அண்டை மாநிலமான பாகிஸ்தானில் திங்கள்கிழமை (ஜன.23) காலை நாடு தழுவிய மின்வெட்டு ஏற்பட்டது.
ராச்சி, இஸ்லாமாபாத், லாகூர் மற்றும் பெஷாவர் உள்ளிட்ட முக்கிய நகரங்களும் இருளில் மூழ்கின.
என்ன நடந்தது?
பாகிஸ்தானின் எரிசக்தி துறையின் தகவலின்படி அந்நாட்டில் காலை 7.34 மணிக்கு இந்த மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த மின்சார துண்டிப்பு ஏற்பட்டதாகவும், பிரச்னையை தீர்க்க பணிகள் முழு வீச்சில் வேகமாக நடைபெற்றுவருகின்றன” எனவும் தெரியவருகிறது.
இதற்கிடையில் அந்நாட்டின் மின்சாரத் துறை அமைச்சர் குர்ரம் தஸ்தகிர் (Khurrum Dastagir) ஜியோ ( Geo TV) தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “நாட்டின் தென்பகுதியில் உள்ள ஜாம்ஷோரோ மற்றும் தாது நகரங்களுக்கு இடையே அதிர்வெண் மாறுபாடு ஏற்பட்டதாக தெரிவித்தார்” என ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் அமைச்சர் குர்ரம் தஸ்தகிர், “மின்சார விநியோகத்தில் ஏற்ற-இறக்கம் ஏற்பட்டது. இதையடுத்து மின்சார விநியோகம் படிபடியாக நிறுத்தப்பட்டன” எனவும் தெரிவித்துள்ளார்.
நிலைமை எவ்வளவு மோசமாக உள்ளது?
அமைச்சர் தஸ்தகிரின் கூற்றுப்படி, "இது ஒரு பெரிய நெருக்கடி அல்ல," எனத் தெரிவித்துள்ளார். மேலும், அடுத்த 12 மணி நேரத்திற்குள் நாடு முழுவதும் மின்சாரம் முழுமையாக விநியோகிக்கப்படும்” எனவும் தெரிவித்துள்ளார்.
முன்னதாக எரிசக்தி அமைச்சகம் நள்ளிரவில் ட்வீட் ஒன்று வெளியிட்டிருந்தது. அதில், “கடந்த ஒரு மணி நேரத்தில் வார்சாக் மற்றும் இஸ்லாமாபாத்தில் இருந்து கிரிட் நிலையங்களின் மறுசீரமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. பிளை கம்பெனி மற்றும் பெஷாவர் சப்ளை கம்பெனியின் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான கட்டங்கள் மீட்டெடுக்கப்பட்டுள்ளன” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
பாதிக்கப்பட்டது யார்?
இஸ்லாமாபாத், கராச்சி, குவெட்டா, பெஷாவர் மற்றும் லாகூர் உள்ளிட்ட பாகிஸ்தானின் பெரும்பகுதிகளில் மின்தடை ஏற்பட்டதாக டான் செய்தித் தொலைக்காட்சி (DawnNewsTV) தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், “கராச்சியை தளமாகக் கொண்ட மின் பயன்பாட்டு நிறுவனமான கே-எலக்ட்ரிக், நாடு தழுவிய மின்தடை கராச்சியில் மின்சார விநியோகத்தை பாதித்துள்ளது, ஆனால் மறுசீரமைப்பு நடந்து வருகிறது” என கூறியுள்ளது.
பாகிஸ்தானில் மின்சார விநியோகம் எப்படி இருக்கிறது?
குவெட்டா மின்சார விநியோக நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் முகம்மது அப்சல், “பலுசிஸ்தானில் மூன்று டிரான்ஸ்மிஷன் லைன்களில் பழுதுகள் ஏற்பட்டன. இதன் விளைவாக பலுசிஸ்தான் முழுவதும் பாரிய மின்வெட்டு ஏற்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், இஸ்லாமாபாத் மின்சார விநியோக நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் டான் செய்தி நிறுவனத்திடம், “தலைநகரில், 117 கிரிட் நிலையங்கள் பாதிக்கப்பட்டன” எனத் தெரிவித்துள்ளார். இந்த இடங்களில் தற்போது மறுகட்டமைப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருவதாகவும் அவர் தெரிவித்தார்.
பாகிஸ்தான் நீண்ட காலமாக பரவலான மின் பற்றாக்குறையை எதிர்கொள்கிறது, மேலும் மோசமான சூழ்நிலைகள் காரணமாக இந்த நெருக்கடி குறைந்தபட்சம் பல ஆண்டுகளாக நீடிக்கும்.
மின்வெட்டு தீருமா?
2022 கோடையில் நெருக்கடி உச்சத்தை எட்டியது. அப்போது நாட்டில் மிகப்பெரிய அளவில் மின்வெட்டுகள் நடைபெற்றன. டெய்லி டைம்ஸ் ஜூன் தொடக்கத்தில் கராச்சியில் 15 மணிநேரம் வரை மின்தடை ஏற்பட்டுள்ளதாகவும், லாகூரில் கிட்டத்தட்ட 12 மணிநேரம் மின்சாரம் கிடைக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளது.
மேலும் பாகிஸ்தானில் மின்சாரம் மீதான முதலீடுகள் குறைந்துள்ளன. அங்குள்ள மின்சார உற்பத்தி நிலையங்களும் இறக்குமதி செய்யப்பட்ட எரிபொருளில் இயங்கிவருகின்றன.
இந்த நிலையில் தற்போது பாகிஸ்தானில் மின்சார தேவை அதிகரித்து காணப்படுகிறது. எரிசக்தி இறக்குமதி செலவுகள், எரிபொருள் விலைகளும் உயர்ந்து காணப்படுகின்றன. மறுபுறம் வலுவடையும் அமெரிக்க டாலருக்கு எதிராக பாகிஸ்தான் ரூபாய் மதிப்பும் வீழ்ச்சி அடைந்து காணப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.