Advertisment

வெங்காயம் உரிக்காமலேயே கண்ணீர் ஏன்? விலை உயர்வுக்கு காரணம் என்ன?

நாட்டின் உற்பத்தியில் 35 சதவீதத்தில் வெங்காயத்தை உற்பத்தி செய்யும் முன்னணி மாநிலமான மகாராஷ்டிரா, அதன் ரபி மற்றும் காரீஃப் உற்பத்தியில் பெரும் சரிவைக் கண்டது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
onion price increasing ram vilas paswan - வெங்காயம் உரிக்காமலேயே ஏன் கண்ணீர் வருகிறது? விலை உயர்வுக்கு உண்மையான காரணம் தான் என்ன?

onion price increasing ram vilas paswan - வெங்காயம் உரிக்காமலேயே ஏன் கண்ணீர் வருகிறது? விலை உயர்வுக்கு உண்மையான காரணம் தான் என்ன?

Parthasarathi Biswas

Advertisment

உயர்ந்து வரும் வெங்காய விலையைக் கட்டுப்படுத்த வெளிநாடுகளில் இருந்து ஒரு லட்சம் டன் வெங்காயத்தை இறக்குமதி செய்ய அரசு முடிவெடுத்து இருப்பதாக மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் கடந்த வாரம் அறிவித்திருந்தார். இந்த உத்தரவு, வெங்காய ஏற்றுமதியாளர் என்ற இந்தியாவின் பெயரை வெங்காய இறக்குமதியாளர் என்று மாற்றி இருக்கிறது.

வெங்காய விலை உயர்வுக்கு எது வழிவகுத்தது?

வெங்காயம் வளரும் முக்கிய மாநிலங்களான மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் மத்தியப் பிரதேசங்களில் புதிய பயிர் தாமதமாக வளருவதும், அறுவடை செய்யப்பட்ட பயிர் சேதமடைவதுமே இந்த ஆண்டு மே முதல் விலைகள் கடுமையாக உயர காரணமாகின்றன.

மகாராஷ்டிராவில் வெங்காயம் அதிகம் விலையும் முக்கிய மாவட்டங்களில் வெங்காயம் பயிரிடும் ஏக்கர் அளவு குறைந்து வருவதால், மொத்த சந்தைகளில் வருகை குறைந்தது. மகாராஷ்டிராவின் லாசல்கானில் மொத்த சந்தையில் விலையானது கடந்த ஜனவரி தொடக்கத்தில் இருந்து குவிண்டால் ஒன்றுக்கு ரூ .500-600 என்ற அளவில் இருந்தன. மே மாதத்திற்குப் பிறகு ரூபாய் ஆயிரத்தைத் தாண்டியது. நாசிக் மாவட்டத்தில் அமைந்துள்ள லாசல்கான் பகுதி, நாட்டின் மிகப்பெரிய வெங்காய சந்தையாகும். நாடு முழுவதுக்குமான பயிர் விலை இங்கு நிர்ணயிக்கப்படுகிறது. பெரும்பாலான நகரங்களில் வெங்காயத்தில் விலை கிலோ ஒன்றுக்கு 70-80 ரூபாயாக உயர்ந்து வருகிறது.

அப்பொழுது, ரபி அல்லது கோடைகால பயிர் குறைந்ததால் விநியோகம் குறைந்தது. நாசிக், அகமதுநகர் மற்றும் மகாராஷ்டிராவின் பிற பகுதிகளில் வெங்காயம் வளரும் பெல்ட்டில் உள்ள விவசாயிகள் ஏப்ரல் மாதத்திற்குப் வெங்காயத்தை அறுவடை செய்கிறார்கள். இந்த பயிர் அதன் குறைந்த ஈரப்பதத்தைக் கொண்டு சேமித்து வைப்பதற்கு ஏற்றது. விவசாயிகள் விவசாயத்தை Kanda Chawls-ல் (பிரத்யேகமாக அமைக்கப்பட்ட கிடங்குகள்) சேமித்து வைக்கின்றனர். அக்டோபருக்குப் பிறகு புதிய வெங்காய விளைச்சல்கள் வரும் வரை தொடர்ந்து இவற்றை சேமித்து வைக்க வேண்டும்.

ரபி மற்றும் இரண்டு அறுவடைகளான, காரீஃப் (அக்டோபருக்குப் பிறகு அறுவடை செய்யப்பட்டவை) மற்றும் late kharif (ஜனவரி-மார்ச் மாதங்களில் அறுவடை செய்யப்பட்டவை) ஆண்டு முழுவதும் சந்தையில் உலாவுகின்றன. 2018 ஆம் ஆண்டில் வறட்சியால் ரபி பயிர் பாதிக்கப்பட்ட நிலையில், காரீஃப் மற்றும் தாமதமான காரீப் பயிர்களின் விளைச்சலும் தாமதமானது, முதலில் பருவமழை தாமதமாகவும், பின்னர் அக்டோபரில் பலத்த மழையுடனும் பயிர் அறுவடைக்கு தயாராக இருந்தது. ஏப்ரல் பருவத்தின் தொடக்கத்தில், விவசாயிகள் 22 லட்சம் டன் வெங்காயத்தை சேமித்து வைத்திருந்தனர், அவற்றில் 5-6 சதவீதம் மட்டுமே உள்ளன. விவசாய அமைச்சகத்தின்ன் கூற்றுப்படி, காரிஃப் ஏக்கர் 2018-19ல் 2.97 லட்சம் ஹெக்டேரிலிருந்து இந்த ஆண்டு 2.58 லட்சம் ஹெக்டேராக குறைந்துள்ளது. மழைக்காலம் தாமதமாக இருப்பதால் வெங்காயம் மகாராஷ்டிராவில் வெங்காய விளைச்சல் பெருமளவில் குறைத்துள்ளது.

செப்டம்பர் முதல் இந்த மாநிலங்களைத் தாக்கிய கனமழையால் பெய்ததன் காரணமாக மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் குஜராத்தில் ஆயத்த பயிர்களுக்கு கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் சேதம் ஏற்பட்டது. நாட்டின் உற்பத்தியில் 35 சதவீதத்தில் வெங்காயத்தை உற்பத்தி செய்யும் முன்னணி மாநிலமான மகாராஷ்டிரா, அதன் ரபி மற்றும் காரீப் உற்பத்தியில் பெரும் சரிவைக் கண்டது.

விலைகளைக் கட்டுப்படுத்த அரசாங்கம் என்ன நடவடிக்கைகள் எடுத்துள்ளது?

ஜூன் மாதத்திலிருந்து, வெங்காயத்தின் விலைகள் குறித்து மத்திய அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது. நாட்டிலிருந்து வெங்காயத்தை ஏற்றுமதி செய்ய, ஏற்றுமதியாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 10% மானியத்தை ரத்து செய்ய ஜூன் மாதத்தில் முதலில் முடிவுக்கு வந்தது. இதைத் தொடர்ந்து மேலும் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. செப்டம்பர் 13 அன்று, குறைந்தபட்ச ஏற்றுமதி விலை ஒரு டன்னுக்கு 850 டாலராக உயர்த்தப்பட்டது. சில வாரங்களில் ஏற்றுமதிக்கு முழுமையான தடை விதித்ததுடன், வெங்காய வர்த்தகர்கள் எவ்வளவு இருப்பு வைத்திருக்க முடியும் என்பதற்கான வரம்புகளையும் விதித்தது (500 குவிண்டால் மொத்த வர்த்தகர்களுக்கும், சில்லறை விற்பனையாளர்களுக்கு 100 குவிண்டால்).

நவம்பர் 11ம் தேதி, பங்கு வரம்பு கட்டுப்பாடுகளை மீறியதற்காக பங்குகள் மற்றும் வர்த்தகர்களின் கணக்குகளை வருமான வரி அதிகாரிகள் சரிபார்க்கத் தொடங்கினர். நாசிக்கின் பல்வேறு சந்தைகளில் 15 வர்த்தகர்களின் அலுவலகங்கள் மற்றும் வளாகங்களை ஆய்வு செய்தனர். அதுகுறித்த அறிக்கை இன்னும் பகிரங்கப்படுத்தப்படவில்லை என்றாலும், இந்த சோதனைகள் விலைகளைக் கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டவை என்றே வர்த்தக வட்டாரங்கள் தெரிவித்தன. தேடல்களுக்குப் பிறகு சில நாட்களில், மாவட்டம் முழுவதும் வெங்காயத்தின் விலை மாற்றப்பட்டது. முக்கிய வர்த்தகர்கள் அரசாங்க நடவடிக்கைக்கு பயந்து மொத்த சந்தையில் இருந்து விலகி இருக்கிறார்கள்.

1 லட்சம் டன் இறக்குமதி செய்ய அனுமதிக்கும் முடிவு வெங்காய விலையை கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட சமீபத்திய நடவடிக்கையாகும்.

சமீபத்திய நகர்வுகளால் என்னென்ன மாற்றங்கள் ஏற்பட்டன?

ஏற்றுமதியை நிறுத்திய நேரத்தில் கூட, செப்டம்பர் முதல் வாரத்திலேயே எம்.எம்.டி.சி டெண்டர்களைக் கொண்டு 2,000 டன் வெங்காயம் இறக்குமதி செய்வதற்கான கதவுகளை அரசாங்கம் திறந்திருந்தது. டெண்டர்கள் பலப்படுத்தத் தவறிய நிலையில், தனியார் வர்த்தகர்கள் வெங்காயத்தை இறக்குமதி செய்யத் தொடங்கினர். மும்பை துறைமுகங்களில் சுமார் 2,000-4,000 டன்கள் வந்திறங்கி உள்ளதாகவும், அடுத்த சில நாட்களில் இது சந்தைகளை எட்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த நிதியாண்டில், இந்தியா 497.97 மில்லியன் டாலர் மதிப்புள்ள 21.82 லட்சம் டன் வெங்காயத்தை ஏற்றுமதி செய்துள்ளது, அதே நேரத்தில் 1.12 மில்லியன் டாலர் மதிப்புள்ள 7,080 டன் மட்டுமே இறக்குமதி செய்தது. ஆப்கானிஸ்தான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் எகிப்து ஆகியவை இந்தியா வெங்காயத்தை இறக்குமதி செய்யும் முக்கிய சந்தைகளாகும், இருப்பினும் உள்நாட்டு வர்த்தகர்கள் இதுபோன்ற வெங்காயங்களை சந்தைகளில் வரவேற்கவில்லை என்று கூறுகின்றனர். இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயம் புதிய பயிரின் விலையில் எவ்வாறு எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும் என்பதையும் வர்த்தகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment