Advertisment

Explained: பாகிஸ்தான் - சீனா உறவு

இந்திய அரசாங்கம், பாகிஸ்தான் - சீனா ஆகிய இரு நாடுகளையும் ஒன்றாக சேர்த்திருக்கிறது என்று காங்கிரச் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். இருவரும் எப்போதும் நெருக்கமாகவே இருந்ததாக வெளியுறவு அமைச்சகம் பதிலளித்துள்ளது.

author-image
WebDesk
Feb 04, 2022 14:38 IST
New Update
Pakistan China relationship, china, Pakistan, பாகிஸ்தான் - சீனா உறவு, பாகிஸ்தான், சீனா, இம்ரான் கான், ஷி ஜிங்பிங், பெய்ஜிங், இஸ்லாமாபாத், Imran Khan, Xi Jinping, Beijing, Islamabad

இந்திய அரசாங்கம், பாகிஸ்தான் - சீனா ஆகிய இரு நாடுகளையும் ஒன்றாக சேர்த்திருக்கிறது என்று காங்கிரச் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். இருவரும் எப்போதும் நெருக்கமாகவே இருந்ததாக வெளியுறவு அமைச்சகம் பதிலளித்துள்ளது. பல ஆண்டுகளாக பாகிஸ்தான் - சீனா உறவும் அது இந்தியாவிற்கு என்ன உணர்த்தியது குறித்து ஒரு பார்வை.

Advertisment

நாடாளுமன்றத்தில் புதன்கிழமை பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி: நரேந்திர மோடி அரசாங்கம் நாட்டை பலவீனப்படுத்துகிறது என்றும், பாகிஸ்தானையும் சீனாவையும் ஒன்றுசேர்த்துள்ளதாகவும் குற்றம் சாட்டினார் இரு நாடுகளையும் பிரித்து வைத்திருப்பது இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையின் மிகப்பெரிய உத்தி இலக்கு என்று குறிப்பிட்டார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், “சில வரலாற்று பாடங்கள் முறையாக உள்ளன” என்று ட்வீட் செய்து, பல பத்தாண்டுகளாக பாகிஸ்தான்-சீனா நட்பின் நிகழ்வுகளை மேற்கோள் காட்டினார். “எனவே, உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்: அப்போது சீனாவும் பாகிஸ்தானும் தொலைவில் இருந்தனவா?” என்று குறிப்பிட்டுள்ளார்.

பாகிஸ்தான் - சீனத் தலைவர்கள் தங்கள் உறவுகளை மலைகளை விட உயரமானவை, கடலை விட ஆழமானவை என்பது போன்ற உருவகங்களைப் பயன்படுத்தி விவரிக்கின்றனர். எனவே, பாகிஸ்தான் - சீனா உறவின் வரலாறு என்ன?

உறவின் தொடக்க ஆண்டுகள்

1947-க்குப் பிறகு ஆரம்ப ஆண்டுகளில், இந்தியாவுக்குப் பிறகு, சீன மக்கள் குடியரசை பாகிஸ்தான் அங்கீகரித்தது. மேலும், 1951-ல் ராஜதந்திர உறவுகளை நிறுவியது. ஆனால், அமெரிக்கா தலைமையிலான கம்யூனிச எதிர்ப்பு ராணுவ ஒப்பந்தங்களான SEATO மற்றும் CENTO ஆகியவற்றில் பாகிஸ்தான் அங்கம் வகித்ததன் காரணமாக, அது சோவியத் அல்லாத முகாமின் ஒரு பகுதியாகக் காணப்பட்டது. சீனா, மாசேதுங்கின் கீழ் மறுபுறத்தில் தனியாக இருந்தது.

மறுபுறம், இந்தியா சீனாவுடன் பணி நிமித்தமான உறவைக் கொண்டிருந்தது - இந்தி-சீனி பாய் பாய் போன்ற முழக்கங்கள் பொறிக்கப்பட்டது. இரு நாடுகளும் ஒரே காலனித்துவ எதிர்ப்பு, அணிசேரா அணுகுமுறையைக் கொண்டிருந்தன.

இருப்பினும், இந்த நட்பில் ஒரு சிக்கலான அடுக்கு இருந்தது.

புத்தரின் வீரர்கள்: சிஐஏ-ஆதரவு பெற்ற திபெத்திய சுதந்திரப் போராளிகள் கதை, சீனப் படையெடுப்பு மற்றும் திபெத்தின் இறுதி வீழ்ச்சி ஆகியவற்றில், எழுத்தாளரும் வரலாற்றாசிரியருமான மைக்கேல் டன்ஹாம், 1950-ல் சீனப் படைகள் படையெடுத்த பிறகு, திபெத்திய கிளர்ச்சியாளர்களுக்கு, அமெரிக்க விமானங்களுக்கு உபகரணங்களை வழங்குவதற்கான போக்குவரத்து வசதிகளை பாகிஸ்தான் வழங்கியது.

1962ம் ஆண்டு போர்

1962ல் நடந்த இந்தியா-சீனா போர் பெய்ஜிங் இஸ்லாமாபாத்துடன் நெருக்கமான உறவுகளை வளர்த்துக் கொள்ள வழிவகுத்தது. 1965ல் நடந்த இந்தியா-பாகிஸ்தான் போரில் பாகிஸ்தான் சீனாவின் ஆதரவைப் பெற்றது. உண்மையில், 1962ல் சீனாவுக்கு எதிராக இந்தியா தோற்கடிக்கப்பட்ட பிறகு, பாகிஸ்தான் ஆக்கிரமிப்புக்கு தைரியம் கொடுத்ததாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

புதுடெல்லியில் இருந்த அப்போதைய அமெரிக்கத் தூதர் ஜான் கென்னத் கல்பிரைத், அம்பாசிடர்ஸ் ஜர்னலில், பாகிஸ்தான் ‘பீக்கிங்குடன் ஒருவித இணைப்பை உருவாக்குவது’ பற்றி கவலைப்படுவதாக எழுதினார்.

1963-ல் எல்லை ஒப்பந்தத்தின் மூலம் பாகிஸ்தான் ஷக்ஸ்காம் பள்ளத்தாக்கை சீனாவுக்கு விட்டுக் கொடுத்தது. ஷக்ஸ்காம் பள்ளத்தாக்கு அல்லது டிரான்ஸ் கரகோரம் டிராக்ட் என்பது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் ஹன்சா-கில்கிட் பகுதியின் ஒரு பகுதியாகும். இது இந்தியாவால் உரிமை கோரப்பட்ட ஒரு பகுதி, ஆனால் பாகிஸ்தானால் கட்டுப்பாட்டில் இருந்தது.

இந்த ஒப்பந்தத்தின் பிரிவு 6, “பாகிஸ்தான் - இந்தியா இடையேயான காஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்ட பிறகு, இந்த ஒப்பந்தத்தின் பிரிவு இரண்டில் விவரிக்கப்பட்டுள்ள எல்லையில், சீன மக்கள் குடியரசின் அரசாங்கத்துடன் சம்பந்தப்பட்ட இறையாண்மை அதிகாரம் மீண்டும் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கும் என்று இரு கட்சிகளும் ஒப்புக்கொண்டுள்ளன. தற்போதைய ஒப்பந்தத்தை மாற்றுவதற்கான முறையான எல்லை ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும்.” என்று கூறுகிறது.

இந்த ஒப்பந்தம் 1970களில் சீனாவும் பாகிஸ்தானும் இணைந்து கட்டிய கரகோரம் நெடுஞ்சாலைக்கு அடித்தளமிட்டது.

உண்மையான ராஜதந்திர நட்பு 1970களில் தொடங்கியது. அப்போது பாகிஸ்தான் ஆட்சியாளராக இருந்த ஜெனரல் யாஹ்யா கான், ரிச்சர்ட் நிக்சன், ஹென்றி கிஸ்ஸிங்கர் தலைமையிலான அமெரிக்கா மற்றும் சீனாவின் மாவோ, சூ என்லாய் இடையேயான உறவுகளை எளிதாக்கினார். இது ஜூலை 1971-ல் கிஸ்ஸிங்கரின் ரகசியப் பயணத்திற்கு வழி வகுத்தது. அமெரிக்கா-சீனா இடையே பிளவு ஏற்படுத்திய பிரச்சினைகளை விவாதிக்கும் ஆரம்ப முயற்சிக்கு வழிவகுத்தது.

அணுசக்தி ஒத்துழைப்பு

சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான உறவு 1970களிலும் 1980களிலும் வளர்ந்தது. குறிப்பாக 1974-ல் இந்தியா தனது அணுசக்தி சாதனத்தை சோதித்த பிறகு, சீனா - பாகிஸ்தான் அணுசக்தி ஒத்துழைப்பு முக்கிய தூண்களில் ஒன்றாகும்.

பாகிஸ்தானின் அணுசக்தி தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதில் சீனா முக்கியப் பங்காற்றியுள்ளது. செப்டம்பர் 1986-ல், சிவில் அணுசக்தி தொழில்நுட்பத்தை மாற்றுவதற்கு வசதியாக ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

1991-ல், பாகிஸ்தானுக்கு உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட கின்ஷான்-1 அணுமின் நிலையத்தை வழங்க சீனா ஒப்புக்கொண்டது. சாஷ்மா அணுமின் நிலையம்-1-ன் கட்டுமானம் 1993-ல் தொடங்கியது. மேலும் 300 எம்.டபில்யூ.இ அணு உலை மே 2000-ல் செயல்பாட்டுக்கு வந்தது. சாஷ்மா, சி-2, இரண்டாவது 300 மெகாவாட் மின் உற்பத்தி நிலையம் 2011-ல் முக்கியமானதாக மாறியது.

1998-ல் இந்தியா தனது அணுசக்தி சாதனத்தை சோதித்த பிறகு, பெய்ஜிங்கின் உதவி மூலம் பாகிஸ்தான் இதைப் பின்பற்றியது.

பி.பி.சி பத்திரிக்கையாளர் கோர்டன் கொரேரா, ‘ஷாப்பிங் ஃபார் பாம்ப்ஸ்’ நூலில்: அணுசக்தி பரவல், உலகளாவிய பாதுகாப்பின்மை, அப்துல் காதீர் கானின் எழுச்சி மற்றும் கான் நெட்வொர்க்: “சீனாவின் உதவியைக் கழித்தால், பாகிஸ்தானின் அணுசக்தித் திட்டம் இருக்காது” என்று எழுதினார்.

இந்தியா - சீனா உறவுகள்

1988-இல் ராஜீவ் காந்தியின் வருகையுடன் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே ஏற்பட்ட நல்லுறவு ஒரு முக்கியமான தருணமாக மாறியது. பெய்ஜிங்கிற்கு ஒரு தெளிவான மாற்றம் ஏற்பட்டது. பெய்ஜிங் இந்தியாவுடனான உறவுகளை பொருளாதாரக் கண்ணோட்டத்தில் பார்த்தது, வர்த்தகத்தில் கவனம் செலுத்தியது. அதே நேரத்தில் எல்லைப் பிரச்சினையில் இந்தியாவுடன் தனித்தனியாகப் பேசுகிறது. இது இஸ்லாமாபாத்துக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.

இஸ்லாமாபாத்தைப் பொறுத்தவரை, 1996ல் மிகப்பெரிய அதிர்ச்சி ஏற்பட்டது. “சீன அதிபர் ஜியாங் ஜெமின் <அப்போது பாகிஸ்தானுக்கு விஜயம் செய்தவர்> காஷ்மீர் பற்றி வெளிப்படையாகக் குறிப்பிடத் தவறினார்… காஷ்மீர் இருதரப்பு பேச்சுவார்த்தைகள் மூலம் அல்ல, சர்வதேச மத்தியஸ்தம் மூலம் தீர்க்கப்பட வேண்டும் என்ற பாகிஸ்தானின் நிலைப்பாட்டை இது குறைத்தது” என்று ஆய்வாளர் ஆண்ட்ரூ ஸ்மால் சீனா-பாகிஸ்தான் அச்சு நூலில் எழுதினார்.

1999ம் ஆண்டு கார்கில் மோதலின் போது, ​​​​பெய்ஜிங் இஸ்லாமாபாத்திற்கு “அவர்களுடைய துருப்புக்களை திரும்பப் பெற வேண்டும் என்றும், சுயக்கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும், அமைதியான வழிகளில் மோதல்களைத் தீர்க்க வேண்டும்” என்றும் அறிவுறுத்தியது. அந்த ஆண்டு ஜூலையில், சீன வெளியுறவு அமைச்சகம் இந்தியாவையும் பாகிஸ்தானையும் காஷ்மீரின் கட்டுப்பாட்டுக் கோட்டிற்கு மதிப்பளித்து, லாகூர் பிரகடனத்தின் சக்திக்கு ஏற்ப விரைவில் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டது. இது இஸ்லாமாபாத்திற்கு மட்டம் தட்டுவதாகக் கருதப்பட்டது.

2002ல் நடந்த நாடாளுமன்றத் தாக்குதல், எதிர் பராக்ரம் உருவாகுதல், 2008ல் நடந்த மும்பை பயங்கரவாத தாக்குதல் ஆகியவற்றுக்குப் பிறகு பெய்ஜிங் இதேபோன்ற எச்சரிக்கையான அணுகுமுறையை எடுத்தது. பிப்ரவரி, 2019ல் புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு பாலகோட் வான்வழித் தாக்குதல் நடந்தபோது சீனா பதிலளித்த விதத்திலும் இது தெரிந்தது. உண்மையில், மார்ச் 2019ல் ஜெய்ஷ்-இ-முகமது தலைவன் மசூத் அசாரை உலகளாவிய பயங்கரவாதியாக அறிவித்தது, ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் அறிக்கையில் சீனா கையெழுத்திட்டது.

அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம்

சீனா-பாகிஸ்தான் ஒத்திசைவு இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் தொடர்ந்தது. பெய்ஜிங், இந்தியா அமெரிக்காவுடன் நெருக்கமாக நகர்வதைக் கண்டது. அமெரிக்க - இந்தியா அணுசக்தி ஒப்பந்தம் பாகிஸ்தானை கவலையடையச் செய்தது. மேலும், பெய்ஜிங் - இஸ்லாமாபாத் இணைப்பு அணுசக்தி விநியோகக் குழுவில் விலக்கு அளிக்கப்படுவதைத் தடுக்க முயற்சி செய்தது.

2013 ஆம் ஆண்டு முதல், ஷி ஜிங்பிங்கின் சீனா டெப்சாங், சுமர், டோக்லாம் மற்றும் கிழக்கு லடாக் ஆகிய இடங்களில் உள்ள எல்லைப் மோதல்களில் தனது வலிமையைக் கட்ட முயற்சி செய்ததால் இந்தியா இஸ்லாமாபாத்துடனான உறவில் எச்சரிக்கையாக உள்ளது.

370வது பிரிவை திருத்தம் செய்து ஜம்மு - காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வதற்கான இந்தியாவின் ஆகஸ்ட், 2019 நடவடிக்கை ராஜதந்திர நிலையில், பெய்ஜிங் மற்றும் இஸ்லாமாபாத்தை (மற்றும் ராவல்பிண்டி) கோபப்படுத்தியது. இது அவற்றை இன்னும் நெருக்கமாகக் கொண்டுவருகிறது.

காஷ்மீர் விவகாரத்தில் சீனாவின் நிலைப்பாடு மிகவும் முன்னதாகவே பிரதிபலிக்கிறது. 1965ம் ஆண்டு முதல் இந்தியாவிற்கான சீன ராஜதந்திரக் குறிப்பு, ஜே.என்.தீக்ஷித்தின் ‘போர் மற்றும் அமைதியில் இந்தியா-பாகிஸ்தான்’ என்ற புத்தகத்தில் மறுஉருவாக்கம் செய்யப்பட்டது. “இந்திய அரசாங்கம் காஷ்மீரிகளை ஒடுக்கும் வரை, சுயநிர்ணயத்திற்கான போராட்டத்தில் காஷ்மீரிகளுக்கு சீனா ஆதரவளிப்பதை நிறுத்தாது. இந்திய அரசு பாகிஸ்தானுக்கு எதிரான அதன் கட்டுப்பாடற்ற ஆக்கிரமிப்பில் தொடர்ந்து இருக்கும் வரை, ஆக்கிரமிப்புக்கு எதிரான தனது நியாயமான போராட்டத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவளிப்பதை சீனா நிறுத்தாது.

ஆகஸ்ட் 5, 2019 காலகட்டத்த்ல், காஷ்மீர் நிலைமையை சீனா பலமுறை கொண்டு வந்து விவாதிக்க முயற்சித்தது. அதில் புதுடெல்லிக்கு ஆச்சரியம் இல்லை.

பொருளாதார சார்பு

சமீப ஆண்டுகளில் பெய்ஜிங்கில் பாகிஸ்தானின் பொருளாதார சார்பு அதிகரித்துள்ளது. பாகிஸ்தான் பயங்கரவாத நிதியுதவிக்கான நிதி நடவடிக்கை பணிக்குழுவின் சாம்பல் பட்டியலில்ல் (Gray list) உள்ளது. அதில் பெய்ஜிங் ஒரு வருடம் தலைவராக இருந்த போதிலும், சீனாவின் அனைத்து காலநிலை நண்பருக்கும் உதவுவதில் உள்ள வரம்புகளை வெளிப்படுத்தியது.

மே, 2019-ல் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் அழுத்தங்களுக்கு அடிபணிவதற்கு முன்பு, மசூத் அசாரை பயங்கரவாதி பட்டியலில் சேர்ப்பதை சீனா பலமுறை தடுத்தது. கிழக்கு துர்கெஸ்தான் இஸ்லாமிய இயக்கம் (ETIM) பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாத குழுக்களிடமிருந்து ஆதரவைப் பெறுவது மற்றும் உய்குர்கள் ஓரங்கட்டப்பட்ட சின்ஜியாங் மாகாணத்தில் பிரச்சனையை உருவாக்குவது குறித்தும் அது கவலை கொண்டுள்ளது.

இந்தியா உட்பட உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்களின் உரிமைகளுக்காகப் பேசும் இஸ்லாமாபாத், உய்குர் சிறுபான்மையினரை நடத்துவது குறித்து மௌனம் காக்கிறது. சீனாவின் மாதிரியை தனது நாடு நம்புவதாக இம்ரான் கான் கூறியுள்ளார்.

பாக்கிஸ்தானின் கண்ணோட்டத்தில், அமெரிக்காவின் இந்த பிராந்தியத்திலிருந்து வெளியேறி, வாஷிங்டன் ஆப்கானிஸ்தானில் ஆர்வத்தை இழந்து வருவதால், பெய்ஜிங் அதன் தோல்வியடைந்த பொருளாதாரத்திற்கு சிறந்த போட்டி. இது வெளிநாட்டு கடன் பிணையெடுப்புகளில் தங்கியுள்ளது. சீனாவின் பழைய பட்டு பாதையின் மூலம் உள்கட்டமைப்புகளை வலுப்படுத்தும் முயற்சி சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்தில் (CPEC) வெளிப்பட்டுள்ளது. இது சில முதலீடுகளுக்கு வழிவகுத்தது. ஆனால், இந்த திட்டம் பாகிஸ்தானில் உள்ள மக்களுக்கு வேலை வழங்குமா என்று கேள்வி எழுப்பும் குரல்கள் பாகிஸ்தானுக்குள்ளேயே உள்ளன.

சீனாவின் பார்வையில், பலுசிஸ்தானில் உள்ள குவாடர் துறைமுகம் வழியாக மேற்கு இந்தியப் பெருங்கடலுக்கு அணுகுவதை எளிதாக்குகிறது.

அமெரிக்காவின் ஜெர்மன் மார்ஷல் நிதியத்தில் மூத்த அட்லாண்டிக் கூட்டாளியான ஸ்மால், செப்டம்பர், 2020ல் அறிக்கையில், “… எதிர்காலத்தில் வெளிப்படும் சீன-பாகிஸ்தான் உறவு கடந்த காலத்தைப் போலவே இருக்கும். 2015ல் CPEC தொடங்கப்பட்ட பிறகு. ஆழமான பாதுகாப்பு உறவுகள் நீடிக்கும். சீன-இந்திய உறவு மோசமடையும் போது தீவிரமடையும். ஆனால், கடந்த சில ஆண்டுகளில் பரந்த அடிப்படையிலான பொருளாதார மற்றும் அரசியல் ஈடுபாட்டின் அளவு இல்லை.” என்று எழுதியுள்ளார்.

நெருக்கமான பாதுகாப்பு உறவுகள்

2020-ல், சீனா பாகிஸ்தானுடன் ஒரு பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. சீனாவின் பாதுகாப்பு மந்திரி ஜெனரல் வெய் ஃபெங்கே இஸ்லாமாபாத்திற்கு வருகை தந்து, பாகிஸ்தான் ராணுவம், சீன மக்கள் விடுதலை ராணுவம் இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.

பாகிஸ்தான் ராணுவம் சமீபத்தில் சீனாவில் தயாரிக்கப்பட்ட VT-4 போர் டாங்கிகளின் முதல் தொகுதியை அறிமுகப்படுத்தியது. சீனாவில் தயாரிக்கப்பட்ட போர் ட்ரோன்கள் அல்லது ஆளில்லா போர் விமானங்களை பாகிஸ்தான் வாங்கியுள்ளது.

இரு நாடுகளின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பு நலன்களை உறுதியாகப் பாதுகாத்து, பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை, பல்வேறு அபாயங்கள் மற்றும் சவால்களை கூட்டாகச் சமாளிப்பதற்கு, மில்-டு-மில் உறவை உயர் நிலைக்குத் தள்ள விருப்பம் தெரிவித்ததாக சீன பாதுகாப்பு அமைச்சகம் சுட்டிக் காட்டியது.

தென் சீனக் கடல், தைவான், சின்ஜியாங், திபெத் உள்ளிட்ட அதன் முக்கியப் பிரச்சினைகளில் சீனாவின் நிலைப்பாட்டை பாகிஸ்தான் அங்கீகரிக்கிறது.

அதிகரித்து வரும் சீனா-பாகிஸ்தான் இராணுவப் பயிற்சிகள் ஆழமடைந்து வரும் இராணுவப் கூட்டு நடவடிக்கை எதிர்காலத்தின் அடையாளமாகும். திபெத்தில் உள்ள சரியான கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகில் இரு நாட்டு ராணுவத்தினரும் சமீபத்தில் கூட்டுப் பயிற்சி நடத்தினர்.

ஆப்கானிஸ்தான் கோணத்தில்

கடந்த ஆண்டு காபூல் தலிபான்களின் வசம் வந்த பிறகு, பாகிஸ்தானின் உதவியுடன் செல்வாக்கு, வளங்களுக்காக ஆப்கானிஸ்தானுக்குள் நுழைவதற்கான வாய்ப்பை சீனா இப்போது உணர்ந்துள்ளது. சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ மற்றும் தலிபான் தலைவர்கள் இடையே பலமுறை சந்திப்புகள் நடந்தன.

ETIM தாக்குதல்களுக்கு ஆப்கானிஸ்தான் ஒரு தளமாக பயன்படுத்தப்படாது என்று இஸ்லாமாபாத் தலிபான்களை நம்ப வைக்க முடியும் என்று சீனா நம்புகிறது. மேலும், பெய்ஜிங் அவர்களுக்கு நிதி உதவி அளிப்பதன் மூலம் தலிபான்களை இயல்பாக்குவதற்கு மாற்றப்படும்.

பெய்ஜிங் ஒரு உலகளாவிய சக்தியாக உயர்ந்துள்ள நிலையில், பாகிஸ்தானுடனான அதன் கூட்டுறவை இந்தியா முன்பைவிட அதிக கவலையாகக் கருதுகிறது. புதுடெல்லியைப் பொறுத்தவரை, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான், ஐரோப்பிய கூட்டு நாடுகளை உள்ளடக்கிய இந்தோ-பசிபிக் உத்தி இந்த உறவுக்கு எதிரான முக்கிய அரணாக உள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

#India #China #Pakistan #Rahul Gandhi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment