எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டில் பிப்ரவரி 25ம் தேதி போர் நிறுத்தம் மீண்டும் கொண்டுவரப்பட்டதைத் தொடர்ந்து, இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு பருத்தி மற்றும் சர்க்கரை ஏற்றுமதிக்காக வாகாவில் வர்த்தகம் மீண்டும் திறக்கப்பட்டிருக்கிறது. இது இருதரப்பு உறவில் எற்பட்டுள்ள முதல் தளர்வுகளில் ஒன்றாகும்.
ஜம்மு-காஷ்மீரில் ஆகஸ்ட் 5, 2019 அன்று செய்யப்பட்ட மாற்றங்களை எதிர்த்து பாகிஸ்தான் இந்தியாவுடனான அனைத்து விதமான வர்த்தகத்தையும் நிறுத்தியது. பாகிஸ்தான் புது டெல்லிக்கு தூதரை அனுப்பப்போவதில்லை என்றும் கூறியிருந்தது; இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இந்தியா இஸ்லாமாபாத்தில் உள்ள தனது தூதரை திரும்பப் பெற்றது.
சமீபத்திய நாட்களாக, ஜம்மு காஷ்மீரில் செய்யப்பட்ட மாற்றங்களை முழுமையாக மாற்றியமைக்காத வரை இந்தியாவுடன் பேச மாட்டோம் என்ற தனது நிலைப்பாட்டில் பாகிஸ்தான் மென்மையான போக்கில் உள்ளதாக சமிக்ஞை செய்தது. இந்தியாவும் பாகிஸ்தானும் போர்நிறுத்தத்தை மீண்டும் உறுதிப்படுத்துவதை இருநாட்டு உறவுகளில் எந்தவொரு விரிவான முன்னேற்றங்களுடனும் இணைக்கக்கூடாது என்பதில் எச்சரிக்கையாக இருந்தபோதிலும், மற்றொரு ரகசிய வழியாக மூலம் செயல்பட்டு வருவது தெளிவாகத் தெரிந்தது. மேலும், இந்த போர்நிறுத்தம் இருநாட்டு உறவுகளை இயல்பாக்குவதற்கு பிற நகர்வுகளுக்கான முதல் படியாக இருக்கலாம என்று தெரிகிறது.
வர்த்தக உறவுகளை இயல்பாக்குவதற்கு எளிதானதாக இருக்கும் என்பதற்கான அறிகுறிகள் உள்ளன. கடந்த சில மாதங்களாக, இந்திய பருத்தி நூல் இறக்குமதியை மீண்டும் தொடங்க பாகிஸ்தான் ஜவுளி லாபியிடமிருந்து அழுத்தம் வந்துள்ளது. பாகிஸ்தானில் பருத்தி விலை 11 ஆண்டுகளுக்குப் பிறகு, அதிகபட்ச விலையாக ரூ.11,700-ஐ எட்டியுள்ளது என்று பாகிஸ்தான் நாட்டு ஊடகமான டான் புதன்கிழமை தெரிவித்துள்ளது. பாகிஸ்தானில் பருத்தி விளைச்சல் ஒரேயடியாக வீழ்ச்சியடைந்ததால் பருத்தி விலை உயர்ந்து வருகிறது. தனியார் வர்த்தகர்களை இந்தியாவில் இருந்து 0.5 மில்லியன் டன் வெள்ளை சர்க்கரையை இறக்குமதி செய்ய பாகிஸ்தான் அனுமதித்துள்ளது.
தளபதிகளின் வேறுபட்ட உத்தி
இம்ரான் கானின் மக்கள் அரசாங்கத்தின் பின்னால் உள்ள பாகிஸ்தான் ராணுவ அமைப்பு, இந்தியா மற்றும் பிராந்திய உலக நாடுகளுடனான உறவுகளைப் பார்க்கும் விதத்தில் நிச்சயமாக ஒரு பகுத்தறிவு ரீதியான மாற்றத்தை அடைந்துள்ளதைக் குறிக்கிறது. சமீபத்தில், அந்நாட்டு ராணுவத் தளபதி கமர் ஜாவேத் பஜ்வா பாகிஸ்தான் தனது தேசிய பாதுகாப்பு நிலைப்பாட்டை முழுமையான ராணுவ பாதுகாப்பு முதல் பொருளாதார பாதுகாப்பு வரை மறுபரிசீலனை செய்ததாக கூறினார்.
தேசிய பாதுகாப்பு குறித்த இந்த மதிப்பீட்டை அடிப்படையாகக் கொண்டு, இஸ்லாமாபாத்தில் ஒரு முக்கிய நிகழ்ச்சியில் பேசிய கமர் ஜாவேத் பஜ்வா, “புவி-அரசியல் போட்டி கதைகளை புவி-பொருளாதார ஒருங்கிணைப்பாக மாற்றுவது எங்கள் விருப்பமாக உள்ளது” என்று கூறினார்.
இந்த மறுபரிசீலனை பாக்கிஸ்தானின் நிதி உதவி சார்ந்த பொருளாதாரத்திற்கான புதிய சிக்கல்களுடன் ஒத்திருக்கிறது. மேற்கு ஆசியாவில் ஏற்பட்டுள்ள பெரும் மாற்றங்கள், குறிப்பாக ஆபிரகாமிய உடன்படிக்கைகளுக்குப் பின்னர், பாக்கிஸ்தானை சகோதரர்கள் என்று பார்த்த நாடுகள் தனிமைப்படுத்தியுள்ளன. அவர்கள் இப்போது எண்ணெய் வாங்கியதற்கு செலுத்த வேண்டிய தொகைக்கு தவனையோ அல்லது எளிய தவனையில் கடன் வழங்கி உதவி செய்யலாம்.
ஆனால், சவூதி அரேபியாவும் ஐக்கிய அரபு எமிரேட்ஸும் சமீபத்திய மாதங்களில் பாகிஸ்தானுடன் கடுமையாகப் பேசி வருகின்றன. சீனா அதை ஓரிரு முறை காப்பாற்றியுள்ளது. ஆனால், பிராந்தியத்தில் உள்ள மற்றவர்களைப் போலவே பெய்ஜிங்கிடமிருந்து அதிக கடன் வாங்குவதில் பாகிஸ்தான் எச்சரிக்கையாக உள்ளது.
கடுமையான சூழ்நிலைகளில் உலக நிதி நிறுவனம் அளித்த கடன் அந்நாட்டை காப்பாற்ற உதவியது. ஆனால், அரசாங்கம் அதை பிரபலமாக்கவில்லை. இந்த வார தொடக்கத்தில், 500 மில்லியன் டாலர் தொகையில், 6 பில்லியன் டாலர் கடன் பாக்கிஸ்தானுக்கு கிடைத்தது. இது 2020 பிப்ரவரி முதல் நிறுத்திவைகப்பட்டிருந்தது. அது இப்போது விடுவிக்கப்பட்டுள்ளது. மின்சார கட்டண உயர்வு, மத்திய வங்கியை அரசாங்க கட்டுப்பாட்டிலிருந்து விடுவித்தல், வருமான வரி விலக்குகளை திரும்பப் பெறுதல் போன்றவற்றை மேற்கொண்டுள்ளது.
ஆசியாவிற்கும் ஐரோப்பா ஆசியாவிற்கும் இடையிலான ஒரு முக்கியமான இடத்தில் அமைந்துள்ளதால் பாகிஸ்தான் எப்போதும் தன்னை ஒரு சிறப்புமிக்க நாடாகவே கருதுகிறது. பாகிஸ்தான் பிராந்தியத்திலும் அதற்கு அப்பாலும் அதன் ராஜதந்திர உத்தி நோக்கங்களை அடைய உதவும் என்று நம்பியுள்ளது.
ஆனால், பாகிஸ்தானின் பொருளாதார நன்மைக்காக அதன் இருப்பிடம் பயன்படுத்தலாம் என்பதை உணர்ந்துகொள்வதற்கு ராணுவ அமைப்பின் யோசனையை பெறும் வரை தெளிவாக செயல்படவில்லை.
ஜெனரல் பர்வேஸ் முஷாரப்பின் 10 ஆண்டு கால ஆட்சியின்போது, இது தொடர்பாக சில பரிசோதனைகள் இருந்தன; அது ஈரான்-பாகிஸ்தான்-இந்தியா எண்ணெய் குழாய் இணைப்பு ஆரம்ப முயற்சியாக இருக்கலாம். புதுடெல்லி ஒரு தயக்கத்துடன் பங்கேற்பாளராக இருந்தது. மேலும், பாகிஸ்தான் பேச்சுவார்த்தை நடத்தி போக்குவரத்துக் கட்டணத்தை விலக்கிக் கொள்வதாக அச்சுறுத்தியது. 2008 மும்பை தாக்குதலுக்குப் பிறகு இந்த திட்டம் தொடங்கமுடியததாக மாறியது. அதற்குள், அமெரிக்காவுடன் இந்தியா அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இந்தியாவின் வெளியேற்றம் அமெரிக்காவின் அழுத்தத்தின் பேரில் இருப்பதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டியது. ஈரான்-பாகிஸ்தான் குழாய் இணைப்புக்கான இருதரப்பு முயற்சிகள் இன்னும் பலனளிக்கவில்லை.
இந்த நேரத்தில், பாதுகாப்பு மற்றும் பொருளாதார கவலைகள் காரணமாக ஆஃப்கானிஸ்தானுடனான வர்த்தகத்திற்கு இந்தியாவின் போக்குவரத்து உரிமைகளை பாகிஸ்தான் மறுத்தது. அதே நேரத்தில், ஆப்கானிஸ்தானுக்கு உலர்ந்த பழங்களை ஏற்றுமதி செய்வதற்கு வரையறுக்கப்பட்ட போக்குவரத்து உரிமைகளை இந்தியாவுக்கு வழங்கியது. இந்த ஆப்கான்-இந்தியா வர்த்தகம் கடந்த இரண்டு ஆண்டுகளிலும் தொடர்ந்துவருகிறது.
காஷ்மீரை ஒதுக்கி வைத்துவிட்டு, இந்தியாவுடன் வர்த்தகத்தைத் தொடங்க இஸ்லாமாபாத்தில் அரசாங்கம் எடுத்த முடிவு ஒரு ராஜதந்திர மாற்றமா என்பதற்கான பதில், பாகிஸ்தானின் ஜெனரல்கள் உலக பொருளாதாரம் தொடர்பான கவலையில் நடவடிக்கை எடுப்பதற்கு எந்த அளவு தயாராக இருக்கிறார்கள் என்பதில் உள்ளது. ஆப்கானிஸ்தானுடன் வர்த்தகம் செய்வதற்கான உரிமைகளை இந்தியா மேற்கொண்டுள்ளது.
புது தில்லி பல ஆண்டுகளாக இந்தியா-சீனா இருதரப்பு உறவுகளின் மாதிரியை முன்னெடுத்துள்ளது. அங்கே வர்த்தகத்திலும் முதல் இடத்தை பெற்றுள்ளது. எல்லை பிரச்னையில் நீண்டகால பேச்சுவார்த்தைகளுக்கும் உட்பட்டது. பாகிஸ்தானும் இதை இப்படியே பார்க்கத் தொடங்கினால், அது உண்மையில் மிகப்பெரிய மாற்றமாக இருக்கும்.
பயன்படுத்தப்படாத திறன்
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான வர்த்தகம் எப்போதுமே அவர்களின் போர் உறவுகளுக்கு உட்பட்டு இருந்து வருகிறது. பல ஆண்டுகளாக, பாகிஸ்தான் ஒரு நேர்மறையான பட்டியலின் அடிப்படையில் இந்தியாவுடன் வர்த்தகம் செய்தது. அது 2009ல் மட்டுமே எதிர்மறையான பட்டியலாக மாறியது. வர்த்தகத்தை எளிதாக்குவதற்கான பிற முயற்சிகள் தோல்வியுற்றன. இதில் 2011ல் எம்.எஃப்.என் (வர்த்தகம் செய்வதற்கு ஏற்ற நாடுகள்) இந்தியாவின் சலுகையை மறுபரிசீலனை செய்ய பாகிஸ்தான் அளித்த அழுத்தம் உள்பட அடங்கும். இது இந்தியாவுக்கு மிகப்பெரிய சலுகை என்று சித்தரிக்க எல்.ஈ.டி / ஜேயுடி தலைவர் ஹபீஸ் சயீத் மேற்கொண்ட பிரச்சாரத்தில் இது தோல்வியடைந்தது. எம்.எஃப்.என் உடைய அவருடைய மொழிபெயர்ப்பு உருது மொழியில் இருந்தது - சப்ஸே பசந்தீதா முல்க் என்று இஸ்லாமாபாத் சலசலத்தது.
புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு இந்தியா எம்.எஃப்.என் (வர்த்தகம் செய்வதற்கு எளிதான நாடு ) என்ற அந்தஸ்தை பாகிஸ்தானுக்கு திரும்பப் பெற்றது. உலக வர்த்தக அமைப்பின் கடமையாக இருக்கும் இந்த நிலையை இரு நாடுகளும் ஒருவருக்கொருவர் வழங்குமா என்பதைப் பார்க்க வேண்டும். கடந்த தசாப்தத்தின் முதல் சில ஆண்டுகளில், வணிகர்களுக்கான விசா காலத்தை தளர்த்துவதற்கான நடவடிக்கை எடுக்க அதிக காலம் செல்லவில்லை.
இருதரப்பு வர்த்தகத்தின் மொத்த மதிப்பு சுமார் 2 பில்லியன் டாலர்களை எட்டியுள்ள நிலையில், ஐக்கிய அரபு அமீரகம் போன்ற மூன்றாம் நாடுகளின் மூலம் அதிகாரப்பூர்வமற்ற வர்த்தகம் மிக அதிகமாக மதிப்பிடப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 2019 முதல் வர்த்தகம் இல்லாத நிலையில், வரையறுக்கப்பட்ட வர்த்தக மறுதொடக்கத்தின் நன்மை இரு தரப்பிலும் உணரப்படும்.
அமிர்தசரஸ் போன்ற எல்லையோர பொருளாதாரங்களில் 2019 முதல் இந்தியா-பாகிஸ்தான் வர்த்தக இடைநிறுத்தத்தால் ஏற்பட்ட பொருளாதார தாக்கம் குறிப்பிடத்தக்கதாக உள்ளது. சுமார் 2.5 பில்லியன் டாலர் வருடாந்திர இருதரப்பு வர்த்தகம் நிறுத்தப்பட்ட காலத்தில் உணர முடியாத குறைந்தபட்ச வர்த்தக தொகையாகும். இந்த இழப்பு மற்ற பங்குதாரர்களிடமும் ஒரு சுழற்சி விளைவைக் கொண்டுள்ளது. எல்லையோரங்களில் உள்ள தொழிலாளர்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்தனர். போக்குவரத்து, துப்புரவு ஏஜென்ஸிகள், உணவகங்கள், பட்டறைகள் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளன” என்று டெல்லியைச் சேர்ந்த சிந்தனைக் குழுவான BRIEF-ன் (தொழில் மற்றும் பொருளாதார அடிப்படைகள் பற்றிய ஆராய்ச்சி பணியகம்) அஃபாக் உசேன் கூறினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.