/tamil-ie/media/media_files/uploads/2021/04/Sterlite-2.jpg)
Oxygen from Sterlite Copper: permission, capacity, and road ahead : வேதாந்தா நிறுவனம் தன்னுடைய ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் தயாரிக்க அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்தது உச்ச நீதிமன்றம். பொதுமக்களின் போராட்டம் மற்றும் மே மாதம் 2018ம் ஆண்டு நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டதை தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக மூடப்பட்ட நிலையில் உள்ளது ஸ்டெர்லைட் ஆலை. தற்போது இரண்டாம் அலையின் காரணமாக நாடு முழுவதும் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டிருக்க நிலையை கருத்தில் கொண்டு உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது.
நீதிமன்றத்தில் நடைபெற்ற வாதங்கள் என்ன?
வேதாந்தா நிறுவனம் கடந்த வாரம் உச்ச நீதிமன்றத்தில் அவசரமாக விசாரிக்க வேண்டி மனு ஒன்றை தாக்கல் செய்தது. தற்போது ஏற்பட்டுள்ள மருத்துவ ஆக்ஸிஜன் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய 1000 டன் ஆக்ஸிஜனை ஸ்டெர்லைட் ஆலையால் உற்பத்தி செய்ய முடியும் என்று கூறியது நிறுவனம். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தமிழக அரசு கடந்த வாரம் பொதுமக்களிடம் கருத்துகள் கேட்டது. அப்போது பலரும் வேதாந்தா ஆலையை முழுமையாக திறக்க முயல்வதற்கான நடவடிக்கை இது என்று கூறினார்கள்.
திங்கள்க் கிழமை அன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தப்பட்டது. சில முக்கியமான ஆலை நிபந்தனையுடன் மீண்டும் திறக்க அனுமதிக்கப்படும் என்று கூட்டம் தீர்மானித்தது: ஆக்ஸிஜன் உற்பத்தியின் முழுமையான செயல்பாடுகளுக்காகவும், நான்கு மாதங்களுக்கு மட்டுமே, மாநில மற்றும் மாவட்ட நிர்வாகங்களின் கண்காணிப்பில் ஆலையில் உற்பத்தி செய்யப்படும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழகத்திற்கு ஆக்ஸிஜன் உற்பத்தியில் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது.
ஆக்ஸிஜன் பற்றாக்குறை
சென்னை ஸ்ரீபெரும்புதூர் உட்பட தென்னிந்தியாவில் திரவ ஆக்ஸிஜனை விநியோகிக்க நிறைய விநியோகஸ்தர்கள் உள்ளனர். அதில் சிறு பகுதி மட்டுமே மருத்துவ தேவைக்காக முதலில் தரப்பட்டது. மீதம் உள்ள அனைத்தும் தொழிற்சாலை தேவைக்காக பயன்பட்டது.
தரவுகளின் படி, நாள் ஒன்றுக்கு இந்தியாவில் 7200 மெட்ரிக் டன் திரவ ஆக்ஸிஜன் உற்பத்தியானது. அதில் 800 டன்கள் மருத்துவ தேவைக்காக கொரோனா தொற்றுக்கு முன்பு தேவையாக இருந்தது. தொற்று உச்சம் அடைந்த போது நாள் ஒன்றுக்கு 2000 டன் மருத்துவ ஆக்ஸிஜன் செப்டம்பர் 2020-ல் தேவைப்பட்டது.
மேலும் படிக்க : குறைந்து வரும் படுக்கை வசதிகள்; சென்னையில் தீவிரமாகும் மாற்று ஏற்பாடுகள்
ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் உற்பத்தி
வேதாந்தா நிறுவனத்தின் இந்த ஆலையில் இரண்டு ஆக்ஸிஜன் தயாரிக்கும் அலகுகள் வெறுமனே உள்ளது. இரண்டும் இணைந்து நாள் ஒன்றுக்கு 1050 டன் ஆக்ஸிஜனை உற்பத்தி செய்யும். இந்த அலகுகளிலிருந்து வரும் ஆக்ஸிஜன் தாமிரத்தை உருக்கும் ஆலையின் உலைகளுக்கு வழங்கப்பட்டது. வளிமண்டலத்தில் இருந்து இந்த அலகுகள் ஆக்ஸிஜனை உறிஞ்சுகிறது. பிறகு இது பதப்படுத்தி பயன்படுத்தப்படுகிறது. வேதாந்தா நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் 1000 டன் ஆக்ஸிஜனை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது என்று வாதிட்டது. மாநில அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்நிறுவனம் 1050 டன்களை உற்பத்தி செய்யும் என்றும் அதில் 35 டன் ஆக்ஸிஜன் மட்டுமே மருத்துவ சேவைக்கு பயன்படுத்த முடிஉம் என்று கூறினார். அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் கூறுகையில், மருத்துவ பயன்பாட்டிற்கு குறைந்தபட்சம் 99.4% தூய்மையுடன் திரவ ஆக்ஸிஜன் தேவைப்படுகிறது, தொழில்துறை ஆக்ஸிஜனில் 92% -93% தூய்மை மட்டுமே உள்ளது. வாயு ஆக்ஸிஜனை திரவ ஆக்ஸிஜனாக மாற்ற ஸ்டெர்லைட் கம்ப்ரெஷன் மற்றும் பாட்டிலிங்க் ஆலைகளை உருவாக்க வேண்டும் என்றும் அதற்கு 6 மாதங்கள் தேவைப்படும் என்றும் கூறினார். விரைந்து அந்த ஆலைகளை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று நிறுவனம் தரப்பில் கூறப்பட்டது.
ஸ்டெர்லைட்டின் அலகுகளில் உற்பத்தி செய்யப்படும் ஆக்ஸிஜன் கச்சா ஆக்ஸிஜன் ஆகும். இருப்பினும், செவ்வாயன்று, வேதாந்தா லிமிடெட் உச்சநீதிமன்றத்தில் சமர்பித்த மனுவில் 10 நாட்களுக்குள் 200 மெட்ரிக் டன் திரவ ஆக்ஸிஜனை உற்பத்தி செய்ய முடியும். மீதமுள்ள 800 டன் வாயு ஆக்ஸிஜனாக உற்பத்தி செய்யப்படும் என்றும் வேதாந்தா லிமிடெட் நிறுவனத்தின் நம்பத்தகுந்த வட்டாரம் தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறியதுடன், மருத்துவ பயன்பாட்டிற்கு இதனை எவ்வாறு பயன்படுத்த முடியும் என்பதைக் கண்டறிய அரசு மற்றும் தனியார் துறையின் பல்வேறு பங்குதாரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர் என்றும் கூறப்பட்டது.
மேலும் படிக்க : உ.பி.யில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு இல்லையா? உண்மை நிலவரம் என்ன?
உள்ளூர் மக்களின் கவலை என்ன?
ஸ்டெர்லைட் ஆலை 1994ம் ஆண்டு துவங்கப்பட்டது. அப்போது இருந்தே அதற்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வந்த வண்ணமே உள்ளது. காரீயம், அர்செனிக், சல்பர் ஆக்ஸைடு போன்ற நஞ்சுக்களை வெளியிட்டு சுற்றுச்சூழலை கெடுப்பதுடன் பொதுமக்களின் ஆரோக்கியத்திற்கும் ஊறுவிளைவிக்கிறது.
மார்ச் 2013ம் ஆண்டு வாயு கசிவு ஏற்பட்ட பிறகு ஆலையை மூட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. , அடுத்த மாதம் சுற்றுச்சூழல் விதிமுறைகளை மீறியதற்காக ஸ்டெர்லைட்டுக்கு உச்ச நீதிமன்றம் 100 கோடி ரூபாய் அபராதம் விதித்தது. ஆனால் ஜூன் மாதம் மீண்டும் பயன்பாட்டிற்கு வந்தது. பிறகு 2018ம் ஆண்டு மே மாதம் பொதுமக்கள் போராட்டம் மற்றும் காவல்துறையின் துப்பாக்கிச்சூடு ஆகியவை காரணமாக ஆலை மூடப்பட்டது. செவ்வாயன்று, நீதிபதி டி ஒய் சந்திரசூட் உச்சநீதிமன்றத்தில் "இந்த தருணத்தில் தேசம் ஒன்றாக நிற்க வேண்டும்” என்று மருத்துவ அவசரநிலையைக் குறிப்பிட்டு உத்தரவு பிறப்பித்தார். மூன்று ஆண்டுகளாக பயன்படுத்தப்படாத ஒரு ஆலையில் பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பைப் பொறுத்து தான் ஆக்ஸிஜன் உற்பத்தி இருக்கும். மருத்துவ நோக்கங்களுக்காக மட்டுமே ஆக்ஸிஜனை உற்பத்தி செய்வதற்கான ஒப்பந்தத்திலிருந்து விலகும் சிறு நடவடிக்கைக்கும் கூட மக்கள் அஞ்சுவார்கள்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.