Advertisment

கொரோனாவை ஒழிக்க ஆக்ஸ்போர்டு தடுப்பு மருந்து உதவுமா?

23 தடுப்பு மருந்துகள் உலக சுகாதார மையத்தால் மனிதர்கள் மீது சோதனை செய்யப்படும் மருந்துகளாக அடையாளம் காணப்பட்டுள்ளது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Oxford-AstraZeneca shot shows progress: What this means in fight to find Covid-19 vaccine

கேம்ப்ரிட்ஜில் அமைந்திருக்கும் அஸ்ட்ராஜெனாக்கா அலுவலகத்தின் புகைப்படம், இங்கிலாந்து

Prabha Raghavan

Advertisment

Oxford-AstraZeneca shot shows progress: ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் மற்றும் மருந்துகளை உருவாக்கும் நிறுவனமான அஸ்ட்ராஜெனெக்கா இணைந்து தயாரித்துள்ள மருந்து மனிதர்கள் மீது செலுத்தப்பட்டு வருகிறது. அதன் முடிவுகள் நம்பிக்கை தரும் வகையில் இருப்பது திங்கள் கிழமை வெளியிடப்பட்ட முடிவுகள் நமக்கு அறிவிக்கிறது. அமெரிக்காவின் பயோடெக் நிறுவனமான மடெர்னா (Moderna) நிறுவனம் கண்டுபிடித்த தடுப்பூசி மனிதர்கள் மீது சோதனை செய்யப்பட்டு அதன் அதன் தரவுகளை கடந்த வாரம் வெளியிட்ட நிலையில், 6 லட்சம் மனிதர்களை கொன்ற கொரோனா வைரஸூக்கு எதிரான தடுப்பு மருந்துகளை கண்டுபிடிக்கும் முனைப்பில் உலக நாடுகள் ஈடுபட்டுள்ளன.

இந்த கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க

ஆக்ஸ்ஃபோர்ட் மற்றும் அஸ்ட்ரோஜெனெக்கா நிறுவனம் கண்டுபிடித்துள்ள தடுப்பூசி எப்படி பணியாற்றுகிறது?

ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படும் நிலையில், அவரது உடலில் இருக்கும் அனைத்து பகுதிகளுக்கும் வைரஸில் இருக்கும் ஸ்பைக் பகுதி மூலம் பரவுகிறது. இந்த ஸ்பைக்குகள் ஸ்பைக் ப்ரொட்டீன் என்று அழைக்கப்படுகிறது. இவை மனித செல்லுக்குள் நுழைந்து பல்கி பெருகுகிறது.

ஆக்ஸ்போர்ட் மற்றும் அஸ்ட்ராஜெனெக்கா இணைந்து உருவாக்கப்பட்டிருக்கும் தடுப்பூசிகள் (நான் - ரிப்லிகேட்டிங் வைரல் வெக்டர்) தடுப்பூசிகள் என்று அழைக்கப்படுகிறது. இது கொரோனா வைரஸில் இருக்கும் ஸ்பைக் புரதத்திற்கு எதிராக எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் விதத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்ட்டிபாடிகள் வைரஸின் ஸ்பைக் பகுதியை தாக்கி அழிக்கும் என்பதால் வைரஸ் உடலில் இருக்கும் செல்களுக்குள் நுழைய முடியாது. இந்த தடுப்பு மருந்து மற்றொரு வைரஸை பயன்படுத்தியுள்ளது. இந்த ஆராய்ச்சியில், சிம்பன்ஸிகளை பாதிக்கும் அடினோவைரஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது ட்ரோஜன் ஹார்ஸ் போன்ற ஸ்பைக் ப்ரோட்டினை உருவாக்கும் சங்கேதகுறிகளை எடுத்துச்செல்லும். இந்த அடினோவைரஸ் மனித உடலுக்குள் புதிய வைரஸ் தொற்றை உருவாக்க முடியாது. மாற்றாக ஸ்பைக் புரதத்தை உருவாக்கும் பண்புடன் உள்ளது. மனி்த உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியானது, அந்த ஸ்பைக் புரதத்திற்கு எதிராக ஆண்ட்டிபாடிகளை உருவாக்குகிறது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க துவங்கியவுடன், உண்மையான வைரஸ் உடலுக்குள் நுழைந்தால் பதில் தாக்குதலை துவங்குகிறது.

தற்போதைய முடிவுகள் என்ன கூறுகிறது?

முதல் மற்றும் இரண்டாம் கட்ட மனிதர்கள் மீதான சோதனையின் முதன்மை முடிவுகள் தி லான்செட்டில் வெளியிடப்பட்டுள்ளது. அதன் முடிவுகள் இந்த மருந்து பாதுகாப்பானது என்பதை தாண்டியும் இந்த மருந்தை எடுத்துக் கொண்டவர்கள் உடலில் எதிர்ப்பு திறனை அதிக அளவில் உருவாக்குகிறது என்பதையும் அறிவித்துள்ளது. இதனை எடுத்துக் கொண்ட பங்கேற்பாளர்கள் உடலில் முதலில் நடுநிலைப்படுத்தப்பட்ட ஆண்டிபாடிகள் உருவாகிறது. பிறகு நோய் கிருமிகள் மற்றும் புற்றுநோய் செல்களை தாக்கி அழிக்கும் ரத்த வெள்ளை செல்களான டி-செல்களையும் அதிகரிக்கிறது. இது உடலில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட செல்களை தாக்கி அழிக்கும்.

முதல் தடுப்பூசி பங்கேற்பாளர்களுக்கு அளித்து 28 நாட்கள் கழித்து ஸ்பைக் புரதத்திற்கு எதிரான ஆண்ட்டிபாடிகள் உருவாக துவங்கின. நடுநிலையாக்கப்பட்ட ஆண்ட்டிபாடிகள் 35 நபர்களில் 32 நபர்களுக்கு கண்டறியப்பட்டது. மேலும் 9 பங்கேற்பாளர்களுக்கு இரண்டாம் நிலை பூஸ்டர் டோஸ் தரப்பட்டு அவர்களின் நிலை மதிப்பீடு செய்யப்பட்டது. இந்த தடுப்பூசி வலி, காய்ச்சல் உணர்வுகள், குளிர், தசை வலி, தலைவலி மற்றும் உடல்நலக்குறைவு உள்ளிட்ட பாதகமான எதிர்விளைவுகளைக் காட்டியது. பராசிட்டமால் மாத்திரைகள் பயன்படுத்தப்பட்டு இந்த விளைவுகள் குறைக்கப்பட்டன என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த கட்டம்?

இதுவரை வெளியான முடிவுகள் நம்பிக்கை தருவதாக இருப்பினும், ஆரம்ப கால சோதனை முடிவுகள் தான் இவை என்பதை நாம் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். உடலில் உருவாக்கப்பட்ட ஆண்ட்டிபாடிகள் எவ்வளவு நாள் இருக்கும் என்பது போன்ற முக்கியமான கேள்விகளுக்கு இந்த சோதனை முடிவுகள் பதில் அளிக்காது. இதற்கு மூன்றாம் கட்ட சோதனை முடிவுகளின் தரவுகள் தேவைப்படுகிறது. இந்த மூன்றாம் கட்ட சோதனைகள் தற்போது நடைபெற்று வருகிறது.

 

Oxford-AstraZeneca shot shows progress: What this means in fight to find Covid-19 vaccine

அடுத்து என்ன?

உலக அளவில் ஆக்ஸ்ஃபோர்ட் மற்றும் அஸ்ட்ராஜெனெக்கா நிறுவனத்தின் மூன்றாம் கட்ட ஆராய்ச்சிகள் பிரேசிலில் துவங்கியுள்ளது. 5000 தன்னார்வலர்கள் மீது இந்த ஆராய்ச்சி நடத்தப்பட உள்ளாது. இதே போன்ற ஆராய்ச்சி தென்னாப்பிரிக்காவிலும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சீரம் இன்ஸ்ட்டியூட் ஆஃப் இந்தியா நிறுவனம் ஆக்ஸ்ஃபோர்ட்டுடன் மில்லியன் கணக்கான தடுப்பூசி மருந்துகளை உற்பத்தி செய்ய ஒப்பந்தம் ஆகியுள்ளது. இந்த நிறுவனம் மிகக்குறைவான வருமானம் கொண்ட நாடுகளுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி அறிமுகம் செய்வதற்கு முன்பே இந்தியாவில் மூன்றாம் கட்ட பரிசோதனைகளை சீரம் நிறுவனம் மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சோதனை நோக்கங்களுக்காக குறிப்பிட்ட அளவு தடுப்புமருந்துகளை உருவாக்க நிறுவனம் அனுமதி பெற்றுள்ளது என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். “நாங்கள் ஒரு வார காலத்திற்குள் இந்திய கட்டுப்பாட்டாளருக்கு சோதனைகளுக்கான உரிமம் பெற விண்ணப்பிப்போம். அவர்கள் எங்களுக்கு அனுமதி அளித்தவுடன், இந்தியாவில் தடுப்பூசிக்கான சோதனைகளை நாங்கள் தொடங்குவோம், ”என்று சீரம் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனவல்லா கூறினார்.

மேலும் படிக்க : கொரோனா தடுப்பு மருந்து : அடுத்த மூன்று மாதங்களுக்கு மாபெரும் இலக்குடன் சீரம் இன்ஸ்டிட்யூட்

மடெர்னா நிறுவனத்தின் தடுப்பூசி முடிவுகளுடன் இதனை எப்படி ஒப்பிடுவது?

இந்த நிறுவனம் தான் கொரோனா வைரஸ் தடுப்பூசிக்கான முதல் மனித சோதனையை மேற்ஒண்டது. அமெரிக்காவின் National Institute of Allergy and Infectious Diseases இணைந்து உருவாக்கப்பட்ட தடுப்பூசியின் ஆரம்பகட்ட முடிவுகளை கடந்த வாரம் வெளியிட்டது இந்நிறுவனம். இந்த நிறுவனத்தின் தடுப்பு மருந்தானது mRNA தொழில்நுட்பம் கொண்டு உருவாக்கப்பட்டது. இந்நிறுவனத்தின் தரவுகள் அனைத்தும் ஜூலை 14ம் தேதி நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசினில் வெளியிடப்பட்டது. ஆக்ஸ்ஃபோர் நிறுவனத்தின் தடுப்பு மருந்தை போன்றே ஆண்ட்டிபாடி, நடுநிலையாக்கப்பட்ட ஆண்ட்டிபாடிகள், டி-செல்லின் வளர்ச்சி ஆகியவற்றை உருவாக்கும் வகையான முடிவுகளை காட்டியது. மடெர்னா நிறுவனம் தங்களின் மூன்றாம் கட்ட சோதனைகளை ஜூலை 27ம் தேதி துவங்க உள்ளது. கொடுக்கப்பட்ட தரவுகளை வைத்துக் கொண்டு இவ்விரு நிறுவனங்களின் தடுப்பு மருந்துகளை தற்போது ஒப்பீடு செய்வது மிகவும் கடினம் என்று சில வல்லுநர்கள் கூறுகின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

மற்றெந்த நாடுகள் தடுப்பூசிகளை உருவாக்கி வருகின்றன?

உலகில் 160 தடுப்பு மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் கொரோனாவிற்கு தடுப்பு மருந்துகள் தயாரிப்பில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளன. அதில் 23 தடுப்பு மருந்துகள் உலக சுகாதார மையத்தால் மனிதர்கள் மீது சோதனை செய்யப்படும் மருந்துகளாக அடையாளம் காணப்பட்டுள்ளது. அவைகளில் முக்கியமானவைகள் சில,

இன்ஆக்டிவேட்டட் முறை

இறந்து போன கோவிட்19 வைரஸ்களின் சில துகள்களை பயன்படுத்தி உருவாக்கப்படும் தடுப்பு மருந்துகள் ஆகும். இது மேலும் நோய் தொற்றினை உருவாக்கவோ, பிரதி செய்யவோ முடியாது. இதனை உடலில் செலுத்தும் போது, இந்த துகள்களுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தி உடலுக்குள் உருவாக உதவும்.   சின்வோக் (Sinovac), வூஹான் பையோலாஜிக்கல் நிறுவனம் மற்றும் சினோஃபார்மின் Wuhan Institute of Biological Products-Sinopharm, பாரத் பயோடெக் போன்ற நிறுவனங்கள் இந்த முறையில் மருந்துகளை உருவாக்குகின்றனர்.

Non-replicating viral vector

ஆக்ஸ்ஃபோர்ட் மற்றும் அஸ்ட்ராஜெனெக்கா தடுப்பூசி இந்த வகையை சேர்ந்தவையே. கோவிட் -19 ஸ்பைக் புரதத்தை எடுத்துச் செல்ல இது வேறுபட்ட வைரஸின் பலவீனமான, மரபணு மாற்றப்பட்ட வைரஸை பயன்படுத்துகிறது. Oxford-AstroZeneca, CanSino Biological Inc-Beijing Institute of Biotechnology, Gamaleya Research Institute ஆகிய நிறுவனங்கள் இது போன்ற வகையில் தடுப்பு மருந்தை தயாரிக்கின்றனர்.

புரோட்டீன் சப்யூனிட்

இந்த தடுப்பூசி வைரஸின் ஒரு பகுதியைப் பயன்படுத்தி நோயெதிர்ப்பு சக்தியை உருவாக்கி வைரஸை அழிக்கும் பாணியில் உருவாக்குகிறது. வைரஸின் இலக்கு ஸ்பைக் புரதமாக இருக்கும். அன்ஹுய் ஜிஃபை லாங்க்காம் பயோஃபார்மாசூட்டிகல்-இன்ஸ்டிடியூட் ஆப் மைக்ரோபயாலஜி (Anhui Zhifei Longcom Biopharmaceutical-Institute of Microbiology (Chinese Academy of Sciences)), நோவாவாக்ஸ் (Novavax), க்ளோவர் பயோஃபார்மாசூட்டிகல்ஸ் இன்க்-ஜி.எஸ்.கே-டைனவாக்ஸ் ( Clover Biopharmaceuticals Inc-GSK-Dynavax), தடுப்பூசி பி.டி லிமிடெட்-மெடிடாக்ஸ் (Vaccine Pty Ltd-Medytox), குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகம்-சி.எஸ்.எல்-செகிரஸ் (Queensland-CSL-Seqirus) போன்ற நிறுவனங்கள் இந்த முறையில் தடுப்பூசியை தயாரிக்கின்றனர்.

ஆர்.என்.ஏ

இத்தகைய தடுப்பூசிகள் மெசஞ்சர் ஆர்.என்.ஏ (எம்.ஆர்.என்.ஏ) மூலக்கூறுகளைப் பயன்படுத்துகின்றன, அவை எந்த புரதங்களை உருவாக்க வேண்டும் என்று செல்களுக்கு கூறும் வகையில் கோட் செய்யப்படுகிறது. தடுப்பூசி செலுத்தப்பட்டவுடன் செல்கள் எம்.ஆர்.என்.ஏவின் அறிவுறுத்தல்களைப் பயன்படுத்தி, ஸ்பைக் புரதத்தின் நகல்களை உருவாக்குகின்றன, இதன் விளைவாக நோயெதிர்ப்பு செல்கள் அதை எதிர்த்துப் போராட ஆன்டிபாடிகளை உருவாக்கத் தூண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாடர்னா-என்ஐஏஐடி (Moderna-NIAID), பயோன்டெக்-ஃபோசுன் பார்மா-ஃபைசர் (BioNTech-Fosun Pharma-Pfizer), இம்பீரியல் கல்லூரி லண்டன்(Imperial College London), குரேவாக் (Curevac), பிஎல்ஏ அகாடமி ஆஃப் மிலிட்டரி சயின்சஸ்-வால்வாக்ஸ் பயோடெக் (PLA Academy of Military Sciences-Walvax Biotech) நிறுவனங்கள் இந்த முறையில் தடுப்பூசியை உருவாக்கி வருகின்றனர்.

டி.என்.ஏ

இந்த தடுப்பூசிகள் மரபணு ரீதியாக வடிவமைக்கப்பட்ட டி.என்.ஏ மூலக்கூறுகளைப் பயன்படுத்துகின்றன, அவை மீண்டும் ஆன்டிஜெனுடன் கோட் செய்யப்படுகிறது. அது நோயெதிர்ப்பு சக்தியை உருவாக்கும். இன்னோவியோ பார்மாசூட்டிகல்ஸ்-இன்டர்நேஷனல் தடுப்பூசி நிறுவனம், ஒசாகா பல்கலைக்கழகம்-ஏஞ்சீஸ்-தகர பயோ, ஜைடஸ் காடிலா, ஜெனெக்சின் கன்சோர்ட்டியம் இந்த முறையில் தடுப்பு மருந்தை உருவாக்கி வருகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Coronavirus
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment