One Nation One Ration Card ONORC system : செவ்வாயன்று, உச்சநீதிமன்றம் அனைத்து மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் ஒரு தேசம், ஒரு ரேஷன் கார்டு (ONORC) திட்டத்தை ஜூலை 31 க்குள் அமல்படுத்துமாறு உத்தரவிட்டது.
ஒரு நாடு, ஒரு ரேஷன் கார்டு திட்டம் என்றால் என்ன?
தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம், 2013 இன் கீழ் நாட்டில் உள்ள எந்தவொரு நியாய விலைக் கடையிலிருந்தும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் மானிய விலையில் ரேஷன் பொருட்களை வாங்குவதை உறுதி செய்வது ONORC திட்டத்தின் நோக்கமாக உள்ளது.
உதாரணமாக, உத்தரபிரதேசத்தின் பஸ்தி மாவட்டத்திலிருந்து வேலைக்காக ஒரு புலம்பெயர்ந்த தொழிலாளி மும்பையில் பி.டி.எஸ் சலுகைகளை அணுக முடியும். தனக்கு தேவையான உணவுப் பொருட்களை தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இந்த புலம் பெயர் தொழிலாளி பெற முடியும் என்றாலும் கூட, சொந்த ஊரில் உள்ள அவரது குடும்ப உறுப்பினர்களும் தங்களுக்கு தேவையான ரேசன் பொருட்களை அங்குள்ள ரேசன் கடையில் இருந்து பெற இயலும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
இந்த சீர்திருத்தத்தை தொன்மையான பொது விநியோக அமைப்பில் (பி.டி.எஸ்) ஊக்குவிக்க, அரசு மாநிலங்களுக்கு சலுகைகளை வழங்கியுள்ளது. கடந்த ஆண்டு கோவிட் -19 கொரோனா தொற்றின் போது மாநிலங்கள் கூடுதல் கடன் வாங்குவதற்கான முன்நிபந்தனையாக ONORC ஐ அமல்படுத்த கோரியது. இந்த திட்டத்தை அமல்படுத்திய 17 மாவட்டங்களுக்கு கூடுதலாக ரூ. 37,600 கோடி கடன் வாங்க அனுமதிக்கப்பட்டது.
ONORC எவ்வாறு செயல்படுகிறது?
ONORC என்பது தொழில்நுட்பத்தின் அடிப்படையில் பயனாளிகளின் ரேஷன் கார்டு, ஆதார் எண் மற்றும் மின்னணு புள்ளிகள் விற்பனை (ePoS) ஆகியவற்றை உள்ளடக்கியது. நியாயமான விலைக் கடைகளில் ஈபோஸ் சாதனங்களில் பயோமெட்ரிக் அங்கீகாரம் மூலம் கணினி ஒரு பயனாளியை அடையாளம் காட்டுகிறது. இந்த திட்டம் ntegrated Management of Public Distribution System (IM-PDS) மற்றும் Annavitran (annavitran.nic.in) ஆகிய இரண்டு இணையதளங்களின் ஆதரவுடன் இயங்குகிறது
ஒருவர் ரேஷன் கடைக்கு செல்லும் போது பயோமெட்ரிக் மூலம் தன்னை அடையாளம் காட்டுகிறார். அன்னவிதரன் போர்ட்டலில் விவரங்களுடன் நிகழ்நேரத்துடன் பொருந்துகிறது. ரேஷன் கார்டு விவரங்கள் சரிபார்க்கப்பட்டதும், ரேஷன் கடை ஊழியர் பயனாளிகளுக்கு தேவையான ரேஷன் பொருட்களை வழங்குவார். அன்னவிதரன் போர்டல் உள்-மாநில பரிவர்த்தனைகளின் பதிவைப் பராமரிக்கிறது. இது மாவட்டங்களுக்கு உள் மற்றும் மாவட்டங்களுக்கு வெளியே நடைபெறும் ரேஷன் பொருட்கள் விநியோகத்தை பதிவு செய்கிறது. ஐஎம்-பிடிஎஸ் போர்டல் மாநிலங்களுக்கு இடையிலான பரிவர்த்தனைகளை பதிவு செய்கிறது.
எவ்வளவு பேர் இந்த திட்டத்தால் நன்மை அடைவார்கள்?
தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் 2013ன் படி 81 கோடி மக்கள் உணவு பொருட்களை மானிய விலையில் பெற உரிமை உண்டு. ஒரு கிலோ அரிசி ரூ. 3க்கும், ஒரு கிலோ கோதுமை ரூ. 2-க்கும் இதர தானியங்கள் 1 கிலோ ரூ. 1க்கும் ரேசன் கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது. ஜூன் 28, 2021-ன் படி, 5.46 லட்சம் ரேஷன் கடைகளும், 23.63 ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களும் நம் நாட்டில் உள்ளனர். ஒவ்வொரு என்.எஃப்.எஸ்.ஏ ரேஷன் கார்டு வைத்திருப்பவரும் தனது ரேஷன் கார்டு பதிவு செய்யப்பட்ட இடத்திற்கு அருகிலுள்ள நியாய விலைக் கடையின் கீழ் ஒதுக்கப்படுவார்.
இந்த திட்டத்தை துவங்குவதற்கு எது காரணமாக அமைந்தது?
முன்னதாக, ஒரு பயனாளி தனக்கு ஒதுக்கப்பட்ட ரேஷன் கடைக்கு வெளியே தனக்கு தேவையான ரேஷன் பொருட்களை வாங்க இயலாது. எந்த ஒரு நியாய விலைக்கடையிலும் பொருட்களை வாங்க இந்த திட்டம் மக்களுக்கு உதவும் என்று மத்திய அரசு நினைத்தது. ரேஷன் கார்டுகளின் 100% ஆதார் இணைப்பு முடிந்தவுடன் இது சாத்தியம் என்றும் நம்பியது, மேலும் மேலும் அனைத்து நியாயமான விலைக் கடைகளும் ஈபோஸ் சாதனங்களை கொண்டுள்ளது. (தற்போது நாடு முழுவதும் 4.74 லட்சம் சாதனங்கள் ரேஷன் கடைகளில் நிறுவப்பட்டுள்ளது)
2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இருப்பினும், ரேஷன் கார்டு பெயர்வுத்திறன் (portability) குறித்த பணிகளுக்காக 2018 ஏப்ரல் மாதத்தில், IM-PDS அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. திறமையற்ற தன்மை மற்றும் கசிவுகளால் வரலாற்று ரீதியாக சிதைக்கப்பட்ட பி.டி.எஸ்ஸை சீர்திருத்த வேண்டும் என்ற எண்ணம் இருந்தது.
மாநிலங்களுக்கு இடையே செயல்படும் திட்டமாகவே அறிமுகம் செய்யப்பட்டது. இருப்பினும் கடந்த ஆண்டு கொரோனா தொற்று காலத்தில் ஆயிரக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களின் கிராமங்களுக்கு திரும்பி சென்ற நிகழ்வு இந்த பட்டியலை விரைவுபடுத்த வேண்டிய தேவையை ஏற்படுத்தியது. கொரோனா சிறப்பு நிவாரண நிதி அறிவிப்பின் போது அனைத்து மாநிலங்களிலும் இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வரும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது.
இதுவரை இந்த திட்டத்தில் ஏற்பட்ட முன்னேற்றம் என்ன?
அசாம், சத்தீஸ்கர், டெல்லி மற்றும் மேற்கு வங்கம் நீங்கலாக ஏனைய 32 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் இந்த திட்டத்தின் கீழ் இணைந்துள்ளன. இந்த பகுதிகளில் மொத்தம் 69 கோடி தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் பயனாளிகல் உள்ளனர்.
ஒவ்வொரு மாதமும் சராசரியாக 1.35 கோடி பெயர்வுத்திறன் பரிவர்த்தனைகள் ONORC இன் கீழ் பதிவு செய்யப்படுகின்றன என்று மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம் கூறியுள்ளது.
ஆகஸ்ட் 2019 இல் ONORC தொடங்கப்பட்டதிலிருந்து மொத்தம் 27.83 கோடிக்கும் அதிகமான பெயர்வுத்திறன் பரிவர்த்தனைகள் (உள்-மாநில பரிவர்த்தனைகள் உட்பட) இந்த 32 மாநிலங்களில் நடைபெற்றுள்ளது. அவற்றில் கிட்டத்தட்ட 19.8 கோடி பெயர்வுத்திறன் பரிவர்த்தனைகள் கோவிட் தொற்று காலத்தில் பதிவாகியுள்ளது என ஜூன் 3ம் தேதி அன்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்த நான்கு மாவட்டங்களில் மட்டும் ஏன் இந்த திட்டம் அறிமுகம் செய்யப்படவில்லை?
இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. உதாரணமாக, டெல்லி நியாயமான விலைக் கடைகளில் ஈபோஸ் பயன்பாட்டை இன்னும் தொடங்கவில்லை, இது ONORC ஐ செயல்படுத்துவதற்கு ஒரு முன்நிபந்தனையாகும். மேற்கு வங்காளத்தைப் பொறுத்தவரையில், என்.எஃப்.எஸ்.ஏ அல்லாத ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் – மாநில அரசு வழங்கிய ரேஷன் கார்டுகளும் ஒரு நாடு ஒரு ரேசன் அட்டை திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil