பாகிஸ்தான் பொருளாதாரத்தின் தற்போதைய உண்மை நிலை என்ன?

தெளிவாக சொல்ல வேண்டும் என்றால், நாற்பத்தி நான்கு ஆண்டிற்கு முன்பு இருந்த இந்தியாவின் ஜிடிபியும்  தற்போதைய பாகிஸ்தான் ஜிடிபியும் சமமாகவே இருக்கின்றன.

 UDIT MISRA

ஜம்மு-காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை பாராளுமன்றம் ரத்து செய்ததிலிருந்து, பாகிஸ்தானின் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது அமைச்சரைவில் இடம் பெற்றிருப்பவர்கள்  “தவிர்க்க முடியாத சூழலில் இந்தியாவுடன் அணுசக்தி யுத்தம் சாத்தியமாகிவிடும்” என்று எச்சரித்திருந்தனர்.

தனது கராச்சியின் மேலே உள்ள மூன்று விமான வழித்தடங்களை ஆகஸ்ட் 31 வரை இந்தியா பயன்படுத்த தடை விதித்திருந்த நிலையில், கடந்த வியாழன் அதிகாலையில் கஜ்னவி என்ற ஏவுகணையை சோதனை செய்தது பாகிஸ்தான் அரசு. இந்த ஏவுகணை ஒரு தளப்பீடமிருந்து 290 கி.மீ வரை சென்று இன்னொரு  தளப்பீடத்தை தாக்கும் வல்லமை பொருந்தியது.

இந்திய வெளியுறவு அமைச்சகம் கடந்த வியாழனன்று வெளியிட்ட அறிக்கையில்  “இந்தியாவுக்கு உட்பட்ட விஷயங்களில் பாகிஸ்தான் தலைமை மிகவும் பொறுப்பற்ற முறையில் (ஜிஹாத் போன்ற குறிப்புகள்,அணுசக்தி யுத்தம்) நடந்து கொள்கிறது”  என்று குறிப்பிட்டு இருந்தது.

இந்தியாவுக்கான வான்வெளியை பாகிஸ்தான் முற்றிலுமாக மூடிவிட்டால், வளைகுடா, ஐரோப்பா மற்றும் அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு வரும்(அல்லது இந்தியாவில் இருந்து இந்த நாடுகளுக்குசெல்லும்) விமான பயணத்தின் நேரம் 70-80 நிமிடங்கள் வரை அதிகமாகும். பாலகோட் வான்வழித் தாக்குதலை தொடர்ந்து எழுந்த சர்ச்சையால் பிப்ரவரி 26 முதல் ஜூலை 16 வரை பாகிஸ்தான் இந்த நடவடிக்கையை எடுத்தபோது, ​​இந்திய விமான நிறுவனங்கள் சுமார் 700 கோடி ரூபாய் வரை நட்டமடைந்தன. இந்த நடவடிக்கை, பாகிஸ்தான் பொருளாதாரத்திலும் ஐம்பது மில்லியன் டாலர் வரை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது .

தற்போது, தனது சொந்த பொருளாதாரம் ஒரு ஆபத்தான சரிவின் விளிம்பில் நின்று கொண்டிருக்கும் போது தான் இந்தியாவை நிதி ரீதியாக பாதிக்கும் பாகிஸ்தானின் அச்சுறுத்தல்கள் அரங்கேறி வருகின்றன என்பதை நாம் கவனித்தில் கொள்ள வேண்டும்.

இந்தியா, பாகிஸ்தான் பொருளாதார ஒப்பீடு :

உலக வங்கியின் கூற்றுப்படி, பாகிஸ்தானின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2018-ன் இறுதியில் 254 பில்லியன் டாலராக இருந்தது;  இந்த எண்ணிக்கை இந்தியாவைப் பொறுத்தவரையில் 2.84 டிரில்லியன் டாலராகும் (விளக்கப்படம் 1 ஐப் பார்க்கவும்).

இதை இன்னொரு கண்ணோட்டத்தில் பார்த்தால் கடந்த ஆண்டில், இந்தியப் பொருளாதார அளவு பாக்கிஸ்தானை விட 11 மடங்கு அதிகமாக இருந்தது.

இன்னும் குறிப்பாக சொல்லவேண்டும் என்றால், 2019 என்ற ஒரு நிதியாண்டில் இந்திய சேர்க்கவிருக்கும்(ஜிடிபி 7% என்ற யூகம் அடிப்படையில்) 200 பில்லியன் டாலர் பாகிஸ்தானின் 2018-ன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 80% நிகரானது.

வரலாற்று ரீதியாக சொல்ல வேண்டுமென்றால், நாற்பத்தி நான்கு ஆண்டிற்கு (அதாவது 1975) முன்பு இருந்த இந்தியாவின் ஜிடிபி யும்  தற்போதைய பாகிஸ்தான் ஜிடிபி யும் சமமாகவே இருக்கின்றன.

 

பாகிஸ்தான் பொருளாதாரத்தின் தற்போதைய நிலை:

பல ஏற்ற இறக்கங்களை சந்தித்து வரும் பாக்கிஸ்தானின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 2000 முதல் 2015 என்ற கால அளவில் ஹிந்து வளர்ச்சி விகிதம் என்று சொல்லப்படும் 4.3% ஆகவே இருந்தது.

ஆனால் தற்போது பாகிஸ்தான் பொருளாதாரம் அந்த வேகத்தையும் நழுவ விட்டுள்ளது (விளக்கப்படம் 3 ஐப் பார்க்கவும்) என்றே  கூறலாம். உதாரணமாக 2019-20  இரண்டிலும் பாகிஸ்தான் 3% க்கும் குறைவாக வளர்ச்சியடையும் என்று சர்வதேச நாணய நிதியம் (ஐஎம்எப்) கணிப்பு தெரிவித்துள்ளது. இதில் துயரம் என்னவென்றால் பொருளாதாரம் மந்தமாக இருக்கும் போது ஒருநாட்டின் பணவீக்கம் குறையும். ஆனால், பாகிஸ்தானில் இன்று சில்லரை பணவீக்கம் 9% நெருங்குகிறது(விளக்கப்படம் 4 ஐப் பார்க்கவும்).

எல்லாவற்றையும் தாண்டி பாகிஸ்தான் ஒரு மோசமான நிதி நிலைமையை எதிர்கொண்டுவருகிறது. விளக்கப்படம் 5 பார்த்தால் புரியும், அரசாங்கத்தின் நிதி பற்றாக்குறை அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த வாரம் வெளியிடப்பட்ட ப்ளூம்பெர்க் அறிக்கையின்படி, இது ஏற்கனவே மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 8.9% ஆக உள்ளது. கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அரசுக் கடன் பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

பொருளாதாரத்தின் பலவீனமான நிலை காரணமாக, அதன் அயல் நாட்டு நாணய மாற்று வீதம் தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகிறது – மே மாதத்தின் நடுப்பகுதியில் அமெரிக்க டாலருக்கு நிகரான மதிப்பு 140 மட்டத்திலிருந்து வரை, இந்த வாரம் கிட்டத்தட்ட 157 ஆக பாகிஸ்தான் நாணயத்தின் மதிப்பு குறைந்துள்ளது. (விளக்கப்படம் 6 ஐப் பார்க்கவும்)

மூழ்கடிக்கும் அளவிற்கு கடன்

பொருளாதாரத்தை தக்க வைத்துக் கொள்ள மற்றைய நாடுகளில் கடன் வாங்கும் அனுபவம் பாகிஸ்தானி ற்கு உண்டு என்பதை நாம் அனைவரும் அறிவோம். விளக்கப்படம் 7 பார்த்தீர்கள் என்றால், மார்ச் 2019 நிலவரப்படி, நாட்டின் மொத்த நிலுவைக் கடன் 85 பில்லியன் டாலருக்கும் அதிகமாகவே உள்ளது (இந்திய ரூபாயில் சுமார் 6 லட்சம் கோடி). இதை சமாளிக்க மேற்கு ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கில் உள்ள மிகப் பெரிய நாடுகளில் இருந்து லோன்களை வாங்கியுள்ளது. குறிப்பாக சீனாவிடம் அதிகமாய் கடன் பட்டுள்ளது பாகிஸ்தான் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றே.

தனிப்பட்ட நாடுகளைத் தவிர, முழு சர்வதேச நிறுவனங்களிடமிருந்தும் பாகிஸ்தான் கணிசமான கடன்களைப் பெற்றுள்ளது. இந்த ஆண்டு மே மாதத்தில், பாகிஸ்தான் சர்வதேச நாணய நிதியத்திடம் 6 பில்லியன் டாலர் பெயில் அவுட் கோரியிருக்கிறது(ஏற்கனவே,22 முறை ஐஎம்எப் பெயில் அவுட் செய்திருக்கிறது). இந்த ஐஎம்எப் கடன் நிபந்தனைகளை பூர்த்தி செய்ய இந்த நிதியாண்டில் பாகிஸ்தான் அரசாங்கத்தின் வருவாய் 40% உயர வேண்டும்.

எதனால் இந்த நிலை: 

சர்வதேச நாணய நிதியம் தனது ஜூலை அறிக்கையில் “பாகிஸ்தானின் பொருளாதாரம் ஒரு முக்கியமான கட்டத்தில் உள்ளது. பெரிய நிதிப் பற்றாக்குறையினாலும்,தளர்வான நாணயக் கொள்கைகளினாலும், மிகைப்படுத்தப்பட்ட பரிவர்த்தனை வீதத்தைப் பாதுகாப்பதினாலும் அவ்வப்போது குறிகிய வளர்ச்சியை பாகிஸ்தானை அடைந்திருந்தாலும், காலப்போக்கில் படிப்படியாக அரசு கடன்களிலும் , சர்வதேசம் கையிருப்பிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது” என்று தெரிவித்துள்ளது.

பலவீனமான வரி நிர்வாகம், கடினமாக்கப்பட்ட வணிகச் சூழல், தெளிவற்ற முறைசாரா பொருளாதாரம், இழப்பை ஏற்படுத்தும் அரசு நிறுவனங்கள் போன்ற அடிப்படை விஷயங்களில் அந்நாட்டு அரசு கவனம் செலுத்த வேண்டும் என்பதையும் நமக்கு உணர்த்துகிறது.

பொருளாதார மந்த நிலைக்கு இந்த வகையான ஆயிரம் காரணங்கள் சொல்லப் பட்டாலும் – தெளிவற்ற அதன் அரசியல் சூழ்நிலைகளும், முதிர்ச்சியடையாத மக்களாட்சியும் தான் அடிப்படைக் காரணம் என்பதை நாம் மறுக்க இயலாது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Explained News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close