அடிக்கடி தலைப்புச் செய்தியாகும் வெங்காய விலையை கட்டுப்படுத்த அரசு எடுக்கும் முயற்சி என்ன?

கடந்த ஆண்டு வரட்சியும், இந்த ஆண்டின் தாமதமான பருவமழையும் தான் தற்போதைய விலையேற்றத்திற்கு காரணம்.

By: Updated: September 22, 2019, 02:52:45 PM

Parthasarathi Biswas

Onion price hike why govt steps aren’t cooling it down  : இந்தியாவில் அடிக்கடி தற்போது பால் பொருட்கள் முதற்கொண்டு அத்தியாவசியப் பொருட்களின் விலை தான் அடிக்கடி செய்தித் தாள்களில் முக்கிய இடம் பிடிக்கிறது. தற்போது இந்த வரிசையில் சர்ச்சையை கிளப்பிக் கொண்டிருப்பது வெங்காயம் தான். வெங்காயத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது ஒரு செய்தியானது.

Onion price hike why govt steps aren’t cooling it down

பின்பு, அந்த விலையை கட்டுப்படுத்த அரசாங்கம் மேற்கொண்டு வரும் முயற்சிகள் மற்றொரு வகையில் செய்தியானது. மகாராஷ்ட்ரா மற்றும் ஹரியானா மாநிலங்களில் தேர்தல் நடைபெற இருக்கின்ற நிலையில், அவ்விரு மாநிலங்களின் கிராமப்புறங்கள் வெங்காய உற்பத்தியாளர்களையும், நகர்புறங்களில் பயன்பாட்டாளர்களும் அதிக அளவில் உள்ளனர் குறிப்பிடத்தக்கது.

To read this article in English

இந்த வருடம் மே மாதம் தொட்டே, மகாராஷ்ட்ரா மாநிலத்தில் வெங்காய உற்பத்தி அதிகம் நடைபெறும் இடங்களில் ஹோல்-சேல் மார்க்கெட்டில் வெங்காய விலை அதிகரித்த வண்ணமே இருக்கிறது. கடந்த வாரம், லசால்காவுன் பகுதியில் ஒரு குவிண்டால் வெங்காயத்தின் விலை ரூ. 1000க்கும் மேல் அதிகரித்தத்து. தற்போதைய நிலைப்படி ஒரு குவிண்டால் வெங்காயத்தின் விலை ரூ.4000க்கும் விற்பனையாகி வருகிறது. புனே மற்றும் மும்பை மார்க்கெட்களில் ஒரு கிலோ வெங்காயத்தின் விலை ரூ. 50-ஐ தாண்டியுள்ளது.

ப்ரைஸ் மானிட்டரிங் செல் வெளியிட்டுள்ள தகவல்களின் படி ஒரு கிலோ வெங்காயத்தின் விலை ரூ. 20 முதல் ரூ. 25 வரை, இந்தியா முழுவதும் உயர்ந்துள்ளது. டெல்லியில் ஒரு கிலோ வெங்காயத்தின் விலை ரூ.57க்கும், மும்பையில் ரூ. 56க்கும், புனேவில் ரூ.55க்கும் விற்பனையாகிறது.

அரசு என்ன செய்கிறது?

செப்டம்பர் 6ம் தேதி இந்திய அரசால் நடத்தப்படும் எம்.எம்.டி.சி, 2000 டன்கள் வரையில் வெங்காயத்தினை இறக்குமதி செய்வதற்கு பாகிஸ்தான், சீனா, ஆஃப்கானிஸ்தான் மற்றும் சில நாடுகளுடன் கையெழுத்திட்டது. கண்டனங்களைத் தொடர்ந்து பாகிஸ்தானின் பெயர் அதில் நீக்கம் செய்யப்பட்டது. இந்த விலை வாசி உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு தான் வருகிறது. மேலும் வெங்காய ஏற்றுமதியை சரி செய்யும் பொருட்டு, வெங்காய ஏற்றுமதி விலையையும் அதிகரித்துள்ளது. ஒரு டன்னுக்கு குறைந்தபட்ச ஏற்றுமதி விலையை 850 டாலர்களாக நிர்ணயம் செய்துள்ளது. பற்றாக்குறையை சரி செய்யும் பொருட்டு, ஸ்டாக்கில் இருக்கும் 57 ஆயிரம் டன் வெங்காயத்தில் 18,000 டன் வெங்காயம் பயன்பாட்டுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த விலை உயர்வின் காரணம் என்ன?

வெங்காயம் அதிக அளவில் பயன்பாட்டுக்கு எடுத்துக் கொள்ளப்படாத இந்த காலத்தில் தான் வெங்காயத்தின் விலை உயர்ந்துள்ளது. நவராத்திரி காலங்களில் மக்கள் அசைவ மற்றும் வெங்காயம் சேர்த்த உணவுகளை அதிகம் உண்பதில்லை. புனித மாதமான ஷ்ரவன் மாதம் ஜூலை – ஆகஸ்ட் காலங்களில் விழும். இந்த நாட்களிலும் வெங்காயம் சேர்க்கப்படுவதில்லை.

கடந்த ஆண்டு வரட்சியும், இந்த ஆண்டின் தாமதமான பருவமழையும் தான் தற்போதைய விலையேற்றத்திற்கு காரணம். மகராஷ்ட்ரா, கர்நாடகா, குஜராத், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், பிஹார், உத்திரப்பிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் தான் நாட்டுக்கு தேவையான வெங்காயம் 90% உற்பத்தி செய்யப்படுகிறது. நாசிக், புனே, அஹ்மத்நகர் மற்றும் ஔரங்கபாத் ஆகிய இடங்களில் விலையும் வெங்காயம் நாட்டின் மூன்றில் ஒரு பங்கு வெங்காயத் தேவைகளை பூர்த்தி செய்கிறது.

வருடத்திற்கு மும்முறை வெள்ளாமை செய்யப்படுகிறது வெங்காயம். கரிஃப் காலப் பயிரானது மே மற்றும் ஜூலைக்கு இடைப்பட்ட காலங்களில் பயிரிடப்பட்டு, அக்டோபர் மற்றும் டிசம்பர் காலங்களில் அறுவடை செய்யப்படுகிறது. அதே போன்று ஆகஸ்ட்-செப்டம்பர் லேட் கரிஃப் பருவ காலத்தில் விதைக்கப்பட்டு ஜனவரி மார்ச் மாதங்களில் அறுவடை செய்யப்படுகிறது. இந்த வெங்காயங்கள் அதிக அளவு ஈரப்பதம் கொண்டிருக்கும் என்பதால் அதனை சேமித்து வைக்க இயலாது. ராபி காலத்தில் அக்டோபர் – நவம்பர் காலங்களில் விதைக்கப்பட்டு, ஏப்ரல் மாதங்களில் அறுவடை செய்யப்படும்.

விவசாயிகள் அறுவடை செய்யப்பட்ட வெங்காயங்களை பொதுவாக ஈரப்பதம் மற்றும் தூசியில் இருந்து பாதுகாத்து வைப்பார்கள். கண்ட சாவல் என்ற முறையில் பாதுகாக்கப்படும் வெங்காயம் முளை விடுவதை தடுக்கும். சந்தையில் நிலவும் விலையைப் பொருத்து விவசாயிகள் தங்கள் விலைப்பொருளை விற்பனைக்கு வைப்பார்கள்.

விலை ஏற்றத்திற்கு இவை மட்டும் காரணமல்ல. மாறாக ராபி காலப்பயிர்களை அறுவடை செய்யும் மகாராஷ்ட்ர விளை நிலங்கள் குறைந்து கொண்டே வருகின்றது. அதே போன்று கரிஃப் பயிரை அறுவடை செய்யும் கால கட்டத்தில் கர்நாடகாவில் கனமழை கொட்டியதும் ஒரு காரணம். 2017-18 காலங்களில் மகாராஷ்ட்ராவில் 3.54 லட்சம் ஹெக்டர் பரப்பில் ராபி பருவத்தில் வெங்காயம் பயிரிடப்பட்டது. ஆனால் தற்போது அது 2.66 லட்சம் பரப்பாக குறைந்துள்ளது.

கர்நாடகாவில் இருந்து வந்து சேர வேண்டிய வெங்காயங்களின் எண்ணிக்கையும் குறையத்துவங்கியது. சில வாரங்களுக்கு முன்பு பெய்த கனமழையால் வெங்காய வரத்து குறைந்துள்ளது. கடந்த வருடம் 35,000 குவிண்டால் வெங்காயம் அந்த மாநிலத்தில் இருந்து பெறப்பட்டடது. தற்போது அது 25,000 ரூபாயாக குறைந்துள்ளது. அக்டோபர் முடியும் வரி வேறு எந்த வகையான வழியின் மூலமாகவும் வெங்காய வரத்து என்பது சாத்தியமில்லை என்று தெரிய வருகிறது.

மேலும் படிக்க : காடுகளில் இருந்து வெளியேற்றப்படும் காடர்கள்… கல்லாறு மக்களின் நிலை என்ன?

இறக்குமதிக்காக போடப்பட்ட ஒப்பந்தம் வாயிலாக நமக்கு நவம்பர் மாதம் முடியும் போது தான் வெங்காயம் கிடைக்கும். அதற்கு பின்பு தான் மகாராஷ்ட்ராவில் தற்போது விதைக்கப்பட்டிருக்கும் வெங்காயத்தின் அறுவடை நிகழும். எனவே அதுவரை வெங்காய விலை கடும் உயர்வில் தான் இருக்கும்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Explained News by following us on Twitter and Facebook

Web Title:Onion price hike why govt steps arent cooling it down

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X