ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தை முன்னிட்டு பத்ம விருதுகள் அறிவிக்கப்படுகிறது. அதற்கான தகுதி அளவுகோல்கள், தேர்வு செய்யும் முறை, நியமன செயல்முறை பற்றியும் இந்த ஆண்டு மேற்கு வங்க முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா பத்ம ஸ்ரீ விருதை ஏற்க மறுத்ததால் எழுந்த சர்ச்சை குறித்து பார்ப்போம்.
இந்த ஆண்டு பத்ம விருதுகளுக்கு மூத்த அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், விஞ்ஞானிகள், மருத்துவர்கள் முதல் கலைஞர்கள், பொதுச் சேவையில் ஈடுபட்டுள்ள சாமானிய மக்கள் வரை என 128 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பெரும்பாலானோர் விருதுகளை மனதார ஏற்றுக்கொண்ட நிலையில், மேற்கு வங்க முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா அதை ஏற்க மறுத்துவிட்டார். பாடகி சந்தியா முகோபாத்யாவின் குடும்பத்தினர் அவருக்கு விருது வழங்கப்பட்டதாகவும் ஆனால் அவர் அதை ஏற்கவில்லை என்றும் கூறினர். ஆனால், விருது பட்டியலில் அவருடைய பெயர் இல்லை.
பத்ம விருதுகள் என்றால் என்ன?
பாரத ரத்னாவுக்குப் பிறகு இந்தியாவின் உயரிய விருதான பத்ம விருதுகள். ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தை முன்னிட்டு பத்ம விருதுகள் அறிவிக்கப்படுகிறது. இந்த விருதுகள் மூன்று பிரிவுகளில் வழங்கப்படுகிறது. பத்ம விபூஷன் (அரிய, புகழ்பெற்ற சேவைக்காக), பத்ம பூஷன் (உயர்ந்த, புகழ்பெற்ற சேவைக்காக) பத்மஸ்ரீ (புகழ்பெற்ற சேவைக்காக) வழங்கப்படுகிறது. இந்த விருது பொது சேவையின் ஒரு அங்கமாக சம்பந்தப்பட்ட அனைத்து நடவடிக்கைகளிலும் அல்லது அனைத்து துறைகளிலும் சாதனைகளை அங்கீகரிக்கிறது.
கலை, சமூகப் பணி, பொது விவகாரங்கள், அறிவியல், பொறியியல், வர்த்தகம், தொழில், மருத்துவம், இலக்கியம், கல்வி, குடிமைப் பணி, விளையாட்டு உள்ளிட்ட சில தேர்ந்தெடுக்கப்பட்ட பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படுகிறது. இந்திய கலாச்சாரத்தை பரப்புதல், மனித உரிமைகள் பாதுகாப்பு, வனவிலங்கு பாதுகாப்பு போன்றவற்றிற்காகவும் விருதுகள் வழங்கப்படுகிறது.
பாரத ரத்னாவுடன் பத்ம விருதுகள் 1954ம் ஆண்டு நிறுவப்பட்டன. அந்த நேரத்தில் பத்ம விபூஷன் மட்டுமே மூன்று துணை பிரிவுகளுடன் இருந்தது - பஹேலா வர்க், துஸ்ரா வர்க் மற்றும் திஸ்ரா வர்க் என மூன்று பிரிவுகளுடன் இருந்தது. ஜனவரி 8, 1955 அன்று வெளியிடப்பட்ட குடியரசுத் தலைவர் அறிவிப்பின்படி இவை பின்னர் பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்மஸ்ரீ என்ற பெயரில் அறிவிக்கபட்டது. 1978, 1979 மற்றும் 1993 முதல் 1997 வரையிலான ஆண்டுகளில், பத்ம விருதுகள் அறிவிக்கப்படவில்லை.
விருது பெறுபவர்கள் பொது, அரசு விழாக்களில் அணியக்கூடிய பதக்கத்தைத் தவிர, குடியரசுத் தலைவரால் கையொப்பமிடப்பட்ட சான்றிதழைத் தவிர, ரொக்கப் பரிசு எதுவும் பெறுவதில்லை. இருபினும், இந்த விருதுகள் பட்டத்திற்காக வழங்குவது அல்ல, விருது பெற்றவர்கள் அவற்றை தங்கள் பெயர்களுக்கு முன்னொட்டாகவோ பின்னொட்டாகவோ பயன்படுத்த மாட்டார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பத்ம விருது பெற்றவருக்கு முந்தைய விருது வழங்கப்பட்டு ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகுதான் உயர்ந்த விருதை வழங்க முடியும்.
பத்ம விருதுகள் ஒரு வருடத்தில் 120 விருதுகளுக்கு மேல் வழங்க முடியாது. ஆனால், இதில் மரணத்திற்குப் பிந்தைய விருதுகள் அல்லது வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு (NRI), வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்படும் விருதுகள் இல்லை. இந்த விருது பொதுவாக மரணத்திற்குப்பின் வழங்கப்படுவதில்லை. இருப்பினும், மிகவும் தகுதியான சந்தர்ப்பங்களில், மரணத்திற்குப் பின் விருது வழங்குவதை அரசாங்கம் பரிசீலிக்கலாம்.
பத்ம விருதுகளுக்கு தகுதியானவர் யார்?
இனம், தொழில், பதவி அல்லது பாலின வேறுபாடு இல்லாமல் அனைத்து நபர்களும் இந்த விருதுகளுக்கு தகுதியானவர்கள். இருப்பினும், மருத்துவர்கள், விஞ்ஞானிகளைத் தவிர, பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் உட்பட அரசு ஊழியர்கள் இந்த விருதுகளுக்குத் தகுதியற்றவர்கள்.
இந்த விருது தனித்துவமான பணிகளை அங்கீகரிக்கிறது. அனைத்து செயல்பாடுகள், அனைத்து துறைகளில் சிறப்பான, அபூர்வமான சாதனைகள் அல்லது சேவைக்காக வழங்கப்படுகிறது.
பத்ம விருதுகளுக்கான தேர்வு அளவுகோல்களின்படி, இந்த விருது நீண்ட கால சேவைக்காக மட்டும் அல்ல, சிறப்பு சேவைகளுக்காக வழங்கப்படுகிறது. இது ஒரு குறிப்பிட்ட துறையில் சிறந்தவராக மட்டும் இருக்கக்கூடாது. ஆனால், தேர்வு அளவுகோல் 'மிகச் சிறந்தவராக இருக்க வேண்டும்.
இந்தியாவின் எந்தவொரு குடிமகனும் விருது பெற தகுதியான ஆளுமையைப் பரிந்துரைக்க முடியும். ஒருவர் தன்னைத் தானே பரிந்துரைக்கலாம். அனைத்து பரிந்துரைகளும் ஆன்லைனில் செய்யப்பட வேண்டும். பரிந்துரைக்கப்படும் நபர் அல்லது அமைப்பின் விவரங்களுடன் படிவம் நிரப்பப்பட வேண்டும். பரிசீலிக்கப்படுவதற்கு, தகுதியான விருது பெறுபவர் செய்த பணியை விவரிக்கும் 800-சொல் கட்டுரையும் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
ஒவ்வொரு ஆண்டும் மே 1ம் தேதி முதல் செப்டம்பர் 15ம் தேதி வரை பரிந்துரைக்கப்பட்ட பத்ம விருதுகளுக்கு விண்ணப்பிப்பிதற்கான இணையதளத்தை அரசாங்கம் திறக்கிறது. இது பல்வேறு மாநில அரசுகள், ஆளுநர்கள், யூனியன் பிரதேசங்கள், மத்திய அமைச்சகங்கள், பல்வேறு துறைகளுக்கு விண்ணப்பங்களை அனுப்ப கடிதம் அனுப்புகிறது.
மத்திய உள்துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளபடி, பத்ம விருதுகள் தேர்வுக்கு கடுமையான அளவுகோல் அல்லது ஆழமான ஃபார்முலா எதுவும் இல்லை. இருப்பினும், ஒரு தனிநபரின் வாழ்நாள் சாதனை பரிசீலனையில் முக்கியமானதாக இருக்கும்.
விருது பெறுபவர்களை யார் தேர்ந்தெடுக்கிறார்கள்?
பத்ம விருதுகளுக்காக பெறப்பட்ட அனைத்து பரிந்துரைகளும் ஒவ்வொரு ஆண்டும் பிரதமரால் அமைக்கப்படும் பத்ம விருதுகள் குழுவின் முன் வைக்கப்படுகிறது. பத்ம விருதுகள் குழுவானது கேபினட் செயலாளரின் தலைமையில் உள்ளது. அதில், உள்துறை செயலாளர், குடியரசுத் தலைவரின் செயலாளர் என நான்கு முதல் ஆறு முக்கிய நபர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இந்தக் குழுவின் பரிந்துரைகள் இந்தியப் பிரதமர், குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படுகிறது.
முதலில் தேர்வு செய்யப்பட்டம், தேர்ந்தெடுக்கப்பட்ட விருது பெறுபவர்களின் முன்னோர்களைப் பற்றி மத்திய ஏஜென்சிகளின் சேவைகளைப் பயன்படுத்தி விசாரித்து அவர்களைப் பற்றி விரும்பத்தகாத எதுவும் தெரிவிக்கப்படவில்லை அல்லது பதிவு செய்யப்படவில்லை என்பதை உறுதிப்படுத்துகிறது. பின்னர், இறுதி பட்டியல் தயாரிக்கப்பட்டு அறிவிக்கப்படும்.
விருது பெறுபவரின் ஒப்புதல் தேவையா?
விருதை அறிவிக்கும் முன் விருது பெறுபவரின் எழுத்துப்பூர்வ அல்லது முறையான சம்மதத்தைப் பெறுவதற்கு எந்த ஏற்பாடும் இல்லை. இருப்பினும், விருது அறிவிப்புக்கு முன், ஒவ்வொரு விருது பெறுபவர்களும் உள்துறை அமைச்சகத்திடம் இருந்து ஒரு அழைப்பைப் பெறுகிறார்கள். விருது பட்டியலிலிருந்து விலக்கப்பட வேண்டும் என்று விருது பெறுபவர் விருப்பம் தெரிவித்தால் பெயர் நீக்கப்படும் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.
புத்ததேவ் பட்டாச்சார்யா விவகாரத்தில், செவ்வாய்கிழமை காலை அவருடைய இல்லத்திற்கு போன் செய்யப்பட்டதாக மத்திய உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன. இருப்பினும், அவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால், அவருடைய மனைவி அழைப்பை எடுத்தார். விருது வழங்கப்படுவது குறித்து அவருக்குத் தெரிவிக்கப்பட்டது. அவர் அதை விரும்பவில்லை என்றால் அவர் எங்களுக்கு தெரிவித்திருக்க வேண்டும்” என்று உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.