இந்தியாவின் கிழக்கு கடற்கரையில் உள்ள கே.ஜி.டி.டபிள்யூ.என் -98 / 2 தொகுதி எண்ணெய் வயல்களில் இருந்து இயற்கை எரிவாயுவை எடுப்பதற்கான ஏலத்தில் கலந்து கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு, எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம் (ஓ.என்.ஜி.சி) அழைப்பு விடுத்துள்ளது. ஓ.என்.ஜி.சி ஒரு நாளைக்கு சுமார் 2 மில்லியன் மெட்ரிக் ஸ்டாண்டர்ட் கியூபிக் மீட்டர் (எம்.எம்.எஸ்.சி.எம்.டி) இயற்கை எரிவாயுவை ஜூன் மாத இறுதி வரை இந்த எண்ணெய் வயல்களில் இருந்து எடுக்க முடிவு செய்துள்ளது. இந்த முடிவின் முக்கியத்துவத்தையும் தாக்கத்தையும் நாங்கள் ஆராய்வோம் என ஒ.என்.ஜி.சி தெரிவித்துள்ளது.
இந்த விற்பனையின் அவசியம் என்ன?
ஓ.என்.ஜி.சி யால் கே.ஜி.-டி.டபிள்யூ.என் 98/2 தொகுதியிலிருந்து உற்பத்தியை அதிகரிப்பது, உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும் அரசாங்கத்தின் திட்டத்தின் ஒரு முக்கிய அங்கமாகும், இதனால் 2024 ஆம் ஆண்டுக்குள் 15 எம்.எம்.எஸ்.சி.எம்.டி. அளவு உச்ச உற்பத்தியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது ஓ.என்.ஜி.சின் தற்போதைய உற்பத்தி அளவான 70 எம்.எம்.எஸ்.சி.எம்.டி. அளவை 20% அளவிற்கு உயர்த்த உதவும். இந்தியா தற்போது அதன் இயற்கை எரிவாயு தேவைகளில் பாதி அளவான 175 எம்.எம்.எஸ்.சி.எம்.டி ஐ இறக்குமதி செய்கிறது.
உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் இறக்குமதி சார்புநிலையை குறைக்கும் இந்தியாவின் திட்டங்களின் முக்கிய பகுதியாக, கிருஷ்ணா கோதாவரி படுகையில் இருந்து செய்யப்படும் இயற்கை எரிவாயு உற்பத்தி உள்ளது.
கிருஷ்ணா கோதாவரி படுகையில், ரிலையன்ஸ் மற்றும் பிரிட்டிஷ் பெட்ரோலியம் நிறுவனத்தால் இயக்கப்படும் ஆர் கிளஸ்டர், சேட்டிலைட் கிளஸ்டர் மற்றும் எம்.ஜே ஃபீல்ட்ஸ் மூலம், 2023ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் மொத்த உற்பத்தியில் 30 எம்.எம்.எஸ்.சி.எம்.டி இயற்கை எரிவாயு உற்பத்தி சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விற்பனைக்கான சலுகைகள் என்ன?
ஆந்திராவின் ஒடலரேவ் கடலோர முனையத்தில் மூன்று முதல் ஐந்து ஆண்டு காலத்திற்கு இயற்கை எரிவாயுவை விற்பனை செய்வதற்கான வாய்ப்பைப் பெற ஓ.என்.ஜி.சி எண்ணெய் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. ஏலத்தில் வாங்குவதற்கு சாத்தியமுள்ள நிறுவனங்கள் ப்ரெண்ட் கச்சாவிற்கு தங்கள் விலையை நிர்ணயம் செய்ய வேண்டும்.
எவ்வாறாயினும், வாங்குபவர்களால் செலுத்த வேண்டிய விலை, ஏப்ரல் மாதத்தில் தொடங்கி ஆறு மாத காலத்திற்கு, உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் இயற்கை எரிவாயுவின் விலைகளுக்கு ஏற்ப, ஒரு மில்லியன் மெட்ரிக் பிரிட்டிஷ் வெப்ப அலகுகள் (MMBTu)க்கு 3.62 டாலர் என அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்படும்.
மார்ச் மாதத்தில் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட இயற்கை எரிவாயுவை MMBTu க்கு 1.79 டாலர் ஆக அரசாங்கம் வைத்திருந்தது மற்றும் ஆழமான நீர் மற்றும் அதி-ஆழமான நீர் வயல்களில் இருந்து பெறப்படும் இயற்கை எரிவாயுவின் உச்சவரம்பு விலையை ஏப்ரல் - செப்டம்பர் காலத்திற்கு MMBTu க்கு 4.06 டாலரிலிருந்து 3.62 டாலராகக் குறைத்தது.
ஓ.என்.ஜி.சி உள்ளிட்ட அப்ஸ்ட்ரீம் பிளேயர்கள் உள்நாட்டு எரிவாயு விலையை கணக்கிடுவதற்கான சூத்திரத்தை திருத்துமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர், ஏனெனில் தற்போதைய விலைகள், ஓ.என்.ஜி.சியை அதன் எரிவாயு உற்பத்தியில் பெரும்பகுதியை நஷ்டத்தில் விற்க கட்டாயப்படுத்துகின்றன.
ஒன்ஜிசியின் வட்டாரங்கள் தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறுகையில், இயற்கை எரிவாயுக்கான நிறுவனத்தின் சராசரி உற்பத்தி செலவு MMBTu க்கு $ 3.5 - $ 4.0 வரை உள்ளதாக தெரிவிக்கிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.