கே.எம்.முன்ஷியின் பங்கு குறித்து புகழ்ந்து எழுதினார். இந்து மறுமலர்ச்சியை நேரு மறுத்த போதிலும் அதனை மீறிய ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத் குறித்தும் எழுதியிருந்தார்.
மோடியின் மிகப் பெரிய சவால்களாக தற்போது இருப்பது லடாக் எல்லையில் சீன ஊடுருவல்கள் தான். நிலைமை மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்ப சாதகங்கள் உருவாகியுள்ளது. ஆனாலும் கார்ப்ஸ் காமெண்டர் அளவு பேச்சுவார்த்தை இந்த வாரம் ஞாயிற்றுக் கிழமை நடைபெறும் வரை காத்திருக்க வேண்டும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.