இந்தியாவில் சாலை விபத்துகளில் தினமும் எவ்வளவு பேர் உயிரிழக்கிறார்கள் தெரியுமா?

இந்தியாவில் 10 மாநிலங்களில் சாலை விபத்துகளில் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட அதிகரித்துள்ளது.

By: August 1, 2019, 8:10:41 PM

Everyday 140 are killed in accidents: நாட்டிலேயே சாலை விபத்துகளில் உயிரிழப்பு ஏற்படுவது  உத்தரப் பிரதேசம் மற்றும் மத்தியப்பிரதேசம் ஆகிய இரண்டு மாநிலங்களில்தான் மிக அதிக அளவில் அதிகரித்துள்ளது. மேலும், இந்தியாவில் 10 மாநிலங்களில் சாலை விபத்துகளில் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது.

2017 ஆம் ஆண்டில் இந்தியாவிலேயே உத்தரப் பிரதேசம் மாநிலத்தில்தான் மிக அதிக அளவில் 20,124 பேர் சாலைவிபத்தில் உயிரிழந்துள்ளனர். 2016 ஆம் ஆண்டு 19,320 பேர் பலியாகி உள்ளனர். அதே போல, மற்றொரு பெரிய மாநிலமான மத்தியப்பிரதேசத்தில், 2017 ஆம் ஆண்டு 10,177 பேர் சாலை விபத்துகளில் உயிரிழந்துள்ளனர். 2016 ஆம் ஆண்டு 9,646 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த புள்ளி விவரங்களை கடந்த வாரம் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் மக்களவையில் தெரிவித்துள்ளது.

இருப்பினும், அதிக மக்கள் தொகை கொண்ட இரண்டாவது மாநிலமான மகாராஷ்டிராவில் உள்ள சாலைகள் பாதுகாப்பானதாகத் தெரிகிறது என்று தரவுகள் காட்டுகின்றன. மகாராஷ்டிரா மாநிலத்தில் 2015 ஆம் ஆண்டில் 13,212 பேர் சாலை விபத்துகளில் உயிரிழந்தனர். இந்த எண்ணிக்கையைவிட குறைவாக 2016 ஆம் ஆண்டு நடந்த சாலை விபத்துகளில் 12,935 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும், குறைந்து 2017 ஆம் ஆண்டில் நிகழ்ந்த சாலை விபத்துகளில் 12,264 பேர் என உயிரிழப்பு எண்ணிக்கை படிப்படியாக குறைந்துள்ளது.

இதில், 2017 ஆம் ஆண்டில் நடந்த சாலைவிபத்துகளில் 16,157 பேர் உயிரிழப்பு ஏற்பட்டு தமிழ்ழ்நாடு உத்தரப்பிரதேசம் மாநிலத்துக்கு அடுத்து இரண்டாம் இடத்தில் உள்ளது. ஆனால், இது 2016 ஆம் ஆண்டு நடந்த சாலைவிபத்துகளில் ஏற்பட்ட 17,218 உயிரிழப்புகளை விட குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் 2015 ஆம் அண்டு தேசிய நெடுஞ்சாலை மற்றும் விரைவு சாலைகளில் நடந்த 1,42,268 விபத்துகளில் 51,204 பேர் உயிரிழந்துள்ளனர். 2016 ஆம் ஆண்டில் நடந்த 1,42,359 சாலை விபத்துகளில் 52,075 பேர் உயிரிழந்துள்ளனர். 2017 ஆம் ஆண்டில் நடைபெற்ற 1,41,466 சாலை விபத்துகளில் 53,181 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம், இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலை மற்றும் விரைவு சாலைகளில் ஏற்படும் விபத்துகளில் சராசரியாக தினமும் 140 பேர் உயிரிழப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Explained News by following us on Twitter and Facebook

Web Title:Over 140 are killed every day on national highways

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X