Orunudoi : A woman-centric scheme as game-changer : அசாமில் பாஜக கூறியிருக்கும் பல்வேறு நலத்திட்டங்களில் ஒன்றாக இருக்கிறது ஒருனுடோய் (Orunudoi Scheme). பெண்களை மையமாக கொண்டு வெளியிடப்பட்டிருக்கும் இந்த அறிவிப்பு மிகவும் பிரபலமாக அமைந்திருக்கிறது. டிசம்பர் 2020-ன் போது இந்த திட்டம் அறிவிக்கபட்டது. இது மிகப்பெரிய நேரடி உதவித்திட்டம் என்று அம்மாநில முதல்வர் சர்பானந்த ஸோனோவால் மற்றும் நிதி அமைச்சர் ஹிமந்தா பிஸ்வாஸா சர்மா ஆகியோர் விவரித்தனர். இது பெண்களை மேம்படுத்தும் திட்டமாக அமையும் என்றும் தேவையானவர்களுக்கு உதவக்கூடிய ஒன்றாகவும் இருக்கும் என்றும் கூறினார்கள்.
இது என்ன திட்டம்?
ஒருனுடோய் 2020-21 நிதி நிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது. மிகவும் பிற்படுத்தப்பட்ட குடும்ப பெண்களுக்கு நேரடியாக ரூ. 830 வழங்கும் திட்டம் தான் இது. இது நேரடியாக அந்த பெண்ணின் வங்கி கணக்கிற்கு சென்றுவிடும். இந்த திட்டம், அவர்கள் அந்த பணத்தை எவ்விதம் செலவிட வேண்டும் என்ற தேர்வை அவர்களுக்கே வழங்குகிறது என்று கூறப்படுகிறது.
இதனை பெற தகுதி வாய்ந்தவர்கள் யார்?
விண்ணப்பதாரர் அசாமிலேயே நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும். அவர்கள் குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ. 2 லட்சத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள், விவகாரத்து பெற்றவர்கள், கைம்பெண், திருமணம் ஆகாத பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் அல்லது ரேசன் கார்ட் இல்லாத குடும்பங்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படுகிறது. பெண்கள் இல்லாத வீடுகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் (முன்னாள் மற்றும் இந்நாள்), பஞ்சாயத்து உறுப்பினர்கள், நகரங்களில் வாழும் மக்கள், அரசு அதிகாரிகள் மற்றும் கூட்டுறவு சமூகத்தில் இருக்கும் ஊழியர்களின் குடும்பங்கள் இந்த திட்டத்தில் இடம் பெறவில்லை. நான்கு சக்கர வாகனங்களை வைத்திருப்பவர்கள், படகுகள் வைத்திருப்பவர்கள், ட்ராக்டர்கள், ஏசிகள், வாசிங் மெஷின்கள் மற்றும் 15 பிகாக்களுக்கு அதிகமாக நிலம் வைத்திருப்பவர்களுக்கு இந்த திட்டம் பயனளிக்காது.
வேட்பாளர்களின் தேர்வுகள் ஆகஸ்ட் 2020 இல் தொடங்கியது, நிதித் துறையின் மேற்பார்வை மற்றும் ஒவ்வொரு மாவட்டத்திலும் துணை ஆணையர் தலைமையிலான மாவட்ட அளவிலான கண்காணிப்பால் செயல்படுத்தப்பட்டது. இந்த செயல்முறையை எளிதாக்க, ஒவ்வொரு மாவட்டத்திலும் நான்கு ஒருனுடோய் ‘சஹாயக்குகள்’ நியமிக்கப்பட்டனர்.
இதுவரை எத்தனை குடும்பங்கள் இதன் மூலம் பயனடைய உள்ளது?
இத்திட்டம் தொடங்கப்பட்டபோது, 18 லட்சம் குடும்பங்கள் தகுதியுள்ளவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. போடோலாண்ட் பிராந்திய கவுன்சில் தேர்தலுக்குப் பிறகு, இந்த எண்ணிக்கை 22 லட்சமாக உயர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த மாதம், லக்கிம்பூர் மாவட்டத்தில் நடந்த ஒரு பொதுக் கூட்டத்தில், சர்மா இந்த திட்டத்தை ஊக்குவித்தார், மேலும் இந்த தொகை மாதத்திற்கு ரூ .830 முதல் ரூ .3,000 வரை உயர்த்தப்படும் என்று கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil